ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-13

ஜனாசாவோடு சார்ந்த துஆக்கள் மரணிப்பதை ஆசைவைக்கவேண்டிய கட்டாயம் இருந்தால்  அவர் ஓத வேண்டியது اَللٌهُم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي ‘அல்லாஹும்ம அஹ்யினீ மா கானதில் ஹயாது கைரன் லீ, வதவப்பனீ மாகானதில் வபாது கைரன் லீ’ யா அல்லாஹ் வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழவை, மரணிப்பதுதான் நல்லம் என்றிருந்தால் மரணிக்கச் செய்துவிடு.’ மரணத்தருவாயில் உள்ளவருக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்தல் لا إله… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-13

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-12

ஜனாசாக்களை அடக்கம்செய்வது. ஓரு ஜனாசாவுக்கு ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமைகளுல் அடக்கம் செய்வது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் காபிர்களைகூட நபிகளார் குழிக்குள் அடக்கியிருக்கின்றார்கள்.  (புஹாரி , முஸ்லிம்) ஜனாசாக்களை அடக்கம்செய்யும்பொது மய்யவாடிகளில் அடக்குவதே நபிவழியாக இருந்துள்ளது, அந்த அடிப்படையில் பொது இடங்களில் அடக்கம்செய்யாமல் மய்யவாடிகளில் செய்யவேண்டும். ஆனால் யுத்தகளங்களில் மரணித்தவர்களை அங்கேயே அடக்குவதும் நபிவழியாக இருந்துள்ளது. எனவே வீட்டுக்குள் அடக்குவதோ பள்ளிக்குள் அடக்குவதோ தவிர்க்கப்பட வேண்டும். இதனால் பல ஷிர்க்கான விடயங்கள் தோற்றுவிக்கப்படுவதற்கும் அது காரணமாக இருக்கும்.… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-12

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-11

ஜனாசாவுக்காக தொழுகை நடாத்துதல் ஒரு முஸ்லிமின் ஜனாசாவுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் தொழுவிப்பதும் ஒன்றாகும். ஆனால் இரு சாராருக்கு கடமை இல்லை, காரணம் நபியவர்கள் அவர்களுக்காக தொழுவித்தும், தொழுவிக்காமலுல் இருந்திருக்கின்றார்கள். 1- வயதுக்கு வராத குழந்தைகள் ஆயிஷா (றழி) கூறினார்கள்: நபியவர்களின் மகன் இப்ராஹீம் 18 மாத குழந் தையாக இருக்கும்போது மரணித்தார், அவருக்காக நபிகளார் தொழுவிக்கவில்லை.  (அஹ்மத், அபூதாவுத்) 2- யுத்த களங்களில் ஷஹீதானவர்கள். நபியவர்கள் உஹதில் சஹீதானவர்களுக்காக தொழுவிக்கவில்லை, ஆனாலும் ஹம்ஸா (றழி) அவர்களுக்காக தொழுவித்தார்கள்.… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-11

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-10

ஜனாசாவை சுமப்பதும், அதை பின்தொடர்ந்து செல்வதும். இது ஒரு முஸ்லிம் தன் சகோதரனுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் ஒன்றாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். .   (புஹாரி : 1240)  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். துயர்ந்து செல்வது என்பது இரண்டு விதத்தில் அமையும், வீட்டிலிருந்து தொழுவிக்கும் வரை மட்டும் பின்தொடர்வது,… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-10

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-9

அதனை கபனிடுதல் கபனை பொருத்தவரை அதன் செலவை மரணித்தவர் செலவில் செய்வதே நன்று. மற்றவர்கள் உதவியோடும் செய்து கொள்ளலாம் இப்ராஹீம் அறிவித்தார். நோன்பாளியாக இருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது அவர், ‘என்னை விடச் சிறந்தவரான முஸ்அப் இப்னு உமைர்(ரலி) கொல்லப்பட்டபோது அவரின் உடல் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டது. அப்போது அவரின் தலைமறைக்கப்பட்டால் அவரின் கால்கள் வெளியில் தெரிந்தன. கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது,… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-9

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-8

ஜனாசாவைக் குளிப்பாட்டுதல். குளிப்பாட்டுவது கடமை என்பதற்கு ஏராலமான சான்றுகள் இருக்கின்றன. அதை குளிப்பாட்டும் போது மூன்று விடுத்தமோ, தேவைக்கேட்ப அதைவிட அதிகமாகவோ ஒற்றைப்படையாக குளிப்பாட்டுதல், சுத்தப்படுத்துவதற்காக இலந்தை இலையையோ, சவர்க்காரம் போன்ற, அழுக்கைப் போக்கும் ஏதாவது ஒன்றையோ பயன்படுத்தல். கடைசி விடுத்தம் ஊற்றும் நீருடன் கட்பூரத்தை கலந்துகொள்ளல். பெண்களின் கொண்டைகளை கலைந்து, நன்றாக கழுவிவிட்டு, மூன்று கொண்டைகளிட்டு, பின் பக்கமாக விட்டுவிடுதல். . குளிப்பாட்டும் போது வலது பக்கத்தைக் கொண்டு ஆரம்பித்து, அதிலும் வுழுவுடைய உறுப்புக்களைக் கொண்டு… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-8

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-7

ஒரு ஜனாசாவை மக்கள் புகழுதல் மக்களின் நாவுகளிலிருந்து தூய்மையுடன் வெளிப்படும் நல்ல வார்த்தைகளை வைத்து ஒரு ஜனாசா அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தை அடைகின்றது, இதில் கவனிக்கவேண்டிய விடயம் அல்லாஹ் உள்ளத்தையே பார்க்கின்றான். உள்ளத்தில் ஒன்றை வைத்து, வெளிப்பகட்டுக்காக புகழ்வது வெறும் முஹஸ்துதியாகவே கணிக்கப்படும். அடுத்து ஒரு மனிதன் உலகில் வாழும் ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எதிர்பார்த்து மக்கள் அபிமானியாக வாழவும் வேண்டும், அப்போதே கடைசி முடிவு நல்லதாகவும் அமையப் போகின்றது. அனஸ் (றழி) கூறினார்கள்: நபிகளாருக்குப் பக்கத்தால் ஒரு… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-7

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-6

கடைசி முடிவு நல்லதாக இருப்பதற்கான அடையாளங்கள்: கலிமாவைக் கூறிய நிலையில் மரணித்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாருடைய கடைசி வார்த்தை ‘لا إله إلا الله வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை’ என்பதாக இருக்குமோ அவர் சுவனம் நுளைவார்.’  (ஹாகிம்) நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்கள் மரணிக்கும் தருனத்தில் ‘என் பெரியத் தந்தையே لا إله إلا الله என்று கூறுங்கள் உங்களுக்காக அல்லாஹ்விடம்… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-6

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-5

மரணச்செய்தி கேள்விப்பட்டால் செய்யக்கூடாத காரியங்கள்: ஒப்பாரி வைத்தல் கன்னத்தில் அறைந்துகொள்ளுதல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல். முடிகளை வழித்தல். கவலைக்காக முடியை வளர்த்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்:‘எனது உம்மத்தில் நான்கு காரியங்கள் அறியாமைக்கால காரியங்களில் உள்ளவையாகும். அவைகளை அவர்கள் விடமாட் டார்கள். (அவையாவன) வம்சா வழியைக் கூறி பெருமைப்படுதல், மனிதர்கள் (உயர்வான குடும்பப்) பாரம்பரியங்களை குறை கூறுதல், நட்சத்திரங்களைக் கொண்டு மழைப் பெய்யத் தேடுதல், (ஒப்பாரியிட்டு) ஓலமிட்டு அழுதல் (முதலியவைகளாகும்). “ஒலமிட்டு அழும் பெண் அவள் மரணத்திற்கு முன்பு… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-5

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-4

குடும்ப உறவுகள் செய்யவேண்டியது: மரண செய்தி கேள்விப்பட்ட உறவினர்கள் பொருமையாக இருப்பது முதற் கடமையாகும். நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும்… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-4

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-3

நோயாளி மரணித்தபின் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டியவை, மரணித்த பின் கண்ணைகளை மூடி விடுவதும், அவருக்காக நபிகளார் ஓதிய துஆவை ஓதுவதும் முக்கியமாகும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஸலமா (மரணத்தருவாயிலிருந்த போது)விடம் நுழைந்(அருகில் வந்)தார்கள். அவரது பார்வை மேல் நோக்கி விட்டது. ஆகவே அதை ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் மூடினார்கள். அதன்பிறகு “நிச்சயமாக உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் பார்வை அதை தொடர்கிறது” எனக்கூறினார்கள். (உடனே) அவர் குடும்பத்தவர்களிலுள்ள மக்கள் பெரும் சப்தமிட்டனர். அப்போது (உங்களுக்காக)… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-3

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-2

நோயாளிக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டியது. மரணத் தருவாயில் இருக்கும் மனிதருக்கு கலிமாவை சொல்லிக்கொடுத்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் மரணத்தருவாயில் உள்ளவருக்கு لا إله إلا الله (வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) கலிமாவை சொல்லிக் கொடுங்கள்.’  (முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று அறிந்த நிலையில் மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுளைவார்.’  (முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார்… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-2

ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்- 1

மரணத்தருவாயில் இருக்கும் நோயாளி செய்யவேண்டியது அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக்கொண்டு, பொறுமையுடன் இருப்பதோடு, அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணத்துடன் இருப்பது அவசியம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூஃமினின் விடயம் ஆச்சர்யத்தக்கது, அவனது எல்லா விடயமும் அவனுக்கு நல்லதே, அது ஒரு மூஃமினுக்கே தவிர இருக்கவும் மாட்டாது, அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துவான் அது அவனுக்கு நல்லதாகிவிடும், அவனுக்கு கெட்டது நடந்தால் பொறுமைக் காப்பான் அது அவனுக்கு நல்லதாகிவிடும்.’  (முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர்… Continue reading ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்- 1