பிக்ஹு -22; தொழுகையில் செய்யமுடியமான விடயங்களும், செய்யக்கூடாதவையும்.

தொழுகையில் செய்யமுடியமான விடயங்களும், செய்யக்கூடாதவையும்.

தொழுகையில் பேசுதல்.

ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பிறகு அது தடுக்கப்பட்டது.

ஸலாத்திற்கு பதில் சொல்வதும், தும்மி ‘அல்ஹம்து லில்லாஹ்’ சொன்னவருக்கு பதில் சொல்வதும் தடுக்கப்பட்டது.

அல்ஹம்து சொல்வதோ, சுப்ஹானல்லாஹ் சொல்வதோ மற்றுமுள்ள திக்ருகளை சொல்வதோ தடுக்கப்படவில்லை.

 عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ، قَالَ: بَيْنَا أَنَا أُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ عَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ، فَقُلْتُ: يَرْحَمُكَ اللهُ فَرَمَانِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ، فَقُلْتُ: وَاثُكْلَ أُمِّيَاهْ، مَا شَأْنُكُمْ؟ تَنْظُرُونَ إِلَيَّ، فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ، فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ، فَلَمَّا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبِأَبِي هُوَ وَأُمِّي، مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ، فَوَاللهِ، مَا كَهَرَنِي وَلَا ضَرَبَنِي وَلَا شَتَمَنِي، قَالَ: «إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ» صحيح مسلم

முஆவியதுப்னுல் ஹகம் (ரழி) அவர்கள் கூறினார்கள்; நான் நபிகளாரோடு தொழும்போது ஒருவர் தும்மிவிட்டார், நான் யர்ஹமுகல்லாஹ் என்றேன், அப்போது மக்கள் என்னை பார்க்க, ‘ஏன் என்னைப் பார்க்கின்றீர்கள்?’ என்று கேட்டபோது, அவர்கள் தம் கரங்களை தொடைகளில் தட்ட ஆரம்பித்தார்கள், அதைக் கண்ட நான் மௌனமாக இருந்துவிட்டேன். நபிகளார் தொழுகை முடிந்த பிறகு, என் தாயும், தந்தையும் அர்ப்பணமாகட்டும், அவரைப் போன்ற ஒரு ஆசானை அதற்கு முன்னரோ, பின்னரோ நான் பார்த்ததில்லை- அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் என்னை கண்டிக்கவோ, எனக்கு ஏசவோ, அடிக்கவோ இல்லை, மாறாக, ‘இது தொழுகை, இதிலே மனிதர்களின் பேச்சிக்களில் எதுவும் சரிவராது, தொழுகை என்பது அல்லாஹ்வை துதிப்பதும், அவனை பெரிதுபடுத்துவதும், குர்ஆன் ஒதுவதுமாகும்.’ என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

زَيْدُ بْنُ أَرْقَمَ: إِنْ كُنَّا لَنَتَكَلَّمُ فِي الصَّلاَةِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَلِّمُ أَحَدُنَا صَاحِبَهُ بِحَاجَتِهِ، حَتَّى نَزَلَتْ: {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ، وَالصَّلاَةِ الوُسْطَى، وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} [البقرة: 238] «فَأُمِرْنَا بِالسُّكُوتِ وَنُهِينَا عَنِ الْكَلَامِ ”  صحيح البخاري

ஸைத் பின் அர்கம் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளார் காலத்தில் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம், எங்களில் ஒருவர் தன் தேவையை தன் சகோதரனுடன் பேசிக்கொள்வர். ‘தொழுகையில் அல்லாஹ்வுக்காக பணிந்தவர்களாக இருங்கள்’ (2:238) என்ற வசனம் இறங்கியபோது, அமைதியாக இருக்குமாறு ஏவப்பட்டு, பேசுவதைத் தடுக்கப்பட்டோம்.  (புஹாரி: 1200,4534, முஸ்லிம்)

 عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الصَّلاَةِ، فَيَرُدُّ عَلَيْنَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ سَلَّمْنَا عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْنَا، وَقَالَ: «إِنَّ فِي الصَّلاَةِ شُغْلًا» صحيح البخاري

அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாருக்கு, அவர்கள் தொழுகையில் இருக்கும் போது சலாம் சொல்பவர்களாக இருந்தோம், அவர்கள் பதிலும் சொல்வார்கள். நாங்கள் நஜாஷி மன்னரிடமிருந்து திரும்பிவந்த பிறகு சலாம் சொன்னபோது பதில் அளிக்கவில்லை. காரணம் கேட்கப்பட்டபோது, ‘தொழுகைக்கென்று வேலை இருக்கிறது.’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 1199, முஸ்லிம்)

தொழுகையில் சலாம் சொல்லப்பட்டால் கையினால் சைக்கினை செய்தல்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَسْجِدَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ مَسْجِدَ قُبَاءَ يُصَلِّي فِيهِ فَدَخَلَتْ عَلَيْهِ رِجَالُ الْأَنْصَارِ يُسَلِّمُونَ عَلَيْهِ، وَدَخَلَ مَعَهُ صُهَيْبٌ فَسَأَلْتُ صُهَيْبًا: كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْنَعُ إِذَا سُلِّمَ عَلَيْهِ؟، قَالَ: «يُشِيرُ بِيَدِهِ» مسند أحمد

அப்துல்லாஹிப்னு உமர் (ரழி) அவர்கள், சுஹைப் (ரழி) அவர்களிடம், நபிகளாருக்கு தொழுகையில் ஸலாம் சொல்லப்பட்டால் எப்படி செய்வார்கள்? என்று கேட்டபோது, ‘கையினால் சைக்கினை செவார்கள்.’ என்று பதிலளித்ததாக கூறினார்கள்.  (அஹ்மத்:4568)

அபூதாவுத்: 927, திர்மிதீ போன்ற கிதாப்களில் பிலால் (ரழி) அவர்களிடம் கேட்டதாகவும், ஜாபிர் (ரழி) அவர்களும் இப்படி அறிவித்ததாக நசாஇ: 1189 லும் பதியப்பட்டுள்ளது.

தொழுகையில் இருக்கும் போது யாராவது பேசினால் கையால் சைகை செய்து தடுக்கலாம்.

فَقَالَتْ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْهَا، ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا حِينَ صَلَّى العَصْرَ، ثُمَّ دَخَلَ عَلَيَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ، فَأَرْسَلْتُ إِلَيْهِ الجَارِيَةَ، فَقُلْتُ: قُومِي بِجَنْبِهِ فَقُولِي لَهُ: تَقُولُ لَكَ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ، سَمِعْتُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ، وَأَرَاكَ تُصَلِّيهِمَا، فَإِنْ أَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخِرِي عَنْهُ، فَفَعَلَتِ الجَارِيَةُ، فَأَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخَرَتْ عَنْهُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ، سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، وَإِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ القَيْسِ، فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ»  صحيح البخاري

உம்மு ஸலமா(ரழி) அவர்கள் கூறும் போது; நபி(ஸல்) அவர்கள் அசருக்குப் பின் தொழுவதை தடை செய்ததை கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதால் இரண்டு ரக்அத்கள் தொழுததை  பார்த் திருக்கிறேன்.(ஒரு நாள்) அசர் தொழுதுவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி, ‘நீ அவர்களுக்கு அருகில் சென்று இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே? என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி(ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி(ஸல்) அவர்கள், ‘அபூ உமய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை; அத்தொழுகையை இந்த இரண்டு ரக்அத்களாகும்”  என விடையளித்தார்கள். என கூறினார்கள்.   (புஹாரி: 1233, முஸ்லிம்)

தொழுகையில் திரும்பிப் பார்த்தல். பொதுவாக அது தடுக்கப்பட்டிருந்தாலும், தேவைக்கு திரும்பிப் பார்க்கலாம்.

عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ العَبْدِ»  صحيح البخاري

ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்:  தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். ‘ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் திருடிச்  செல்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 751,3291)

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ …….. قَالَ: «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ، مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ، فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ التُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ» صحيح البخاري

சஹ்ல் பின் ஸஃத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள்;……….. பிறகு மக்களை நோக்கி; ‘நீங்கள் ஏன் அதிகம் கையை தட்டினீர்கள், தொழுகையில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், ‘சுப்ஹானால்லாஹ்’ என்று சொல்லட்டும், அப்படி சொன்னால் இமாம் திரும்பிப் பார்ப்பார். கை தட்டுவது பெண்களுக்குறியதே.’ என்று கூறினார்கள்.  (புஹாரி:684, முஸ்லிம்)

தொழுகையில் அசைவு

தேவைக்காக கைகளை அசைப்பது தொழுகையில் பாதிப்பை ஏற்படுத்தாது. உதாரணமாக சொரிதல், விழுந்த தொப்பி, சல்லி போன்றவற்றை எடுத்தல், ஸப்பை சரிசெய்வதற்காக ஒருவரை இழுத்து எடுத்தல், போன் போன்றவற்றை ஓப்செய்ய மறந்திருந்தால் அது ரீங்காரம் செய்யும்போது ஓப்செய்தல், தீங்குசெய்யும் உயிரினத்தைக் கொள்வது போன்ற விடயங்களைக் குறிப்பிட முடியும்.

عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلِأَبِي العَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا» صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் அவர்களின் மகள் உமாமா அவர்களை சுமந்தவர்களாக தொழுவார்கள், ருகூஃ, ஸுஜூத் செய்தால் கீழே வைத்துவிட்டு, நிலைக்கு வரும்போது தூக்கிக் கொள்வார்கள். (புஹாரி:516,5996, முஸ்லிம்)

 عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: «كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ، فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا»، قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ.    صحيح البخاري

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது”   (புஹாரி: 382, முஸ்லிம்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شِدَّةِ الحَرِّ، فَإِذَا لَمْ يَسْتَطِعْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ وَجْهَهُ مِنَ الأَرْضِ بَسَطَ ثَوْبَهُ، فَسَجَدَ عَلَيْهِ» صحيح البخاري

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: கடும் வெப்பத்தில்  நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருப்போம், எங்களில் ஒருவருக்குத் தம் முகத்தைத் தரையில் வைக்க இயலாவிட்டால் தம் ஆடையை விரித்து அதில் ஸஜ்தாச் செய்வார்.  (புஹாரி: 542,1208, முஸ்லிம்)

 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ عِفْرِيتًا مِنَ الجِنِّ تَفَلَّتَ البَارِحَةَ لِيَقْطَعَ عَلَيَّ صَلاَتِي، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَأَخَذْتُهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبُطَهُ عَلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ حَتَّى تَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ دَعْوَةَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي فَرَدَدْتُهُ خَاسِئًا» صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேற்றிரவு ஜின் ஒன்று  என் தொழுகையை முறிக்க முயற்சித்தது. அதை பிடிப்பதற்கு அல்லாஹ் எனக்கு அவகாசம் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான்(அலை) அவர்கள் செய்த, ‘என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!” (திருக்குர்ஆன் 38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதை திருப்பியனுப்பி விட்டேன்.  (புஹாரி:461,3423, முஸ்லிம்)

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اقْتُلُوا الْأَسْوَدَيْنِ فِي الصَّلَاةِ: الْحَيَّةَ، وَالْعَقْرَبَ “

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் இரண்டு கருப்புகளான, பாம்பையும், நட்டுவாக்காளியையும் கொல்லுங்கள்.  (அஹ்மத்: 7379, திர்மிதீ:390)

ஸுஜூத் செய்யும் இடத்திலுள்ள மண்ணை, பொடிக்கட்களை அகற்றுவது தடுக்கப்பட்டதே, ஆனாலும் ஒரு தடவை தட்டிவிட முடியும்.

 مُعَيْقِيبٌ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ، قَالَ: «إِنْ كُنْتَ فَاعِلًا فَوَاحِدَةً» صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் ஸுஜூத் செய்யும் இடத்திலுள்ள மண்ணைத் தட்டிவிடும் மனிதனின் விடயத்தில் ‘அப்படி செய்வதாக இருந்தால் ஒரு தடவை செய்யட்டும்.’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 1207, முஸ்லிம்)

இடுப்பில் கையை ஊண்டிய நிலையில் தொழக் கூடாது.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا» صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் இடுப்பில் இகை வைத்தவராக தொழுவதைத் தடுத்தார்கள்.  (புஹாரி: 1219, 1220, முஸ்லிம்)

உள்ளத்தில் ஊசலாட்டம்;

ஒரு மனிதன் தொழுகையில் முடியுமான அளவு இறை சிந்தனையோடுதான் இருக்கவேண்டும், அவனது சக்தியை மீறி, உள்ளத்தில் ஏற்படும் ஊசலாட்டங்கள், எண்ணங்கள், சந்தேகங்கள் தொழுகையில் பாதிப்பை ஏறபடுத்தாது.

   قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ.   الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.  (23:1,2)

  إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் நின்றால் சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (4:142)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் என் உம்மத்தின் உள்ளங்களில் ஊசலாடுவதை, அவர்கள் அதனை செயற்படுத்தாமலோ, பேசாமலோ இருக்கும் வரை மன்னித்துவிடுகின்றான்.  (புஹாரி: 5269, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு, தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, ‘இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,’ என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்.”  (புஹாரி: 608, முஸ்லிம்)

தொழுகையில் ஷைத்தானின் ஊசலாட்டம் ஏற்பட்டால் அவனை விட்டும் பாதுகாப்பு தேடிவிட்டு, இடது பக்கமாக மூன்று விடுத்தம் துப்பிவிடுதல்.

 أَنَّ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنَّ الشَّيْطَانَ قَدْ حَالَ بَيْنِي وَبَيْنَ صَلَاتِي وَقِرَاءَتِي يَلْبِسُهَا عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خَنْزَبٌ، فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللهِ مِنْهُ، وَاتْفِلْ عَلَى يَسَارِكَ ثَلَاثًا» قَالَ: فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللهُ عَنِّي     صحيح مسلم

உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஷைத்தான் என்னைக் குழப்பிவிட்டான், எனக்கு ஓதல் தடுமாறுகிறது என்று  கூறிய போது, நபியவர்கள்; அவன்தான் ஹின்ஸப் எனப்படும் ஷைத்தான், அவன் குழப்புவதை நீர் உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிவிட்டு, உமது வலது பக்கத்தில் மூன்று விடுத்தம் துப்பிவிடு.’ என்று கூறினார்கள். அவர் கூறினார்; ‘நான் அப்படி செய்தேன், அல்லாஹ் என்னை விட்டும் அவனை போக்கிவிட்டான்.  (முஸ்லிம்)

பாதுகாப்பு தேடும்போது பின்வருமாறு கூறலாம்;

أعوذ بالله من الشيطان الرجيم

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه

தொழுகையில் கொட்டாவி விடுதல்.

தொழும்போது கொட்டாவி வந்தால் அதை வரவிடாமல் தடுப்பது, அல்லது கையை வாய் மீது வைத்து தடுத்துக் கொள்வது நபி வழியாகும்.

கொட்டாவி விட்ட பின் அஊது சொல்வதற்கு எந்த ஆதாரங்களும் வரவில்லை.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ، وَأَمَّا التَّثَاؤُبُ: فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِذَا قَالَ: هَا، ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ ” صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (யர்ஹமுக்கல்லாஹ்’ என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் தடுக்கட்டும். ஏனெனில், யாரேனும்  ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.  (புஹாரி:6223, முஸ்லிம்)

முஸ்லிமின் அறிவிப்பில் ‘விழுங்கிக் கொள்ளட்டும்’ என்றும், திர்மிதியில் (370) தொழுகையில் என்றும் வந்துள்ளது.

திர்மிதியின் அறிவிப்பில் ‘அல் அலாஃ‘ என்பவர் வந்துள்ளார். அவர் தனித்து அறிவிப்பது விமர்சனத்திற்குறியதே.

தொழுகையோடு சார்ந்த இதுபோன்ற ஒழுக்கங்களைப் படித்து தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றி பூரண கூலிகளைப் பெற முயல்வோம்.

                                                                                                                                                                                                                             

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

img0421 img043 img044

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *