பிக்ஹு -20; ஸிபதுஸ் ஸலாஹ் தொழும் விதம்

ஸிபதுஸ்  ஸலாஹ்   தொழும் விதம்

தொழுகையைக் கற்றுக்கொள்வதன் அவசியம்; நபி (ஸல்) அவர்கள் பல வழிகளில் நபித் தோழர்களுக்கு தொழுகையை கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

أَبُو حَازِمٍ، قَالَ: سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ: مِنْ أَيِّ شَيْءٍ المِنْبَرُ؟ فَقَالَ: مَا بَقِيَ بِالنَّاسِ أَعْلَمُ مِنِّي، هُوَ مِنْ أَثْلِ الغَابَةِ عَمِلَهُ فُلاَنٌ مَوْلَى فُلاَنَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «وَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عُمِلَ وَوُضِعَ، فَاسْتَقْبَلَ القِبْلَةَ، كَبَّرَ وَقَامَ النَّاسُ خَلْفَهُ، فَقَرَأَ وَرَكَعَ وَرَكَعَ النَّاسُ، خَلْفَهُ ثُمَّ رَفَعَ رَأْسَهُ ثُمَّ رَجَعَ القَهْقَرَى، فَسَجَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ عَادَ إِلَى المِنْبَرِ، ثُمَّ رَكَعَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ القَهْقَرَى حَتَّى سَجَدَ بِالأَرْضِ»  صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள், மிம்பர் செய்யப்பட்டு அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டதும், அதன் மீது நபி(ஸல்) அவர்கள் நின்று கிப்லாவை முன்னோக்கி (தொழுகைக்கு) தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களெல்லாம் நின்று தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு ருகூவு செய்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் ருகூவு செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸுஜுது செய்தார்கள். பின்னர் மிம்பரின் மீது ஏறி நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள், தொழுவித்து காட்டி முடிந்த பின் மக்களை நோக்கி; ‘மக்களே! நான் இதை செய்து காட்டியது; என்னை நீங்கள் பின்பற்றுவதற்கும், எனது தொழுகை முறையை நீங்கள் கற்றுக்கொள்வதற்குமே.’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 377,917, முஸ்லிம்)

مَالِكٌ، أَتَيْنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا، فَأَخْبَرْنَاهُ، قَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ – وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا – وَصَلُّوا [ص:129] كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ» صحيح البخاري 

மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமா இருக்கட்டும்” என்று கூறினார்கள்.  (புஹாரி: 628,631, முஸ்லிம்)

عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ: جَاءَنَا مَالِكُ بْنُ الحُوَيْرِثِ – فِي مَسْجِدِنَا هَذَا – فَقَالَ: إِنِّي لَأُصَلِّي بِكُمْ وَمَا أُرِيدُ الصَّلاَةَ، أُصَلِّي كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي،»…….  صحيح البخاري

அபூ கிலாபா (ரழி) அவர்கள்  கூறினார்கள்: எங்களுடைய பள்ளி வாசலுக்கு மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரழி) அவர்கள் வந்து, தொழுகை நேரம் இல்லாத ஒரு நேரத்தில்,  ‘இப்போது நான் தொழ விரும்பாவிட்டாலும்) நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்” என்று கூறினார்கள்.  (புஹாரி: 677,802)

நபி (ஸல்) அவர்கள் தொழுத முறை.

நிய்யத் வைத்தல், அல்லாஹ்வுக்காக தொழும் என்னத்தை உள்ளத்தில் நிருத்திக்கொள்ளல்.

عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى،  صحيح البخاري  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது….(புஹாரி: 01)

குறிப்பு; நிய்யத் என்பது உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. அதுதான் எண்ணம் என்பது. அதனால் அது உள்ளத்தில் இருக்கவேண்டியதே, வாயளவில் வரவேண்டிய ஒன்றல்ல. தொழுகைக்கு முன் நபியவர்கள் வாயினால் ‘உசல்லி’ என்று சொன்னதற்கோ, தம் தோழர்களுக்கு  வாயினால் சொல்ல சொன்னதற்கோ எந்த சான்றுகளையும் பார்க்க முடியாது. எனவே அது பித்அத்தாகும். அதனை செய்வது  மார்க்கத்தில் புதுமையை புகுத்திய குற்றத்தில் சேர்க்கும். அல்லாஹ் எம்மை பாதுகாக்கட்டும்.

நிலையில் நிற்றல், அந்நிலையில் ஆரம்ப தக்பீர் கூறி, கையைக் கட்டியவராக நிற்றல்.

நான்கு இடங்களில் தோள்புயம் அல்லது இரு காது வரை  கையை உயர்த்த வேண்டும். தக்பீருடனோ, அதற்கு  முன்னாலோ, பின்னாலோ கையை உயர்த்தலாம்.

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: ” رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ افْتَتَحَ التَّكْبِيرَ فِي الصَّلاَةِ، فَرَفَعَ يَدَيْهِ حِينَ يُكَبِّرُ حَتَّى يَجْعَلَهُمَا حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ فَعَلَ مِثْلَهُ، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَعَلَ مِثْلَهُ، وَقَالَ: رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَلاَ يَفْعَلُ ذَلِكَ حِينَ يَسْجُدُ، وَلاَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ ” صحيح البخاري

عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ “، وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ   صحيح البخاري

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறி, தொழுகையை ஆரம்பித்தார்கள். தக்பீர் கூறும் போது  தம் கைகளைத் தம் தோள் புயங்களுக்கு நேராக உயர்த்தினார்கள். ருகூவுக்குத் தக்பீர் கூறிய போதும் இவ்வாறு செய்தார்கள். ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறிய போதும் இவ்வாறு செய்தார்கள். ‘ரப்பனா வலகல் ஹம்து’ என்றும் கூறினார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும் போதும் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.  இரண்டாம் ரக்அத் முடித்து எழும்போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். (புஹாரி: 735,738,739, முஸ்லிம்)

 ابْنَ عُمَرَ، قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ، ثُمَّ كَبَّرَ،   صحيح مسلم

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுதால். தனது இரு கைகளையும் தோள் புயத்திட்கு நேராக தூக்கி, பிறகு தக்பீர் சொல்வார்கள். (முஸ்லிம்)

 عَنْ أَبِي قِلَابَةَ، أَنَّهُ رَأَى مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ، «إِذَا صَلَّى كَبَّرَ، ثُمَّ رَفَعَ يَدَيْ     صحيح مسلم

மாலிக் பின் ஹுவைரிஸ் (ரழி) அவர்கள் நபிகளாரின் தொழுகையை விபரிக்கும் போது, தக்பீர் சொல்வார்கள், பிறகு கையை தூக்குவார்கள் என்று வந்துள்ளது.  (முஸ்லிம்)

عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ: «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ   صحيح مسلم

மாலிக் பின் ஹுவைரிஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லும் போது கையை தூக்குவார்கள்.  (முஸ்லிம்)

இடது கையின் மீது வலது கையை வைத்து, நெஞ்சின் மீது அல்லது நெஞ்சிக் குழியின் மீது, அல்லது அதற்கு நெருக்கமாக வைத்தல்.

வலதை வைக்கும் போது, இடது கையின் முழங்கை வரைக்குமோ, மணிக்கட்டு வரைக்குமோ வைக்கலாம்.முழங்கையைத் தாண்டி வைப்பது நபிவழிக்கு உட்பட்டதல்ல.

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ اليَدَ اليُمْنَى عَلَى ذِرَاعِهِ اليُسْرَى فِي الصَّلاَةِ» قَالَ أَبُو حَازِمٍ لاَ أَعْلَمُهُ إِلَّا يَنْمِي ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صحيح البخاري  

ஸஹ்ல் இப்னு ஸஃது(ரழி) அவர்கள் கூறினார்கள்:  தொழும்போது மக்கள் தம் வலக் கையை இடது (முழங்கை) குடங்கை மீது வைக்க வேண்டுமென (நபிகளார் மூலம்) கட்டளையிடப் பட்டிருந்தார்கள்.  (புஹாரி: 740)

وَائِلِ بْنِ حُجْرٍ: أَنَّهُ ” رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَ يَدَيْهِ حِينَ دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ، – وَصَفَ هَمَّامٌ حِيَالَ أُذُنَيْهِ – ثُمَّ الْتَحَفَ بِثَوْبِهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى، فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ أَخْرَجَ يَدَيْهِ مِنَ الثَّوْبِ، ثُمَّ رَفَعَهُمَا، ثُمَّ كَبَّرَ فَرَكَعَ، فَلَمَّا قَالَ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ فَلَمَّا، سَجَدَ سَجَدَ بَيْنَ كَفَّيْهِ ” صحيح مسلم

வாஇல் பின் ஹுஜ்ர் (ரழி) அவர்கள் கண்டதாக கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள், தொழுதால் இருகைகளையும் உயர்த்தி, தக்பீர் சொல்லி, பிறகு ஆடையால் சுத்தி, இடதின் மீது வலதை வைப்பார்கள். ருகூஃ செய்யும் போது ஆடைக்குள் இருந்து வெளியெடுத்து உயர்த்தி, பிறகு தக்பீர் கூறி ருகூஃ செய்வார்கள். ஸமிஅல்லாஹ் சொல்லும் போதும் கையை உயர்த்துவார்கள், சுஜூத் செய்தால் இரண்டு முன்னை கைகளுக்கும் இடையில் சுஜூத் செய்வார்கள்.  (முஸ்லிம்)

وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ، أخْبَرَهُ قَالَ: قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ يُصَلِّي؟ قَالَ: فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى، وَالرُّسْغِ وَالسَّاعِدِ،   مسند أحمد

வாஇல் பின்  ஹுஜ்ர்  (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லி, இரண்டு கைகளும் காதுகளுக்கு நேர்படும் அளவு தூக்கி, பிறகு தனது வலக் கையை இடதின் புறக்கை, மணிக்கட்டு, முன்கையின் மீது வைப்பார்கள்.  (அஹ்மத்: 18870 , அபூதாவுத்:727)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ: حَضَرْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوْ حِينَ نَهَضَ إِلَى الْمَسْجِدِ فَدَخَلَ الْمِحْرَابَ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ بِالتَّكْبِيرِ، ثُمَّ وَضَعَ يَمِينَهُ عَلَى يُسْرَاهُ عَلَى صَدْرِهِ ” السنن الكبرى للبيهقي

நெஞ்சில் கையை வைத்ததாக ‘தப்ரானியில்‘ வரும் வாஇல் (ரழி) அவர்களின் செய்தி பலவீனமானதாகும். அதில் வரும் ‘சயீத் பின் ஜப்பார்‘ என்பவர் பலவீனமானவர், அவரது தாயார் யார் என்று அறியப்படாத ‘மஜ்ஹூலாக‘ இருக்கின்றார்’.

479 – نا أَبُو مُوسَى، نا مُؤَمَّلٌ، نا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ: «صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى عَلَى صَدْرِهِ»   صحيح ابن خزيمة

அடுத்து இப்னு குசைமாவில் பதிவாகியுள்ள அறிவிப்பாளர் தொடரில் ‘முஅம்மல்‘ என்பவர் ‘முன்கர், நிராகரிக்கப்பட்டவர்‘ என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு, மிகவும் பலவீனமானவராக இருக்கிறார்.

 عَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ: ” رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ، وَرَأَيْتُهُ، قَالَ، يَضَعُ هَذِهِ عَلَى صَدْرِهِ ”  مسند أحمد

கபிஸா அவர்கள் தந்தை தொட்டும் அறிவிக்கும் செய்தி; நபி (ஸல்) அவர்கள் நெஞ்சின் மீது கையை வைப்பவர்களாக இருந்தார்கள். என்று அஹ்மதில் பதிவாகியுள்ளது. அதுவும் பலவீனமாகும். ஏனெனில் கபீசா என்பவர் யார் என்று அறியப்படாத ‘மஜ்ஹூலாக‘ இருக்கின்றார்.

அடுத்து தாவுஸ் அவர்கள் கூற்றும் முர்சலாக பதியப்பட்டுள்ளது, அதுவும் முர்ஸல் என்ற அடிப்படையில் பலவீனமானதே.

அலி (ரழி) அவர்களைத் தொட்டு வரும் செய்தியும் பலவீனமானதே.

எனவே நெஜ்சில் கை வைப்பது சம்பந்தமாக சஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை.

கபீசா அவர்களது ஹதீசை சஹீஹ் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். அனால் அது பலமான கருத்தல்ல.

756 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ زِيَادِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «مِنَ السُّنَّةِ وَضْعُ الْكَفِّ عَلَى الْكَفِّ فِي الصَّلَاةِ تَحْتَ السُّرَّةِ»  سنن أبي داود

‘தொப்புளுக்கு கீலால் கையை வைப்பது’ நபி வழி என்று அலி (ரழி) கூறியதாக அபூதாவுதில் பதிவாகியுள்ள செய்தி மிகவும் பலவீனமானதாகும். அதில் அறிவிப்பாளாராக வரும் ‘அப்துர் ரஹ்மான் அல் அப்ரீகீ; என்பவர் யார் என்று அறியப்படாத ‘மஜ்ஹூல்’ ‘முன்கர், நிராகரிக்கப்பட்டவர்’ என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.

பார்வையை கீழ் நோக்கி வைத்திருத்தல், மேல் நோக்கி பார்வையை செலுத்தாதிருத்தல்.

 أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُمْ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ أَقْوَامٍ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ فِي صَلاَتِهِمْ»، فَاشْتَدَّ قَوْلُهُ فِي ذَلِكَ، حَتَّى قَالَ: «لَيَنْتَهُنَّ عَنْ ذَلِكَ أَوْ لَتُخْطَفَنَّ أَبْصَارُهُمْ»  صحيح البخاري  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தொழுகையில்  தங்கள் பார்வைகளை வானத்தை  நோக்கி  உயர்த்துகிறவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் பார்வை பறிக்கப்பட்டுவிடும்.”  (புஹாரி: 750, முஸ்லிம்)

عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ: قُلْنَا لِخَبَّابٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟، قَالَ: نَعَمْ، قُلْنَا: بِمَ كُنْتُمْ تَعْرِفُونَ ذَاكَ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»  صحيح البخاري

அபூ மஃமர் கூறினார்கள்:  ‘நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?’ என்று கப்பாப்(ரழி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ என்றார். ‘நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப்(ரழி) அவர்கள் பதிலளித்தார்கள்.  (புஹாரி: 746, 777)

சுஜூத்துடைய இடத்தை நோக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு சஹீஹான ஹதீஸ் வரவில்லை.

 أَنَّ عَائِشَةَ كَانَتْ تَقُولُ  «دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَعْبَةَ مَا خَلَفَ بَصَرُهُ مَوْضِعَ سُجُودِهِ حَتَّى خَرَجَ مِنْهَا»  رواه الحاكم

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள் நுழைந்தபோது தொழுதார்கள், அவர்களது பார்வை சுஜூதின் இடத்தை தாண்டவில்லை.  (அல்ஹாகிம்:1761)

இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.  உமர் அத்தின்நீசி என்பவர் சுஹைர் அஷ்ஷாமியிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானது.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيْنَ أَضَعُ بَصَرِي فِي الصَّلَاةِ؟ قَالَ: ” عِنْدَ مَوْضِعِ سُجُودِكَ يَا أَنَسُ ”     رواه الحاكم والبيهقي. السنن الكبرى للبيهقي

அனஸ் (ரழி) அவர்கள் நபிகளாரிடம்; அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எனது பார்வையை எங்கு வைப்பது? என்று கேட்டபோது , நபியவர்கள்; ‘சுஜூதுடைய இடத்தில் வைத்துக் கொள்.’ என்று கூறினார்கள்.

இதவும் பலவீனமானது,அதில் வரு அறிவிப்பாளரான ‘உலைலா‘ என்பவர் யார் என்று அறியப்படாத ‘மஜ்ஹூல்’ ஆவார்.

பின்னோக்கி பார்ப்பதும் நல்லதல்ல, தேவைக்கு பார்க்கலாம்.

 عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الِالْتِفَاتِ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ العَبْدِ»  صحيح البخاري

ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்:  தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். ‘ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் திருடிச்  செல்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 751,3291)

 فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ، مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ، فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ التُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ»  صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஒருவருக்கு அவரின் (இமாமின்)  தொழுகையில் சந்தேகம் ஏற்படுமானால் அவர் சுப்ஹானல்லாஹ் என்று கூறட்டும். அவ்வாறு தஸ்பிஹ் சொல்லும்போது சொன்னவர் பக்கம் (இமாம்) திரும்பிப் பார்க்க வேண்டும். கை தட்டுவது பெண்களுக்குத் தான்”   (புஹாரி:684)

ருகூஉ செய்தல்

முன்னர் சொல்லப்பட்டது போன்று இரு கைகளையும் உயர்த்தி, இடுப்பை வளைத்து, முழங்காலைப் பிடித்து இருத்தல்.

அதில் தலையை உயர்த்தாமலும், தாழ்த்தாமலும் முதுகுக்கு நேராக வைத்தல் வேண்டும். இடுப்பிலிருந்து தலை வரை நேராக இருப்பதோடு, முதுகை வில்போன்று வளைக்கவும் கூடாது.

கைகளை விழாவோடு சேர்க்காமலும்,விரல்களை நெருக்கி வைக்காமலும், உள்ளங்கையால் முழங்காலைப் பிடித்தவாறு இருத்தல்.

ருகூஇல் உறுப்புகள் அமைதியடையும் வரை தாமதித்து நிற்றல்.

مُصْعَبَ بْنَ سَعْدٍ، يَقُولُ: صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ، فَنَهَانِي أَبِي، وَقَالَ: كُنَّا نَفْعَلُهُ، «فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ»  صحيح البخاري

முஸ்அப் இப்னு ஸஃது அவர்கள் கூறினார்கள்:  நான் என்னுடைய தந்தையின் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின்போது என்னுடைய இரண்டு கைகளையும் சேர்த்து,  இரண்டு தொடைகளுக்கும் இடையில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து, ‘நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதைவிட்டும் நாங்கள் (நபிகளார் மூலம்)  தடுக்கப்பட்டு எங்கள் கைகைள மூட்டுக்கால்களின் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம்’ என்றார்.  (புஹாரி: 790, முஸ்லிம்)

فَقَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ القُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا»  صحيح البخاري

தொழுகையில் தவறு விட்டவருக்கு நபியவர்கள் சொல்லிக்கொடுக்கும் போது; “நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும்! பின்னர் அமைதியாக இருக்கும் அளவு  ருகூஃ  செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக! பின்னர் அமைதியாக இருக்கும் அளவு ஸஜ்தா செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து அமைதியாக இருக்கும் அளவு  உட்காருவீராக! இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக!   (புஹாரி: 757, முஸ்லிம்)

أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ:  وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ، ثُمَّ هَصَرَ ظَهْرَهُ      صحيح البخاري    

அபூ ஹுமைத் அஸ்ஸாஇதி (ரழி) அவர்கள் கூறினார்கள்:  நபி (ஸல்) அவர்கள்  ருகூஃ  செய்யும்போது இரண்டு கைகளையும் முட்டுக் கால்களின் மீது நன்றாக வைப்பார்கள், பின்னர் தம் முதுகை நன்றாக நேராக்குவார்கள்.  (புஹாரி: 828)

عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ، وَلَمْ يُصَوِّبْهُ وَلَكِنْ بَيْنَ ذَلِكَ، صحيح مسلم

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ருகூஃ செய்தால் தலையை பணிக்கவும் மாட்டார்கள், உயர்த்தவும் மாட்டார்கள், மாறாக இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் (நேராக) வைப்பார்கள்.  (முஸ்லிம்)

عُقْبَةَ بْنَ عَمْرٍو الْأَنْصَارِيَّ أَبَا مَسْعُودٍ، فَقُلْنَا لَهُ: حَدِّثْنَا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ” فَقَامَ بَيْنَ أَيْدِينَا فِي الْمَسْجِدِ، فَكَبَّرَ، فَلَمَّا رَكَعَ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَجَعَلَ أَصَابِعَهُ أَسْفَلَ مِنْ ذَلِكَ، وَجَافَى بَيْنَ مِرْفَقَيْهِ حَتَّى اسْتَقَرَّ كُلُّ شَيْءٍ مِنْهُ،    سنن أبي داود

அபூ மஸ்ஊத் (ரழி) ருகூஃ செய்யும் போது தனது இரு கைகளையும் தன முழங்காலின் மீது வைத்து, விரல்களை பின்புறத்தால் விரித்து வைத்தார்கள், முழங்கைகளை (விழாவை விட்டும்) தூரமாக்கினார்கள். பிறகு; இப்படியே நபிகளார் செய்வதைக் கண்டோம் என கூறினார்கள். (அஹ்மத்:17081, அபூதாவுத்: 863)

ருகூஇலிருந்து நிலைக்கு வருதல். (இஃதிதால்)

நிலைக்கு வரும்போது’ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’என்று கூறி, முன்னர் சொல்லப்பட்டது போன்று இரு கைகளையும் உயர்த்தி, நிலைக்கு வருதல். அதிலும் உறுப்புக்கள் அமைதி அடையும் வரை கையை தொங்கவிட்டவாறு அமைதியாக இருத்தால். கையை ஆடிக்கொண்டிருப்பது நபிவழிக்கு முரணாகும்.

فَقَالَ أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ: أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَيْتُهُ إِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ   صحيح البخاري

அபூ ஹுமைத் அஸ்ஸாஇதி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள்   (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும்போது ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிலையாக நிற்பார்கள்.  (புஹாரி: 828)

عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ: «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ» فَقَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ» فَعَلَ مِثْلَ ذَلِكَ           صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் ருகூஇலிருந்து தலையை தூக்கினால், ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறி, இரு கைகளையும் உயர்த்துவார்கள்.  (முஸ்லிம்)

 عَنْ ثَابِتٍ، قَالَ: كَانَ أَنَسٌ يَنْعَتُ لَنَا صَلاَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ” فَكَانَ يُصَلِّي وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، قَامَ حَتَّى نَقُولَ: قَدْ نَسِيَ      صحيح البخاري

ஸாபித் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அனஸ்(ரழி) அவர்கள் எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது காட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் சொல்லும் அளவுக்கு நின்றார்கள்.  (புஹாரி: 800,821,  முஸ்லிம்)

குறிப்பு: சில அறிஞர்கள் ருகூஇலிருந்து தலையை தூக்கியதும் இடது கை மீது வலது கையை வைத்து நிற்க வேண்டும் என, ”அபூ ஹுமைத் அவர்களின் ஹதீசையும், ஒவ்வொரு இடத்திலும் கை எங்கு இருக்க வேண்டும் எனக் கூறிய நபிகளார், இந்நிலையில் கையை எங்கு வைக்க வேண்டும் என்று கூறவில்லை என்ற வாதத்தையும் வைத்து” கூறுகின்றனர். அக்கூற்று வழிகேடு என்று கூற முடியாது. அல்லாஹ்வே அறிந்தவன்.

மேலும் சிலர் கையை ஆட்டிய வண்ணமும், மற்றும் சிலர் இரு கைகளையும் கோர்வை செய்த வண்ணமும் இருப்பார், இன்னும் சிலர் தாமதிக்காமலே சுஜூதுக்கு செல்கின்றனர். அவை நபிவழிக்கு மாற்றமானதே.

சுஜூத் செய்தல்

தக்பீர் சொல்லி கையை நிலத்தில் வைத்து எழு உறுப்புக்கள் பட, நெற்றியை கீழே வைத்து சுஜூது செய்தல். கைகளை நாய் படுப்பது போன்று கீழே வைக்கவோ, விழாவோடு சேர்க்கவோ கூடாது. கை விரல்களை சுருக்கியோ, விரித்தோ வைக்காமல் சாதாரண நிலையில் வைத்து, கால் விரல்கள் கிப்லாவை நோக்கிய நிலையில் கால்களை நட்டி வைத்து, அதில் அமைதியாக இருத்தல்.

عَنِ ابْنِ عَبَّاسٍ، ” أُمِرَ النَّبِيُّ صلّى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا: الجَبْهَةِ، وَأَشَارَ بِيَدِهِ عَلَى  وَأَطْرَافِ القَدَمَيْنِ أَنْفِهِ وَاليَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَالرِّجْلَيْنِ ”   صحيح البخاري

இப்னு அப்பாஸ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் “நெற்றியைக் குறிப்பிடும்போது தம் கையால் மூக்கை அடையாளம் காட்டிய நிலையில் நெற்றி, இரண்டு கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்.. ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன். என்று கூறினார்கள்.  (புஹாரி:809,810,812, முஸ்லிம்)

أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ: أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَيْتُهُ إِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلاَ قَابِضِهِمَا، وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ القِبْلَةَ،   صحيح البخاري

அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரழி) அவர்கள் கூறினார்கள்; ‘நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நான் மிகவும் அறிந்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், ஸஜ்தா செய்யும்போது தம் கைகளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தம் கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள்.  (புஹாரி: 828)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلَا يَبْرُكْ كَمَا يَبْرُكُ الْبَعِيرُ، وَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ»     سنن أبي داود

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் சுஜூத் செய்தால் ஒட்டகம் படுப்பது போன்று படுக்க வேண்டாம், மாறாக முழங்காலை வைக்க முன் இரு கைகளையும் வைக்கட்டும்.’  (அபூதாவுத்: 840, திர்மிதீ: 269)

عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ ” يَضَعُ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ، وَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ ذَلِكَ ”    صحيح ابن خزيمة

நாபிஃ (ரழி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் (ரழி) அவர்கள் முழங்காலை வைப்பதற்கு முன்னர் இரு கைகளையும் வைப்பார்கள். நபிகளார் அப்படி செய்ததாகவும் கூறுவார்கள்.  (புஹாரி குறிப்பு செய்தி, இப்னு குஸைமா:627)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكَلْبِ»   صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஸஜ்தாவில் நேர்த்தியைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் படுப்பது போல் கைகளை விரித்துவைக்க வேண்டாம். (புஹாரி:822, முஸ்லிம்)

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ»     صحيح البخاري

நபி(ஸல்) அவர்கள் தொழும்போது (ஸஜ்தாவில்) அவர்களின் அக்குள் வெண்மை தென்படும் அளவுக்கு இரண்டு கைகளுக்கு இடையிலும்  விரிப்பார்கள். (புஹாரி: 807, முஸ்லிம்)

 عَنِ الْبَرَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَجَدْتَ، فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ»        صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; நீ ஸுஜுத் செய்தால் உள்ளங்கையை கீழே வைத்து, முழங்கையை தூக்கிவிடு.  (முஸ்லிம்)

عَنْ مَيْمُونَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ لَوْ شَاءَتْ بَهْمَةٌ أَنْ تَمُرَّ بَيْنَ يَدَيْهِ لَمَرَّتْ»     صحيح مسلم

மைமூனா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ஸுஜுத் செய்தால், ஒரு ஆட்டுக் குட்டி நினைத்தால் அவர்களின் கைகளுக்கிடையால் தாண்டிவிடும்(அளவுக்கு கையை விரித்து வைப்பார்கள்). (முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ، قَالَتْ: فَقَدْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ     صحيح مسلم

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு நாள் இரவு நபிகளாரை படுக்கையில் காணவில்லை, அவர்களை நான் தேடிய போது எனது கை அவர்களின் காலின் உட்பகுதியில் பட்டது, அவர்கள் ஸுஜுதிலே இருந்தார்கள், அவ்விரண்டு (கால்களு)ம் நட்டிவைக்கப்பட்டிருந்தன.  (முஸ்லிம்)

 وَائِلِ بْنِ حُجْرٍ: أَنَّهُ ” رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَ يَدَيْهِ حِينَ دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ……. فَلَمَّا، سَجَدَ سَجَدَ بَيْنَ كَفَّيْهِ ”     صحيح مسلم

வாஇல் பின் ஹுஜ்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸுஜுத் செய்தால் இரு மனிக்கட்டுகளுக்கும் இடையில் ஸுஜுத் செய்வார்கள்.  (முஸ்லிம்)

சுஜூதில் இருக்கும் போது இரு கால்களின் குதிப்பகுதியை சேர்த்து வைப்பதும் நபிவழிக்கு உற்பட்டதே.

عَائِشَةُ زَوْجِ النَّبِيِّ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ مَعِي عَلَى فِرَاشِي، فَوَجَدْتُهُ سَاجِدًا رَاصًّا عَقِبَيْهِ مُسْتَقْبِلًا بِأَطْرَافِ أَصَابِعِهِ الْقِبْلَةَ…..( صحيح ابن خزيمة)

ஆயிஷா (ரழி) அவர்கள் நபிகளாரின் சுஜூதின் நிலையைப் பற்றி கூறும் போது; தனது விரல் ஓரங்களால் கிப்லாவை முன்னோக்கி, குதிக்கால்களை சேர்த்த நிலையில் சுஜூதில் இருந்தார்கள்.  (இப்னு குஸைமா: 654 ,இப்னு ஹிப்பான்)

عَنْ أَبِي حُمَيْدٍ، بِهَذَا الْحَدِيثِ قَالَ: «وَإِذَا سَجَدَ فَرَّجَ بَيْنَ فَخِذَيْهِ غَيْرَ حَامِلٍ بَطْنَهُ عَلَى شَيْءٍ مِنْ فَخِذَيْهِ»    سنن أبي داود

அபூ ஹுமைத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸுஜுத் செய்தால் தொடைகளை பிரித்து வைப்பார்கள், வயிற்ரை தொடையின் மீது சுமக்கமாட்டார்கள். (அபூதாவுத்: 735)

இதில் வரும் அறிவிப்பாளரான ‘அப்துல்லாஹிப்னு ஈஸா‘ அவர்கள் ‘மஜ்ஹூல், முன்கர்‘ என்று விமர்சிக்கபட்டுள்ளார், எனவே இச்செய்தி பலவீனமாகும்.

عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ، وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ»،     سنن أبي داود

வாஇல் பின் ஹுஜ்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபி (ஸல்) அவர்கள் ஸுஜுத் செய்தால் இரு கைகளை வைப்பதற்கு முன் முழங்காலை வைப்பார்கள், எழும்பினால் முழங்காலுக்கு முன் கையை தூக்குவார்கள். (அபூ தாவுத்; 838, திர்மிதீ: 268)

இதுவும் பலவீனமானதாகும். இதில் வரும் அறிவிப்பாளரான ‘ஷரீக்’ என்பவர் ஆசிமிடமிருந்து இதனை அறிவித்துள்ளார், ஏனைய மாணவர்கள் யாரும் இந்தப் பகுதியை அறிவிக்கவில்லை. அவரைப் பற்றிய விமர்சனத்தில் ‘சில நேரம் தவறு விடுவார்‘ என்பது மிக முக்கியமானது. எனவே நம்பகமான, உறுதியான பல மாணவர்கள் சொல்லாத ஒரு செய்தியை பதிகின்றார்.

நடு இருப்பு இருத்தல்,

இரண்டு ஸுஜுதுகளுக்குமிடையில்  ஒரு அமர்வு இருக்கவேண்டும். இடது காலில் அமர்ந்து, வலது காலை நட்டிவைத்தல். அந்த அமர்விலும் ருகூஃ, ஸுஜுத் போன்று தாமதித்து இருத்தல் வேண்டும்.

عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ رُكُوعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسُجُودُهُ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَبَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنَ السَّوَاءِ»      صحيح البخاري

பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்களின் ருகூவும் ஸுஜூதும் இஃதிதால் நிலையும், இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடைப் பட்ட நேரமும் ஏறக்குறைய ஒரே அளவாக இருந்தன.   (புஹாரி:801,820)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: ” كَانَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامَ حَتَّى يَقُولَ القَائِلُ: قَدْ نَسِيَ، وَبَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى يَقُولَ القَائِلُ: قَدْ نَسِيَ ”   صحيح البخاري

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நினைக்குமளவு அமர்ந்திருப்பார்கள்.  (புஹாரி: 821, முஸ்லிம்)

عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ خَوَّى بِيَدَيْهِ – يَعْنِي جَنَّحَ – حَتَّى يُرَى وَضَحُ إِبْطَيْهِ مِنْ وَرَائِهِ. وَإِذَا قَعَدَ اطْمَأَنَّ عَلَى فَخِذِهِ الْيُسْرَى»     صحيح مسلم

மைமூனா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஸுஜுதிலிருந்து எழுந்து அமர்ந்தால், இடது தொடையின் மீது அமைதியாக இருப்பார்கள். (முஸ்லிம்)

இரண்டாவது ஸுஜுதையும்  முதலாவதைப் போன்றே செய்தல்.

இரண்டாம், நான்காம் ரக்அத்துகளுக்கு எழும்பும் பொது ஒரு சிறிய அமர்வு இருக்க வேண்டும். எழும்பும்போது கையை உண்டியவாறு எழவேண்டும்.

காலை உண்டுவதட்கு வரும் ஹதீஸ் பலவீனமானது என்று ஏற்கனவே பார்த்தோம்.

مَالِكُ بْنُ الحُوَيْرِثِ اللَّيْثِيُّ، أَنَّهُ «رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، فَإِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا»    صحيح البخاري

மாலிக் இப்னுல் ஹுவைரிஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுததைப் பார்த்து,பின்வருமாறு கூறினார்கள்;  அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது அமராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழமாட்டார்கள்.  (புஹாரி: 823)

 مَالِكُ بْنُ الحُوَيْرِثِ  فَالَ: كَانَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  إِذَا رَفَعَ رَأْسَهُ عَنِ السَّجْدَةِ الثَّانِيَةِ جَلَسَ وَاعْتَمَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ قَامَ»     صحيح البخاري

மாலிக் இப்னு ல்ஹுவைரிஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுததைப் பற்றி கூறும் பொது; ஸுஜுதிலிருந்து  தலையை தூக்கினால்  அமர்வார்கள், பூமியில் ஊண்டி, பிறகு நிலைக்கு வருவார்கள். என்று கூறினார்கள்.(புஹாரி: 824)

தஷஹ்ஹுத் அத்தஹிய்யாத்தில் அமருதல்

இரண்டாவது ரக்அத்திலும், கடைசி ரக்அத்திலும் அமரவேண்டும்.

இரண்டாவது ரக்அத்தில் அமரும் போது, இடது காலை விரித்து, அதில் பித்தட்டை வைத்து, வலது காலை நட்டி வைத்தல் வேண்டும்.

கடைசி ரக்அத்தில் அமரும் போது, வலது காலை நட்டி, இடதை வலது காலுக்கு கீலாலோ, அல்லது வலது காலை விரித்து வைத்து, இடதை தொடைக்கும் முன் காலுக்கும் இடையிலே வைத்தோ பித்தட்டை பூமியில் வைத்தல் வேண்டும்.

 أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ: أَنَا كُنْتُ أَحْفَظَكُمْ لِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَيْتُهُ إِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ اليُسْرَى، وَنَصَبَ اليُمْنَى، وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ قَدَّمَ رِجْلَهُ اليُسْرَى، وَنَصَبَ الأُخْرَى وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ      صحيح البخاري

அபூ ஹுமைத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், இரண்டாவது  ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் உட்காரும்போது இடது காலை (வலதுக்கு கீலால்) கொண்டு வந்து, வலது காலை நாட்டி வைத்து தம் பித்தட்டு தரையில் படியுமாறு அமருவார்கள்.’  (புஹாரி: 828, முஸ்லிம்)

عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدَ فِي الصَّلَاةِ، جَعَلَ قَدَمَهُ الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ، وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى، وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَأَشَارَ بِإِصْبَعِهِ»    صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் அமர்ந்தால்,இடது காலை தனது (வலது காலின்) தொடைக்கும், முன்காலுக்கும் இடையில் வைத்து, வலது காலை விரித்துவிடுவார்கள், தனது இடது கையை இடது தொடையின் மீதும், வலது கையை வலது தொடையின் மீது வைத்து, ஆள்காட்டி விரலால் சைக்கினை செய்வார்கள்.  (முஸ்லிம்)

வலது கையை வலது தொடையின் மீது விரல்களை விரித்த நிலையிலோ, மடக்கிய நிலையிலோ அல்லது சிறு விரலையும் மோதிர விரலையும் மடக்கி, பெருவிரலையும் நடுவிரலையும் சேர்த்து வளையமிட்ட நிலையிலோ, அல்லது மூன்று விரலை மடக்கி, பெருவிரலால் ஆள்காட்டி விரலின் அடிப்பகுதியை தொட்ட நிலையிலோ வைத்து ஆள்காட்டி விரலால் சைக்கினை செய்த வண்ணமோ, ஆட்டிய வண்ணமோ வைக்கலாம்.

இடது கையை இடது தொடையின் மீதோ, முழங்காலின் மீதோ அல்லது முழங்காலை பிடித்தவரோ விரித்து வைக்க வேண்டும்.

عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدَ يَدْعُو، وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَيَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى، وَأَشَارَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ، وَوَضَعَ إِبْهَامَهُ عَلَى إِصْبَعِهِ الْوُسْطَى، وَيُلْقِمُ كَفَّهُ الْيُسْرَى رُكْبَتَهُ»    صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்தால், தனது வலது கையை வலது தொடையின் மீதும்,இடது கையை இடது தொடையின்   மீதும் வைத்து, ஏசும் விரலால் சைக்கினை செய்வார்கள், பெருவிரலை நடுவிரலில் வைப்பார்கள். இடது கையால் முழங்காலைப் பிடித்துக் கொள்வார்கள். (முஸ்லிம்)

عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ، فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ بَاسِطَهَا عَلَيْهَا»     صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் அமர்ந்தால் தனது இரு கைகளையும் இரு முழங்கால் மீதும் வைத்து, வலதுகையின் பெருவிரலுக்கு அடுத்திருக்கும் விரல் உயர்த்தி துஆ ஓதினார்கள். இடது கையோ முழங்காலின் மீது விரித்த நிலையில் இருந்தது.  (முஸ்லிம்)

عَبْدُ اللهِ بْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصَى فِي الصَّلَاةِ، فَلَمَّا انْصَرَفَ نَهَانِي فَقَالَ: اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ، فَقُلْتُ: وَكَيْفَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ؟ قَالَ: «كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا وَأَشَارَ بِإِصْبَعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى»    صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் அமர்ந்தால் வலது கையை வலது தொடையின் மீது வைத்து, அனைத்து விரல்களையும் மடக்கி, பெருவிரலுக்கு அடுத்த விரலால் சைக்கினை செய்வார்கள். இடது கையை இடது தொடையின் மீது வைப்பார்கள். (முஸ்லிம்)

وَائِلَ بْنَ حُجْرٍ قَالَ: قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي؟ فَنَظَرْتُ إِلَيْهِ فَوَصَفَ، قَالَ: «ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى، وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ، وَحَلَّقَ حَلْقَةً، ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا»،

வாஇல் பின் ஹுஜ்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஸுஜுதிலிருந்து) அமர்வுக்கு வந்தால் இடது காலை விரித்து வைத்து, இடது கையை தொடையிலும், முழங்காலிலும் வைப்பார்கள். தன் வலது முழங்கை எல்லையை வலது தொடையின் மீது வைத்தார்கள். பிறகு இரு விரல்களை மடக்கி, (பெருவிரல், நடுவிரளுக்கிடையில்) ஒரு வளையல் இட்டு, பிறகு (ஆள்காட்டி) விரலை உயர்த்தினார்கள். அதன் மூலம் அழைக்கும் நிலையில் அதனை ஆட்டியதைக் கண்டேன்.  (நசாஇ: 1268, இப்னு குஸைமா:714)

عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى، وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِينَ، وَأَشَارَ بِالسَّبَّابَةِ»

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் (அத்தஹிய்யாத்) அமர்ந்தால் தனது இடது கையை இடது முழங்கால் மீது வைப்பார்கள், வலது கையை வலது முழங்கால் மீது வைத்து, ஐம்பத்தி மூன்றைப் போன்று (மூன்று விரல்களை மடக்கி,பெருவிரலால் ஆள்காட்டி விரலின் அடிப்பகுதியைப் பிடித்து) வைத்து, ஏசும் விரலால் சைகை செய்தார்கள். (முஸ்லிம்)

அத்தஹிய்யாத்தில் பார்வையை நீட்டிய விரல் மீது வைக்கவேண்டும்.

عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى، وَأَشَارَ بِالسَّبَّابَةِ لَا يُجَاوِزُ بَصَرُهُ إِشَارَتَهُ      سنن النسائي

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் இருந்தால் ஏசும் விரலால் சைக்கினை செய்வார்கள், அவர்களது பார்வை அந்த சைக்கினையைத் தாண்டாது.  (அஹ்மத்: 2\16099), நசாஇ: 1275)

இந்த அறிவிப்புத் தொடரி ‘முஹம்மத் பின் இஜ்லான்’ என்பவர் மீது சில விமர்சனம் இருந்தாலும், அது அபூ ஹுரைரா போன்றவர்களிடம் அறிவிக்கும் ஹதீஸையே பாதகம் செய்யும்.

நாய் இருப்பது போன்று, முன் காலை நட்டி, கைகளை கீழே வைத்து அமரக்கூடாது. மாறாக குதிக்காலில் அமரலாம்.

وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ، وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى، وَكَانَ يَنْهَى عَنْ عُقْبَةِ الشَّيْطَانِ. وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ، وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ    صحيح مسلم

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு இரண்டு ரக்அத்துகளிலும் (அத்தஹிய்யாத்) அமர்வு இருப்பதாக கூறினார்கள், மேலும் இடது காலை விரித்து, வலது காலை நட்டிவைப்பார்கள். மேலும் ஷைத்தானின் இருக்கையைவிட்டும் தடுப்பார்கள், ஒரு மனிதன் வேட்டைப் பிராணிகள் முழங்கயை  விரிப்பது போன்று விரிப்பத்தையும் தடுத்தார்கள், மேலும் ஸலாத்தைக் கொண்டு தொழுகையை முடிப்பார்கள்.  (முஸ்லிம்)

طَاوُسًا يَقُولُ: قُلْنَا لِابْنِ عَبَّاسٍ فِي الْإِقْعَاءِ عَلَى الْقَدَمَيْنِ، فَقَالَ: «هِيَ السُّنَّةُ»، فَقُلْنَا لَهُ: إِنَّا لَنَرَاهُ جَفَاءً بِالرَّجُلِ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «بَلْ هِيَ سُنَّةُ نَبِيِّكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»  صحيح مسلم

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் இக்ஆஃ எனும் (குதிக்காலில் அமர்வது) பற்றி கேட்கப்பட்டது, அதற்கவர்கள்; ‘அது நபிவழி’ என்று கூறினார்கள். அபோது சிலர் ‘அதை நாங்கள் வெறுப்பாக காணுகிறோம்’ என்று கூறவே, மீண்டும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ‘அது நபிவழி’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)

குறிப்பு: சிலர் அத்தஹிய்யாத்தின் இடையில் ‘லாஇலாஹ’ எனும் போது விரலை நீட்டுகின்றனர், மேலும் சிலர் ‘லாஇலாஹ’ எனும் போது நீட்டி ‘இல்லாலாஹ்’ எனும் போது விட்டுவிடுகின்றனர். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை, எனவே அது பித்அத்தாகும்.

சிலர் முதல் அத்தஹிய்யாத்திலும் கடைசியிலும் ஒரே விதத்தில் வித்தியாசமின்றி அமர்கின்றனர், அது நபிவழிக்கு முரணாகும். அதில் கவனம் செலுத்தவேண்டும்.

ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்தல்.

வலது பக்கமாகவும், இடப் பக்கமாகவும் திரும்பி ‘அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்று கூறுதல். அபோது கன்னம் பின்னால் தென்படும் அளவு திரும்ப வேண்டும்.

 أَنَّ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ قَامَ النِّسَاءُ حِينَ يَقْضِي تَسْلِيمَهُ، وَمَكَثَ يَسِيرًا قَبْلَ أَنْ يَقُومَ»     صحيح البخاري

உம்மு சலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், (தொழுகையிலிருந்து) ஸலாம் கொடுத்தால், ஸலாம் கொடுத்து முடியும் போது பெண்கள் எழும்பிவிடுவார்கள், நபிகளார் சிறிது நேரம் எழும்பாமல் தாமதிப்பார்கள்.  (புஹாரி: 837)

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: «رَمَقْتُ الصَّلَاةَ مَعَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدْتُ قِيَامَهُ فَرَكْعَتَهُ، فَاعْتِدَالَهُ بَعْدَ رُكُوعِهِ، فَسَجْدَتَهُ، فَجَلْسَتَهُ بَيْنَ السَّجْدَتَيْنِ، فَسَجْدَتَهُ، فَجَلْسَتَهُ مَا بَيْنَ التَّسْلِيمِ وَالِانْصِرَافِ، قَرِيبًا مِنَ السَّوَاءِ»     صحيح مسلم

பராஃஇப்னுல் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரின் தொழுகையை நான் உற்றுநோக்கினேன், அவர்களது நிலை, ருகூஃ, இஃதிதால், ஸுஜுத், நாடு இருப்பு, ஸலாத்திற்கும் திரும்பிச் செல்வதற்கும் இடையிலான நேரம் சமமானதாக இருந்தது.  (முஸ்லிம்)

 جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَا: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ، وَأَشَارَ بِيَدِهِ إِلَى الْجَانِبَيْنِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَامَ تُومِئُونَ بِأَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمْسٍ؟ إِنَّمَا يَكْفِي أَحَدَكُمْ أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ ثُمَّ يُسَلِّمُ عَلَى أَخِيهِ مَنْ عَلَى يَمِينِهِ، وَشِمَالِهِ»   صحيح مسلم

ஜாபிர் பின் சமுரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாரோடு தொழுதுவிட்டு, ‘அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்று சலாம் கொடுத்தால் கைகளால் இரு பக்கமும் சைக்கினை செய்வோம். நபியவர்கள், ‘ஏன் நீங்கள் அப்படி செய்கிறீர்கள்?, உங்களில் ஒருவர் தன் கையை தொடையில் வைத்து, பிறகு வலதிலும், இடதிலும் இருப்பவருக்கு சலாம் சொன்னால் போதுமானது’. என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

سَعْدٍ، عَنْ  قَالَ: «كُنْتُ أَرَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ يَسَارِهِ، حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ»     صحيح مسلم

ஸஈத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபிகளார் வலம், இடமாக சலாம் கொடுப்பதைப் பார்த்தேன், அவர்களது கன்னத்தின் வெண்மை தென்படும் அளவு (திரும்பினார்கள்).  (முஸ்லிம்)

முடிந்த அளவு தொழுகை முறையை தொகுத்துள்ளேன். முடிந்த அளவு நபிகளாரின் தொழுகை முறையை ஆதாரத்தோடு படித்து, நடைமுறைப் படுத்தி, தொழுகை மூலம் பூரண கூலியைப் பெற முயல்வோம்.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

                                                                                                                                                                                                             

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

16-1 16-2 16-3 16-4 16-5

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *