பிக்ஹு -8; குளிப்பின் சட்டங்களும், ஒழுக்கங்களும்.

குளிப்பின் சட்டங்களும், ஒழுக்கங்களும்.

குளிப்பை இரண்டு வகையாக நோக்கலாம்;

1-       கடமையானது: பெரும் தொடக்கு ஏற்பட்டால் குளிப்பது.

2-       சுன்னத்தானது; பெரும் தொடக்கு போன்ற காரணம் இல்லாமல் நபிகளாரால் காட்டித்தரப்பட்டது.

குளிப்பு கடமையாகுதல்

இந்திரியம் வெளிப்படல். இது தூக்கத்திலோ அல்லது உடலுறவின் மூலமோ ஏற்படலாம்.

{وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا} [المائدة: 6]

நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து, சுத்தம்செய்து  கொள்ளுங்கள்; (5:6)

عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الحَقِّ، فَهَلْ عَلَى المَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَتِ المَاءَ» فَغَطَّتْ أُمُّ سَلَمَةَ، تَعْنِي وَجْهَهَا، وَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَوَتَحْتَلِمُ المَرْأَةُ؟ قَالَ: «نَعَمْ، تَرِبَتْ يَمِينُكِ، فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا» (صحيح البخاري)

உம்மு ஸலமா  (றழி) அவர்கள் கூறினார்கள்:  ‘உம்முஸுலைம்(றழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?’ என்று கேட்டதற்கு ‘ஆம்! அவள் நீரைக் கண்டால்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா(றழி) அவர்கள்  தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, ‘பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?’ என்று கேட்டார்கள்”   (புஹாரி: 130, 282,,, முஸ்லிம்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَرْأَةِ تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فِي مَنَامِهِ، فَقَالَ: «إِذَا كَانَ مِنْهَا مَا يَكُونُ مِنَ الرَّجُلِ فَلْتَغْتَسِلْ» (صحيح مسلم)

முஸ்லிமின் ஒரு அறிவிப்பில் : ஆண்கள் கனவில் காண்பதை பெண்கள் கனவில் கண்டால் என்ன செய்ய வேன்டும். என்று கேட்டதாகவும் வந்துள்ளது.

கணவன், மனைவி இல்லறத்தில் ஈடுபடுதல்; இந்திரியம் வெளிப்படாவிட்டாலும் சரியே. இந்திரியம் வெளிப்பட்டால்தான் குளிப்பு கடமை என்றிருந்த சட்டம் மாற்றப்பட்டதாகும்.

أُبَيُّ بْنُ كَعْبٍ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ: إِذَا جَامَعَ الرَّجُلُ المَرْأَةَ فَلَمْ يُنْزِلْ؟ قَالَ: «يَغْسِلُ مَا مَسَّ المَرْأَةَ مِنْهُ، ثُمَّ يَتَوَضَّأُ وَيُصَلِّي» (صحيح البخاري)

உபையிப்னு கஃப் (றழி) அவர்கள் கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தங்களின் மனைவியிடம் உறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா? என நான் கேட்டதற்கு, ‘மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்; பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 293,)

முஸ்லிமின் அறிவிப்பில்; இத்பான் பின் மாலிக் அவர்கள் கேட்டதற்கு; இந்திரியத்தைக் கண்டால் தான் குளிப்பு கடமை என்று கூறினார்கள். என்று வந்துள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الغَسْلُ» (صحيح البخاري)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ ثُمَّ جَهَدَهَا، فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْغُسْلُ» وَفِي حَدِيثِ مَطَرٍ وَإِنْ لَمْ يُنْزِلْ  (صحيح مسلم)

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்:  ஒருவர் தம் மனைவியின் (இரண்டு கால், இரண்டு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உறவு கொள்பவரின் மீது குளிப்புக் கடமையாகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 291, முஸ்லிம்) முஸ்லிமின் அறிவிப்பில்:இந்திரியம் வெளிப்படாவிட்டாலும் சரியே. என்று வந்துள்ளது.

மாதவிடாய், பிள்ளைப் பெற்று இரத்தம் வெளிப்பட்டு, நின்று விடல்.

عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، كَانَتْ تُسْتَحَاضُ، فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ، فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي»  (صحيح البخاري)

‘பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?’ என்று கேட்டதற்கு, ‘கூடாது. அது ஒரு நரம்பு நோய்; மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாள்களின் அளவுக்குத் தொழுகையைவிட்டுவிடு. பின்னர் குளித்துவிட்டு, தொழுது கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 320,325, முஸ்லிம்)

குறிப்பு: மாதவிடாய் இரத்தம் எல்லையைத் தாண்டிவிட்டால் (இஸ்திஹாலா) அவர் குளித்துவிட்டு, ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்து கொண்டால் போதுமானது.

عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» – قَالَ: وَقَالَ أَبِي: – «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ» (صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்:  ‘அபூ ஹுபைஷ் என்பவரின் மகள் பாத்திமா என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து. ………..’பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ வுழூச் செய்து கொள்’ என்றும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்” (புஹாரி: 228, முஸ்லிம்)

ஒருவர் மரணித்துவிட்டால் அவருக்கு குளிப்பு கடமையாகும், அவரை குளிப்பாட்டுவது சமூகத்தின் கடமையாகும்.

عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا – أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ – فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَعْطَانَا حِقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ» تَعْنِي إِزَارَهُ  (صحيح البخاري)

உம்மு அதிய்யா(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்” எனக் கூறினார்கள்.  (புஹாரி: 1253,.. முஸ்லிம்)

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالَ: بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ بِعَرَفَةَ، إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ – أَوْ قَالَ: فَأَوْقَصَتْهُ – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ القِيَامَةِ مُلَبِّيًا» (صحيح البخاري)

இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூசவேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்” எனக் கூறினார்.  (புஹாரி: 1265, முஸ்லிம்)

சுன்னத்தான குளிப்புகள்

ஜும்ஆவுக்காக குளித்தல்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا جَاءَ أَحَدُكُمُ الجُمُعَةَ، فَلْيَغْتَسِلْ» (صحيح البخاري)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்”  (புஹாரி: 877, முஸ்லிம்)

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ» (صحيح البخاري )

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.” (புஹாரி: 879, முஸ்லிம்)

عَنْ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ، وَمَنِ اغْتَسَلَ فَهُوَ أَفْضَلُ»  (أحمد وسنن أبي داود والترمذي)

 

சமுரா (றழி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் வெள்ளிக்கிழமையில் வுழூச் செய்கின்றாரோ, அவர் அதன் மூலம் நல்லதை அடைந்தார், யார் குளிக்கின்றாரோ அதுவே சிறந்ததாகும். (அபூதாவுத்: 354, திர்மிதீ, அஹ்மத்)

குறிப்பு:

பெருநாள் தினத்திற்காக குளித்தல்; இதனைப் பொருத்தவரை எந்த ஆதாரங்களும் இதற்காக வரவில்லை, எனவே இது கடமையோ, சுன்னத்தோ அல்ல, மாறாக விரும்பியவர் குளிக்கலாம்.

இஹ்ராம் கட்டுவதற்காக குளித்தல்; ஹஜ், உம்ரா வணக்கங்களுக்காக இஹ்ராம் அணியும் போது குளிப்பதை பொருத்தவரை, நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்குள் நுழையும் போது குளித்திருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் குளிப்பது நபிவழியாகும்.

 عَنْ نَافِعٍ، قَالَ: كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «إِذَا دَخَلَ أَدْنَى الحَرَمِ أَمْسَكَ عَنِ التَّلْبِيَةِ، ثُمَّ يَبِيتُ بِذِي طِوًى، ثُمَّ يُصَلِّي بِهِ الصُّبْحَ، وَيَغْتَسِلُ»، وَيُحَدِّثُ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ  (صحيح البخاري)

நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர்(றழி) அவர்கள்  ஹரம் எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தீ  துவா எனுமிடத்தில் தங்கி ஸுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்.  (புஹாரி: 1573, முஸ்லிம்)

ஜனாசாக்களை குளிப்பாட்டினால் குளிப்பாட்டியவர் குளிக்கவேண்டும் என்ற ஒரு ஹதீஸும் அபூதாவுத், திர்மிதி, அஹ்மத் போன்ற கிதாப்களில்  பதியப்பட்டுள்ளது, அதுவும் விமர்சிக்கப்பட்டதே.  எனவே விரும்பியவர் குளிக்கலாம் என்பதே அல்லாமல் சுன்னத்தோ, கடமையோ அல்ல.

                                                                                                                                                                                                                                

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

8

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *