ஸூரா முஜாதலாவின் விளக்கம்.

بسم الله الرحمن الرحيم

سُورَةِ الْمُجَادَلَةِ

  ஸூரா முஜாதலாவின் விளக்கம்.

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: அல் முஜாதலா (தர்க்கித்தல்) ; இந்த ஸூராவின் ஆரம்பத்தில் ஒரு உரையாடல் சம்பந்தப்பட்டிருப்பதனால் தர்க்கித்தல் என்ற கருத்தில் முஜாதலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

58 வது அத்தியாயம், 22 வசனங்கள்

இறங்கிய காலப் பகுதி: நபியவர்களின் மதீனா வருகையின் பின்னர் இறங்கிய (மதனீ) ஸூரா.

இந்த ஸூராவின் உள்ளடக்கம்: ஒரு முஸ்லிமின் நம்பிக்கை (அகீதா), குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு, நடத்தைகள், ஒழுக்கங்கள் போன்ற பல வழிகாட்டல்களை தாங்கியிருக்கும் ஒரு ஸூராவாகும்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

المجادلة 1- 4

{قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ (1) }

(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய பேச்சை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்று விட்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (58:1)

சொல் அருத்தம்;

قَدْ    இறந்த கால வினைச் சொல்லை உறுதிப்படுத்த பாவிக்கும் ஒரு சொல், நிச்சியமாக, உறுதியாக என்று அருத்தம் தரும் ,   سَمِعَ اللَّهُ நிச்சயமாக அல்லாஹ் செவியேற்று விட்டான்  قَوْلَ பேச்சு, சொல்  الَّتِي   ஒருத்தி ,   تُجَادِلُ தர்க்கித்தாள், كَ உம்மிடம் ,    فِي زَوْجِهَا    அவளுடைய கணவன் விடயத்தில்,    وَتَشْتَكِي     முறையிட்டுக் கொண்டாள் , إِلَى அளவில், பக்கம், اللَّهِ அல்லாஹ்,    وَاللَّهُ يَسْمَعُ   அல்லாஹ் செவியேற்பான் ,   تَحَاوُرَكُمَا     உங்களிருவரின் வாக்கு வாதத்தம் ,   إِنَّ اللَّهَ    நிச்சயமாக அல்லாஹ் ,    سَمِيعٌ     செவியேற்பவன் ,     بَصِيرٌ    பார்ப்பவன்

இந்த வசனம் இறங்க காரணமாக இருந்த நிகழ்வு, (ஸபபுன் னுஸூல்)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: சத்தங்கள் அனைத்தையும் கேட்கின்ற அளவிற்கு விசாலமான செவியாற்றல் உள்ள அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (நபியவர்களிடம் தன் கணவன் குறித்து முறையிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் தொடர்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ் (நபியே!) தன் துணைவன் குறித்து உம்மிடம் முறை யிட்டுக் கொண்டிருந்த அவளது சொல்லை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான் எனும் (58:1ஆவது) வசனத்தை அருளினான். (புஹாரி: அறிவிப்பாளர் பூரணமற்ற செய்தி)

அஹ்மதின் அறிவிப்பில்; தர்க்கித்த அந்தப் பெண் (அவ்ஸ் இப்னுஸ் ஸாமித் அவர்களின் மனைவி கவ்லா பின்த் சஃலபா) நபிகளாரிடம் வந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள், நானோ வீட்டின் ஒரு மூலையில் இருந்தேன், அவர் பேசியதை நான் (முழுமையாக) செவியேற்க (முடிய) வில்லை, அல்லாஹ் முஜாதலாவின் வசனத்தை இறக்கி விட்டான். என்று வந்துள்ளது.  (அஹ்மத்:21195)

இந்த வசனம் தரும் பாடங்கள்;

அல்லாஹ்வுக்கு இருக்கும் பண்பாக செவியேற்றல், பார்த்தல் என்ற பண்புகளுடன், அவனுக்கு ஸமீஃ, பஸீர் என்ற பெயர்களும் இருக்கின்றன என்று நம்புதல்.

அல்லாஹ்வின் பண்புகளை மறுக்காமலும், படைப்புகளுக்கு ஒப்பாக்காமலும், வடிவம் கட்பிக்காமலும், மாற்று அருத்தம் கொடுக்காமலும் ‘அல்லாஹ்வுக்கு எப்படியிருந்தால் பொருத்தமோ அப்படி அந்த பண்புகள் இருக்கின்றன’ என்று வந்ததை வந்தது போன்று நம்புதல் கடமையாகும்.

لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

அவனைப் போன்று எதுவும் இல்லை; அவன் செவியேற்பவன், பார்ப்பவன். (42:11)

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏

அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)

அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் மேட்டில் ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ என்று (உரக்கச்) சொல்லிவந்தோம். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் உள்ளங்களுக்குள் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மெல்லக் கூறுங்கள்). ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. மாறாக, அருகிலிருந்து செவியேற்பவனையும் பார்ப்பவனையுமே அழைக்கின்றீர்கள்’ என்றார்கள். ….. (புஹாரி: 7386, முஸ்லிம்)

அவர்கள் நபிகளாரோடு கதைத்த விடயம் ‘தன் கணவர் தன்னை அவர் தாய்க்கு ஒப்பாக்கி விட்டார், அவருடன் சேர்ந்து வாழ முடியுமா’ என்பதே. அதனால்தான் அடுத்த மூன்று வசனங்களும் அதற்கான சட்ட ஒழுக்கங்களை கூறுகின்றன.

اَلَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآٮِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْ‌ؕ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـىِْٔ وَلَدْنَهُمْ‌ؕ وَاِنَّهُمْ لَيَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًا‌ؕ وَ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ‏

“உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்மார்களுக்கு ஒப்பாக்கிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் – எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் – ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன். (58:2)

சொல் அருத்தம்;

اَلَّذِيْنَ சிலர், இதனைத் தெளிவு படுத்த ஒரு வினைச் சொல் அவசியம், مِنْكُمْ உங்களிலிருந்து , يُظٰهِرُوْنَ      ஒப்பாக்கிவிடுகின்றனர், مِّنْ இருந்து,     نِّسَآٮِٕهِمْ   அவர்களது பெண்கள், مَّا இல்லை என்ற கருத்தில் வரும், இதற்கு ஒரு எழுவாய், பயனிலை வரும், பயனிலையின் கருத்தை எழுவாய்க்கு இல்லை என்று கருத்து கொடுக்கும் வாக்கியமாக அமையும்,  هُنَّ அவர்கள் பெண்பால்,    اُمَّهٰتِهِمْ‌    அவர்களது தாய்மார்கள், اِنْ நிபந்தனையிடும் ஒரு சொல், இல்லை என்ற கருத்தில் வரும், அப்போது ஒரு எழுவாய், பயனிலையோடு வந்து, பயனிலையின் கருத்தை எழுவாய்க்கு மருத்துரைக்கும்.    اُمَّهٰتُهُمْ     அவர்களது தாய்மார்கள், اِلَّا விதிவிலக்கு செய்வதற்கு பாவிக்கும் ஒரு சொல், الّٰٓـىِْٔ சிலர்,பலர், இதனைத் தெளிவு படுத்த ஒரு வினைச் சொல் அவசியம், وَلَدْنَ அவர்கள் பெற்றெடுத்தார்கள், هُمْ‌ؕ அவர்கள், وَاِنَّهُمْ   நிச்சயமாக இவர்கள் ,    لَيَقُوْلُوْنَ    கூறுகிறார்கள்,   مُنْكَرًا      வெறுப்பானது, مِّنَ இருந்து, நின்றும், الْقَوْلِ சொல், பேச்சு,    وَزُوْرً     பொய்,    وَ اِنَّ اللّٰهَ    ஆனால் நிச்சயமாக அல்லாஹ் ,     لَعَفُوٌّ     மிகவும் பொறுப்பவன்  ,          غَفُوْرٌ‏  மிகவும் மன்னிப்பவன்

وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّا‌ ؕ ذٰ لِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ‌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ

மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.  (58:3)

சொல் அருத்தம்;

وَ   மேலும்,இன்னும், اَلَّذِيْنَ சிலர், இதனைத் தெளிவு படுத்த ஒரு வினைச் சொல் அவசியம், مِنْكُمْ உங்களிலிருந்து , يُظٰهِرُوْنَ      ஒப்பாக்கிவிடுகின்றனர், مِّنْ இருந்து,     نِّسَآٮِٕهِمْ   அவர்களது பெண்கள், ثُمَّ பின்பு, பிறகு, يَعُوْدُوْنَ    அவர்கள் மீண்டு வருவார்கள், لِمَا ஒன்றளவில், ஒன்றின் பக்கம்,   قَالُوْا      அவர்கள் கூறினார்கள், فَ ஆகவே, எனவே, تَحْرِيْرُ    விடுதலை செய்தல்,   رَقَبَةٍ     ஓர் அடிமை,   مِّنْ قَبْلِ   முன்னர்,    اَنْ يَّتَمَآسَّا‌    அவ்விருவரும் பிடிப்பது, தீண்டுவது, இல்லறத்தில் ஈடுபடுவது, ذٰ لِكُمْ அது,    تُوْعَظُوْنَ நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள், بِهٖ‌ அதன் மூலம், அதனைக் கொண்டு,     وَاللّٰهُ    மேலும், அல்லாஹ்,   تَعْمَلُوْنَ நீங்கள் செய்கிறீர்கள், بِمَا ஒன்றை, ஒன்றைக் கொண்டு,    خَبِيْرٌ‏   நன்கறிபவன்   

فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّاؕ فَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّيْنَ مِسْكِيْنًا‌ؕ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ؕ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِیْمٌ‏

ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் – வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.  (58:4)

சொல் அருத்தம்;

فَ ஆகவே, எனவே,ஆனால், مَنْ யார், எவர்,   لَّمْ يَجِدْ     பெறவில்லை,   صِيَامُ    நோன்பு, நோன்பு நோற்றல்,   شَهْرَيْنِ  இரண்டு மாதங்கள்    مُتَتَابِعَيْنِ    தொடர்ச்சியாக   مِنْ قَبْلِ    முன்       اَنْ يَّتَمَآسَّا‌    அவ்விருவரும் பிடிப்பது, தீண்டுவது, இல்லறத்தில் ஈடுபடுவது,    فَمَنْ    எவர்    لَّمْ يَسْتَطِعْ    சக்தி பெறவில்லை    فَاِطْعَامُ    உணவு அளித்தல், سِتِّيْنَ   அறுபது,    مِسْكِيْنًا‌ؕ    ஏழை,   ذٰلِكَ   அது,    لِتُؤْمِنُوْا    நீங்கள் விசுவாசம் கொள்வதற்காக,    بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ    அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும்,    وَتِلْكَ    மேலும் இவை,    حُدُوْدُ اللّٰهِ‌ؕ     அல்லாஹ்வின் வரம்புகள்     وَلِلْكٰفِرِيْنَ    காஃபிர்களுக்கு உண்டு,   عَذَابٌ     வேதனை,    اَلِیْمٌ‏     நோவினை செய்யக்கூடியது

இந்த வசனங்கள் தரும் பாடங்கள்:

اَلَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآٮِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْ‌ؕ

ஒரு ஆண் தன் மனைவியை தாய்க்கு ஒப்பாக்குவது; ‘நீ எனக்கு எனது தாயைப் போன்றவள், நீ எனக்கு என் தாயின் முதுகுக்கு சமனானவள்’ போன்ற வார்த்தைகளை மனைவியை வெறுத்து பாவிப்பது. இது அரபியில் “ளிஹார்” என்று அழைக்கப்படும். இது ஜாஹிலிய்ய கால சமூகத்தில் இருந்துவந்த முறையாகும் அப்போது உடன் பிரிவாக கருதப்பட்டது, இஸ்லாம் அதன் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தது.

اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـىِْٔ وَلَدْنَهُمْ‌ؕ

தாய் என்பவள் ‘உங்களை பெற்றவள்தான்’ என்ற வரைவிலக்கணத்தின் மூலம் தாயின் பெறுமதியை எடுத்துக் கூறுகின்றான். உலகில் தாய், தந்தை என்ற அந்தஸ்த்தை, பெற்றவர்கள் அல்லாத யாருக்கும் கொடுக்கமுடியாது, உண்மையான பெற்றோரை யாராலும், மறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

وَاِنَّهُمْ لَيَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًا‌ؕ وَ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ‏

ஒருவன் தன் மனைவியை தன் தாய்க்கு ஒப்பாக்குவது குற்றமாகும், அதனால் தான் அல்லாஹ் அதனை “எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள்’ என்று கூறி, பாவமன்னிப்பையும் கூறி, குற்றப்பரிகாரத்தையும் கடமையாக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـئِْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ‌ۚ

உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான்,….  (33:4)

اُدْعُوْهُمْ لِاٰبَآٮِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ‌

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தையர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் – அதுவே அல்லாஹ்விடம் நீதமானதுமாகும்;…  (33:5)

وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا

தன் மனைவியை தாய்க்கு ஒப்பாகியவர் மீண்டும் அவரை மனைவி என்ற நிலைக்கு எடுக்க, அல்லது இல்லறத்தில் ஈடுபட விரும்பினால் பின்வரும் பரிகாரங்களை செய்யாமல் அவர் நேரடியாக அந்த இடத்துக்கு போக முடியாது.

அவர் மனைவியோடு இல்லறத்தில் ஈடுபட முன்னர் ஒரு அடிமையை உரிமை விடவேண்டும்.

அடிமை கிடைக்கவில்லை என்றால்; இரண்டு மாதங்கள் தொடர் நோன்பு பிடிக்க வேண்டும்.

அதற்கு சக்தி இல்லாத போது, அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

இதுபற்றிய முழு விளக்கத்தையும் கவ்லா (ரலி) அவர்களே கூற, அது அஹ்மதில் (27319) விரிவாக பதியப்பட்டுள்ளது. அதில் மஃமர் எனும் அறியப்படாத ஒருவர் இடம் பெற்றுள்ளார், இப்னு ஹிப்பான் அவர்கள் நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.

ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ؕ

இந்த சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே அல்லாஹ்வையும் அவன் தூதரையும் சரியாக நம்பி, இந்த சட்டங்களை எடுத்து நடப்போர் யார் என்பதை உறுதிப்படுத்தவே. இதுவே ளிஹார் செய்தவருக்கு அல்லாஹ் வைத்திருக்கும் சட்ட வரம்புகள், எடுத்து நடந்தால் முஃமின், இல்லையென்றால் மறுத்தவர், புறக்கணித்தவர் காபிர் ஆவார், அதனால் இந்த வசனத்தை முடிக்கும் அல்லாஹ் இப்படி கூறுகின்றான்.

وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِیْمٌ‏

காபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. 

المجادلة 5- 7

اِنَّ الَّذِيْنَ يُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ كُبِتُوْا كَمَا كُبِتَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ وَقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ‌ ؕ وَ لِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ‌ ۚ‏

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் – திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.  (58:5)

சொல் அருத்தம்;

اِنَّ الَّذِيْنَ   நிச்சியமாக எவர்கள்,    يُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ    அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்கள்,     كُبِتُوْا    இழிவாக்கப்பட்டார்கள், كَمَا ஒன்றைப் போன்று,      كُبِتَ     இழிவாக்கப்பட்டான், الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌    அவர்களுக்கு முன்னிருந்தவர்கள்,     وَقَدْ اَنْزَلْنَاۤ    திட்டமாக நாம் இறக்கினோம்,        اٰيٰتٍۢ வசனங்கள், بَيِّنٰتٍ‌ தெளிவானவை,     وَ لِلْكٰفِرِيْنَ   காபிர்களுக்கு உண்டு,       عَذَابٌ       வேதனை,    مُّهِيْنٌ‌    இழிவுபடுத்தக்கூடியது

இந்த வசனம் தரும் பாடங்கள்.

يُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ

அல்லாஹ்வின் மார்க்கத்தை மறுத்து, அல்லது அவன் இயற்றிய சட்டத்தை மறுத்து, அல்லது புறக்கணித்து, அவன் தூதரின் வழிகாட்டலை மறுத்து அல்லது ஒரு சுன்னாவை புறக்கணித்து, அல்லது கேவலமாக நினைத்து, அல்லது இந்த காலத்துக்கு பொருந்தாது என்று கூறி நபித் தோழர்கள் உண்மை முஃமின்கள் ஈமான் கொண்டது போன்று ஈமான் கொள்ளாமல் அல்லாஹ்வோடும் அவன் தூதரோடும் முரண்பாட்டுக் கொள்வதே சண்டை பிடிப்பதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:


وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ ؕ وَسَآءَتْ مَصِيْرًا

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.  (4:115)

كُبِتُوْا كَمَا كُبِتَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌

அப்படிப்பட்டவர்களுக்கு ஈருலகிலும் இழிவு இருக்கின்றது என்ற எச்சரிக்கையையே இந்த வசனம் இடுகின்றது.

وَقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ‌

அடுத்து அல்லாஹ் இறக்கி வைத்திருக்கும் எந்த சட்டமானாலும் அனைத்து மனிதர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் தெளிவாகவே இறக்கிவைக்கப்பட்டுள்ளது. பிடிவாதக் காரர்களும் வழிகேடர்களும், காபிர்களுமே இதனை மறுப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் கடுமையான தண்டனையை அல்லாஹ் வைத்திருக்கின்றான்.

يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا‌ ؕ اَحْصٰٮهُ اللّٰهُ وَنَسُوْهُ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‌‏

அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.  (58:6)

சொல் அருத்தம்;

 يَوْمَ ஒரு நாள், يَبْعَثُ அவன் எழுப்புவான், هُمُ அவர்கள் , اللّٰهُ அல்லாஹ்,  جَمِيْعًا   அனைவரும்,      فَيُنَبِّئُهُمْ    பின்னர் அவர்களுக்கு அறிவிப்பான்,           بِمَا ஒன்றை, عَمِلُوْا‌    அவர்கள் செய்தார்கள், اَحْصٰٮهُ اللّٰهُ     அல்லாஹ் அவற்றை கணக்கெடுத்திருக்கிறான்,     وَنَسُوْهُ‌     அவர்கள் அவற்றை மறந்து விட்டார்கள்,    وَاللّٰهُ அல்லாஹ்,     عَلٰى كُلِّ شَىْءٍ      ஒவ்வொரு பொருளின் மீதும்,      شَهِيْدٌ‌     சாட்சியாளனாக இருக்கின்றான்.

இந்த வசனம் தரும் பாடங்கள்

يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا‌

அல்லாஹ் மனிதர்களை மறுமை நாளில் எழுப்புவான் என்பதை கூறி, அதனூடாக மறுமையை மறந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை புறக்கணிப்போருக்கு அல்லாஹ் எச்சரிக்கை விடுகின்றான்.

اَحْصٰٮهُ اللّٰهُ وَنَسُوْهُ‌

உலகில் பாவங்களை செய்து அல்லாஹ்வுக்கு மாறு செய்தவன் அவற்றை மறந்து விடலாம், ஆனால் அல்லாஹ் அவற்றை கணக்கெடுத்து வைத்திருக்கின்றான், இதுவும் மாறுசெய்யும் மனிதர்களுக்கு அவர்கள் தன்னை திருத்திக் கொள்வதற்காக விடும் எச்சரிக்கையே.

وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‌

அல்லாஹ்வுக்கு தெரியாமல் இந்த உலகில் எதனையும் மனிதன் செய்துவிட முடியாது இதனையே அல்லாஹ் ‘அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்’ என்ற வசன தெடர் மூலம் எடுத்துரைக்கின்றன.

அல்லாஹ் கூறுகின்றான்:


وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.  (50:16)

இப்படி பலவழிகளிலும் மனிதனை கண்காணிக்கும் அல்லாஹ் மனிதனின் செயல்களை எப்படியெல்லாம் சூழந்து அறிகின்றான் என்பதனை எடுத்துரைக்கின்றான் அடுத்த வசனத்தில்.

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْا‌ۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை – அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.  (58:7)

சொல் அருத்தம்;

اَ கேள்வி கேட்க பாவிக்கும் எழுத்து, ஆ உருபு , لَمْ تَرَ நீ காணவில்லை,    اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ், يَعْلَمُ      அவன் அறிகிறான், مَا ஒன்று, فِى லே,ல் , السَّمٰوٰتِ வானங்கள், الْاَرْضِ‌ؕ   பூமி,        مَا يَكُوْنُ     ஆகியிருக்கவில்லை, مِنْ இருந்து, نَّجْوٰى   இரகசியம்,     ثَلٰثَةٍ      மூன்று,       اِلَّا விதிவிலக்கு செய்வதற்கான ஒரு சொல், தவிர, هُوَ அவன், رَابِعُ நான்காவது, هُمْ   அவர்கள், ஆறாவது,  وَ இன்னும், لَا இல்லை,      خَمْسَةٍ     ஐந்து,            اِلَّا விதிவிலக்கு செய்வதற்கான ஒரு சொல், தவிர, هُوَ அவன், هُمْ   அவர்கள், سَادِسُ ஆறாவது,     وَلَاۤ اَدْنٰى   மிகக் குறைந்ததும் இல்லை       مِنْ ذٰ لِكَ     அதைவிட     وَلَاۤ اَكْثَرَ      மிக அதிகமானதும் இல்லை     اِلَّا هُوَ مَعَهُمْ     அவர்களுடன் அவன் இருந்தே தவிர,   اَيْنَمَا எங்கு, எங்கே,  كَانُوْا‌ۚ   அவர்கள் இருந்தார்கள்,       ثُمَّ يُنَبِّئُهُمْ     பின்னர் அவர்களுக்கு அவன் அறிவிப்பான்     بِمَا عَمِلُوْا     அவர்கள் செய்தவற்றைப் பற்றி      يَوْمَ الْقِيٰمَةِ‌     கியாம நாளில்     اِنَّ اللّٰهَ     நிச்சயமாக அல்லாஹ்    بِكُلِّ شَىْءٍ   எல்லாப் பொருட்களைப் பற்றியும்        عَلِيْمٌ‏      நன்கறிந்தவன்

இந்த வசனம் தரும் பாடங்கள்.

لَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْا‌ۚ

மனிதன் பேசும் இரகசியங்களை அல்லாஹ், அவர்களுடன் இருப்பவர் அறிவதை விடவும் அறிகின்றான் என்பதனையே இங்கு சுட்டிக்காட்டுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்:


اَلَمْ يَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَعْلَمُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ وَاَنَّ اللّٰهَ عَلَّامُ الْغُيُوْبِ‌ ۚ‏

அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?  (9:78)

ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِ‌

இரகசியம் பேசும் மனிதன் பெரும்பாலும் பாவத்திற்கும், அல்லாஹ்வுக்கு மாறு செய்வதற்குமே அதனை பயன்படுத்துவதனால் அதனை அச்சுறுத்தும் முகமாகவே அல்லாஹ் மறுமையில் இரகசியங்களையும் வெளிப்படுத்துவான் என்று எச்சரிக்கின்றது.

அல்லாஹ் மனிதனது செயல்களை அறிந்த நிலையில் இருக்கின்றான் என்ற நம்பிக்கையே எம்முடைய வாழ்வில் எல்லா விடயங்களிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வரப்போகின்றது. எனவே இரகசியம் பேசுவதிலும் ஒருவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய வழிகாட்டலாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:


لَا خَيْرَ فِىْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰٮهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍۢ بَيْنَ النَّاسِ‌ ؕ وَمَن يَّفْعَلْ ذٰ لِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا‏

(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலவும்  இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.  (4:114)

هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْ

இந்த வசனத்தில் அல்லாஹ் மனிதர்களோடு எல்லா நிலையிலும் இருப்பதாக கூறுகின்றான். இங்கிருந்து அல்லாஹ் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்றான் என்று விளங்க முடியாது, அப்படி விளங்குவது  என்பது வழிகெட்ட, அத்வைதிகளின் கருத்தாகும்.

மாறாக இந்த வசனத்தை இன்னும் பல வசனங்ககளோடு சேர்த்து விளங்குவதே அல்லாஹ்வை பற்றிய எமது நம்பிக்கையை சீர் செய்துகொள்ள உதவும்.

இப்னு கஸீர் இமாம் அவர்கள் பதிவு செய்கின்றார்கள்: ‘இந்த வசனம் மூலம் அல்லாஹ் அறிவால் படைப்புகளை சூழ்ந்திருக்கின்றான் என்பதே நாடப்பட்டுள்ளது என்று பல அறிஞர்களும் ஏகோபித்த கருத்தை கூறியுள்ளார்கள்.’

  • எனவே அல்லாஹ் அவனே அனைத்து படைப்புகளோடும் கலந்திருக்கின்றான் என்று வாதிடுவது தவறாகும்.
  • அல்லாஹ் அர்ஷின் மேல் இருந்தவனாக பொதுவாக எல்லா மனிதர்களையும் அறிவாலும், பார்வையாலும், செவியேட்பதாலும் படைப்புகளை சூழ்ந்திருக்கின்றான் என்று புரிந்துகொள்ளவேண்டும்.
  • மேலும் குறிப்பாக முஃமின்களுக்கு உதவி செய்வது, பாதுகாப்பது போன்றவற்றின் மூலமும் சூழ்ந்திருக்கின்றான் என்றும் புரிய வேண்டும்.
  • அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்துவிட்டதாக ஏழு இடங்களில் தெளிவாக அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.  (7:54)

اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏

(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.  (20:5)

(10:3, 13:2, 25:59, 32:4, 57:4)

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: ……..  என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை உஹத் மலை மற்றும் ஜவ்வானியா பகுதியில் மேய்த்துவந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது.  மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டு, அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!” என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், “அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், “வானத்தில்” என்று பதிலளித்தாள். அவர்கள், “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள். அவர்கள் (என்னிடம்), “அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்” என்றார்கள்.  (முஸ்லிம்)

  • அடுத்து அல்லாஹ் வேறு, படைப்புகள் வேறு இரண்டும் ஒன்றில் ஒன்று கலந்ததல்ல என்று அத்வைத சிந்தனைக்கு மாற்றமாக அல்லாஹ்வைப் பற்றி நம்பவேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.  (புஹாரி: 6502)

  • இங்கு நல்லடியார்களின் நடவடிக்கைகளை, அல்லாஹ் விரும்பிய செயல்களாக மாற்றுகின்றான் என்று நம்ப வேண்டுமே அல்லாமல், அல்லாஹ் மனிதனாக மாறுகின்றான் என்று விலங்க கூடாது, அப்படி விளங்க முடியாது என்பதற்கு அந்த ஹதீஸின் கடைசி வரிகள் சான்று பகர்கின்றன.

அதுதான்; அல்லாஹ் நல்லடியானாக மாறிவிட்டால் அல்லாஹ்விடம் துஆ கேட்க, பாதுகாப்பு தேடவேண்டிய அவசியமும் ஏற்படாது, அவனது உயிரை அல்லாஹ் கைப்பற்றவும் தேவையில்லை. மாறாக அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும், பாதுகாப்பு தேட வேண்டும் என்பதும், அவனது உயிரை அல்லாஹ் கைப்பற்றுகின்றான் என்பதும் அல்லாஹ் வேறு, மனிதன் வேறு என்பதை தெளிவுபடுத்துகின்றது. (அல்லாஹு அஃலம்)

المجادلة 8- 01

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نُهُوا عَنِ النَّجْوَى ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُوا عَنْهُ وَيَتَنَاجَوْنَ بِالإثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ وَيَقُولُونَ فِي أَنْفُسِهِمْ لَوْلا يُعَذِّبُنَا اللَّهُ بِمَا نَقُولُ حَسْبُهُمْ جَهَنَّمُ يَصْلَوْنَهَا فَبِئْسَ الْمَصِيرُ 

(நபியே!) ரகசியமே கூடாதென்று தடுக்கப்பட்டிரு இருந்தவர்களை நீங்கள் கவனித் தீர்களா? அவர்கள் எத்தனைவிட்டும் தடுக்கப்பட்டார்களோ அதனை நோக்கியே மீண்டுசென்று, பாவத்திற்கும், வரம்பு மீறுவதற்கும், தூதருக்கு மாறு செய்வதற்குமே, அவர்கள் ரகசியமாகச் சதி ஆலோசனை செய்கின்றனர். பின்னர் அவர்கள் உங்களிடம் வந்தாலோ, அல்லாஹ் உங்களுக்குக் கூறாத வார்த்தையைக் கொண்டு முகமன் கூறுகின்றனர், மேலும் அவர்கள் தங்களுக்குள் “நாம் கூறியதற்காக, அல்லாஹ் நம்மை வேதனை செய்யமாட்டானா?” என்றும் கூறுகின்றனர். நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதில் அவர்கள் நுழைவார்கள். அது செல்லுமிடத்தில் மிக மோசமானது.(58:8)

சொல் அருத்தம்;

أَلَمْ تَرَ     நீங்கள் பார்க்கவில்லையா ,     إِلَى அளவில், பக்கம், الَّذِينَ சிலர், نُهُوا  அவர்கள் தடுக்கப்பட்ட்னர்,       النَّجْوَى     ரகசியம் , عَنِ விட்டும்,     ثُمَّ يَعُودُونَ     பிறகு மீண்டுசெல்கின்றார்கள்,       لِمَا ஒன்றளவில், نُهُوا அவர்கள் தடுக்கப்பட்டார்கள், عَنْهُ   அதனை விட்டும்,     وَيَتَنَاجَوْنَ     ரகசியம் பேசுகின்றனர்,     بِالإثْمِ     பாவத்திற்கும்,     وَالْعُدْوَانِ      வரம்பு மீறுவது ,      وَمَعْصِيَتِ الرَّسُولِ     தூதருக்கு மாறு செய்வது ,     وَ    இன்னும், மேலும், إِذَا நிபந்தனையிடுவது, ஆல் உருபு, جَاءُو அவர்கள் வந்தார்கள், كَ உனது, உன்னிடம்,    حَيَّوْكَ     உங்களுக்கு முகமன் கூறுகின்றனர்,     بِمَا  ஒன்றைக் கொண்டு, لَمْ يُحَيِّكَ அவன் உனக்கு முகமன் கூறவில்லை, بِهِ அதன் மூலம், اللَّهُ அல்லாஹ்,    وَيَقُولُونَ      மேலும் அவர்கள் கூறுகின்றனர்,         فِي أَنْفُسِهِمْ     தங்களுக்குள்,    لَوْلا ஆதரவு வைப்பதற்கு, கைசேதப்படுவதற்கு பாவிக்கும் சொல், பின்னால் ஒரு வினைச் சொல் வரும், يُعَذِّبُنَا அவன் எங்களை தண்டிப்பான், اللَّهُ    அல்லாஹ், بِمَا ஒன்றைக் கொண்டு,        نَقُولُ     நாம் கூறுவோம்,    حَسْبُهُمْ     அவர்களுக்குப் போதுமானதாகும்,    جَهَنَّمُ      நரகம்,     يَصْلَوْنَهَا     அதில் அவர்கள் நுழைவார்கள் ,     فَبِئْسَ   அது மிக மோசமானது,     الْمَصِيرُ     செல்லுமிடம்

இந்த வசனம் சொல்லும் பாடங்கள்.

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نُهُوا عَنِ النَّجْوَى ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُوا عَنْهُ

ரகசியம் பேசுவதிலிருந்து ஒரு கூட்டம் தடுக்கப்பட்டிருந்தது என்பதே இந்த வசனம் கூறுகின்றது, அவர்கள் யூதர்கள் என்பதே பல விரிவுரையாளர்களின் கருத்து. எல்லா விடயங்களிலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வது போன்று இதிலும் மாறு செய்து, இஸ்லாத்திற்கு எதிராக ரகசியம் பேசினார்கள். இதனையே அல்லாஹ் கண்டிக்கின்றான். அவர்களது பண்பை  சூரத்துல் பகராவின் வசனம் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

(76) وَاِذَا لَـقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْآ اٰمَنَّا  ۖۚ وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ قَالُوْآ اَ تُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَيْكُمْ لِيُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
(77) اَوَلَا يَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ

மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, “நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, “உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.76, அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?  (2:76,77)

وَيَتَنَاجَوْنَ بِالإثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ

அவர்கள் பாவம் செய்வதற்கும், அநியாயம் இழைப்பதற்கும், நபிகளாருக்கு மாறு செய்யவும் ரகசியத்தை பயன்படுத்தினார்கள், அதனால்தான் ரகசியம் பேசுவது தடுக்கப்பட்டது, மாறாக நல்ல விடயங்களுக்காக ரகசியம் பேசுவதை அல்லாஹ் அனுமதித்தான் என்று முன்னர் ஸூரத்துன் நிஸாவின் வசனம் மூலம் பார்த்தோம். அடுத்த வசனத்திலும் அது பற்றி வரும்.

وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ  

இப்படி இஸ்லாத்தை அழிக்க ரகசியம் பேசியவர்கள் நபிகளாரை கேவலப்படுத்துவதற்காக முகமன் கூறும் முறையைக் கூட மாற்றி, நபிகளாருக்கு சாபமிட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் :  யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு ‘வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)’ என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான்தான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)’ என்று கேட்டார்கள்.   (புஹாரி: 6024, முஸ்லிம்)

இதனால் தான் நபியவர்கள் அவர்களுக்கு பதில் சொல்லும் போது தனியானதொரு முறையையும் காட்டித் தந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  யூதர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் அவர்களில் சிலர் ‘அஸ்ஸாமு அலைக்’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதிலாக) ‘வ அலைக’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல்லுங்கள்.  (புஹாரி: 6257, முஸ்லிம்)

وَيَقُولُونَ فِي أَنْفُسِهِمْ لَوْلا يُعَذِّبُنَا اللَّهُ بِمَا نَقُولُ  

அதுமட்டுமல்ல, இஸ்லாத்திற்கு எதிராக ரகசியம் பேசியவர்கள், நபிகளாரை கேவலப்படுத்த ஸலாம் சொல்லும் முறையை மாற்றியவர்கள், அவர்கள் மோசமானவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள்  என்பதற்கு அவர்களே சாட்சி என்பதனாலும், அல்லாஹ் உடனே தண்டனையை இறக்கமாட்டான் என்பதனையும் அறிந்து வைத்திருந்ததனால் இஸ்லாத்தை, அல்லாஹ்வை, நபியை கொச்சைப்படுத்தும் முகமாக பின்வருமாறு கூறினார்கள்.

“நாம் கூறியதற்காக, அல்லாஹ் நம்மை வேதனை செய்யமாட்டானா?” என்றும் கூறுகின்றனர்.

حَسْبُهُمْ جَهَنَّمُ يَصْلَوْنَهَا فَبِئْسَ الْمَصِيرُ

உலகில் இவர்கள் தப்பினாலும் மறுமையில் இவர்கள் கேவலப்படுத்தப்படுவார்கள் என்பது இந்த வசனத்தின் முடிவு. அது மட்டுமல்லாமல் இன்றும் யாரெல்லாம் இஸ்லாத்தை கேவலப்படுத்திவிட்டு நிம்மதியாக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கும் மறுமையில் இதுவே நிலை என்ற எச்சரிக்கையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதே. அல்லாஹ் கூறுகின்றான்:

اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَ‏(30) ………. فَالْيَوْمَ الَّذِيْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ يَضْحَكُوْنَۙ‏

நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்………. 34. ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.  (83:29,,,,34)

  • இந்த வசனம் இறங்குவதற்கு காரணமாக இருந்த நிகழ்வு (ஸபபுன் னுஸூல்)

அப்துல்லாஹிப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள்: யூதர்கள் நபிகளாருக்கு ‘அஸ்ஸாமு அலைக்’ என்று கூறிவிட்டு, பிறகு உள்ளத்தில் தண்டனை வராதா என்று கூறிக் கொள்பவர்களாக இருந்தனர், அப்போதுதான் அல்லாஹ் ஸூரா முஜாதலாவின் எட்டாவது வசனத்தை இறக்கினான்.  (அஹ்மத்:6589) இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் விடயத்தில் சிறிதளவு அறிஞர்கள் பேசியிருந்தாலும் இது ஹஸன்  தரத்தில் உள்ள ஹதீஸாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ (9)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு – எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ – அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (58:9)

சொல் அருத்தம்;

ال يَا أَيُّهَا சேர்ந்த ஒரு சொல்லை விழிப்பதற்கு பாவிக்கப்படும் ஒரு சொல், الَّذِينَ சிலர், آمَنُوا அவர்கள் நம்பிக்கை வைத்தனர்,    إِذَا تَنَاجَيْتُمْ     நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால்,     فَلَا تَتَنَاجَوْا     இரகசியம் பேசாதீர்கள்,    بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ     பாவத்தையும் வரம்பு மீறுதலையும், தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு,     وَتَنَاجَوْا     மேலும் நீங்கள்  இரகசியம் பேசுங்கள்,    بِالْبِرِّ     நன்மை செய்வதற்காகவும்,     وَالتَّقْوَى     பயபக்தி,     وَاتَّقُوا اللَّهَ     அல்லாஹ்வை   அஞ்சி நடந்து கொள்ளுங்கள், الَّذِي ஒருவன்,     إِلَيْهِ     அவன் பக்கம்,      تُحْشَرُونَ      நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்

இந்த வசனம் தரும் பாடங்கள்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُولِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوَى

யூதர்களின் மோசமான பழக்கங்களை கண்டித்த வசனம், முஃமின்கள் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக நல்ல வழிமுறைகளை ஒழுக்கங்களை தொடர்ந்து சொல்கின்றது இந்த வசனம். அதுதான் முஃமின்களும் யூதர்களை போன்று, பாவத்திற்கும், அநியாயம் செய்வதற்கும், நபிகளாருக்கு மாறுசெய்வதற்கும் ரகசியம் பேசாமல், நல்ல விடயங்களுக்கு, இறையச்சமூட்டும் விடயங்களுக்காக ரகசியம் பேசுவதாகும்.

இங்கிருந்து பொதுவாக ரகசியம் தடுக்கப்படவில்லை என்பதும் தெளிவு.

وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ

இந்த நல்ல வழிகாட்டல்களை எடுத்து நடப்பதற்கும், தீய பழக்கவழக்கங்களை விட்டுவிடுவதற்கும் மிக அவசியமானது இறையசம் அல்லாஹ்வின் பயம் என்பதால் அல்லாஹ்வை அஞ்சி நடக்குமாறு அல்லாஹ் புத்திமதி சொல்வதோடு,

உலகில் எப்படியும் வாழ்ந்துவிடலாம் மறுமையில் அல்லாஹ் மனதினை எழுப்பினால் அங்கு காரணம் சொல்லி தப்பிக்கமுடியாது என்பதனால் மறுமையையும் நினைவூட்டி அல்லாஹ் இந்த வசனத்தை முடிக்கின்றான். எனவே யாரிடம் மறுமை நம்பிக்கை சரியாக இருக்குமோ அவன் அல்லாஹ்வை பயந்து நடப்பான், அல்லாஹ்வை சரியாக பயந்து நடப்பவன் இந்த உலகில் நல்லவனாக வாழ்வான். இதற்கே இந்த புத்திமதி.

ஸப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:  ‘இப்னு உமர்(ரலி) (கஃபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, ‘இப்னு உமரே!’ (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி (நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா?’ என்று கேட்டதற்கு இப்னுஉமர்(ரலி), ‘இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார்.’ அல்லது ‘இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.’ அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். அவரிடம் இறைவன்) ‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா’ என்(று கேட்)பான். அவர், ‘(ஆம்) அறிவேன். என் இறைவா! என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்னே;. இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்.’ என்று கூறுவான். பிறகு அவரின் நற்செயல்களின் பதிவேடு (அவரிடம் வழங்கப்பட்டுச்) சுருட்டப்படும். ‘மற்றவர்கள்’ அல்லது ‘இறைமறுப்பாளர்கள்’ சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, ‘இவர்கள்தாம், தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்’ என்று அறிவிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன் என்றார்கள்.   (புஹாரி: 4685, முஸ்லிம்)

اِنَّمَا النَّجْوٰى مِنَ الشَّيْطٰنِ لِيَحْزُنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيْسَ بِضَآرِّهِمْ شَيْـٴًـــا اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசியம்; ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி அவர்களுக்கு அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது; எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும்.   (58:10)

சொல் அருத்தம்;

اِنَّمَا இதற்குப் பின்னால் ஒரு எழுவாய், பயனிலை வரும், பயனிலையின் கருப்பொருள் எழுவாயில் தொத்தமாக, அல்லது பெரும்பாலும் இருப்பதை குறிக்கும். النَّجْوٰى     இரகசியம்,    مِنَ இருந்து, الشَّيْطٰنِ ஷைதான், لِ க்கு, க்காக அளவில்,        يَحْزُنَ      கவலைப்படுவான், الَّذِيْنَ اٰمَنُوْا     ஈமான் கொண்டவர்கள்,     وَلَيْسَ    அவன்  இல்லை     بِضَآرِّهِمْ    அவர்களுக்கு தீங்கு செய்யக்கூடியவனாக,     شَيْـٴًـــا    ஒன்று,     اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ     அல்லாஹ்வுடையை அனுமதியின்றி,      وَعَلَى اللّٰهِ     அல்லாஹ்வின் மீது,   فَلْيَتَوَكَّلِ       நம்பிக்கைவைக்கட்டும்     الْمُؤْمِنُوْنَ‏     இறைவிசுவாசிகள்

இந்த வசனம் தரும் பாடங்கள்

اِنَّمَا النَّجْوٰى مِنَ الشَّيْطٰنِ

اِنَّمَا     என்ற சொல் சேர்ந்து வந்திருப்பது, இரகசியம் பேசுவது பெரும்பாலும் ஷைத்தானின் தூண்டுதலால் வரக்கூடிய ஒன்று என்பதை தெளிவுபடுத்துகின்றது, அதனால்தான் இரகசியம் என்பது பெரும்பாலும் பாவத்திற்கே பயனளிக்கின்றது. எனவே ஒருவர் நல்லவிடயத்திற்காக இரகசியம் பேசுவாராக இருந்தால் அது புகழப்படவேண்டியதே. அதனை பின்வரும் குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.


அல்லாஹ் கூறுகின்றான்:


لَا خَيْرَ فِىْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰٮهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍۢ بَيْنَ النَّاسِ‌ ؕ وَمَن يَّفْعَلْ ذٰ لِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا‏
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம். (4:114)

لِيَحْزُنَ الَّذِيْنَ اٰمَنُوْا

இரகசியம் என்பது முஃமின்களான நல்லவர்களை கவலையில் ஆழ்த்துவதற்கு ஷைத்தான் தூண்டிவிடும் ஒரு வழியாகும்.

وَلَيْسَ بِضَآرِّهِمْ شَيْـٴًـــا اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

அதேநேரம் சதிகாரர்கள் ஷைத்தானின் தூண்டுதல் காரணமாக என்ன செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி தீங்கு செய்ய முடியாது என்பதே ஒரு முஃமின் தன் உள்ளத்தில் நிறுத்த வேண்டிய நம்பிக்கையாகும். இதனையே அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்;

قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ‌ ۚ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!   (9:51)

பொதுவாக நபியவர்கள் அடுத்தவர்களை கவலையில் ஆழ்த்தும் விதத்தில், அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இரகசியம் பேசுவதை தடுத்தார்கள். அதேநேரம் ஒரு முஃமின் அடுத்தவர்கள் இரகசியம் பேசுவதைக் கண்டு காலங்கவேண்டியதில்லை, மாறாக பாதுகாப்புக்கான வழிகளை மேற்கொள்வதோடு, அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்ட வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரைவிட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசவேண்டாம்.   (புஹாரி: 6288, முஸ்லிம்)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும் வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும்.  (புஹாரி: 6290, முஸ்லிம்)

المجادلة 11

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ وَإِذَا قِيلَ انْشُزُوا فَانْشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (11) }

ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் – அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

சொல் அருத்தம் ;

ال يَا أَيُّهَا சேர்ந்த ஒரு சொல்லை விழிப்பதற்கு பாவிக்கப்படும் ஒரு சொல், الَّذِينَ சிலர், آمَنُوا அவர்கள் நம்பிக்கை வைத்தனர்,      إِذَا நிபந்தையிடுவதற்கு பாவிக்கப்படும் சொல், ஆல், قِيلَ சொல்லப்பட்டது, لَكُمْ   உங்களுக்கு,     تَفَسَّحُوا      நகர்ந்து இடங்கொடுங்கள்,   فِي الْمَجَالِسِ     சபைகளிலே,      فَافْسَحُوا      நீங்கள் நகர்ந்து இடம் கொடுங்கள்,     يَفْسَحِ اللَّهُ   அல்லாஹ்  இடங்கொடுப்பான்,      لَكُمْ     உங்களுக்கு,     وَإِذَا قِيلَ      சொல்லப்பட்டால்,     انْشُزُوا      நீங்கள் எழுந்திருங்கள்,     فَانْشُزُوا     உடனே நீங்கள் எழுந்திருங்கள்,     يَرْفَعِ اللَّهُ     அல்லாஹ்  உயர்த்துவான்,       الَّذِينَ آمَنُوا           ஈமான் கொண்ட சிலரை,     مِنْكُمْ     உங்களில்,      وَالَّذِينَ أُوتُوا     மேலும் கொடுக்கப்பட்ட சிலரை,       الْعِلْمَ     அறிவு,      دَرَجَاتٍ     பதவிகள், அந்தஸ்துகள்,     وَاللَّهُ     அல்லாஹ்,     بِمَا تَعْمَلُونَ     நீங்கள் செய்பவற்றை,     خَبِيرٌ     நுணுக்கமாக அறிந்தவன்

இந்த வசனம் தரும் பாடங்கள்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَسَّحُوا فِي الْمَجَالِسِ فَافْسَحُوا يَفْسَحِ اللَّهُ لَكُمْ

முன்னால் வசனத்தில் ரகசியத்தை பற்றி சொன்ன அல்லாஹ் சபைகள் மஜ்லிஸ்களின் ஒழுக்கங்களை சொல்லித்தருகின்றான்.

நெருக்கமாக இருக்கும் சபைகளில்  ஒருவர் தல்லி இடம் தருமாறு கேட்டால் இடம் கொடுக்க வேண்டும் என்பதே முதல் அறிவுரை, அப்படி அடுத்தவர்களை மதித்து நடக்கின்ற நேரம் அல்லாஹ் எங்களுக்கு அனைத்திலும் விசாலத்தை ஏற்படுத்துவான் என்பது அதற்கு கிடைக்கும் கூலியாகும்.

பொதுவாக செயலுக்கு ஏற்ற கூலிகளை கொடுப்பது அல்லாஹ் வின் வழிமுறையாகும், உதாரணமாக; அல்லாஹ்வுக்காக ஒரு வீட்டை மஸ்ஜிதை காட்டியவருக்கு சுவனத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் காட்டுகின்றான் (புஹாரி:450),

யார் ஒரு முஃமினுக்கு உதவி  செய்வதில் ஈடுபடுகின்றானோ  அவனுக்கு உதவி செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகின்றான்(முஸ்லிம்),

யாராவது ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால் அல்லாஹ் அவனின் குறையை மறைக்கின்றான்(முஸ்லிம்) என்று வரும் ஹதீஸ்களை போன்று.

இந்த வசனம் எங்களுக்கு தரும் முக்கிய பாடம்,

ஒரு மஜ்லிஸில் ஒரு இடத்தில் அமர்ந்தவரை  பலவந்தமாக யாரும் எழுப்பக்கூடாது, மாறாக தள்ளியிருந்து இடம் தருமாறு கேட்கலாம் என்பதே. நபி (ஸல்) அவர்களும் இந்த வழிமுறையை எமக்கு சொல்லித்தருகின்றார்கள்.

“ஒருவர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு இவர் அந்த இடத்தில் அமர வேண்டாம்.”  (புஹாரி: 6269, முஸ்லிம்)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து அவர்  எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, ‘நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 6270, முஸ்லிம்)

இந்த ஒழுக்கம் எந்த அளவு பேணப்படவேண்டும் என்றால் ஒருவர் ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டு ஒரு தேவைக்காக சென்றுவிட்டு மீண்டும் வந்தால் அவரே அந்த இடத்திற்கு தகுதியானவர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தான் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டு மீண்டும் வந்தால் அவரே அந்த இடத்திற்கு தகுதியானவராவார்.  (முஸ்லிம்)

அடுத்து மஜ்லிஸில் அமர்ந்திருக்கும் ஒருவர் ஒரு மனிதனின் வருகைக்காக எழுந்திருக்க முடியுமா என்பதும் இங்கு பார்க்கவேண்டிய ஒரு விடயமாகும், அந்த அடிப்படையில் அறிஞர்களுக்கு மத்தியில் மூன்று கருத்துக்கள் நிலவுகின்றன; பொதுவாக சிலர் தடுத்துள்ளனர், சிலர் பொதுவாக அனுமதித்துள்ளனர், சிலர் வரவேற்பதற்காக  முடியும் என்று கூறுகின்றனர். இந்த கருத்துக்களை பதிந்த இப்னு கஸீர் இமாம் அவர்கள் ‘இப்படி எழுந்திருப்பதை வளமையாக்கிக் கொள்வது அரபிகள் அல்லாதவர்களின்  (ரோமர்களின்)  பழக்கம் என்று கூறினார்கள்.

வந்திருக்கும் ஹதீஸ்களை பார்க்கும் போது, ஒருவரின் மதிப்புக்காக எழும்புவது, அல்லது அடுத்தவர் தனக்காக எழும்பவேண்டும் என்று ஆசைவைப்பது நபிகளாரால் எச்சரிக்கப்பட்டதும், வெறுக்கப்பட்டதுமான ஒன்று என்பதை புரியலாம். அதே நேரம் ஒருவரையொருவர் (குறிப்பாக தீர்ப்பு சொல்லவருவோரை)  வரவேற்பதற்காக எழும்புவதை நபிகளார் அனுமதித்துமுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஸப்வான் ஆகியோர் முஆவியா (ரலி) அவர்களை கண்டு எழுந்தபோது, அவர்களை அமருமாறு ஏவிய முஆவியா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்:யார் மனிதர்கள் தனக்காக எழுந்து நிற்பதை விரும்புகின்றாரோ, அவர் நரகில் தனக்காக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொள்ளட்டும்.  (திர்மிதி:2755, அபூதாவூத்:5229, அஹ்மத்:16830 வார்த்தை வித்தியாசங்களோடு பதியப்பட்டுள்ளது.)

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களை விடவும் விருப்பமான ஒருவர் நபித்தோழர்களுக்கு இருந்ததில்லை,(ஆனாலும்) அவர்கள் நபியவர்களை கண்டுவிட்டால் எழும்பாதவர்களாகவே இருந்தார்கள். (அப்படி ஏழும்பாமைக்கு காரணம், நபியவர்கள் அதனை வெறுத்ததே.  (அஹ்மத்: 12345,திர்மிதி:2754)

பனூ குறைழா கூட்டத்தாருக்கு தீர்ப்பளிப்பதற்காக வரவழைக்கப்பட்ட சஃத் பின் முஆத் (ரலி) அவர்களுக்காக எழுந்திருக்குமாறு நபியவர்கள் கூறினார்கள்.  (புஹாரி:3043, முஸ்லிம்)

மஜ்லிஸில் சபைகளில் அணிவகுத்து ஸப்பில் நிற்பதில் அறிவாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் சபை ஒழுங்குகளில் ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவுள்ளவர்களும், ஞனம் மிக்கவர்களும்  எனக்கு பக்கத்தில் இருக்கட்டும், பிறகு அடுத்தவர்கள் அடுத்தவர்கள் என்று இருக்கட்டும், மேலும் சந்தைகளில், கடைத்தெருக்களில் கூச்சலிடுவது, நெருங்கிக்கொள்வதை உங்களுக்கு எச்சரிக்கின்றேன்.  (முஸ்லிம்)

அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் தொழுகைக்கு ஸப்பில் நிற்கும்போது எமது தோளை தடவிவிட்டு, ‘நீங்கள் நேராக நில்லுங்கள், முரண்பட்டு வளைந்து நிற்காதீர்கள், அப்படி நின்றால் உங்கள் உள்ளங்கள் முரண்படும், அறிவுள்ளவர்களும், ஞனம் மிக்கவர்களும்  எனக்கு பக்கத்தில் இருக்கட்டும், பிறகு அடுத்தவர்கள் அடுத்தவர்கள் என்று இருக்கட்டும்.’ என்று கூறுவார்கள். அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவார்கள்: இன்றோ நீங்கள் அதிகம் முரண்பட்டவர்களாக இருக்கின்றீர்களே!!!.  (முஸ்லிம்)

மார்க்கம் போதிக்கப்படும் சபைகளில், தொழுகைக்கான சப்களில் பின்னோக்கி செல்வது அல்லாஹ்வின் அருளைவிட்டும் தூரமாக்கும்.

‘நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வர. மற்றொருவர் சென்றுவிட்டார் . அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ வெட்கப்பட்டு சபையின் பின்னால் உட்கார்ந்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் (சபை) முடிந்தவுடன், ‘அந்த மூன்று நபர் பற்றியும் உங்களுக்கு சொல்லித்தரட்டுமா ” என்று கேட்டுவிட்டு, ‘அவர்களுள் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கிவிட்டார் அல்லாஹ்வும் நெறுக்கிக்கொண்டான், அடுத்தவர் வெட்கப்பட்டார், அல்லாஹ்வும் அவர் விடயத்தில் (அருள் புரிய) வெட்கப்பட்டான், மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்’ என்று கூறினார்கள் என அபூ வாகித் அல் லைஸீ(ரலி) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 66)

மேலும் சபைகளில் அனுமதியின்றி இருவரை பிரிப்பதும் நல்லதல்ல.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அமர்ந்திருக்கும்) இருவரை அவர்களது அனுமதியின்றி பிரிப்பது ஒரு மனிதனுக்கு ஆகுமாகாது.  (அஹ்மத்:6999, திர்மிதி:2752)

இந்த வசனத்தில் சபை என்று வருவது பொதுவான சபைகள், ஜும்மாவுடைய மஜ்லிஸ், யுத்த களம், என்று பலவாறாக கருத்துக்கள் பதியப்பட்டுள்ளது. பொதுவானது என்பதே மிக பொருத்தமானது.

وَإِذَا قِيلَ انْشُزُوا فَانْشُزُوا

அடுத்து எழுந்து செல்லுமாறு கூறப்பட்டால் எழுந்து செல்லுங்கள் என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் யுத்தத்திற்காக அழைக்கப்பட்டால், நல்லவிடயங்களுக்காக அழைக்கப்பட்டால், தொழுகைக்காக அழைக்கப்பட்டால் என்றும் பலவாறாக கருத்து கூறப்பட்டுள்ளது. இதனையும் பொதுவாக விளங்கலாம்.

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

அடுத்து, இந்த வசனத்தில் இரண்டு விடயங்கள் பிரதானமாக கூறப்பட்டுள்ளன, சபைகளில் இடம் கொடுப்பது, எழுந்து செல்லுமாறு சொல்லப்பட்டால் எழுந்து செல்வது, சில நேரம் இந்த இரண்டு விடயங்களை செய்வதும் சில மனிதர்களுக்கு தரக்குறைவாக விளங்கலாம், அதற்காகவே அல்லாஹ் ‘ஈமானுடனும், அறிவுடனும் இந்த கட்டளைகளை நடைமுறை படுத்துவோருக்கு அல்லாஹ்விடம் அந்தஸ்து இருக்கின்றது.’ என்று புத்திமதி சொல்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ அல்லாஹ் அவர்களை உயர்த்தாமல் இருக்கமாட்டான். (முஸ்லிம்)

அடுத்து அறிவும் ஈமானும் ஒரு மனிதனை உலகிலும் உயர்த்தும் மறுமையிலும் பல அந்தஸ்துகளை உயர்த்தும் என்பதும் இந்த வசனத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இந்த வேதத்தைக் கொண்டு சிலரை உயர்த்துவார், வேறு சிலரை தாழ்த்துவான்.  (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் தானும் அல்குர்ஆனை கற்று, பிறருக்கும் கற்றுக்கொடுப்பவரே.  (புஹாரி:5027)

وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

இந்த வசனத்தை அல்லாஹ் முடிக்கும் விதம்; அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நுணுக்கமாக அறிபவனாவான்’ இங்கு அல்லாஹ் சொல்லவருவது மனிதனது ஈமான் அறிவுக்கு ஏற்ப அவன் செயற்படுகின்றானா என்பதனை அவதானித்தே அந்தஸ்த்தை வழங்கப் போகின்றான் என்பதே. வெறுமனே அறிவை சுமப்பதோ, வாயளவில் ஈமானை பேசுவதோ நோக்கமல்ல. அதனால் தான் நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.

اللهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا

இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.  (முஸ்லிம்)

المجادلة 12,13

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً  ‌ؕ ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ‌ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் – நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.   (58:12)

சொல் அருத்தம் ;

ال يَا أَيُّهَا சேர்ந்த ஒரு சொல்லை விழிப்பதற்கு பாவிக்கப்படும் ஒரு சொல், الَّذِينَ சிலர், آمَنُوا அவர்கள் நம்பிக்கை வைத்தனர்,      إِذَا நிபந்தையிடுவதற்கு பாவிக்கப்படும் சொல், ஆல்,   نَاجَيْتُمُ الرَّسُوْلَ    நீங்கள்  தூதருடன் இரகசியம் பேசினீர்கள்,     فَقَدِّمُوْا      நீங்கள் முற்படுத்துங்கள்,     بَيْنَ يَدَىْ      இடையில், மத்தியில், نَجْوٰىْ இரகசியம், كُمْ உங்களது,     صَدَقَةً     தான தர்மம்,     ذٰ لِكَ     அது,   خَيْرٌ لَّكُمْ       உங்களுக்கு நல்லதாகும்,   وَاَطْهَرُ     இன்னும் மிகத் தூய்மையானதாகும்,      فَ எனவே, இன்னும், اِنْ நிபந்தனையிடுவதற்கு பாவிக்கும் சொல், ஆல், لَّمْ تَجِدُوْا நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை,     فَاِنَّ اللّٰهَ    நிச்சயமாக அல்லாஹ்,      غَفُوْرٌ      மிக மன்னிப்பவன்,     رَّحِيْمٌ‏       மிக்க கிருபையுடையவன்.

இந்த வசனம் தரும் பாடங்கள்

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً ‏

ரகசியம் பேசுவதற்கு பல ஒழுக்கங்களை காட்டித் தந்த அல்லாஹ் இந்த வசனம் மூலம் நபிகளாரோடு ரகசியம் பேச விரும்பும் ஒருவர் அதற்காக ஏதாவது ஒன்றை தனமாக செலுத்த வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சொல்லித் தருகின்றான்.

ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ

இப்படி நபிகளாரோடு நடந்து கொள்வது நன்மை கிடைப்பதற்கும், உள்ளம் பக்குவப்படுவதற்கும் ஒரு வழியாக இருக்கும். ஏனெனில் நபிகளாரோடு பேசும் ரகசியம் உடனே அல்லாஹ்வினால் வஹியாக இறக்கப்படலாம், எனவே தனது உள்ளத்தை சுத்தப்படுத்திய நிலையில் நல்லவற்றிற்கு ரகசியம் பேச தன்னை பழக்கிக் கொள்ளவேண்டும் என்பதே நோக்கமாகும்.

فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ

அப்படி ரகசியம் பேசிய ஒருவர் தானம் செய்ய சக்தியற்றவராக இருந்தால் அல்லாஹ் அதனை குற்றம் பிடிக்காமல் மன்னித்துவிடுவான் என்பதும் இந்த வசனம் சொல்லித்தரும் அல்லாஹ்வின் பண்பாகும்.

பொதுவாக சக்தியற்றவர்களுக்கு அல்லாஹ் கட்டாயப்படுத்த மாட்டான், குற்றம்பிடிக்கமாட்டான் என்பது, இஸ்லாத்தின் சிறப்பம்சமாகும். இதற்க்கு நிறைய உதாரணங்களைக் கூறலாம்.

لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ؕ

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை;   …… (2:286)

فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ ‏

ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்;……..   (64:16)

ஆரம்பத்தில் இருந்த இந்த சட்டம் அடுத்த (13 வது நாசிகான) வசனம் மூலம் மாற்றப்பட்ட, மன்ஸூக் வகையை சார்ந்ததாகும்.

ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقٰتٍ‌ ؕ فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَيْكُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.   (58:13)

சொல் அருத்தம் ;

ءَ     வினா தொடுக்க பாவிக்கப்படும் ஓர் எழுத்து, اَشْفَقْتُمْ நீங்கள் பயந்தீர்கள்,     اَنْ تُقَدِّمُوْا    நீங்கள் முற்படுத்துவ து,       بَيْنَ يَدَىْ      இடையில், மத்தியில், نَجْوٰىْ இரகசியம், كُمْ உங்களது,     صَدَقٰتٍ‌     தான தர்மங்கள்,   اِذْ நிபந்தனையிடுவதற்கு பாவிக்கும் சொல், ஆல்,    لَمْ تَفْعَلُوْا     நீங்கள் செய்யவில்லை,     وَتَابَ اللّٰهُ     அல்லாஹ் மன்னித்தான்,     عَلَيْكُمْ     உங்களை, உங்கள் மீது,     فَاَقِيْمُوا     நீங்கள் நிலைநிறுத்துங்கள்,     الصَّلٰوةَ      தொழுகை,        وَ اٰتُوا الزَّكٰوةَ    ஜகாதை கொடுங்கள்     وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌     மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள் ,        وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ     நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ்  நுணுக்கமாக அறிபவனாவான்

இந்த வசனம் தரும் பாடங்கள்

ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقٰتٍ‌‏

நபித்தோழர்கள், ‘நபிகளாரோடு ரகசியம் பேசுவதற்காக தர்மம் செய்யவேண்டும் என்ற சட்டத்தை’ நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும் என்று பயந்துள்ளார்கள்.

فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَيْكُمْ

அதனால் அல்லாஹ் அந்த சட்டத்தை நீக்கி, அல்லாஹ்வின் மன்னிப்பை வழங்குவதன் மூலம் சலுகை அளிக்கின்றான்.

فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌

அடுத்து கடமையான தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்துவருமாறு கட்டளையிட்டு, கடமைகளை சரியாக நிறைவேற்ற வழிகாட்டுகின்றான்.

அல்லாஹ்வுக்கு காட்டுப்படுவதையும், நபிகளாரை பின்பற்றுவதையும் வலியுறுத்துகின்றான்.

وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ

இந்த கட்டளைகளை கடமைகளை மனிதர்கள் வாழ்க்கையில் எடுத்து நடக்கின்றார்களா என்று அல்லாஹ் கண்காணித்துக் கொண்டுமிருக்கின்றான் என்ற அறிவுறுத்தலோடு வசனம் முடிகின்றது.

இந்த சட்டத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மாணவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறும் போது, இதனை அலி (ரலி) அவர்கள் மாத்திரமே நடைமுறைப்படுத்தினார்கள், நபிகளாரோடு பேசியதற்காக ஒரு தீனாரை தர்மமாக கொடுத்தார்கள். பின்னர் அந்த சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறினார்கள். இதனை அலி (ரலி) அவர்களே கூறியதாகவும் பதியப்பட்டுள்ளது(திர்மிதி: 3300,ஹாகிம்:3794). அவை பலவீனமான, முரசலான நிலையிலே பதியப்பட்டுள்ளது.

المجادلة 14-19

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْؕ مَّا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْۙ وَيَحْلِفُوْنَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُوْنَ‏

எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களை பொறுப்பாளிகளாக எடுத்துக் கொள்கின்றார்களே அப்படிப்பட்ட சிலரை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.   (58:14)

சொல் அருத்தம் ;

اَلَمْ تَرَ     நீர் கவனிக்கவில்லையா,   إِلَى அளவில், பக்கம், الَّذِينَ சிலர்,      تَوَلَّوْا     பொறுப்பாளிகளாக எடுத்துக்கொண்டார்கள்,    قَوْمًا  ஒரு கூட்டம்,     غَضِبَ اللّٰهُ     அல்லாஹ் கோபம் கொண்டான்,      عَلَيْهِمْؕ     அவர்கள் மீது,      مَّا هُمْ     அவர்கள் இல்லை,     مِّنْكُمْ     உங்களில் உள்ளவர்கள்,     وَلَا مِنْهُمْۙ      அவர்களில் உள்ளவர்களும் இல்லை,     وَيَحْلِفُوْنَ     சத்தியம் செய்கின்றனர்,     عَلَى الْكَذِبِ      பொய்யாக,      وَهُمْ يَعْلَمُوْنَ‏  அவர்கள் அறிவர்கள்

இந்த வசனம் தரும் பாடங்கள்

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْؕ ‏

இந்த வசனம் முஸ்லிம்களுக்கு எதிராக  யூதர்களை மறைமுகமாக நேசித்த முனாபிக்களான நயவஞ்சகர்கள், அவர்களது மோசமான குணத்தையே படம் பிடித்து காட்டுகின்றது.

முனாபிக்கள் என்போர் ‘வெளித்தோற்றத்தில் இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிம்களை நேசிப்பது போன்று காட்டிக்கொண்டு, உள்ளத்தால் இஸ்லாத்தை வெறுத்து, முஸ்லிம்களை அழிக்கநினைத்தவர்கள்’. இன்னொரு வாசகத்தில், ‘வாயளவில் ஈமானை மொழிந்து விட்டு, உள்ளத்தால் அதனை மறுத்தவர்கள்’ என்று கூறலாம்.

وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَ‌ۘ‏

இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.  (2:8)

مَّا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْۙ

முனாபிக்களைப் பொறுத்தவரை அவர்களது முக்கிய பண்பே  இரட்டைவேடம் போடுவதாகும், இரு சாராருக்கிடையில் கருத்துக்களை பரிமாறி, மூட்டி வைப்பதிலும் பிரித்து வைப்பதிலும் கவனம் செய்வார்கள், இதனையே முஃமின்களுக்கும், யூதர்களுக்கும் மத்தியில் செய்தார்கள். அவர்களோ இரு சாராரின் விரோதியாகவே இருந்தார்கள், தன் சுயநலத்திற்காக வெளிப்படையாக இரு சாராரையும் நேசிப்பது போன்று காட்டிக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்களது நயவஞ்சக குணத்தையே ‘அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர்’ என்ற வாசகம் மூலம் எடுத்துரைக்கின்றான்.

மேலும் அல்லாஹ் ஸூரத்துன் நிஸாவின் 143 வது வசனத்தில் பின்வருமாறு  கூறுகின்றான்;

 مُّذَبْذَبِيْنَ بَيْنَ ‌ذٰ لِكَ لَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا‏

இந்த முனாபிக்கள் முஃமின்களின் பக்கமுமில்லை, காபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர். (4:143)

وَيَحْلِفُوْنَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُوْنَ

அடுத்து இந்த முனாபிக்கள், முஃமின்களை நேசிப்பதில் தாம் பொய்யர்கள் என்று தெரிந்து கொண்டே பொய் சத்தியமும் செய்யும் அளவுக்கு மோசமானவர்கள் என்பதையும் படம் பிடித்து காட்டுகின்றது.

அல்லாஹ் இவர்களது மோசமான குணத்தை படம்பிடித்து காட்டும் சில வசனங்கள்:

وَاِذَا لَقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْاۤ اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْۙ قَالُوْاۤ اِنَّا مَعَكُمْۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ‏

இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.  (2:14)

اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ‌ۘ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَـكٰذِبُوْنَ‌ ۚ‏

“(நபியே!) முனாபிக்கள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாபிக்கள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.  (63:1)

யூதர்களை பொறுப்பாளிகளாக நேசர்களாக எடுப்பது குற்றம் என்பதனால்தான் முஃமின்களுக்கும் அந்த செயலை அல்லாஹ் கண்டிக்கின்றான் .

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ قَدْ يَــٮِٕـسُوْا مِنَ الْاٰخِرَةِ كَمَا يَــٮِٕـسَ الْكُفَّارُ مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.  (60:13)

இப்படிப்பட்ட மோசமான குணத்தையும் நடவடிக்கைகளையும் வைத்திருப்பவர்களுக்கு கடுமையான தண்டையை அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்துள்ளான் என்பதே அடுத்த வசனம் விடும் எச்சரிக்கை.

اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًا‌ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் தயார் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.   (58:15)

சொல் அருத்தம் ;

اَعَدَّ اللّٰهُ     அல்லாஹ் தயார் செய்துவைத்துள்ளான்,    لَهُمْ   அவர்களுக்காக,  عَذَابًا     வேதனை,     شَدِيْدًا‌      கடினமானது,     اِنَّهُمْ     நிச்சயமாக அவர்கள்,     سَآءَ     மிகவும் மோசமானதாகிவிட்டது,          مَا ஒன்று, كَانُوْا அவர்கள் இருந்தார்கள், இதற்கு ஒரு பயனிலை வரும், يَعْمَلُوْنَ அவர்கள் செய்வார்கள்,    

அல்லாஹ் ஸூரத்துன் நிஸாவின் 145 வது வசனத்தில் பின்வருமாறு எச்சரிக்கின்றான்.

اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ‌ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا ۙ‏

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.   (4:145)

அவர்கள் செய்த மோசமான செயல்கள் என்று இந்த வசனம் குறிப்பிடுபவை; முஃமின்களை பகைத்ததும், அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளான யூதர்களை தோழமை பாராட்டியதும், அதற்காக பொய் சத்தியம் செய்ததமாகும்.

பொய் சத்தியம் செய்வது பெரும் பாவமாகும்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) தூதரே! பெரும் பாவங்கள் எவை?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவனுக்கு இணை கற்பிப்பது’ என்றார்கள். அவர், ‘பிறகு எது?’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது’ என்றார்கள். அவர், ‘பிறகு எது?’ எனக் கேட்க நபி(ஸல்) அவர்கள், ‘பொய்ச் சத்தியம் என்றால் என்ன?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது’ என்றார்கள்   (புஹாரி: 6920,6675)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறினார்கள்:  ‘ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (புஹாரி:2357,2416, முஸ்லிம்)

اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏ 

அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்; ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.  (58:16)

சொல் அருத்தம் ;

اِتَّخَذُوْۤا    அவர்கள் ஆக்கிக்கொண்டார்கள் ,  هُمْ     அவர்கள், اَيْمَانَ சத்தியங்கள்,   جُنَّةً     கேடயம்,     فَصَدُّوْا      அவர்கள் தடுதார்கள்,      اللّٰهِ     அல்லாஹ், سَبِيْلِ பாதை, عَنْ விட்டு,பற்றி,    فَلَهُمْ   எனவே அவர்களுக்கு இருக்கின்றது,      عَذَابٌ مُّهِيْنٌ‏     இழிவுபடுத்தும் வேதனை

இந்த வசனம் தரும் பாடங்கள்

اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ‏ 

அந்த முனாபிக்கள் பொய் சாத்தியங்களை செய்து தன்னை முஃமின்கள் என்று காட்ட முயற்சித்து அப்பாவி மக்களை ஏமாற்றினார், அவர்களது அந்த தந்திரத்தை அறியாத அப்பாவி மக்கள் அவர்களது பிரசாரத்தை நம்பி சத்திய பாதையில் இருந்து பிரண்டு போயினர். அதனையே ‘சத்தியங்களைக் கேடயமாக ஆக்கி,(மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்’ இப்படி இந்த வசனம் குறிப்பிடுகின்றது.

இப்படி பொய் சத்தியம் செய்வது இவர்களது குணமாகவே இருந்திருக்கின்றது.

يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ لِيُرْضُوْكُمْ‌ۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ

(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.   (9:62)

يَحْلِفُوْنَ لَـكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ‌ۚ فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللّٰهَ لَا يَرْضٰى عَنِ الْقَوْمِ الْفٰسِقِيْنَ‏

அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.  (9:96)

அவர்கள் மக்களை எப்படி சத்திய பாதையில் இருந்து தடுத்தார்கள் என்றும் அல்லாஹ் படம் பிடித்துக் காட்டுகின்றான்.

قَدْ يَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِيْنَ مِنْكُمْ وَالْقَآٮِٕلِيْنَ لِاِخْوَانِهِمْ هَلُمَّ اِلَيْنَا‌ ۚ وَلَا يَاْتُوْنَ الْبَاْسَ اِلَّا قَلِيْلًا ۙ‏

உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, “நம்மிடம் வந்து விடுங்கள்” என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான்.   (33:18)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِى الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّى لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْا‏

முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) : “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று கூறுகின்றனர்.  (3:156)

اَلَّذِيْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ‌ؕ

(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி: “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்;   (3:168)

فَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ

அவர்கள் உலகில் வேண்டுமானால் மக்களை ஏமாற்றலாம், மறுமையில் அவர்களுக்கு இழிவான தண்டனை இருக்கின்றது என்று எச்சரிக்கின்றது. இது அவர்களுக்கு மட்டுமல்ல, இன்றும் யாரெல்லாம் இப்படி இஸ்லாத்திற்கு எதிராக நயவஞ்சகத்தனத்தோடு நடக்கின்றார்களோ அவர்களுக்கு இதுவே எச்சரிக்கை.

இப்படிப்பட்டவர்கள் உலகில் செல்வம் படைத்தவர்களாகவோ, அதிக பிள்ளை குட்டிகளைக் கொண்ட வம்சம் உள்ளவர்களாகவோ இருக்கலாம், அதுவெல்லாம் மறுமையில் அவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது. இதனையே அடுத்த வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கையாக சொல்கின்றான்.

لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْــٴًـــا‌ ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

இவர்களுடைய சொத்துக்களும், இவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து யாதொன்றையும் இவர்களை விட்டும் தடுத்துவிடாது. இவர்கள் நரகவாசிகள்தாம்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.  (58:17)

சொல் அருத்தம் ;

لَنْ تُغْنِىَ     தடுக்கமாட்டாது,      عَنْهُمْ     அவர்களை விட்டும்,     اَمْوَالُهُمْ     அவர்களுடைய சொத்துக்கள்,      اَوْلَادُهُمْ      அவர்களுடைய சந்ததிகள்,     مِّنَ اللّٰهِ    அல்லாஹ்விடமிருந்து,     شَيْــٴًـــا‌    எதனையும்,      اُولٰٓٮِٕكَ     இவர்கள்,     اَصْحٰبُ النَّارِ‌     நரகவாசிகள்,      هُمْ    அவர்கள்,    فِيْهَا     அதில்,      خٰلِدُوْنَ    நிரந்தரமாக இருப்பவர்கள்    

يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيَحْلِفُوْنَ لَهٗ كَمَا يَحْلِفُوْنَ لَـكُمْ‌ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰى شَىْءٍ‌ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ‏

அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள்; அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!   (58:18)

சொல் அருத்தம் ;

يَوْمَ ஒரு நாள், يَبْعَثُ அவன் எழுப்புவான், هُمُ அவர்கள், اللّٰهُ அல்லாஹ்,     جَمِيْعًا     அனைவரையும்,     فَيَحْلِفُوْنَ     அவர்கள் சத்தியம் செய்வார்கள்,     لَهٗ     அவனுக்கு, كَمَا ஒன்றைப் போன்று, يَحْلِفُوْنَ    அவர்கள் சத்தியம் செய்வார்கள்,       لَـكُمْ‌     உங்களுக்கு,       وَيَحْسَبُوْنَ      மேலும் அவர்கள் எண்ணிக்கொள்வார்கள்,     اَنَّهُمْ      நிச்சயமாக அவர்கள் ,       عَلٰى شَىْءٍ‌     ஏதோ ஒன்றின் மீது,       اَلَاۤ       ‘அறிந்து கொள்க’ என்று உணர்வூட்டும் ஒரு சொல்,      اِنَّهُمْ        நிச்சயமாக அவர்கள்,       الْكٰذِبُوْنَ‏     பொய்யர்கள்

இந்த வசனம் இறங்க காரணமாக இருந்த நிகழ்வு, (ஸபபுன் னுஸூல்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தங்கள் வீட்டு நிழலில் அமர்ந்திருக்க, நபித் தோழர்கள் சிலரும் அமர்ந்திருந்தார்கள், அப்போது நபியவர்கள் நபித் தோழர்களைப் பார்த்து, ‘இப்போது ஒருவன் வருவான், ஷைத்தானிய கண் கொண்டு உங்களை நோக்குவான், அவனை கண்டால் அவனோடு நீங்கள் பேசவேண்டாம்’ என்று கூறினார்கள், அபோது நீல நிற கண்களையுடைய ஒரு மனிதன் வரவே, அவனை அழைத்த நபியவர்கள், ‘நீயும் இன்னின்ன உன் தோழர்களும் ஏன் என்னை ஏசுகின்றீர்கள்?’ என்று கேற்கவே, ‘இருங்கள் வருகின்றேன்’ என்று கூறி சென்றவன், குறிப்பிட்ட அவர்களை அழைத்து வந்து, ‘அப்படி அவர்கள் சொல்லவில்லை’ என்று சத்தியம் செய்தார்கள். அப்போதுதான் அல்லாஹ் ‘பயஹ்லிபூனலஹு’ என்ற 58: 18 வது வசனத்தை இறக்கி வைத்தான்.  (அஹ்மத்: 3277) ஹசன் தரத்தில் உள்ள ஒரு செய்தி.

இந்த வசனம் தரும் பாடங்கள்

يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيَحْلِفُوْنَ لَهٗ كَمَا يَحْلِفُوْنَ لَـكُمْ‌ ‏

உலகில் பொய் சத்தியம் செய்வதை வழக்கமாகக் கொண்ட இவர்கள் மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னாலும் பொய் சத்தியம் செய்வது கொண்டு கேவலப்படுவார்கள் என்பதே இந்த வசனம் விடும் எச்சரிக்கை. இப்படி ஒரு சோதனையையும் அல்லாஹ் மறுமையில் வைத்திருக்கின்றான்.

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْۤا اَيْنَ شُرَكَآؤُكُمُ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏ 22, ثُمَّ لَمْ تَكُنْ فِتْـنَـتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ‏23, اُنْظُرْ كَيْفَ كَذَبُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ‌ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏ 24

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, ”நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே” என்று கேட்போம். 23. “எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது. 24. (நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும்; ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாது) மறைந்துவிடும்.  (6:22,23,24)

وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰى شَىْءٍ‌اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ

அதுமட்டுமல்லாமல் மறுமையில் அல்லாஹ்விடம் தமக்கு எதோ ஒரு அந்தஸ்து இருப்பதாகவும் நினைத்துக் கொள்வார்கள், இப்படி நினைப்பது இவர்களுக்கு சாதாரணம். அவர்கள் அதிலும் பொய்யர்கள் என்பதே அல்லாஹ் கூறும் செய்தி.

قُلْ هَلْ نُـنَبِّئُكُمْ بِالْاَخْسَرِيْنَ اَعْمَالًا ؕ‏ 103, اَ لَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا‏ 104, اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ وَلِقَآٮِٕهٖ فَحَبِطَتْ اَعْمَالُهُمْ فَلَا نُقِيْمُ لَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ وَزْنًـا‏ 105

“(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.  (18: 103-105)

நபியவர்களை கண் முன்னால் கண்டு, பல அற்புத வெற்றிகளைக் கண்ட இவர்கள், இப்படி வழிகெட்டு செல்வதற்கு என்ன காரணம், அதனையே அல்லாஹ் அடுத்த வசனத்தில் கூறுகின்றான்.

اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطٰنُ فَاَنْسٰٮهُمْ ذِكْرَ اللّٰهِ‌ؕ اُولٰٓٮِٕكَ حِزْبُ الشَّيْطٰنِ‌ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّيْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ‏

அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் – அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க; ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!   (58:19)

சொல் அருத்தம் ;

اِسْتَحْوَذَ     மிகைத்துவிட்டான்,     عَلَيْهِمُ      அவர்கள் மீது, الشَّيْطٰنُ    ஷைத்தான்,     فَاَنْسٰٮهُمْ     அவர்களுக்கு மறக்கடிக்க செய்துவிட்டான்,      ذِكْرَ اللّٰهِ‌ؕ     அல்லாஹ்வின் நினைவூட்டல்,      اُولٰٓٮِٕكَ     அவர்கள்,      حِزْبُ الشَّيْطٰنِ‌ؕ      ஷைத்தானின் கூட்டத்தினர் ,         اَلَاۤ     அறிந்து கொள்க     اِنَّ حِزْبَ الشَّيْطٰنِ       நிச்சியமாக ஷைத்தானின் கூட்டத்தினர்,      هُمُ الْخٰسِرُوْنَ‏    அவர்கள் நஷ்டவாளிகளாவர்.

இந்த வசனம் தரும் பாடங்கள்

اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطٰنُ فَاَنْسٰٮهُمْ ذِكْرَ اللّٰهِ‌ؕ

மனிதர்களை வழிகெடுக்க ஷைத்தான், அல்லாஹ்வை மறக்கடிக்க செய்வதே முதல் தந்திரம். அனைத்து வழிகேட்டுக்கும் அதுவே மூல காரணம்.

اُولٰٓٮِٕكَ حِزْبُ الشَّيْطٰنِ‌ؕ

யாருடைய உள்ளங்களை அல்லாஹ்வை மறக்கடிப்பதன் மூலம் ஷைத்தான் ஆக்கிரமிக்கின்றானோ அவர்கள் அனைவரது நிலையும் இப்படித்தான்.

மனிதன் மீது ஷைத்தான் அடர்ந்தேறுவதற்கான சில காரணிகள்;

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஒரு ஊரில், கிராமத்தில் மூன்று பேர் இருந்து, அங்கு தொழுகை (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட வில்லையென்றால்  ஷைத்தான் அவர்களை ஆக்கிரமிக்கின்றான்.  (அஹ்மத்:21710, அபூதாவூத்:547) இதுவோ ஹசன் தரத்தில் பதியப்பட்டதாகும். இதில் ஸாஇப்  பின் ஹுபைஸ் என்பவர் இடம் பெற்றுள்ளார்.

ஜமாஅத்தை வேண்டுமென்று புறக்கணிப்பது அறியப்பட்ட முனாபிக்களின்  அடையாளமாகவும் இருக்கின்றது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:  நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகர் என (வெளிப்படையாக) அறியப்பட்டவரையும் நோயாளியையும் தவிர வேறெவரும் (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்த தில்லை. நோயாளிகூட இரு மனிதர்களுக்கிடையே (தொங்கியவாறு) நடந்துவந்து தொழுகையில் சேர்ந்துவிடுவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நேரிய வழிகளைக் கற்பித்தார்கள். தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் பள்ளிவாசலில் தொழுவது அத்தகைய நேர்வழிகளில் (சுன்னாக்களில்) ஒன்றாகும்.   (முஸ்லிம்)

அல்லாஹ்வின் வேதத்தை புறக்கணிப்பதும் ஷைத்தான் அடர்ந்தேறுவதற்கு காரணமாகும்.

وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ‏

எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.  (43:36)

اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّيْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ

இந்த வசனத்தை முடிக்கும் விதம், ‘ஷைத்தானுக்கு கட்டுப்படுவதன் மூலம் அவனை நேசனாக எடுத்தால் அவன் நஷ்டம் அடைவான்’ என்பதே.

وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا

எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.  (4:119)

وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَآءَ قَرِيْنًا‏

எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)  (4:38)

المجادلة 20, 21

إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ فِي الْأَذَلِّينَ

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.   (58:20)

சொல் அருத்தம் ;

إِنَّ ஒரு வசனத்தை உறுதிப்படுத்தும் சொல்,நிச்சயமாக, இதற்கு ஒரு எழுவாய், பயனிலை வரும், الَّذِينَ      சிலர்,      يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ       அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்கள், أُولَئِكَ       அவர்கள்,     فِي லே, ல், الْأَذَلِّينَ    மிகவும் தாழ்ந்தவர்கள்

இந்த வசனம் தரும் பாடங்கள்

முன்னால் குறிப்பிடப்பட்டது போன்று, யூதர்களோ, முனாபிக்களோ யாராக இருந்தாலும் அல்லாஹ், அவன் தூதரோடு முரண்பட்டு, அவர்களை எதிர்த்து செயற்பட்டால் அவர்களுக்கு அல்லாஹ் சொல்லும் தீர்ப்பு; ‘அவர்கள் மிகவும் கேவலமானவர்கள், தாழ்ந்தவர்கள்’ ‘வெற்றி என்பது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும்’ என்பதே. இதனையே அல்லாஹ் அடுத்த வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِىْ‌ؕ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ‏

“நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்” என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்; யாவரையும் மிகைத்தவன்.   (58:21)

சொல் அருத்தம் ;

كَتَبَ اللّٰهُ     அல்லாஹ் விதித்துள்ளான் (எழுதிவிட்டான்),     لَاَغْلِبَنَّ      நிச்சயமாக நான் மிகைத்து விடுவேன்,      اَنَا நான், وَرُسُلِىْ‌ؕ      என்னுடைய தூதர்கள்,      اِنَّ اللّٰهَ      நிச்சயமாக அல்லாஹ்,      قَوِىٌّ       மிக்க சக்தியுடையவன்,      عَزِيْزٌ     யாவரையும் மிகைத்தவன்  

இந்த வசனம் தரும் பாடங்கள்

كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِىْ‌ؕ

அல்லாஹ் எழுதிவிட்டான் என்பது அவனது விதியாகும், அது ஒரு போதும் மாறாது. அல்லாஹ் உலகப் படைப்புகளை படைத்தவுடன் எழுதி முடித்துவிட்டான்.

مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ

“என்னுடைய கட்டளை மாற்றப்படுவதில்லை; நான் என்னுடைய அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனல்ல” என்றும் கூறுவான்.   (50:29)

இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் கூறினார்கள்: …..நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை.  அவனுடைய அர்ஷ் தண்ணீரின் மீதிருந்தது. பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான் பிறகு (லவ்ஹுல் மஹ்பூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். ‘ என்று கூறினார்கள்.   (புஹாரி: 3191, 7418)

அடுத்து, பொதுவாக நபிமார்கள் இவ்வுலகில் ஆரம்பத்தில் எதிர்க்கப்படுவார்கள், அந்த சோதனைகள் என்பது முஃமின்களை சோதிப்பதற்கும், பலப்படுத்துவதற்குமே, இறுதி வெற்றி என்பது நபிமார்களுக்கே சாரும். இதற்க்கு அல்குர்ஆனில் ஏராளமான சான்றுகள் இருப்பதை நாம் அறிவோம்.

وَلَـقَدْ كَتَبْنَا فِى الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ يَرِثُهَا عِبَادِىَ الصّٰلِحُوْنَ‏

நிச்சயமாக நாம் “ஸபூர்” என்னும் வேதத்தில், நல்லுபதேசங்களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம். நிச்சயமாக பூமிக்கு என்னுடைய அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தாம் வாரிசாவார்கள் என்று.  (21:105)

وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌ ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏

(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். (அன்றி) அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன் றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கின்றான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தாம்.  (24:55)

அதேபோன்று உலகில் தோல்வியும், மறுமையில் அழிவும் நபிமார்களின் விரோதிகளுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்றே. இதனை அல்லாஹ் பல இடங்களில் தொட்டுக் காட்டி உள்ளான்.

اِنَّا لَنَـنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُ ۙ‏ 51,يَوْمَ لَا يَنْفَعُ الظّٰلِمِيْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ‏ 52

நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம். 51  அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் கூறுதல் பயனளிக்காது – அவர்களுக்கு (லஃனத்) சாபமும் உண்டு; தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.  (40:51,52)

اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ‏

இஸ்லாத்தின் விரோதிகளை இந்த உலக வரலாற்றிலும் அழித்துக் காட்டிய அல்லாஹ், மறுமையிலும் அவர்களை தண்டிக்க ஆற்றல் உள்ளவன் அனைவரையும் மிகைத்தவன் என்று கூறி இந்த வசனத்தை முடிக்கின்றான்.

المجادلة 22

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُولَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ (22)

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.   (58:22)

சொல் அருத்தம் ;

لَا تَجِدُ    நீர் காணமாட்டீர் ,     قَوْمًا    ஒரு சமூகத்தினர்,     يُؤْمِنُونَ    அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்,      بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ     அல்லாஹ்வையும் இறுதி நாளையும்,      يُوَادُّونَ      அவர்கள் நேசிப்பார்கள்,      مَنْ      சிலர் ,     حَادَّ اللَّهَ وَرَسُولَهُ      அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டான்,     وَلَوْ كَانُوا     அவர்கள் இருந்தாலும் சரி,        هُمْ    அவர்கள்,   آبَاءَ பெற்றோர்கள்,     أَوْ     அல்லது,     أَبْنَاءَ       புதல்வர்கள்,    أَوْ إِخْوَانَهُمْ   அல்லது  தங்கள் சகோதரர்கள்,      أَوْ عَشِيرَتَهُمْ      தங்கள் குடும்பத்தினர்,     أُولَئِكَ       அவர்கள்,      كَتَبَ      அவன் எழுதிவிட்டான்,    فِي قُلُوبِهِمُ       அவர்களின் இதயங்களில்,     الْإِيمَانَ     ஈமான்,நம்பிக்கை,    وَأَيَّدَهُمْ       அவர்களை அவன் பலப்படுத்திவிட்டான்,     بِرُوحٍ      ஒரு ஆன்மாவைக் கொண்டு,    مِنْهُ    தன்னிடமிருந்து,        وَيُدْخِلُهُمْ      அவர்களைப் அவன் பிரவேசிக்கச் செய்வான்,     جَنَّاتٍ       சுவனச் சோலைகள்,      تَجْرِي     ஓடும்,    تَحْتِ      கீழே,     الْأَنْهَارُ      ஆறுகள்,    خَالِدِينَ      நிரந்தரமாக இருப்பார்கள்,فِيهَا      அவைகளில்,     رَضِيَ اللَّهُ      அல்லாஹ்  பொருந்திக் கொண்டான்,     عَنْهُمْ      அவர்களை,     وَرَضُوا     அவர்களும் பொருந்திக் கொண்டார்கள்,    عَنْهُ      அவனை,     أُولَئِكَ      அவர்கள்,    حِزْبُ اللَّهِ      அல்லாஹ்வின் கூட்டத்தினர்,     أَلَا      அறிந்துகொள்க,   إِنَّ حِزْبَ اللَّهِ       அல்லாஹ்வின் கூட்டத்தினர்,       هُمُ     அவர்கள்,      الْمُفْلِحُونَ       வெற்றி பெறக்கூடியவர்கள்

இந்த வசனம் இறங்க காரணமாக இருந்த நிகழ்வு, (ஸபபுன் னுஸூல்)

இந்த வசனம் பத்ர் யுத்தகளத்தில் ‘அபூ உபைதா, அபூ பக்ர்,முஸ்அப் பின் உமைர் போன்ற” நபித் தோழர்கள் முஷ்ரிக்களான தங்கள் குடும்ப உறவுகளுக்கு எதிராக நின்றமைக்காக, அவர்களை பாராட்டி இறங்கியது என்று பல விரிவுரையாளர்களும் கூறுகின்றனர். (இப்னு கஸீர்)

இந்த வசனம் தரும் பாடங்கள்

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ

உண்மை முஃமின்கள் ஒரு போதும் இறைமறுப்பாளர்களை, இஸ்லாத்தை புறக்கணித்து அல்லாஹ் அவன் தூதரோடு முரண்பாட்டுக் கொள்வோரை நேசித்து, உள்ளத்தில் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பது அவர்களது பண்பு, இதனையே அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையாகவும் இடுகின்றான்.

 لَا يَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَلَيْسَ مِنَ اللّٰهِ فِىْ شَىْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰٮةً  ؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ‌ ؕوَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏

முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.  (3:28)

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّىْ وَعَدُوَّكُمْ اَوْلِيَآءَ تُلْقُوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَآءَكُمْ مِّنَ الْحَـقِّ‌ ۚ يُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِيَّاكُمْ‌ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ

ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்;…….   (60:1)

அடுத்து ஒரு முஃமின் இஸ்லாத்தின் விரோதிகளை நண்பர்களாக எடுப்பதே அழிவுக்கும் காரணம் என்று எச்சரிக்கின்றன.

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.  (9:24)

உண்மை முஃமினைப் பொறுத்தவரை முஃமின்களை உண்மையாக நேசிப்பான், இஸ்லாத்தின் விரோதிகளை காபிர்களை வெறுப்பான். இது இஸ்லாமிய அகீதா பாடப்பகுதியில் “அல்வலாஃ, வல்பராஃ” என்று குறிப்பிடப்படுகின்றது. இது நபித்தோழர்களின் பண்பாக இருந்தது.

مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்….. (48:29)

அதேபோன்று பத்ர் யுத்தம் முடிவில் கைதிகளை என்ன செய்வது என்ற ஆலோசனையின் போதும் தங்கள் குடும்ப நலவை பார்க்காமல், இஸ்லாத்தின் நலவை வைத்தே ஆலோசனை சொன்னார்கள். இதுவும் அவர்கள் தன் குடும்ப உறவுகளை விட இஸ்லாத்தை முஸ்லிம்களை நேசித்தார்கள் என்பதற்கு சிறந்த எடுத்து காட்டாகும்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:……… (முஸ்லிம்கள்) அன்றைய (பத்ர் யுத்தம் நடந்த) தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தனர். முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?” என்று (ஆலோசனை) கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்” என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?” என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்ற தன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்களை விடுவிக்க வேண்டாம்)” என்று (ஆலோசனை) கூறினார்கள்……  (முஸ்லிம்)

أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ

அடுத்து யாருடைய உள்ளம் இறை நம்பிக்கையால் நிறைந்திருக்கின்றதோ அவர்களால் தான் முஃமின்களை நேசித்து, காபிர்களை வெறுக்க முடியும். இல்லையென்றால் உலக விடயங்களுக்காக முஃமின்களை வெறுத்து, உலக இலாபங்களுக்காக காபிர்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்கும் நிலையும் ஏற்படும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இதனையே ‘உலாஇக கதப பீ குலூபிஹிமுல் ஈமான்’ என்ற வாசகம் மூலம் அல்லாஹ் தொட்டுக் காட்டுகின்றான்.

குறிப்பு;

காபிர்களை, யூதர்களை, கிறிஸ்தவர்களை உள்ளத்தில் இடம் கொடுத்து, உற்ற நண்பர்களாக்கி நேசிக்கக் கூடாது என்பது முன்னால் வந்த வசனங்கள் மூலம் தெளிவான ஒன்றாகும். அதேநேரம் இஸ்லாத்தை எதிர்க்காத, முஸ்லிம்களை தாம் வாழும் இடங்களில் இருந்து வெளியேற்ற நினைக்காத காபிர்களோடு நல்ல முறையில் நடப்பதையோ, நீதமாக நடப்பதையோ, முஸ்லிம்களின் பாதுகாப்பு நோக்கில் அவர்களோடு ஒப்பந்தங்கள் செய்வதையோ இஸ்லாம் தடுக்கவில்லை என்பதையும் நாம் விளங்கி வைக்க வேண்டும்.

 لَا يَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَلَيْسَ مِنَ اللّٰهِ فِىْ شَىْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰٮةً  ؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ‌ ؕوَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏

முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.   (3:28)

لَقَدْ كَانَ لَـكُمْ فِيْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ‌ ؕ وَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ 6 عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِيْنَ عَادَيْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةً ؕ وَاللّٰهُ قَدِيْرٌ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ 7 لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏ 8 اِنَّمَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ 9

உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது; ஆனால், எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங்குகிறாரோ: (அது அவருக்கு இழப்புதான்; ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ் மிக்கவன்.  60:7. உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். 60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். 60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.   (60: 6,7,8,9)

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்:  ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது’ என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், ‘அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.   (புஹாரி:2306)

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்:  தம் போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.   (புஹாரி: 2916)

‘ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை, அவன் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கும்போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) கூறலானார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்), ‘உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, ‘(அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று) சத்தியம் செய்’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!’ என்று கூறினேன். (அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, ‘அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது’ (திருக்குர்ஆன் 03:77) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.   (புஹாரி: 2416, முஸ்லிம்)

وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُولَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

அடுத்து அல்லாஹ்வுக்காக நாம் வாழுகின்ற போது அவன் இன்பம் நிறைந்த சுவனத்தை பரிசாக தருவான் என்பது நிச்சியம்!

அதேபோன்று உலகில் தனது குடும்பம், கோத்திரத்தை அல்லாஹ்வுக்காக வெறுத்து வாழ்கின்ற நேரம் அல்லாஹ் அதற்கு பகரமாக அவனது நேசத்தை பொருத்தத்தை அவர்களுக்கு கொடுத்துவிடுகின்றான் அல்லாஹ். மேலும் உலகில் என்ன நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அல்லாஹ் அளித்த பாக்கியங்களைக் கொண்டு அல்லாஹ்வை அவர்கள் பொருந்திக்கொள்வார்கள்.

முன்னால் சொல்லப்பட்டது போன்று அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசித்து, ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதும், இஸ்லாத்தின் விரோதிகளுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்காமல் இருப்பதும், உலகில் இழப்புக்கள் நேர்ந்தாலும் அல்லாஹ்வின் அருட்கொடைகளில் திருப்தி காணுவதும், யாரிடம் இருக்குமோ அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தில் இடம் பிடிக்க முடியும் என்பது இந்த வசனத்தின் முக்கிய செய்தியாகும். அவர்களே வெற்றி பெறக்கூடியவர்கள் என்பதும் உறுதி.

இந்த ஸூராவிலிருந்து நாம் படித்த கூட்டங்களும் அவர்களது பண்புகளும்;

1.காபிர்கள்; இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஏதாவது ஒன்றை மறுத்தவர்கள்:

அல்லாஹ் அவன் தூதரோடு முரண்பட்டு, இஸ்லாமிய சட்டங்களை புறக்கணிப்பது, வெறுப்பது, மறுப்பது. அது ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஸஹீஹான ஒரு ஹதீஸையோ மறுப்பதன் மூலமும் ஏற்படலாம். (58:05)

2. யூதர்கள்: உண்மையை அறிந்து கொண்டு, அல்லாஹ் தடுத்த காரியங்களை வேண்டும் என்று செய்பவர்கள். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக திட்டம் தீட்டுபவர்கள். அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை உள்ளத்தாலும், சொல்லாலும், செயலாலும் திரிபுபடுத்துபவர்கள். அவர்கள் கெட்டவர்கள் என்பதற்கு அவர்களே சாட்ச்சி சொல்லும் நிலையில் இருப்பவர்கள்.  (58:08)

مِنَ الَّذِيْنَ هَادُوْا يُحَرِّفُوْنَ الْـكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَ يَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَـيًّۢا بِاَ لْسِنَتِهِمْ وَطَعْنًا فِىْ الدِّيْنِ‌ ؕ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَـكَانَ خَيْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ وَ لٰـكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا‏

யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.  (4: 46)

وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ‌ ؕ غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا‌ ۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُ‌ ؕ ‏

“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்;…. (5:64)

3. முனாபிக்கள்; நயவஞ்சகர்கள்; உள்ளத்தில் இஸ்லாத்தை வெறுத்த நிலையில், வாயளவில் இஸ்லாத்தை நேசிப்பதாக காட்டுவார்கள், இரட்டை வேடம் கொண்டவர்கள், முஸ்லிம்களைக் கண்டால் அவர்களை சார்ந்தவர்கள் போன்றும், யூதர்களை கண்டால் அவர்களோடு சேர்ந்து இஸ்லாத்தை முஸ்லிம்களை எதிர்ப்பவர்களாகவும் இருந்தனர். அதன் மூலம் இஸ்லாத்தின் விரோதிகளை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொண்டார்கள். தன்னை நியாயப்படுத்த பொய் சத்தியமும் செய்வார்கள், அப்பாவி மக்களை வழிகெடுப்பார்கள். (58: 14-19)

நயவஞ்சகனின் சில பண்புகள்; அவற்றை அறிவதன் மூலம் அவை தம்மிடம் குடிகொள்ளாமல் இருக்கவும், இருந்தால் நீக்கிக் கொள்ளவும் முயற்சிப்போம்.

  • இரட்டை வேடம், இரண்டு நாக்கு கொண்டு பேசுதல்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.  (புஹாரி:6058, முஸ்லிம்)

  • நபிகளார் குறிப்பிட்டு சொன்ன நான்கு அடையாளங்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் மோசமாக பேசுவான்’  (புஹாரி: 34,  முஸ்லிம்)

  • சுப்ஹு இஷா தொழுகை (தொழுதாலும்) அவை பாரமாக இருத்தல்; குறிப்பாக ஜமாஅத்தில் கலந்து கொள்வதில் வீண் பொடுபோக்கு;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.’  (புஹாரி: 657, முஸ்லிம்)

  • தொழுகையை வேண்டும் என்று நேரம் முடியும் வரை தாமதப்படுத்தி, அவசரமாக தொழுதல்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “இதுதான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி அல்லது மறைந்து) வரும்போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவுகூருவான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

  • சோம்பேறிகளாக, அடுத்தவர்கள் பார்ப்பதற்காக தொழும் மனநிலை.

اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ‌ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا 142, مُّذَبْذَبِيْنَ بَيْنَ ‌ذٰ لِكَ لَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا‏ 143

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. 4:143. இந்த முனாபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர். (4:142,143)

4. முஃமின்கள்; இறைவிசுவாசிகள்: ஈமானின் அடிப்படைகளை முறையாக நம்பியிருப்பதோடு, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எப்படிப்பட்ட நிலையிலும் பூரணமாக கட்டுப்படுவார்கள். அதேநேரம் அல்லாஹ்வின் சட்டங்களை பாதுகாக்க முடியாமல் போய் விடுமோ என்று பயப்படுபவர்களாகவும் இருப்பார்கள். (58:4,13)

ஷைத்தானிய விரோதம், விரோதிகளின் சதித்திட்டம் எதனை எதிர்நோக்கினாலும் தவக்குல் வைத்து அல்லாஹ்வை சார்ந்து நிற்பார்கள். உலகில் சில சோதனைகளுக்கு அவர்கள் ஆளானாலும், அவர்களது ஈமானுக்கு, அறிவுக்கும் அல்லாஹ்வினால் கண்ணியப்படுத்தப்படுவார்கள். (58:10,11)

அல்லாஹ்வையும் அவன் தூதரையும் ஈமானிய உறவுகளையும் நேசிப்பார்கள், இஸ்லாத்தின் விரோதிகளுக்கு அவர்கள் நெருக்கமான உறவுகளாக இருந்தாலும் உள்ளத்தில் இடம் கொடுக்க மாட்டார்கள். அல்லாஹ்வை பொருந்திக்கொள்வார்கள். இவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தாருமாவார்கள். (58:22)

ஸூரதுல் முஜாதலா விளக்கம் முடிவு

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *