நபிகளாரின் பிறப்பு கொண்டாட்டம் -1

நபிகளாரின் பிறப்புக்காக மீலாத் கொண்டாட்டங்களை நடத்துவது முஸ்லிம்களில் பெரும்பாண்மையினரின் வழக்கமாக இருந்து வருகின்றது, அதனை நியாயப்படுத்தி சில ஆதாரங்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர். இந்த பதிவின் மூலம் மீலாத் கொண்டாடத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு?, அதனை கொண்டாடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு என்பதை தெளிவு படுத்தவதே நோக்கம்! இதன் மூலம் அல்லாஹ் எமக்கு இஸ்லாத்தில் தெளிவை தருவானாக! பதிவை வாசிக்க இங்கே  click      செய்யவும்!

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்: மாதங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிந்து வைக்க வேண்டியது! மாதங்களை பன்னிரண்டாக வகுத்தவன் அல்லாஹ்வே. அவனிடம் நலவு, கெடுதி விடயத்தில் அனைத்தும் சமமானதே. எனவே ஒரு மாதத்தை நல்லது, இன்னொரு மாதத்தை கெட்டது என்று மனிதர்கள் யாருக்கும் தீர்மானிக்க முடியாது. ஒன்றில் அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்க வேண்டும், அல்லது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க வேண்டும். அப்படி அல்லாஹ்வோ, அவன் தூதரோ ஒரு மாதத்தை நல்ல, பரகத் பொருந்திய மாதம்,… Continue reading ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:

ஏப்ரல் முதலாம் திகதி!!! மனிதன் தன்னை முட்டாளாக்கும் தினம்

இன்றைய உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தினத்தை குறித்துக்காட்டி, அத்தினத்தில் விழாக் கொண்டாடுவதும் வழக்கம். அந்த அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதலாம் திகதி வருகின்றபோது ‘அது பொய் சொல்லும் தினம், அடுத்தவர்களை ஏமாற்றும் தினம், முட்டாள் தினம்’ என்று மக்கள் அந்த நாளை கொண்டாட முன்வந்து விடுகின்றனர். அது பற்றிய இஸ்லாமிய விளக்கத்தைப் படிக்க click செய்யவும்!!! ↓ ஏப்ரல்_முதலாம்_திகதி

அல்குர்ஆன் கூறும் படிப்பினை சம்பவங்கள்! யூசுப் நபியின் வரலாறு!

அல்குர்ஆன் கூறும் படிப்பினை சம்பவங்கள்! இஸ்லாமிய உறவுகளே! அல்குர்ஆன் என்பது மனிதனுக்கு எல்லா வழிகளிலும் நேர்வழி காட்டக்கூடிய ஒன்றே. அந்த வகையில் அல்குர்ஆன் பற்றி நாம் படிப்பதற்கு அதிகம் இருக்கின்றன. எனவே அதன் ஒரு பகுதியை தெளிவு படுத்தும் முகமாக இந்த ஆக்கம் எழுதப்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:  ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(2:2) شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ… Continue reading அல்குர்ஆன் கூறும் படிப்பினை சம்பவங்கள்! யூசுப் நபியின் வரலாறு!

நெருக்கடிகளின் போது நோன்பு நோற்றல்!!!

முஸ்லிம்கள் வாக்களிப்பதற்காக நோன்பு நோற்க வேண்டுமா!!! இஸ்லாமிய உறவுகளே, எனது முகநூல் நண்பர்களே! நாளைய தினம் வாக்களிக்கும் தினம் என்பதால் நோன்பு நோற்ற நிலையில் செல்லுமாறு சில இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியிருப்பதைப் பார்க்கலாம்! முதலில் நாம் அறியவேண்டியது; ஒரு முஸ்லிம் எந்த கட்டத்திலும் இஸ்லாமிய வரம்பை மீறி, நபியவர்களுக்கு மாறு செய்யக்கூடாது என்பதே. அல்லாஹ் கூறுகிறான்:    فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ… Continue reading நெருக்கடிகளின் போது நோன்பு நோற்றல்!!!

இடி, மின்னலின் போது என்ன சொல்லவேண்டும்!

இடி, மின்னலின் போது என்ன சொல்லவேண்டும்! இடி, மின்னலின் போது சொல்வதற்கு நபி வழியில் ஏதும் இருக்கின்றதா என்று தேடிப்பார்க்கும் சில ஹதீஸ்களையும், நபித் தோழர்களின் கூற்றுக்கலையும் பார்க்க முடிகின்றது, அவை ஷீஹானதா, பலவீனமானதா என்பதை நோக்குவோம்! سنن الترمذي ت بشار (5/ 380) عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ،… Continue reading இடி, மின்னலின் போது என்ன சொல்லவேண்டும்!

அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -3

அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய பலவீனமான செய்திகள் சூரா ஹூத்: سنن الدارمي (4/ 2142) عَنْ كَعْبٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اقْرَءُوا سُورَةَ هُودٍ يَوْمَ الْجُمُعَةِ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் வெள்ளிக் கிழமையில் சூரா ஹூதை ஓதிக்கொள்ளுங்கள் . இந்த ஹதீஸ் ஸுனன் தாரிமியில் பதியப்பட்டுள்ளது, இது முர்ஸல் வகையை சார்ந்த பலவீனமான செய்தியாகும். நபிகளாரை கண்டிராத கஃப் என்பவர் நபிகளார் சொன்னதாக அறிவித்தால் அதனை ஏற்கமுடியாது.… Continue reading அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -3

அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -2

அல்குர்ஆனில் உள்ள சூராக்களின் சிறப்புகள் ஸூரதுல் பத்ஹ் பற்றிய சிறப்புகள் عَنْ أَنَسٍ، أَنَّهَا نَزَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرْجِعَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، وَأَصْحَابُهُ مُخَالِطُونَ (2) الْحُزْنَ وَالْكَآبَةَ، وَقَدْ حِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَنَاسِكِهِمْ (3) ، وَنَحَرُوا الْهَدْيَ بِالْحُدَيْبِيَةِ، {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} [الفتح: 1] إِلَى قَوْلِهِ: {صِرَاطًا مُسْتَقِيمًا} [النساء: 68] قَالَ: ” لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ آيَتَانِ،… Continue reading அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -2

அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -1

அல்குர்ஆனில் உள்ள சூராக்களின் சிறப்புகள் அல் குர்ஆனைப் பொறுத்தவரை அது இறை வசனங்கள் என்பதே முதல் சிறப்பம்சமாகும். அந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்குர்ஆனில் இருக்கும் ஒவ்வொரு வசனத்தையும் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு படுத்தாமல் ஓதிவருவதே மிகப்பொறுத்தமாகும். அதேநேரம் ஒரு சூராவை குறிப்பிட்டு சிறப்புகள் வந்திருக்குமாயின் அவற்றை அந்த சிறப்பின் அடிப்படையில் கவனிப்பதும் கட்டாயமாகும். அதற்கு அப்பால் நாமாக ஒரு சூராவுக்கு சிறப்பு சொல்வதோ, அல்லது குறிப்பிட்ட சூராக்களை ஓதுவதற்கென்று வேறுபடுத்தி அதனை தனிப் புத்தக வடிவத்தில் தொகுப்பதோ,… Continue reading அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -1

உழ்ஹிய்யாவும் அதன் சட்டங்களும்

بسم الله الرحمن الرحيم உழ்ஹிய்யாவும் (குர்பானி) அதன் சட்டங்களும் VIDEO CLICK HERA உழ்ஹிய்யா என்பது, துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது (ஹஜ் பெருநாள்) தினத்திலிருந்து, அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் மூன்றாவது நாள் சூரிய அஸ்தமனம் வரைக்கும் ஆடு மாடு ஒட்டகங்களை அறுத்துப் பழியிடுவதாகும். உழ்ஹிய்யாவின் பின்னணி பொதுவாகவே வணக்கங்களைப் பொருத்தமட்டில் அல்லாஹ் கடமையாக்குவான், நபிகளார் காட்டித்தருவார்கள், காரண காரியங்களுக்கு அப்பால் அவற்றை நாம் நடைமுறைப் படுத்துவோம், இதுவே அடிப்படை. அதே நேரம் ஹஜ், உழ்ஹிய்யா ஆகிய… Continue reading உழ்ஹிய்யாவும் அதன் சட்டங்களும்

இரு பெருநாட்களின் சட்டங்கள்

இரு பெருநாட்களின் சட்டங்கள்: பெருநாளைக்கான குளிப்பு: நபி (ஸல்) அவர்கள் பெருநாளைக்காக ஒரு குளிப்பைக் காட்டித் தந்தார்களா என்றால் அதற்கான எந்த ஸஹீஹான சான்றுகளையும் பார்க்கமுடியவில்லை, எனவே அந்த நாளைக்காக குளிப்பது சுன்னத்தாகாது. மேலும் சுன்னத்து இல்லை என்றாகிவிட்டால் குளிப்பு வசதியைக் காட்டி தொழுகையை பிற்படுத்துவதும் நல்லதல்ல.எனவே ஒவ்வொரு மனிதரும் தன் வசதிக்கேற்ப விறும்பினால் குளிக்கலாம். அந்த தினத்திற்காக அழகான ஆடைகளை அணிதல்; பெருநாளை கொண்டாடும் முகமாக புதிய, அழகான ஆடைகளை அனிவதும் நபி வழியில் அனுமதிக்கப்பட்டதே.… Continue reading இரு பெருநாட்களின் சட்டங்கள்

லைலதுல் கத்ர் ஓர் நோக்கு

بسم الله الرحمن الرحيم லைலதுல் கத்ர் ஓர் நோக்கு அன்புச் சகோதரர்களே! ரமழான் மாதத்தின் 27 வது இரவு வந்து விட்டால் அதுதான் லைலதுல் கத்ர் என்று குறிப்பிட்டுக் கூறி அந்த இரவை மாத்திரம் சிறப்பித்துக் கொண்டாடும் ஒரு நிலை முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்றது, இது நபி வழிக்கு உற்பட்டதா என்றால்?! 27 வது இரவை மாத்திரம் கொண்டாடுவது நபிவழியல்ல என்பதை நாம் முதலாவது விளங்கவேண்டும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளானின் கடைசிப் பத்து நாள்களில்… Continue reading லைலதுல் கத்ர் ஓர் நோக்கு

நோன்பு அல்லாஹ்வின் ரஹ்மத்

மனிதனை புனிதனாக்க வந்த ரமழான் வீடியோவைப் பார்க்க இங்கே click செய்யவும் இஸ்லாமிய உறவுகளே எம்மிடம் வந்திருக்கும் ரமழான் மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பலவிதமான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது, அதனால் இந்த ரமழான் மாதத்தை அல்லாஹ்வின் அருலுக்குறிய மாதம் என்கின்றோம். உண்மியில் இந்த ரமழான் மாதத்தை பயன்படுத்தி வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாதவன் ஒரு துர்ப்பாக்கியம் பிடித்தவனே. எனவே மாற்றத்தை ஏற்காத மனிதனிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த படைத்தவன் அல்லாஹ் ஏற்பாடு செய்திருக்கும் முன்னேற்பாடுகளை இந்த கட்டுரையினூடாக நோக்குவோம். يَا أَيُّهَا… Continue reading நோன்பு அல்லாஹ்வின் ரஹ்மத்

சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?

சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?   நபிகளார் எதற்காக ஓதினார்கள்? நபித் தோழர்கள் எழுபது பேர்களை முனாபிக்குகள் அளைத்துச் சென்று கொன்றபோது ஒரு மாத காலம் அவர்களை சபித்து ஓதினார்கள். ஆஸிம் அல் அஹ்வல்(ரஹ்)அவர்கள் கூறினார்கள்: நான், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத்  குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், ‘ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ருகூஉவிற்கு முன்புதான்” என்று… Continue reading சுபஹில் மாத்திரம் குனூத் ஓதுவது நபி வழியா?

குத்பா உரையின் சட்டங்கள்

குத்பா உரையின் சட்டங்கள். குத்பா நிறைவேற குறிப்பிட்ட தொகையினர் இருக்கவேண்டு என்றில்லை, ஆகக் குறைந்தது மூன்று பேர் இருந்தாலே போதுமானது. ஏனெனில் நபியவர்கள் 40 பேர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது வேறு எண்ணிகைகளை நிபந்தனை இடவில்லை. صحيح البخاري 4616 – عن جابر بن عبد الله رضي الله عنهما قال : أقبلت عير يوم الجمعة ونحن مع النبي صلى الله عليه و سلم فثار الناس إلا… Continue reading குத்பா உரையின் சட்டங்கள்