பிக்ஹு-4; மலசலம் கழிப்பதற்கான ஒழுக்கங்கள்

மலசலம் கழிப்பதற்கான ஒழுக்கங்கள்

மக்கள் பார்வையை விட்டு தன் மறைவிடத்தை மறைத்தல், தூர விலகிச் செல்லல்.

عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ»   سنن أبي داود

நபி (ஸல்) அவர்கள் மல சலம் கழிக்க விரும்பினால் தூர விலகிச் செல்வார்கள்.   (அபூதவுத்: 1)

திறந்த வெளியில் மலம் கழித்தால் முன்னால் ஒரு தடையை (தடி போன்ற ஒன்றை) முன்னாள் வைத்துக் கொள்ளல்.

أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ لِحَاجَتِهِ، تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ وَمَعَنَا عُكَّازَةٌ أَوْ عَصًا أَوْ عَنَزَةٌ، وَمَعَنَا إِدَاوَةٌ، فَإِذَا فَرَغَ مِنْ حَاجَتِهِ نَاوَلْنَاهُ الإِدَاوَةَ»  صحيح البخاري 

அனஸ்(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும்போது நானும் மற்றொரு சிறுவரும் கைத்தடியையும் தண்ணீர்ப் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்வோம். அவர்கள் தம் தேவையை முடித்ததும் (உளூச் செய்வதற்காக) தண்ணீர் ஊற்றுவோம்.  (புஹாரி: 500, முஸ்லிம்)

திறந்த வெளிகளில் கிப்லாவை முன்னோக்கவோ, பின்னோக்கவோ கூடாது.

عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَتَى أَحَدُكُمُ الغَائِطَ، فَلاَ يَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا» صحيح البخاري 

அபூ அய்யூபில் அன்ஸாரி(றழி) அவர்கள்  அறிவித்தார்கள்: உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்’ என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 144, முஸ்லிம்)

கட்டிடங்களுக்கு உள்ளாக இருப்பின் அது தடையல்ல.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ فَلاَ تَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ بَيْتَ المَقْدِسِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: لَقَدْ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَى لَبِنَتَيْنِ، مُسْتَقْبِلًا بَيْتَ المَقْدِسِ لِحَاجَتِهِ». صحيح البخاري 

அப்துல்லாஹ் இப்னு உமர்  ரழி அவர்கள் கூறினார்கள்:  நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்”   (புஹாரி: 145, முஸ்லிம்)

பாதை ஓரங்களில் மக்கள் நிழல் பெரும் இடங்களில் மல சலம் கழிக்கக்கூடாது. (உதாரணமாக  பஸ் தரிப்பு நிலையம், மைதானம், கடைத் தெரு போன்றவை)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اتَّقُوا اللَّعَّانَيْنِ» قَالُوا: وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ، أَوْ فِي ظِلِّهِمْ» صحيح مسلم

அபூஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள்.அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.   (முஸ்லிம்: 641)

அல்லாஹ்வின் நாமங்கள் பதிக்கப்பட்டவைகளை, அவை அசுத்தப்படும் நிலையில் இருப்பின் கொண்டு செல்லாதிருத்தல்.

வெடிப்புகள், பொந்துகளில் ஊர்வனம் வாழும் இடங்களைத் தவிர்த்தல்.

தேங்கி நிற்கும் நீரில் மல சலம் கழிக்கக் கூடாது.

 أَبَا هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي المَاءِ الدَّائِمِ الَّذِي لاَ يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ» صحيح البخاري 

ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தேங்கி இருக்கும் நீரில் சிறு நீர் கழிப்பதை தடுத்தார்கள்.  (புஹாரி:239, முஸ்லிம்: 681)

மல சல கூடத்திற்குள் நுழையும் போதும் , வெளியேறும் போதும்  துஆக்களை சொல்லுதல்.

நுழையும் போது;

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குப்ஸி, வால் கபாஇஸி   اللهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِث  

என்று சொல்லுதல்.

أَنَسًا، يَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الخَلاَءَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ» صحيح البخاري 

 (புஹாரி: 142, முஸ்லிம்)

வெளியேறும் போது;

குப்ராணக்      غُفْرَانَك 

عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنَ الغَائِطِ قَالَ: «غُفْرَانَكَ»  سنن أبي داود 

(அபூதாவுத்: 30 , திர்மிதீ: 7)

மல சலம் கழிக்கும் போது வலது கையால் உறுப்பைத் தொடக்கூடாது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا أَتَى الخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ» صحيح البخاري 

அபூ கதாத (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். மலம் கழித்தால் தம் வலக்கரத்தால் உறுப்பை பிடிக்கவும் வேண்டாம்  சுத்தம்  செய்யவும் வேண்டாம்.  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 153, முஸ்லிம்)

தேவை முடிந்த பின்னர் தண்ணீரைக் கொண்டு அல்லது விட்டை, எழும்பு தவிர்ந்த நீரை உரியக் கூடிய கல் போன்றவற்றைக் கொண்டு சுத்தம் செய்தல்.

 أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَدْخُلُ الخَلاَءَ، فَأَحْمِلُ أَنَا وَغُلاَمٌ إِدَاوَةً مِنْ مَاءٍ وَعَنَزَةً، يَسْتَنْجِي بِالْمَاءِ» صحيح البخاري 

அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும், ஒரு கைத்தடியையும் சுமந்து செல்வோம். (தேவையை முடித்ததும்) அவர்கள் தண்ணீரால் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்”  (புஹாரி: 152)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: اتَّبَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَرَجَ لِحَاجَتِهِ، فَكَانَ لاَ يَلْتَفِتُ، فَدَنَوْتُ مِنْهُ، فَقَالَ: «ابْغِنِي أَحْجَارًا أَسْتَنْفِضْ بِهَا – أَوْ نَحْوَهُ – وَلاَ تَأْتِنِي بِعَظْمٍ، وَلاَ رَوْثٍ، فَأَتَيْتُهُ بِأَحْجَارٍ بِطَرَفِ ثِيَابِي، فَوَضَعْتُهَا إِلَى جَنْبِهِ، وَأَعْرَضْتُ عَنْهُ، فَلَمَّا قَضَى أَتْبَعَهُ بِهِنَّ» صحيح البخاري 

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் இயற்கைத் தேவைக்காக வெளியே சென்றபோது அவர்களைத் தொடர்ந்து சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்களின் அருகில் நான் சென்றபோது, ‘சுத்தம் செய்வதற்காக எனக்குச் சில கற்களைக் கொண்டு வாரும். எலும்புகளையோ, விட்டையையோ கொண்டு வரவேண்டாம்” என்று கூறினார்கள். நான் (கற்களைப் பொறுக்கி) என்னுடைய ஆடையின் ஓரத்தில் எடுத்துக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களின் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பினேன். நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த பின்னர் அக்கற்களால் சுத்தம் செய்தார்கள்”  (புஹாரி: 155, முஸ்லிம்)

கல் பிடிக்கும் போது ஒற்றைப்படையாக  மூன்று தடவைகள் செய்வது.

أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ، وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ» صحيح البخاري 

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்’என  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 161,162)

சுத்தம் செய்த பின் கையை நீரால் கழுவுதல் அல்லது மண்ணில் தேய்த்து விட்டு கழுவுதல்.

عَنْ مَيْمُونَةَ قَالَتْ: «سَتَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَغْتَسِلُ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ، ثُمَّ مَسَحَ بِيَدِهِ عَلَى الحَائِطِ أَوِ الأَرْضِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ المَاءَ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ» صحيح البخاري 

மைமூனா (றழி) அவர்கள் கூறினார்கள்:’நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன் கைகளையும் இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றித் தங்களின் மர்மஸ்தலங்களைக் குழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள்……. (புஹாரி: 281)

மல சலம் கழிக்கும் போது அமர்ந்தவாறே கழிக்க வேண்டும். தேவை ஏற்படின் நின்ற நிலையிலும் கழிக்கலாம்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ فَلاَ تَسْتَقْبِلِ القِبْلَةَ وَلاَ بَيْتَ المَقْدِسِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: لَقَدْ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَلَى لَبِنَتَيْنِ، مُسْتَقْبِلًا بَيْتَ المَقْدِسِ لِحَاجَتِهِ».

அப்துல்லாஹ் இப்னு உமர்  ரழி அவர்கள் கூறினார்கள்:  நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்”   (புஹாரி: 145, முஸ்லிம்)

عَنْ حُذَيْفَةَ، قَالَ «أَتَى النَّبِيُّ [ص:55] صلّى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ»

ஹுதைபா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும்  இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்”  (புஹாரி: 224, முஸ்லிம்)

குறிப்பு: தேவையில் ஈடுபடும் போது தலையை மறைக்க வேண்டும் சாய்ந்த வாறு அமர வேண்டும் என்று நிபந்தனை இடும் அளவுக்கு சஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை.

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

2

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *