பிக்ஹு -6; வுழூவின் சட்டங்கள்

வுழூவின் சட்டங்கள்

வுழூவின் சிறப்புகளும் அது கடமையாவதற்கான ஆதாரங்களும்

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ } [المائدة: 6]

இறை விசுவாசிகளே தொழுகைக்காக நீங்கள் நின்றால் உங்கள் முகத்தையும் முழங்கை வரை கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள், இன்னும் தலையை தடவிக்கொள்ளுங்கள், மேலும் இரு கால்களையும் கரண்டை கால் வரை கழுவிக்கொள்ளுங்கள்……. (5:6)

 أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟، قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ .   (صحيح البخاري ومسلم)

‘சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள். என அபுஹுரைரா(றழி) அவர்கள்  கூறியபோது, ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த ஒருவர் ‘அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் ‘சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது’ என்றார்கள்”   (புஹாரி: 135, முஸ்லிம்)

عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ» (صحيح مسلم )

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது வுழூ எடுத்து, அதனை அழகாக செய்தால் அவனுடைய விரல்களுக்கு கீழால் பாவங்கள் வெளியேறும் அளவுக்கு அவன் உடம்பிலிருந்து பாவங்கள் வெளியாகின்றன.  (முஸ்லிம்: 601)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللهُ بِهِ الْخَطَايَا، وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ؟» قَالُوا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ: «إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ، وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ، وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ، فَذَلِكُمُ الرِّبَاطُ» (صحيح مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெறுப்பான நிலையில் வுழூவைப் பூரணமாக செய்வதும், பள்ளிக்கு அதிகம் நடந்து செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்து இருப்பதும் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அந்தஸ்துகள் உயரக் காரணமாயிருக்கும்.  (முஸ்லிம்: 610)

வுழூவின் கடமைகள்

கடமைகள் எனும் போது, அதனை மட்டும் செய்தால் போதுமானது என்பதல்ல, மாறாக அந்தக் கடமைகளை நபிகளார் எப்படி நிறைவேற்ற கற்றுத் தந்தார்களோ அப்படி செய்வதே கடமையாகும். அதே நேரம் ஒன்றை விட்டுவிடுவதற்கு நபிகளார் அனுமதி அளித்திருந்தால் விடமுடியும். (வுழூவுக்கு முன் பல் துலக்குவதைப் போன்று)

வுழூ எடுக்கும் போது அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தை உள்ளத்தில் நிறுத்திக் கொள்ளல்.

عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى…. (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே ஏற்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது…. (புஹாரி: 1)

5:6 வசனத்தில் கூறப்பட்டவைகளை செய்தல்.

அதில் உள்ள முறைப்படி வரிசையாக செய்தல்.

அக்கடமையை நிறைவேற்றுவதற்கு நபிகளார் காட்டித் தந்த ஒழுங்குமுறை.

மிஸ்வாக் (பற்களை சுத்தம்) செய்தல்:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ» (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் உம்மத்தவருக்கு  சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.”  (புஹாரி: 887, முஸ்லிம்)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ رَقَدَ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَيْقَظَ فَتَسَوَّكَ وَتَوَضَّأَ…. (صحيح مسلم)

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் நித்திரையிலிருந்து எழுந்து, பல் துலக்கிவிட்டு, வுழூ செய்தார்கள். (முஸ்லிம்: 1835)

பிஸ்மில்லாஹ் என்று கூறி ஆரம்பித்தல்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ» (سنن أبي داود والترمذي)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வின் பெயர் சொல்லவில்லையோ அவருக்கு வுழூ இல்லை.  (அபூதாவுத், திர்மிதீ, அஹ்மத்)

இந்த அறிவிப்பு பலவீனமானவர்கள் வழியினால் பதியப்பட்டு ஒன்றை ஒன்று பலப்படுத்தும் நிலையில் உள்ளதாகும்.

இரு கைகைளையும் மனிக்கட்டு வரை மூன்று விடுத்தங்கள் கழுவிக்கொள்ளுதல்.  (புஹாரி: 159)

Image(030)

வாய்க்கு நீரை செலுத்தல், மூக்கிட்கும் நீரை செலுத்தி சீறி விடுதல். அதனை மூன்று விடுத்தம் செய்தல், அல்லது ஒவ்வொரு தடவையிலும் மூன்றையும் செய்யமுடியும்.  (புஹாரி: 159,186, 191, முஸ்லிம்)

Image(029)

முகத்தை மூன்று விடுத்தம் கழுவுதல். தாடி அடர்த்தியாக இருப்பின் அதனை தேய்த்து கழுவுதல்.

Image(028) Image(033)

عَنْ أَنَسٍ ابْنَ مَالِكٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا تَوَضَّأَ، أَخَذَ كَفًّا مِنْ مَاءٍ فَأَدْخَلَهُ تَحْتَ حَنَكِهِ فَخَلَّلَ بِهِ لِحْيَتَهُ» (سنن أبي داود والترمذي)

நபி (ஸல்) அவர்கள் தாடியை தேய்த்து கழுவக்கூடியவர்களாக இருந்தார்கள்.  (திர்மிதீ: 30, 31, அபூதாவுத்: 145)

இரண்டு கைகளையும் முழங்கை வரை மூன்று தடவைகள் கழுவுதல்.

Image(032) Image(031)

தலையை தடவுதல்; இரு கைகளையும் முன்நெற்றி ரோமத்தில் வைத்து, பிடரி வரை கொண்டு சென்று , மீண்டும் முன்நெற்றி வரை திரும்பக் கொண்டு வருதல். அத்துடன் இரு காதுகளையும் தடவிக் கொள்ளுதல்.

Image(037) Image(038)

ஏனைய உறுப்புகளை 3 விடுத்தாமோ 2 விடுத்தாமோ கழுவிக் கொள்ளலாம் என்று வந்த ஹதீஸ்களில் தலைக்கு எண்ணிக்கை வரவில்லை. (புஹாரி: 159, 164, 185, 191, 192, முஸ்லிம்)

தலையை ஒரு விடுத்தம் தடவினார்கள் என புஹாரி (186) யில் பதியப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள்: இரு காதுகளும் தலையில் உள்ளவை என்று கூறினார்கள். (இப்னுமாஜா: 443, அஹ்மத்…)

நபி (ஸல்) அவர்கள் காதை தடவுவதற்காக புதிதாக தண்ணீர் எடுத்ததற்கு ஸஹீஹான  ஹதீஸ்கள் வரவில்லை.

Image(039)

தலையை மூன்று விடுத்தம் கழுவுவதற்கோ, சிறிதளவு கழுவுவதற்கோ ஸஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை.

தலைப்பாகை போன்றவை தலையில் இருந்தால் முன்நெற்றி ரோமத்தை தடவிவிட்டு அவைகளுக்கு மேலால் தடவிவிடலாம், அவைகளை கழட்டத் தேவையில்லை.

الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ  أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّأَ فَمَسَحَ بِنَاصِيَتِهِ، وَعَلَى الْعِمَامَةِ وَعَلَى الْخُفَّيْنِ» (صحيح مسلم )

முகீரா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தலையின் முன்பகுதியையும் தலைப்பாகைக்கு மேலாலும் தடவினார்கள். (முஸ்லிம்: 657)

இரண்டு கால்களையும் கரண்டைக்கால் வரை கழுவுதல், கரண்டைக் குழியை கவனித்து கழுவுதல், விரல்களுக்கிடையில் தேய்த்துக்கொள்ளல்.

Image(040) Image(041)

أَبَا هُرَيْرَةَ، وَكَانَ يَمُرُّ بِنَا وَالنَّاسُ يَتَوَضَّئُونَ مِنَ المِطْهَرَةِ، قَالَ: أَسْبِغُوا الوُضُوءَ، فَإِنَّ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ»( صحيح البخاري)

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: குதிக்கால்களை கழுவாத ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, கூறினார்கள்: குதிக்கால் உடையோருக்கு (சரியாக கழுவாதவர்கள்) கேடுதான்.  (புஹாரி: 165, முஸ்லிம்: 596)

عَنْ لَقِيطِ بْنِ صَبْرَةَ، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي، عَنِ الْوُضُوءِ، قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ، وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا».( سنن أبي داود)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வுழூவை பூரணப்படுத்துங்கள், விரல்களுக்கிடையில் தேய்த்துக் கொள்ளுங்கள், நோன்பாளியாக இருந்தாலன்றி நாசிக்கு தண்ணீரை நன்றாக செலுத்துங்கள். (அபூதாவுத்: 142, திர்மிதீ: 788)

உறுப்புக்களை ஒரு விடுத்தாமோ, அல்லது இரண்டு, மூன்று விடுத்தங்களோ கழுவிக் கொள்ளலாம்.

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً مَرَّةً»( صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் ஒரு விடுத்தம் கழுவினார்கள்.  (புஹாரி: 157)

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ»( صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் இரு விடுத்தம் கழுவினார்கள்.  (புஹாரி: 158)

நபி (ஸல்) அவர்கள் மூன்று விடுத்தம் கழுவினார்கள்.  (புஹாரி: 159)

வலதை முற்படுத்தல்.

 عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُعْجِبُهُ التَّيَمُّنُ، فِي تَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ» (صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலைமுடி வாருவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்”  (புஹாரி: 168)

வுழூ எடுப்பதற்கான ஆதாரம் ஒரே பார்வையில்;

 أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِإِنَاءٍ، فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ، فَغَسَلَهُمَا، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الإِنَاءِ، فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلاَثَ مِرَارٍ إِلَى الكَعْبَيْنِ، ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»، (صحيح البخاري)

ஹும்ரான் (றழி) அவர்கள் கூறினார்கள்: உஸ்மான் இப்னு அப்பான்(றழி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார். பின்னர் தம் முகத்தைஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸ்மான்(றழி) அவர்கள் கூறினார்கள்”. (புஹாரி:159, முஸ்லிம்)

வுழூ எடுத்து முடிந்தவுடன் துஆவை ஓதிக் கொள்ளுதல்.

Image(042)

قَالَ النبي صلى الله عليه وسلم:  ” مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ – أَوْ فَيُسْبِغُ – الْوَضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ “.( صحيح مسلم)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாராவது வுழூ முடிந்தவுடன்

“أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ”

அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ ” என்று கூறினால் அவருக்காக சுவனத்தின் எட்டு கதவுகளும் திறக்கப்பட்டு, அவர் விரும்பிய வாயளினால் நுழைவார். (முஸ்லிம்: 576)

குறிப்பு:

சில அறிவிப்புகளில் (முஸ்லிம்:  பின்வருமாறு வந்துள்ளது:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك

போன்ற துஆக்கள் திர்மிதீ , நசாஇ போன்ற கிதாப்களில் பதியப்பட்டுள்ளன, அவைகள் விமர்சிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளாகும்.

வுழூவை பரிபூரணமாக செய்தல்

சில ஹதீஸ்களை நாம் படிக்கும் போது ‘இஸ் பாகுல் வுழூ ‘ வுழூவை பரி பூரணமாக செய்வதற்கான சிறப்புகளை பார்க்க முடியும், வுழூவை பரி பூரணமாக செய் தல் என்பது ஒவ்வொரு உறுப்பையும் நபிகளார் காட்டித் தந்த படி பூரணமாக கழுவுவதேயாகும். மாறாக; குறிப்பிட்ட உறுப்பைத் தாண்டி ( முகத்தை கழுவும் போது கழுத்தையும் கழுவுவது போன்று) கழுவுவதோ, எண்ணிக்கையை அதிகப்படுத்துவதொ அல்ல, ஏனெனில் நபிகளாரின் வழிகாட்டலில் அப்படி அதிகப்படுத்தியதாக வரவில்லை.

عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّهُ رَأَى أَبَا هُرَيْرَةَ يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ حَتَّى كَادَ يَبْلُغُ الْمَنْكِبَيْنِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ حَتَّى رَفَعَ إِلَى السَّاقَيْنِ، ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ أَثَرِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ»( صحيح مسلم)

நுஐம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைரா (றழி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டைவரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே கணைக்கால்வரை சென்றார்கள்.பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்துகொள்ளட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.  (முஸ்லிம்: 602)

                                                                                                                                                                                                                                 

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

4 5

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *