உழ்ஹிய்யா பற்றிய பலவீனமான செய்திகள்!!!

உழ்ஹிய்யா!!!

உழ்ஹிய்யா சம்பந்தமாக மக்களிடையே பரவிக் காணப்படும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்!!

حديث زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ؟ قَالَ: سُنَّةُ أبيكم إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام، قَالُوا: فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: بِكُلِّ شَعْرَةٍ حَسَنَةٌ . قَالُوا: فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: بِكُلِّ شَعْرَةٍ مِنَ الصُّوفِ حَسَنَة

நபித்தோழர்கள் நபிகளாரிடம்; “அல்லாஹ்வின் தூதரே! இது என்ன உழ்ஹிய்யா என்பது!” என்று கேற்க, நபியவர்கள் “இது உங்கள் தந்தையாகிய இபறாஹீம் (அலை) அஅவர்களின் வழிமுறையாகும்.” என்று கூறவே, “அதில் எமக்கு என்ன இருக்கின்றது?” என்று தோழர்கள் கேற்க, “ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு.” என்று நபியவர்கள் கூறினார்கள். என்று ஸைத் பின் அர்கம் (ரழி) அறிவிக்கிறார்கள்.(அஹ்மத், இப்னு மாஜா, மற்றும் பலர்)

அதன் அறிவிப்பாளர்களுள் “நுபைஃ இப்னுல் ஹாரிஸுல் ஹமதானி அபூதாவுத்” என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் ஹதீஸ் புனையக்கூடியவராவார். மேலும் “ஆஇதுனில்லாஹ்” என்பவரும் பலவீனமானவரே.
எனவே இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.
இதனை அறிஞர் அல்பானி அவர்களும் இட்டுக்கட்டப்பட்டது என ஸில்ஸிலதுல் ளஈபாவில் கூறியுள்ளார்கள்.

 عَنْ عَبْدِ اللهِ بْنِ حَسَنِ بْنِ حَسَنٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ضَحَّى طَيِّبَةً بِهَا نَفْسُهُ، مُحْتَسِبًا لِأُضْحِيَّتِهِ؛ كَانَتْ لَهُ حِجَابًا مِنَ النَّارِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் உள்ளத்தளவில் திருப்திபட்டவராக, நண்மையை எதிர்பார்த்து உழ்ஹிய்யா கொடுக்கின்றாரோ, அது அவருக்கு நரகத்திலிருந்து தடையாக இருக்கும்.(தபரானி)
இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஸுலைமான் பின் அம்ர் அன்னகஇ” என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் பொய்யராவார்.
இதுவும் இட்டுக்கட்டப்பட்டது.

وحديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ رضي الله عنها: ((قَوْمِي إِلَى أُضْحِيَّتِكَ فَاشْهَدِيهَا فَإِنَّ لَكِ بِأَوَّلِ قَطْرَةٍ تَقْطُرُ مِنْ دَمِهَا يُغْفَرُ لَكِ مَا سَلَفَ مِنْ ذُنُوبُكَ. قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا لَنَا أَهْلَ الْبَيْتِ خَاصَّةً أَوْ لَنَا وَلِلْمُسْلِمِينَ عَامَّةً؟ قَالَ: بَلْ لَنَا وَلِلْمُسْلِمِينَ عَامَّةً)).

அபூ சஈத் (ரழி) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் பாதிமா (ரழி) அவர்களிடம் “நீங்கள் எழுந்து சென்று, உமது உழ்ஹிய்யாவை அறுப்பீராக, ஏனெனில் அதிலிருந்து விழும் முதல் இரத்த சொட்டுடனே உங்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்”, அப்போது பாதிமா அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இது அஹ்ல் பைத்தாகிய எமக்கு மட்டுமா, அல்லது அனைத்து முஸ்லிம்களிம்களுக்குமா?” என்று கேற்கவே, “எங்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது” என பதிள் அழித்தார்கள் நபியவர்கள்.(ஹாகிம்,பைஹகீ)

இந்த செய்தி பல வழிகளில் பதியப்பட்டிருந்தாலும், அனைத்திலும் குறைபாடு காணப்படுகிறது. அறிவிப்பாளர் தொடரில் “அபூ ஹம்ஸா” என்ற பலவீனர் இடம் பெற்றுள்ளார், மேலும் “அதிய்யதுப்னு ஸஃத்” என்ற பலவீனர் இடம் பெற்றிப்பதோடு, சில தொடர்களில் அறியப்படாத “மஜ்ஹூல்கள்” பலர் இடம்பெற்றுள்ளனர்.
எனவே இது பலவீனமான, முன்கரான செய்தியாகும்.
இதனை அறிஞர் அல்பானி அவர்களும் முன்கர் என ளஈபுத் தர்கீபில் கூறியுள்ளார்கள்.

 

وحديث أَبو هُرَيْرَةَ رضي الله عنه، أَنّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: ((مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا)).

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யாருக்கு வசதி இருந்தும் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் எமது தொழும் திடலை நெருங்கவேண்டாம்” (அஹ்மத், ஹாகிம்)

இதன் அறிவிப்பாளர் தொடரில் “அப்துல்லாஹ் பின் அய்யாஷ்” என்ற மனன சக்தி குறைந்த, தவறு விட்டு, முறன்பட்டு அறிவிக்கும் அறிவிப்பாளர் இடம்பெற்றிருப்பதோடு, அவர் தனித்தும் அறிவித்துள்ளார். மேலும் நபிகளாரின் கூற்றாக அறிவிப்பதிலும், நபித்தோழர் கூற்றாக அறிவிப்பதிலும் தடுமாறியுமுள்ளார்.
இதுவும் முன்கர் வகையை சார்ந்ததாகும்.
இமாம் தஹபி அவர்களும் “தன்கீஹுத் தஹ்கீக்” என்ற நூலில் முன்கர் என்று கூறியுள்ளார்கள்.
மேலும் அஹ்மத், பைஹகீ, இப்னு ஹஜர், அல்முன்ஸிரீ போன்றோரும் பலவீனப்படுத்தியுள்ளனர்.

 

وحديث عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((مَا تُقُرِّبَ إِلَى اللَّهِ تَعَالَى يَوْمَ النَّحْرِ بِشَيْءٍ هُوَ أَحَبُّ إِلَى اللَّهُ تَعَالَى مِنْ إِهْرَاقِ الدَّمِ وَأَنَّهَا لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلَافِهَا وَأَنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهُ تَعَالَى بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ عَلَى الْأَرْضِ فَيَطِيبُوا بِهَا نَفْسًا)).

ஆயிஷா (ரழி) அவர்கள் நபிகளார் கூறியதாக கூறினார்கள்: ஹஜ் பெருநாள் தினமன்று இரத்தம் ஓட்டும் (உழ்ஹிய்யா) வணக்கத்தை விடவும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான வேறு ஒன்றைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்க முடியாது. (உழ்ஹிய்யா) மிருகம் மறுமையில் தனது முடிகள், கொம்புகளுடன வரும், அதன் இரத்தமோ பூமியில் விழ முன் அல்லாஹ்வின் இடமொன்றில் விழுகிறது, எனவே அவர்கள் உள்ளத்தளவில் சிறப்படையட்டும். (ஹாகிம், திர்மிதி)

அதில் “அபுல் முசன்னா ஸுலைமான் பின் யஸீத்” என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார். அவரைப் பற்றி புகாரி இமாமவர்கள் “முன்கருல் ஹதீஸ்” என்று கூறியுள்ளார்கள்.
இதுவும் பலவீனமான செய்தி.
இதனை அறிஞர் அல்பானி அவர்களும் பலவீனமானது என ளஈபுத் தர்கீபில் கூறியுள்ளார்கள்

 

وعَنْ عَائِشَةَ رضي الله عنها، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: ((ضَحُّوا، وَطَيِّبُوا بِهَا أَنْفُسَكُمْ، فَإِنَّهُ لَيْسَ مِنْ مُسْلِمٍ يُوَجِّهُ ضَحِيَّتَهُ إِلَى الْقِبْلَةِ إِلا كَانَ دَمُهَا، وَفَرَثُهَا، وَصَوْفُهَا، حَسَنَاتٍ مُحْضَرَاتٍ فِي مِيزَانِهِ يَوْمَ الْقِيَامَةِ)).

ஆயிஷா (ரழி) அவர்கள் நபிகளார் கூறியதாக கூறினார்கள்: நீங்கள் உழ்ஹிய்யா கொடுத்து, மனதளவில் சிறப்படையுங்கள், எனேனில் எந்தவொரு முஸ்லிமாவது தனது உழ்ஹிய்யா பிராணியை கிப்லாவை நோக்கி படுக்கவைத்தால், அதனது இரத்தம், பாதம், தோல் போன்றவை மறுமை நாளில் அவனது தராசுத் தட்டில் நன்மைகளாக வராமல் இருப்பதில்லை.  (முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)

அதில் “அபூ ஸஈதுஷ் ஷாமி” என்ற “மத்ரூகுல் ஹதீஸ்ஹதீஸ் துரையில் விடப்பட்டவர் என்ற தரத்தில் உள்ளவர் இடம்பெற்றுள்ளார். மேலும் ஆயிஷா அவர்களைத் தொட்டு அதாஃ என்பவர் அறிவித்தால் அது ஆதாரத்திற்க எடுக்கப்படமாட்டாது. (தஹ்தீபுத் தஹ்தீப், மீஸானுல் இஃதிதால், அள்ளுஅபாஉஸ் ஸகீர்)
உழ்ஹிய்யா விடயத்தில் வந்திருக்கும் குர்ஆன் வசனத்தோடும், நபிகளாரின் ஸஹீஹான ஹதீஸோடும் போதுமாக்கிக் கொள்வோம்!!!

உழ்ஹிய்யா பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

 ذَٰلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.
(அல்குர்ஆன்: 22:32)

صحيح البخاري: ٩٧٦ – عَنِ البَرَاءِ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أَضْحًى إِلَى البَقِيعِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، وَقَالَ: «إِنَّ أَوَّلَ نُسُكِنَا فِي يَوْمِنَا هَذَا، أَنْ نَبْدَأَ بِالصَّلاَةِ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ وَافَقَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ ذَلِكَ، فَإِنَّمَا هُوَ شَيْءٌ عَجَّلَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ» فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي ذَبَحْتُ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ؟ قَالَ: «اذْبَحْهَا، وَلاَ تَفِي عَنْ أَحَدٍ بَعْدَكَ»

பராஃ (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் பகீஃ எனுமிடத்திற்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பின்னர் எங்களை நோக்கி, ‘இன்று நாம் செய்யும் முதல் காரியம் தொழுகையை நிறைவேற்றுவது. பின்னர்(இல்லம்) திரும்பி (குர்பானிப் பிராணியை) அறுப்பது. இவ்வாறு தொழுகைக்கு முன் அறுத்துவிட்டவர் தம் குடும்பத்தாருக்காக, அவசரமாக அறுத்தவராவார். அது குர்பானியாகாது’ எனக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (தொழுகைக்கு முன்பே) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய ஆட்டை விடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று இருக்கிறது. (அதை அறுக்கலாமா?)’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதை அறுப்பீராக! உமக்குப் பின் மற்றவர்களுக்கு இது பொருந்தாது” என்று கூறினார்கள். 
(ஸஹீஹுல் புகாரி: 976)

 

Related Posts

One thought on “உழ்ஹிய்யா பற்றிய பலவீனமான செய்திகள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *