அகீதா- 11மரணித்தவர்களுக்கு அதிகாரம் ஏதும் இருக்கின்றதா?

மரணித்தவர்கள் இந்த உலகிள் மாற்றங்களை ஏற்படுத்துவது:

வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click

இன்றைய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் கெட்ட மனிதர்கள் மரணித்தால் அவர்கள் ஆவியாக வந்து மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நல்லவர்கள் மரணித்தாலும் உலகோடு அவர்கள் தொடர்பு வைத்துக்கொண்டு நலவு செய்கின்றார்கள் என்று நினைக்கின்றனர். அந்த அடிப்படையிலேயே கப்ராளிகள் என்று கூறிக்கொண்டு அவர்களிடம் தேவைகளை முறைப்பாடு செய்கின்றனர். காரணம் கேட்டால் அவர்கள் அல்லாஹ்விடம் வாங்கித் தறுவதாக கூறுகின்றனர். இதுவே இன்றைக்கு அதிகமானவர்களை ஷிர்க்கில் சேர்த்திருக்கின்றது.

அப்படி மரணித்தவர்கள் உலகிள் ஏதும் செய்வார்களா? என்றால் அவர்களால் முடியாது என்பதே குர்ஆன் ஹதீஸ் சொல்லும் தீர்வாகும்.

 • அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (39:42)
 • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து ‘முஹம்மத் எனும் இந்த மனிதரைப் – பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ எனக் கேட்பர். அதற்கவன் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்.  (புஹாரி: 1338, முஸ்லிம்)
 • திர்மிதியில் வரும் அறிவிப்பில்: அந்த நல்ல மனிதர் ‘நான் எனது குடும்பத்தவர்களிடம் திறும்பிச்சென்று, (எனக்கு கிடைத்ததை) தெறிவித்துவிட்டு வருகின்றேன்.’ என்று கூறுவாராம். அதற்கு அவரைப் பார்த்து ‘இந்த இடத்திலிருந்து நீ எழுப்பப்படும் வரை விருப்பமானவரால் எழுப்பப்படும் புது மாப்பிள்ளை துங்குவது போன்று தூங்கும் என்று கூறப்படுமாம்.’ என்று வந்துள்ளது.

எனவே நல்லவர் என்றால் சுவனக் காட்சிகளைப் பார்த்தவன்னம் தூங்கிக் கொண்டிருப்பதாக நபிகளார் கூறும்போது அவர் எப்படி உதவி செய்ய உலகிற்கு வருவார்? தன் குடும்பத்தவர்களுக்கு அறிவிக்கவே வரமுடியாது என்றால் உதவி செய்ய எப்படி வருவார்?

மேலும் இந்த அடிப்படையில் தான் நல்லவர்கள் மரணித்தபின்னறும் உதவி செய்வார்கள் என்று ஷிர்க் வைத்த அனைத்து சமூகத்தவர்களும் கருதி, அவர்களை நெறுங்கி, ஷிர்க்கும் வைத்தனர்.  அல்லாஹ் அதனையே கண்டித்தான்.

 • இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: வத்து, ஸுவா, யகூஸ், யஊக், ஸபா, நஸ்ர், (மக்காவில் வணங்கப்பட்ட சிலைகளின் பெயர்கள்) என்ற அனைத்தும் நூஹ் நபியின் கூட்டத்தில் இருந்த நல்லவர்களின் பெயர்கள். அவர்கள் மரணித்த பின் அவர்களிடம் வந்த ஷைத்தான் அந்த நல்லவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஞாபகார்த்த கட்களை நட்டுமாறும், அவர்களது பெயர்களை சூட்டுமாறும் ஏவினான். அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால் வணங்கப்படவில்லை. அவர்களும் மரணித்தபின் அதபற்றிய அறிவு மறக்கடிக்கப்பட்டு, அவைகள் (அந்த ஞாபகார்த்த கட்கள்) வணங்கப்பட்டன.  (புஹாரி)

இப்படி நல்லவர்களை ஞாபகப்படுத்தப்போய் காலப் போக்கில் அவை இணைவைப்பிலே கொண்டு சேர்ர்த்துவிடுகின்றது.

கெட்டவர்கள் தீங்கு செய்ய ஆவியாக வருவார்களா?

 • அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.(100) “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.(23: 99,100)
 • உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.(63:10)
 • எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா?” (14:44)
 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை’ என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்.  (புஹாரி: 1338, முஸ்லிம்)

எனவே நல்ல நோக்கத்திற்காகவே திறும்பவும் உலகிற்கு வரமுடியாது எனும் போது எப்படி தீங்கிளைக்க வருவார்கள். எனவே இப்படி தப்பான சிந்தனையுள்ளவர்கள் சிந்தித்து தன் கொள்கையை சீர் செய்ய வேண்டும். மேலும் தண்டிக்கும் மலக்குமார்களின் கைகளில் இருந்து எப்படி தப்பி வந்தார்கள். அல்லாஹ் போட்ட திரையை தாண்டி எப்படி வரமுடியும்? எனவே பேய் பிசாசு என்ற தவறான சிந்தனையிலிருந்து விடுபடுவோம்.

மேலும் பத்ர் மௌலிது புத்தகம் இருக்கும் வீட்டை ‘பத்ரு ஸஹாபாக்கள் பாதுகாப்பர்களாம். அதை தன் வசம் வைத்திருப்பவர்களை காப்பார்களாம்’ என்ற சிந்தனையும் முஸ்லிம்களிடம் இருக்கின்றது. அதனால் அவர்கள் பெயர் கொண்டு அழைக்கவும் செய்கின்றனர். அப்படி ஒரு ஆற்றல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் ஏன் பத்ரு யுத்தத்தின் போது களத்துக்கு மலக்குகள் வந்ததது போன்று அவர்களால் உஹது களத்துக்கு வரமுடியவில்லை? மலக்குகள் வந்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அப்படி இருக்கும் போது உஹது களத்துக்கு ஏன் பத்ரில் மரணித்தவர்கள் வந்து உதவி செயவில்லை.  அல்லாஹ் அப்படி கூறவுமில்லை.

இந்த நம்பிக்கையின் விளைவினால் தான் கப்ருகளுக்கு பக்கத்தால் பயணிக்கும் போது பாதுகாப்பு நோக்கில் தலை மாட்டில் உள்ள உண்டியலில் காணிக்கை போடப்படுகின்றது. மேலும் நோக்கங்கள் நிறைவேற அந்த இடத்தில் காணிக்கை கட்டப்படுகின்றது. இப்படி ஈமானை இலக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மேலும் நபிகளாருக்கு உயிரோடு இருக்கும் போது எதனை செய்ய முடியாது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றானோ அதனை எப்படி மரணித்த பின் செய்வார்கள்? அப்படி நம்பினால் நமது ஈமானின் நிலை என்னவாகும்? நபிகளாராலே முடியாது என்றால் நாம் நல்லவர்கள் என்று நினைக்கும் நல்லடியார்களின் நிலை என்ன?

 • (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”  (7:188)
 • (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”  (10:49)

குறிப்பு: 

நல்லடியார்கள் உலகில் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு சக்தி பெறமாட்டார்கள், என்று கூறும் போது நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் மேட்கொண்டபோது மூஸா நபியவர்கள் தொழுகையின் எண்ணிக்கையை குறைத்து உதவி செய்யவில்லையா? என்ற வாதத்தை வைத்து சரிபடுத்த முயல்கின்றனர்.

உண்மையில் நபிகளாருக்கும் ஏனைய நபிமார்களுக்கும் மிஃராஜில் நடந்த நிகழ்வுகள் இந்த உலகிற்கு வெளியே, அல்லாஹ் அவர்களை வைக்க நாடிய இடத்திலே நடந்தது. மேலும் மிஃராஜ் பயணமே ஒரு அற்புதம் எனும் போது அதில் அற்புதத்தையே அல்லாஹ் காட்டுவான். அல்லாஹ் நபிகளாருக்கு காட்டியவற்றையெல்லாம் மரணித்த நல்லடியார்கள் செய்வார்கள் என்றிருந்தால் அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? மூஸா நபி வானத்தின் மேலிருந்து உதவி செய்தது போன்று நல்லடியார்கள் உலகில் உதவுவார்கள் என்று நபிகளார் கூறாத போது எப்படி நாமாக ஒன்றை சொல்லமுடியும்? மாறாக மரணித்தவர்கள் உலகிற்கு வரமுடியாது என்றுதானே கூறினார்கள்.

அங்கு நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபியால் உஹதுக்கு வந்து உதவ முடியவில்லை? அதை விடவும் நபிகளாரின் நேசத்திற்குறிய பேரப் பிள்ளை ஹுஸைன் (றழி) அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏன் நபிகளார் உதவிசெய்ய வரவில்லை? இப்படி ஏராலமான உதாரணங்களை கூற முடியும். அப்படி ஒன்றுக்கு வந்திருந்தாலும் அந்த வாதம் சரியாகலாம்.

மேலும் நபிகளார் சுவனவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தார்களே, அப்படியென்றால் இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களும் சேர்த்துத் தானே காட்டப்படர்கள் என்றால் உலகில் அந்த நேரத்தில் வாழ்ந்தவர்கள உலகில் இருந்தார்களா? அல்லது சுவனத்தில் அல்லது நரகத்தில் இருந்தார்கள? இதற்கான பதிலை யோசித்தாலே விளங்கும் நபிகளாருக்கு அன்றைய இரவு வானத்தின் மேல் அனைத்தும் எடுத்துக் காட்டப்பட்டது. என்பது.

மேலும் நபிகளார் மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அதிலே மூஸா நபி, ஈஸா நபி உற்பட அனைத்து நபிமார்களும் கலந்துகொண்டனர். அதே நபிமார்கள் வானிலும் இருந்தார்கள் என்றால் நபிமார்கள் பல உறுவங்களில் இருக்கின்றார்கள் என்று கூறுவோமா? அல்லது இந்த அற்புத நிகழ்வை அல்லாஹ் நபிகளாருக்கு காட்டுவதற்காக எடுத்துக் காட்டினானா? எனவே இவை அனைத்தும் சேர்ந்தே அற்புதமாக இருக்கின்றது என்றால், சாதாரணமாக எல்லா நல்லடியார்களும் இந்த அடிப்படையில் நடப்பார்கள் என்றால் மிஃராஜ் என்பது அற்புத பயணம் என்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகின்றது.

மேலும் உயர்த்தப்பட்ட ஈஸா நபியவர்கள் மறுமையின் அடையாளமாக உலகிற்கு இறங்குவார்கள், என்று குர்ஆன் (நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார் (43:6) கூறும் போது மிஃராஜின் போது இறங்கியது மறுமையின் அடையாளமா? என்றால் இல்லை என்போம். காரணம் அது அல்லாஹ் அற்புதத்திற்காக எடுத்துக் காட்டினான் என்பதே.

 • இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்:  (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?’ என்று கேட்டேன். அப்போது, இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.( விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள்.

(அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(றழி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 5705, முஸ்லிம்)

எனவே நபிகளாருக்கு மிஃராஜ் பயணத்தின் போது நபி மூஸா (அலை) அவர்கள் உதவியது போன்று இவ்வுலகில் மரணித்த நல்லவர்கள் உதவுவார்கள் என்பதற்கு ஓர் ஆதாரத்தை பார்க்கமுடியுமா? என்றால் முடியாது என்பதே பதிலாகும். தாங்கள் செய்யும் ஷிர்க்கான அம்சங்களை சரி படுத்த நபிகளார் கூறாதவைகளையெல்லாம் கூறுவதுதான் வழிகேடர்களின் பழக்கமாக இருந்துள்ளது. அல்லாஹ் எம்மை இந்த அநியாயச் செயலிலிருந்து காப்பானாக.

மேலும் நல்லடியார்களும் பெரியார்களும் குழந்தை பாக்கியத்தை தறுவதாக நினைக்கின்றனர். அதிகமான முஸ்லிம்கள், அதனால் நல்லடியார்களிடம் குழந்தைப் பாக்கியத்தை வேண்டி அவர்களின் கப்ருகளுக்கும், அவர்களின் பெயரால் கொடுக்கப்படும் கந்தூரிகளுக்கும் நேர்ச்சை வைக்கின்றனர். இதுவும் ஷிர்க் ஆகவே அமையும். மேலும் அல்லாஹ் தான் தேர்வு செய்து எடுத்த நபிமார்களுக்கே, அவர்கள் உயிரோடு வாழும்போதே அது முடியவில்லை எனும் போது இந்த நல்லடியார்களின் நிலை என்ன?

 • அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.  (42:49- 50)
 • காஃப், ஹா, யா, ஐன், ஸாத்2. (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.3. அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).4. (அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.5. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!6. “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”  (19:1- 9) மேலும் இதே செய்தியை 3:38 லும் பார்க்கலாம்.
 • (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங்கூறினர்.29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.30. (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.  (51:28- 30)
 • அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.55. அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள்.56. “வழிகெட்ட வர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,  (15:53- 56)

இப்படி நபிமார்களுக்கே இந்த அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை எனும் போது நாம் அல்லாஹ் அல்லாத பெரியார்களுக்கும் நல்லடியார்கள் என்று நாம் முடிவு செய்தவர்களுக்கும் கொடுத்தால் எமது ஈமானின் நிலை என்ன என்பதை இப்படி செய்யும் முஸ்லிம்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். அல்லாஹ்வே எம்மைக் இந்த இணைவைப்பிலிருந்து காப்பானாக.

3 comments

 1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு. உன்கள் கருத்து விளங்கும் சமூகத்துக்கு மிகவும் சிறந்தது.உங்கள் பணி மேலும் தொடர அல்லாஹ் அருள்புரிவானாக

 2. அல்ஹம்துலில்லாஹ்..அருமையான கட்டுரை.

  ////மேலும் நபிகளார் சுவனவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தார்களே, அப்படியென்றால் இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களும் சேர்த்துத் தானே காட்டப்படர்கள் என்றால் உலகில் அந்த நேரத்தில் வாழ்ந்தவர்கள உலகில் இருந்தார்களா? அல்லது சுவனத்தில் அல்லது நரகத்தில் இருந்தார்கள? இதற்கான பதிலை யோசித்தாலே விளங்கும் நபிகளாருக்கு அன்றைய இரவு வானத்தின் மேல் அனைத்தும் எடுத்துக் காட்டப்பட்டது. என்பது.////
  இது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நபிகளார் கண்ட சுவனவாசிகளூம் நரக வாசிகளும் இறந்தவர்களாக இருக்காலாம் அல்லவா?உலகில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் சேர்த்து காட்டப்பட்டார்கள் என்று எவ்வாரு கூற முடியும்? தயவு செய்து விளக்குங்கள்.

  1. சகோதரருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்.
   அங்கு நான் பதிவு செய்திருக்கும் ஹதீஸில் நபியவர்களே எடுத்துக் காட்டப்பட்டதாக கூறுகின்றார்கள்.
   மேலும் நபிகளாரின் சமுதாயத்தவர்கள் முழுக்கவும் எடுத்துக் காட்டப்பட்டார்கள்.
   மேலும் மிஃராஜின் போது ஆதம் நபியை நபியவர்கள் சந்திக்கும் போது வலது பக்கத்தில் சுவனத்துக் குறியவர்களும், இடது பக்கத்தில் நரக வாசிகளும் இருந்தார்கள் எனும் போது அதில் மரணித்தவர்கள் மட்டும் என்று விளங்க முடியாது.
   மேலும் உலகில் வாழ்ந்து கொண்டிருந்த உகாஷா (றழி) அவர்களும் 70000 பேரில் உள்ளவர் என்று பதில் அளித்தார்கள்.
   மேலும் நபியவர்கள் உலகில் இருக்கும் போதே உமர், பிலால், உம்மு ஸுலைம் (றழி) ஆகியோரை சுவனத்தில் கண்டார்கள்
   எனவே நபியவர்களுக்கு மரணித்தவர் மரணிக்காதோர் அனைவரையும் அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான்.
   அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
   இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?’ என்று கேட்டேன். அப்போது, இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.( விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள்.
   (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(றழி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள். (புஹாரி: 5705, முஸ்லிம்)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *