பிக்ஹு -12; மாதவிடாய், பிள்ளைப் பெற்று இரத்தங்களின் சட்டம்

அல் ஹைலு வன்னிபாஸ்

மாதவிடாய், பிள்ளைப் பெற்று இரத்தங்களின் சட்டம்

மாதவிடாய் இரத்தம் என்பது கருப்புக்கு வாசான விதத்தில் கடும் சிவப்பு நிறமாகவும், உறையாமல் வழிந்தோடும் தன்மை கொண்டதாகவும், வழமையான இரத்தத்தின் வாடையைவிட வித்தியாசமான வாடைகொண்ட நிலையில் கற்பறையிலிருந்து வெளிப்படும். இது அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்தியே ஒரு விதியாகும்.

{ وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ} [البقرة: 222]

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ….(2:222)

عَنْ عَائِشَةَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنَّ ذَلِكِ شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، …» (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது.” (புஹாரி: 305,,,, முஸ்லிம்)

அது வருவதற்கு குறிப்பிட்ட வயதெல்லை ஒன்று இல்லை, மாறாக ஒரு பெண்ணின் உடல் கட்டமைப்பு, வாழும் சூழல், காலநிலை என்பதைக் கொண்டு அது ஆரம்பிப்பது வித்தியாசப்படலாம். எப்போது ஒரு பெண்மணி அதனை காணுகின்றாரோ அப்போது அதன் சட்டம் கட்டாயமாகும். அது ஒன்பது வயதுக்கு முன்னாலோ, அல்லது ஐம்பது வயது தாண்டியோ இருக்கலாம்.

அதன் வருகையின் கால (மிகக் குறைந்த எல்லை ஒரு நாள், அதிக பட்சம் பதினைந்து நாட்கள் என்று) எல்லைக்கு எந்த குறிப்பிட்ட எல்லையையும் கூறமுடியாது.

மாதவிடாய் என்பது கற்பினிகளுக்கு வரமாட்டாது, அப்படி அந்த காலத்தில் வந்தால் அது நோயின் காரணமாகவோ, வேறு காரணத்தினாலோ இருக்கலாம். ஏனெனில் மாதவிடாய் என்பதே கற்பின் நிலவரத்தை சுட்டிக்காட்டக்கூடியதாக இருக்கின்றது.

இரத்தத்தில் மஞ்சள் அல்லது கலங்கள் தன்மை காணப்படுதல், இதற்கான சட்டத்தில் அறிஞ்சர்களிடையே கருத்துவேற்றுமை காணப்பட்டாலும், அந்தமாற்றம் மாதவிடாய்க் காலத்தில் இருந்தால் ஹைலாகவும், சுத்தமானதன் பின் ஏற்பட்டால் அதனை ஹைலாக கணிக்காமல் இருப்பதே சரியானதாகும்.

عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «كُنَّا لاَ نَعُدُّ الكُدْرَةَ وَالصُّفْرَةَ شَيْئًا»( صحيح البخاري)

‘மாதவிடாய் அல்லாத நாள்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும் ஒருவகை மண்நிற இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்கள் கருதுவதில்லை”  (புஹாரி: 326, அபூதாவுத், நசாஇ)

 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: «اعْتَكَفَتْ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ مِنْ أَزْوَاجِهِ، فَكَانَتْ تَرَى الصُّفْرَةَ وَالْحُمْرَةَ، فَرُبَّمَا وَضَعْنَا الطَّسْتَ تَحْتَهَا، وَهِيَ تُصَلِّي»( سنن أبي داود)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரோடு அவர்களது மனைவிகளுள் ஒருவர் இஃதிகாப் இருந்தார், அவர் மஞ்ச, சிவப்பு நிற இரத்தத்தை காணுவார், (அவர் அதனை ஹைளாக கணிக்கவில்லை) சில நேரம் அவர் தொழும் போது நாம் அவருக்கு கீலால் பஞ்சு போன்றவற்றை வைப்போம்.  (அபூதாவுத்: 2476)

நிபாஸ் என்பது ஒரு பெண், பிள்ளை பெற்றெடுத்தபின்னர் காணும் இரத்தமாகும், அதன் குறைந்த காலத்திற்கு எல்லை இல்லை, சில பெண்களுக்கு சொற்ப நேரம் மட்டும் வரலாம். அது பெண்களில் பெரும்பாலும் நாட்பது நாட்கள் தென்படலாம்.

அதை காணும் போது தொழுகையை விடுவதும், காணாத நேரத்தில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதும் அவள் மீது கடமையாகும்.

ஹைல், நிபாஸின் போது செய்யக்கூடாதவை

கணவன் மனைவி இல்லறத்தில் ஈடுபடுதல்.

{وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ} [البقرة: 222]

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (2:222)

عَنْ أَنَسٍ أَنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتِ الْمَرْأَةُ فِيهِمْ لَمْ يُؤَاكِلُوهَا، وَلَمْ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ فَسَأَلَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللهُ تَعَالَى {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ} [البقرة: 222] إِلَى آخِرِ الْآيَةِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ» فَبَلَغَ ذَلِكَ الْيَهُودَ، فَقَالُوا: مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ مِنْ أَمْرِنَا شَيْئًا إِلَّا خَالَفَنَا فِيهِ،…..( صحيح مسلم)

அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: யூதர்கள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களோடு உண்ணவோ, உடலுறவில் ஈடுபடவோ மாட்டார்கள், அதுபற்றி நபிகளாரிடம் நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ் “(2:222) வசனத்தை இறக்கிவைத்தான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உடலுறவு தவிர்ந்த அனைத்தையும் செய்துகொள்ளுங்கள். அந்த செய்தி யூதர்களை அடையவே ;இந்த மனிதர் எங்களின் எந்த விடையமாக இருந்தாலும் மாற்றம் செய்யாமல் விட்டதில்லையே என்று கூறினர்.  (முஸ்லிம்: 720)

தொழுதல்,நோன்பு பிடித்தல். அவர்கள் தொழுகையை களாச் செய்யவேண்டியதுமில்லை. நோன்பை விட்டுவிட்டு களாச் செய்ய வேண்டும்.

عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ، فَذَلِكَ نُقْصَانُ دِينِهَا» (صحيح البخاري)

அபூசஈத் (றழி) அவர்கள் கூறினார்கள்:  ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்” (புஹாரி: 1951)

عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: إِنِّي أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ، فَقَالَ: «لاَ إِنَّ ذَلِكِ عِرْقٌ، وَلَكِنْ دَعِي الصَّلاَةَ قَدْرَ الأَيَّامِ الَّتِي كُنْتِ تَحِيضِينَ فِيهَا، ثُمَّ اغْتَسِلِي وَصَلِّي» (صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?’ என்று கேட்டதற்கு, ‘கூடாது. அது ஒரு நரம்பு நோய்; மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாள்களின் அளவுக்குத் தொழுகையை விட்டுவிடு. பின்னர் தொழுது கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி: 325, முஸ்லிம்)

عَنْ مُعَاذَةَ، قَالَتْ: سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ: مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ، وَلَا تَقْضِي الصَّلَاةَ. فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ؟ قُلْتُ: لَسْتُ بِحَرُورِيَّةٍ، وَلَكِنِّي أَسْأَلُ. قَالَتْ: «كَانَ يُصِيبُنَا ذَلِكَ، فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ، وَلَا نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلَاةِ» (صحيح مسلم وصحيح البخاري)

முஆதா என்ற பெண்மணி கூறினார்கள்: நான் ஆயிஷா (றழி) அவர்களிடம் வந்து;மாதவிடாய் ஏற்பட்ட பெண் தொழுகையை விட்டுவிட்டு களா செய்வதில்லை, நோன்பை களா செய்கிறாள் இது ஏன். என்று கேட்டேன், அதற்கவர்கள் ; நீ கவாரிஜ் கூட்டத்தை சார்ந்தவளா என்று கேட்கவே, நான் இல்லை என்றேன், அப்போது ஆயிஷா (றழி) அவர்கள்: நபிகளார் காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் வரும் நோன்பை களாச் செய்யுமாறு ஏவப்பட்டோம், தொழுகையை  களாச் செய்யுமாறு ஏவப்படவில்லை. என்று கூறினார்கள்.  (முஸ்லிம்: 789)

தவாப் கஃபதுல்லாவை வளம் வருதல்.

عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ نَذْكُرُ إِلَّا الحَجَّ، فَلَمَّا جِئْنَا سَرِفَ طَمِثْتُ، فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، فَقَالَ: «مَا يُبْكِيكِ؟» قُلْتُ: لَوَدِدْتُ وَاللَّهِ أَنِّي لَمْ أَحُجَّ العَامَ، قَالَ: «لَعَلَّكِ نُفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَإِنَّ ذَلِكِ شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَافْعَلِي مَا يَفْعَلُ الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي»(صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்களுக்கு ஹஜ்ஜின் போது மாதவிடாய் ஏற்பட்டது அப்போது நபியவர்கள் ஆயிஷா அவர்களைப் பார்த்து:  இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாஹ்வை வலம்வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்துகொள்’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 305, முஸ்லிம்)

عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَقَالَ: قَدْ حَجَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَتْنِي عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّهُ أَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ بِالْبَيْتِ،…..(صحيح البخاري)

நபிகளாரின் ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (றழி) அவர்கள் கூறும் போது:  நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் முதன் முதலாக வுழூச் செய்தார்கள்; பிறகு கஃபாவை வலம்வந்தார்கள்; …… என்று கூறினார்கள்.  (புஹாரி: 1641)

தலாக் விடுதல்

عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَغَيَّظَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «لِيُرَاجِعْهَا، ثُمَّ يُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ، ثُمَّ تَحِيضَ فَتَطْهُرَ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا طَاهِرًا قَبْلَ أَنْ يَمَسَّهَا، فَتِلْكَ العِدَّةُ كَمَا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ»….(صحيح البخاري)

சாலிம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உமர்(றழி) தம் துணைவியாரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள். அப்போது அவர்களின் துணைவியாருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே, (என் பாட்டனார்) உமர்(றழி) , இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இதைத்) தெரிவித்தார்கள். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். பிறகு, ‘அவர் (அப்துல்லாஹ் இப்னு உமர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்து, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரைத் தம் மனைவியாகவே வைத்துக் கொள்ளட்டும்! பிறகு, (மீண்டும்) அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு (அதிலிருந்து) தூய்மையும் அடைந்தால், அப்போது அவருக்குத் தோன்றினால் விவாகரத்துச் செய்யட்டும்! அதுவும் தாம்பத்திய உறவுக்கு முன்னால். (மாதவிலக்கிலிருந்து தூய்மையாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும்’ என்றும் கூறினார்கள். (புஹாரி: 4908, முஸ்லிம்)

 பள்ளியில் தரித்திருத்தல்.

இதில் அறிஞர்களிடையே பரவலான கருத்துவேற்றுமை இருக்கின்றது. மாதவிடாய் ஏற்பட்ட பெண்களின் விடையத்தில் அதனை தடுப்பதற்கு தெளிவான சான்றுகள் வரவில்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு பள்ளியில் தரித்திருப்பதை அனுமதிப்பவர்களும் இருக்கின்றனர்.

தடுப்பவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள்;

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّى تَغْتَسِلُوا } [النساء: 43]

நம்பிக்கை கொண்டவர்களே! …… மேலும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை தொழுகையை நெருங்காதீர்கள், பாதையாக கடந்து சென்றாலே  தவிர.  (4:43)

 عَنْ عَائِشَةَ قَالَتْ: وَكَانَ يُخْرِجُ النبي رَأْسَهُ إِلَيَّ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ»(صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்:  ‘நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ‘இஃதிகாப்’ இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்”  (புஹாரி: 301, முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ»، قَالَتْ فَقُلْتُ: إِنِّي حَائِضٌ، فَقَالَ: «إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ» (صحيح مسلم)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் என்னிடம் ‘பள்ளியிலிருந்து விரிப்பை எடுத்துதருமாறு கூறவே’. நான் மாதவிடாயோடு இருப்பதாக கூறினேன். அதற்கு நபியவர்கள், அதை எடுத்து தருவிராக! உமது மாதவிடாய் உமது கையில் இல்லையே என்று கூறினார்கள்.  (முஸ்லிம்: 716..)

இந்த ஹதீசிலிருந்து “ஆயிஷா (றழி) அவர்கள் பள்ளிக்குள் செல்லக் கூடாது என்று அறிந்து வைத்திருந்ததனாலே அப்படி கூறினர்” என்று கூறுவர். ஆனால் அனுமதிப்பவர்கள் நபிகளார் அனுமதியளித்தார்கள் என்று கூறுவார்கள்.

 أُمُّ عَطِيَّةَ، سَمِعْتُ النبي يَقُولُ: «يَخْرُجُ  فِي العِيدَيْنِ العَوَاتِقُ وَذَوَاتُ الخُدُورِ، أَوِ العَوَاتِقُ ذَوَاتُ الخُدُورِ، وَالحُيَّضُ، وَلْيَشْهَدْنَ الخَيْرَ، وَدَعْوَةَ المُؤْمِنِينَ، وَيَعْتَزِلُ الحُيَّضُ المُصَلَّى»، قَالَتْ حَفْصَةُ: فَقُلْتُ الحُيَّضُ، فَقَالَتْ: أَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ، وَكَذَا وَكَذَا  (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) திடலுக்கு சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்’  (புஹாரி: 324… முஸ்லிம்)

அனுமதிப்பவர்கள் தொழும் இடம் என்பதற்கு தொழுகை என்று கூறுவர், ஏனெனில் ஒருவர் தொழுது கொண்டிருக்க, மற்றொருவர் அமர்ந்திருப்பது ஒரே இடத்தில் அமர்ந்திருப்போருக்கு அழகல்ல.என்று கூறுவர்.

عن عَائِشَةَ قالت:  قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ، فَإِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٍ» (أبوداود)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மஸ்ஜிதை குளிப்பு கடமையநோருக்கும், மாதவிடாய் பெண்களுக்கும் ஹலாலாக்க மாட்டேன். (அபூதாவுத்: 232)

இது பலவீனமான செய்தியாகும், இதில் வரும் அப்லத் என்பவர் மஜ்ஹூலாக (அறியப்படாதவர்) இருக்கின்றார்.

அதனை அனுமதிப்பவர் முன்வைக்கும் ஆதாரங்கள்.

 عَنْ مَيْمُونَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” يُصَلِّي وَأَنَا حِذَاءَهُ، وَأَنَا حَائِضٌ، وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ، قَالَتْ: وَكَانَ يُصَلِّي عَلَى الخُمْرَةِ “( صحيح البخاري )

மைமூனா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும்போது, சில வேளை அவர்களின் ஆடை என் மீது படும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்”  (புஹாரி: 379, முஸ்லிம்)

 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: «اعْتَكَفَتْ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ مِنْ أَزْوَاجِهِ، فَكَانَتْ تَرَى الصُّفْرَةَ وَالْحُمْرَةَ، فَرُبَّمَا وَضَعْنَا الطَّسْتَ تَحْتَهَا، وَهِيَ تُصَلِّي»( سنن أبي داود)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரோடு அவர்களது மனைவிகளுள் ஒரவர் இஃதிகாப் இருந்தார், அவர் மஞ்ச, சிவப்பு நிற இரத்தத்தை காணுவார், (அவர் அதனை ஹைளாக கணிக்கவில்லை) சில நேரம் அவர் தொழும் போது நாம் அவருக்கு கீலால் பஞ்சு போன்றவற்றை வைப்போம்.  (அபூதாவுத்: 2476)

عَنْ عَائِشَةَ، أَنَّ وَلِيدَةً كَانَتْ سَوْدَاءَ لِحَيٍّ مِنَ العَرَبِ، فَأَعْتَقُوهَا، فَكَانَتْ مَعَهُمْ، قَالَتْ: «فَكَانَ لَهَا خِبَاءٌ فِي المَسْجِدِ – أَوْ حِفْشٌ -» ( صحيح البخاري )

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாத்திற்கு வந்த ஒரு பெண்ணுக்குப் பள்ளி வாசலில் கூடாரம் ஒன்று இருந்தது. அதிலிருந்து என்னிடம் வந்து அப்பெண் பேசிக் கொண்டிருப்பாள்.  (புஹாரி: 439)

عَنْ عَائِشَةَ، قَالَتْ: قال لي النبي:  فَافْعَلِي مَا يَفْعَلُ الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي» ( صحيح البخاري )

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்:   ‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள், அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘ஏனழுகிறாய்?’ என்று கேட்டார்கள். ‘இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன்’ என்றேன். ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அப்போது ‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாஹ்வை வலம்வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்’ என்று கூறினார்கள்”  (புஹாரி: 305…, முஸ்லிம்)

جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ،…..( صحيح البخاري )

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! …(புஹாரி: 335.. முஸ்லிம்)

இரண்டு ஆதாரங்களையும் பார்க்கும் போது தடுப்பதற்கு ஆதாரங்கள் தெளிவாக விளங்கவில்லை, மேலும் பள்ளிக்குள் தரித்திருப்பதை தடுத்த யாரும், கடந்து செல்வதை தடுக்கவில்லை என்ற அடிப்படையிலும் ஹராம் என்று சொல்லமுடியாது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

இவைகள் தவிர்ந்த எதனையும் தடுப்பதற்கு ஆதாரங்கள் வரவில்லை. அந்த அடிப்படையில் குர்ஆனைப் பிடிப்பது, ஓதுவது, திக்ருகள் செய்வது, நல்ல காரியங்களில் ஈடுபடுவது அனுமதிக்கப்பட்டதே.

 عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ القُرْآنَ وَرَأْسُهُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ»( صحيح البخاري )

ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள், நான் மாதவிடாயுடன் இருந்தபோது என் மடியில் தம் தலையை வைத்தபடி குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்கள். (புஹாரி: 7549, முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ قَالَتْ: «كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ»»( صحيح البخاري )

ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலையை நான் வாரிவிட்டிருக்கிறேன். (புஹாரி: 295, முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ قَالَتْ: وَكَانَ يَأْمُرُنِي النبي، فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ»( صحيح البخاري )

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்” (புஹாரி: 300, முஸ்லிம்)

இஸ்திஹாலா; தொடர் இரத்தப் போக்கும் அதன் சட்டமும்.

இஸ்திஹாலா என்பது; மாத விடாய், பிள்ளைப் பேற்று இரத்தம் ஆகியவற்றின் வழமையான காலம் கடந்து  இரத்தம் வெளிப்படுதல்.

இஸ்திஹாலா ஏற்பட்டவர், ஒவ்வொரு தொழுகைக்கும் அவ்விடத்தைக் கழுவிவிட்டு, பஞ்சு போன்றவற்றை வைத்து அவ்விடத்தை மறைத்துவிட்டு, வுழூ எடுத்தவராக,  தொழுவது கட்டாயம்.

عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ: قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَا أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ فَاتْرُكِي الصَّلاَةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا، فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي»( صحيح البخاري )

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்:’பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?’ என்று கேட்டதற்கு, ‘அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (புஹாரி:306)

عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» – قَالَ: وَقَالَ أَبِي: – «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ»( صحيح البخاري )

‘அபூ ஹுபைஷ் என்பவரின் மகள் பாத்திமா என்ற பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அதிகம் உதிரப்போக்குள்ள ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை! அது ஒருவித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையைவிட்டு விடு; அது நின்றுவிட்டால் இரத்தம் பட்டு இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ வுழூச்  செய்து கொள்’ என்றும் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்” (புஹாரி:228)

இறைவா நீயே உனது மார்க்கத்தில் எங்களுக்கு தெளிவைத் தந்து, அதை கடைபிடிக்கும் பாக்கியத்தையும் தருவாயாக!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *