பிக்ஹு -17; ஸப்பில் நிற்பதற்கான ஒழுங்குகள்

ஸப்பில் நிற்பதற்கான ஒழுங்குகள்- அணிவகுத்து நிற்றல்.

முதல் ஸப்பின் முக்கியத்துவம்;

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ،    وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا» صحيح البخاري 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்….. (புஹாரி:615, முஸ்லிம்)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي أَصْحَابِهِ تَأَخُّرًا فَقَالَ لَهُمْ: «تَقَدَّمُوا فَأْتَمُّوا بِي، وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ، لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللهُ»صحيح مسلم 

அபூ ஸஈத்  அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களிடம் (முதல் ஸப்பில் நிற்கும் விடயத்தில்) பின்னடைவைக் கண்ட போது, அவர்களை நோக்கி ‘முன்னே சென்று, என்னைப் பின்பற்றுங்கள், உங்களுக்கு பின்னுள்ளவர்கள் உங்களைப் பின்பற்றுவார்கள். எந்த சமூகம் பின்வாங்குகின்றார்களோ, அவர்களை அல்லாஹ்வும் பிற்படுத்துகின்றான்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்)

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: قَالَ: «أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا؟» فَقُلْنَا يَا رَسُولَ اللهِ، وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا؟ قَالَ: «يُتِمُّونَ الصُّفُوفَ الْأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ»   صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களைப் பார்த்து; ‘வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைப்போன்று நீங்கள் அணிவகுத்து நிற்கக்கூடாதா!’ என்று கூறிய போது, ; அல்லாஹ்வின் தூதரே! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் எப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்? என்று தோழர்கள் கேட்க, ‘ வானவர்கள் (முதலில்) முதல் வரிசையைப் பூர்த்தி செய்வார்கள்; வரிசைகளில் நேர்த்தியாகவும் நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள்.  (முஸ்லிம்)

ஆண்களுக்கு சிறந்த ஸப் முதல் ஸப்பாகும்., பெண்களுக்கு சிறந்த ஸப் கடைசி ஸப்பாகும்;

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَوَّلُهَا، وَشَرُّهَا آخِرُهَا، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا، وَشَرُّهَا أَوَّلُهَا»   صحيح مسلم 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆண்களுடைய ஸப்களில் மிகச் சிறந்தது முதல் ஸப்பாக்கும். அவர்களுக்கு மிகக் கெட்ட ஸப் கடைசியாகும். பெண்களுடைய ஸப்களில் மிகச் சிறந்தது கடைசி ஸப்பாகும், அவர்களுக்கு   மிகக் கெட்ட ஸப் முதலாவது ஸப்பாகும்.  (முஸ்லிம்)

  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا»  صحيح البخاري 

அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: எங்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நானும் மற்றொரு சிறுவரும் தொழுதோம். என் தாயார் உம்முஸுலைம்(ரழி) எங்களுக்குப் பின் நின்று தொழுதார்கள்.   (புஹாரி:727, முஸ்லிம்)

ஸப்பில் அறிவு, ஞானம் உடையவர்களுக்கு முதலிடம்;

عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ، وَيَقُولُ: «اسْتَوُوا، وَلَا تَخْتَلِفُوا، فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ، لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» وَإِيَّاكُمْ وَهَيْشَاتِ الْأَسْوَاقِ» صحيح مسلم 

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் எங்களுடைய தோள்களைத் தடவிவிட்டு; ‘நேராக நில்லுங்கள்; முரண்பட்டு நிற்காதீர்கள்; அப்படி நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும். மேலும், உங்களில் அறிவு, ஞானம் மிக்கோர் எனக்கு அருகில் (தொழுகையில் முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள் நிற்கட்டும். (இதை மூன்று முறை கூறினார்கள்.) மேலும், (தொழுகைக்கு ஒன்றுகூடும்போது) கடைத்தெரு(வில் கூச்சலிடுவதைப் போன்று) கூச்சலிடுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். என்று கூறுவார்கள்.(முஸ்லிம்)

ஸப்புகளில் நேர்த்தியாகவும், இடைவெளியின்றி நெருக்கமாகவும் இருத்தல்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ» صحيح البخاري 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வரிசையை ஒழுங்கு படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்கு படுத்துவது தொழுகையை நிலை நிறுத்துவதில் (பூரணப்படுத்துவதில்) உள்ளதாகும்.” (புஹாரி: 723, முஸ்லிம்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقِيمُوا صُفُوفَكُمْ، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي، وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ، وَقَدَمَهُ بِقَدَمِهِ» صحيح البخاري 

அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்: ‘உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்துங்கள்,ஏனெனில் நான்   முதுகுக்குப் பின்னால்  உங்களைக் காண்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒருவர் தம் தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும் தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள்.  (புஹாரி: 725)

ஸப்புகளை சரிசெய்வது இமாமுடைய கடமை;

حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: أُقِيمَتِ الصَّلاَةُ فَأَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَجْهِهِ، فَقَالَ: «أَقِيمُوا صُفُوفَكُمْ، وَتَرَاصُّوا، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي»  صحيح البخاري

அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, ‘வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின் புறமாகவும் உங்களை நான் காண்கிறேன்” என்றார்கள். (புஹாரி: 719)

النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَوِّي صُفُوفَنَا حَتَّى كَأَنَّمَا يُسَوِّي بِهَا الْقِدَاحَ حَتَّى رَأَى أَنَّا قَدْ عَقَلْنَا عَنْهُ، ثُمَّ خَرَجَ يَوْمًا فَقَامَ، حَتَّى كَادَ يُكَبِّرُ فَرَأَى رَجُلًا بَادِيًا صَدْرُهُ مِنَ الصَّفِّ، فَقَالَ: «عِبَادَ اللهِ لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللهُ بَيْنَ وُجُوهِكُمْ» صحيح مسلم  

நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஈட்டிகளை நேர்படுத்துவது போன்று எங்கள் ஸப்புகளை நேர்படுத்துவார்கள், இதை நாங்கள் (நன்கு) புரிந்து கொண்டோம் என்று அவர்கள் கருதும் வரை செய்வார்கள். பின்னர் ஒரு நாள் அவர்கள் வந்து (தொழுவிப்பதற்காக) நின்று தக்பீர்(தஹ்ரீம்) கூறப்போகும் நேரத்தில் ஒரு மனிதரின் நெஞ்சு வரிசையிலிருந்து (விலகி) வெளியேறியவாறு நிற்பதைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் அடியார்களே! உங்களது ஸப்புகளை  ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில்,அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தி விடுவான் என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أَقِيمُوا الصُّفُوفَ، فَإِنَّمَا تَصُفُّونَ بِصُفُوفِ الْمَلَائِكَةِ وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ، وَسُدُّوا الْخَلَلَ، وَلِينُوا فِي أَيْدِي إِخْوَانِكُمْ، وَلَا تَذَرُوا  فُرُجَاتٍ لِلشَّيْطَانِ ، وَمَنْ وَصَلَ صَفًّا، وَصَلَهُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى، وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى ” مسند أحمد 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஸப்புகளை நிலைநிறுத்துங்கள், தொள்புயங்களுக்கிடையில் நேர்படுத்துங்கள், இடைவெளிகளை அடையுங்கள், உங்கள் தோழர்களுக்கிடையில் மென்மையாக நடந்துகொள்ளுங்கள், ஷைத்தானுக்கு இடைவெளிகளை விடாதீர்கள், மேலும், யார் ஸப்பை சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்கிறான், யார்  ஸப்பை பிரித்துவிடுகிராரோ அவரை அல்லாஹ் பிரித்துவிடுகிறான்.  (அஹ்மத்: 5724, அபூதாவுத்)

ஸப்பில் ஒருவர் இருந்தால் இமாமின் வலது பக்கத்திலும், இருவரோ, பலரோ இருந்தால் இமாமுக்கு பின்னாலும் இருக்கவேண்டும். அதேநேரம் இமாமோடு ஒருவர் இருக்க, இரண்டாமவர் வந்தால் இமாமின் இடப்பக்கத்தில் நிற்கவேண்டும், இமாமே அவர்களை பின்னோக்கி தள்ளிவிடவேண்டும்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى صحيح البخاري  

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்:  ஓர் இரவு நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்களின் இடப்புறமாக நின்றேன். அப்போது அவர்கள் என் தலையை (அல்லது கையை, அல்லது காதை) பின்புறமாக பிடித்து (இழுத்து) வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். (புஹாரி: 183,726,728, முஸ்லிம்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا» صحيح البخاري 

அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்:  எங்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நானும் மற்றொரு சிறுவரும் தொழுதோம். என் தாயார் உம்முஸுலைம்(ரழி) அவர்கள் எங்களுக்குப் பின் நின்று தொழுதார்கள். (புஹாரி:727, முஸ்லிம்)

عن جَابِر : قال: قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ،ثُمَّ جِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، ثُمَّ جَاءَ جَبَّارُ بْنُ صَخْرٍ فَتَوَضَّأَ، ثُمَّ جَاءَ فَقَامَ عَنْ يَسَارِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْنَا جَمِيعًا، فَدَفَعَنَا حَتَّى أَقَامَنَا خَلْفَهُ،  صحيح مسلم

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:……நபிகளாரோடு ஒரு பயணத்தில் இருந்தபோது, நபிகளார் தொழுதார்கள், நான் அவரது இடது பக்கம் நின்றேன், நபிகளார் எனது கையை பிடித்திழுத்து வலது பக்கத்தில் நிறுத்தினார்கள், பிறகு ஜப்பார் பின் ஸக்ர் (ரழி) அவர்கள் வந்து நபியவர்களின் இடது பக்கம் நிற்கவே, இருவரையும் பின்னோக்கி நபிகளார் தள்ளிவிட்டார்கள், நாம் பின்னே நின்று (தொழுதோம்)….  (முஸ்லிம்)

ஒரு ஸப் பூரணமான பின் அடுத்த ஸப்பில் தனிமையில் நிற்பதைப் பொருத்தவரை ஆகும் என்பதே மிகப் பொருத்தமானது, ஏனெனில் அதனை தடுப்பதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை.

அதேநேரம் சில அறிஞர்கள் அதனை தடுத்துமுள்ளனர்.அப்படி நிற்பதானால் முன்  ஸப்பில் இருந்து ஒருவரை இழுத்தெடுக்க வேண்டும் என்பார்கள். அதற்கான ஆதாரங்களை நோக்குவோம்.

عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ» صحيح البخاري 

அபூ பக்கரா(ரழி) அவர்கள் கூறினார்கள் : நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ருகூஃ  செய்தார்கள். நான் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூஃ  செய்து விட்டேன். இது பற்றிப் பிறகு நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘அல்லாஹ் உன்னுடைய ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக! இனிமேல் இப்படிச் செய்யாதே!” என்று கூறினார்கள். (புஹாரி: 783)

இந்த ஹதீஸை தனிமையில் நிற்பதை தடுப்பதற்கு ஆதாரமாக காட்ட முடியாது. காரணம்; அபூ பக்ரா (ரழி) அவர்கள் சப்பில் இடம் இருக்க, ருகூஅய் அடைவதற்காக செய்தார்கள். அதுவே தடுக்கப்பட்டது.  ஸப் பரிபூரணமாக இருக்க, தனிமையில் நிற்பது இந்த ஹதீஸில் சொல்லப்படவில்லை.

عَنْ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، قَالَ : أَقَامَنِي عَلَى وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، فَقَالَ: حَدَّثَنِي هَذَا ” أَنَّهُ صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ صَلَاتَهُ  ”  مسند أحمد 

வாபிஸதுப்னு  மஃபத் (ரழி) அவர்கள் கூறினார்கள்; சப்புக்கு பின்னால் தனிமையில் தொழுவதைக் கண்ட நபியவர்கள், தொழுகையை மீட்டித் தொழுமாறு ஏவினார்கள்.  (அஹ்மத்: 18002, அபூதாவுத், திர்மிதி)

இந்த ஹதீஸும் முன் சப் பூரணமாக இருக்கும் போது தனிமையில் தொழுவதை குறிக்காது. அந்தளவு தெளிவாக ஹதீஸ் வரவில்லை.

ஸப்பை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்வதே கடமை, அதனையே இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أَتِمُّوا الصَّفَّ الْأَوَّلَ، ثُمَّ الَّذِي يَلِيهِ، فَإِنْ كَانَ نَقْصٌ فَلْيَكُنْ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ ”  مسند أحمد

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதல் ஸப்பை பூர்த்தி செய்யுங்கள், பிறகு அடுத்ததை, குறைபாடு இருப்பின் கடைசி ஸப்பில் வைத்துக்கொள்ளட்டும்.  (அஹ்மத்:12352, அபூதாவுத்)

தனிமையில் தொழுபவர் முன்னிருந்து ஒருவரை இழுத்தேடுக்கவேண்டும் என்று வரும் ஹதீஸ் பலவீனமானதாகும்.

அந்த ஹதீஸ் ‘இப்னுல் அஃராபி, பைஹகீ‘ போன்றவைகளில் பதியப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ‘சுர்ரீயுப்னு இஸ்மாயில்‘ என்பவர் இடம் பெற்றுள்ளார், அவர் ‘மத்ரூக்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே அது மிக பலவீனமாகும்.

குறிப்பு: ஒருவர் இமாமை பின்பற்றி தொழும் போது இமாமை விட்டு ஒரு அடி பின்னே நிற்பது நபி வழியல்ல.

இரண்டு  பேர் மஃமூமாக தொழும் போது இமாமுக்கு பின்னால் நிற்பதே சிறந்தது, பல நபித்தோழர்கள் வழியாக அது அறிவிக்கப்பட்டுள்ளது, அப்படி இமாமின் இரு பக்கத்திலும் நின்று தொழுதால் அதற்கு சான்றாக பின்வரும் செய்தியை ஆதாரமாக காட்டலாம். அந்த செய்தி இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் கூற்றாக முஸ்லிமில் பதியப்பட்டிருந்தாலும், அஹ்மதில் நபிகளாரோடு தொடர்புபடுத்தி பதியப்பட்டுள்ளது.

عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، أَنَّهُمَا دَخَلَا عَلَى عَبْدِ اللهِ، فَقَالَ: ” أَصَلَّى مَنْ خَلْفَكُمْ؟ قَالَ: نَعَمْ، فَقَامَ بَيْنَهُمَا، وَجَعَلَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ، ثُمَّ رَكَعْنَا، فَوَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا فَضَرَبَ أَيْدِيَنَا، ثُمَّ طَبَّقَ بَيْنَ يَدَيْهِ، ثُمَّ جَعَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ، فَلَمَّا صَلَّى، قَالَ: هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ”  صحيح مسلم 

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) மற்றும் அல்கமா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள், “நீங்கள் (இருவரும்) எழுந்து (என்னைப் பின்பற்றித்) தொழுங்கள்!” என்று கூறினார்கள்- அப்போது அவர்களுக்குப் பின்னால் நிற்கப்போனோம். உடனே அவர்கள் எங்கள் கைகளைப் பிடித்து எங்களில் ஒருவரை தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கத்திலும் நிறுத்தினார்கள்…… (முஸ்லிம், அஹ்மத்:3927)

ஸப்பில் நிற்கும்போது வலதையே கவனிப்பதும் நபி வழியல்ல, மாறாக வலதை முற்படுத்துவதோடு, வலதும், இடதுமாக மாறிமாறி நிற்கவேண்டும்.

عَنِ الْبَرَاءِ، قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ، يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ،  صحيح مسلم

பராஃ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாருக்கு பின்னால் (மஃமூமாக) தொழுதால், அவர்களின் வலப்பக்கத்தில் இருப்பதையே விரும்புவோம், நபியவர்கள் எங்களை முன்னோக்கி இருப்பார்கள்.  (முஸ்லிம்)

இந்த ஹதீஸ் நபித்தோழர்கள் வலது பக்கத்தை தேர்வு செய்ததன் நோக்கத்தையும் தெளிவு படுத்துகின்றது, அது சிறப்பு என்ற அடிப்படையில் அல்ல, மாறாக நபிகளாரின் முகத்தை நோக்குவதே காரணம்.

அடுத்து இந்த ஹதீசை முன்வைத்து, தொழுகை முடிந்த பின்னர் வலது பக்கம் திரும்பி அமரவேண்டும் என்று விளங்கவும் கூடாது, ஏனெனில் எங்களை முன்னோக்குவார்கள் என்றே வந்துள்ளது, வலது பக்கத்தை அல்ல. திரும்பி அமரும் போது வலது பக்கத்தால் திரும்பினார்கள் என்பதே அருத்தம்.

عَنْ أَنَسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْصَرِفُ عَنْ يَمِينِهِ» صحيح مسلم 

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் தொழுது முடிந்தால் வலது பக்கத்தாலேயே திரும்புவார்கள்.  (முஸ்லிம்)

அடுத்து, ‘ஸப்பின் வலதுபக்கத்தாருக்கு அல்லாஹ் அருள் புரிகிறான், மலக்குகள் துஆ செய்கின்றனர்.’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியாதாக, (அபூதாவுத் 676,  இப்னுமாஜா:1005)

என்று பதியப்பட்டிருக்கும் செய்தி மிகவும் பலவீனமானதாகும். அதன் அறிவிப்பாளர் தொடரில் வரும்  உஸாமா என்பவர் நிராகரிக்கப்பட்டவைகளை அறிவிப்பவர் என்றும், முஆவியா என்பவர் அதிகம் தவறு விடுபவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே ஸப்பை பிரிக்கும் விதத்தில் தூண்களோ, வேறு பொருட்களோ இருக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «كُنَّا نُنْهَى أَنْ نَصُفَّ بَيْنَ السَّوَارِي عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنُطْرَدُ عَنْهَا طَرْدًا» سنن ابن ماجه 

குர்ரதுப்னு இயாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாருடைய காலத்தில் தூண்களுக்கிடையில் அணிவகுத்து (ஸப்பில்) நிற்பதை விட்டு தடுக்கப்பட்டோம், அதைவிட்டும் விரட்டப்பட்டோம். (இப்னு மாஜா: 1002, இப்னு குஸைமா:1567)

இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான ‘ஹாரூன் பின் முஸ்லிம்‘ என்பவர் ‘மஜ்ஹூல்‘ என்று சிலரால் விமர்சிக்கப்பட்டிருந்தாலும், இவரிடமிருந்து பல பேர் இந்த செய்தியை அறிவித்துள்ளார்கள். அத்தோடு ஸப்பில் நெருங்கி இருக்குமாறு வந்த ஹதீஸ்கள் இதை பலபபடுத்தகூடியவைகளாகவும் இருக்கின்றன.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

ஸப்பின் ஒழுக்கங்களை சரியாக விளங்கி, அதனை கடைப்பிடித்து, தொழுகையின் பூரண கூலியைப் பெற்றுக்கொள்ள முயல்வோம்.

வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!

                                                                                                                                                                                                          

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

img030 img031

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *