பிக்ஹு -9; குளிப்பதற்கான ஒழுங்குமுறைகள்

குளிப்பதற்கான ஒழுங்குமுறைகள்

ஒரு மனிதன் கடமையான குளிப்பை நிறைவேற்றும் எண்ணத்துடன் முழு உடலையும் தண்ணீரால் கழுவினால் அவனது கடமை நீங்கிவிடும்.

ஆனாலும் அதற்கான ஒழுங்கு முறைகளை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள், அவற்றை கவனிப்பதன் மூலமே குளிப்பை வணக்கமாக்கலாம்.

ஒழுங்குமுறை பின்வருமாறு,

பாத்திரத்திற்குள் கையை நுழைக்க முன் வெளியில் கையை கழுவிவிட்டு, தொழுகைக்கு போன்று வுழூ செய்து கொள்ளல், ஆனால் கால் கழுவுவதை மாத்திரம் குளிப்புக்கு பின் வைத்துக்கொள்ளல். அதனையும் குளித்த இடத்தை மாற்றி கழுவுதல்.

عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وُضُوءهُ لِلصَّلاَةِ، غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ المَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ، فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الجَنَابَةِ» (صحيح البخاري)

நபிகளாரின் மனைவி மைமூனா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கால்களை விட்டுவிட்டு தொழுகைக்கு வுழூச் செய்வது போன்று வுழூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது”  (புஹாரி: 249, முஸ்லிம்) பாத்திரத்தில் கையை நுழைக்க முன் கையை வெளியில் கழுவுவார்கள், என்று முஸ்லிமில் வந்துள்ளது.

பிறகு இரு கைகளையும் தண்ணீரில் இட்டு, தலையை குடைந்து விட்டு, தலைக்கு ஆரம்பமாக மூன்று அள்ளுகள் ஊற்றுதல், அதிலும் வலதைக் கொண்டு ஆரம்பித்தல், பிறகு முழு உடலையும் கழுவுதல்.

عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي المَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ المَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ ” (صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்”  (புஹாரி: 248…முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صلّى الله عليه وسلم «إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، دَعَا بِشَيْءٍ نَحْوَ الحِلاَبِ، فَأَخَذَ بِكَفِّهِ، فَبَدَأَ بِشِقِّ رَأْسِهِ الأَيْمَنِ، ثُمَّ الأَيْسَرِ، فَقَالَ بِهِمَا عَلَى وَسَطِ رَأْسِهِ» (صحيح البخاري)

மற்றொரு அறிவிப்பில்; பாத்திரத்திலிருந்து தங்களின் கையில் அள்ளித் தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்” (புஹாரி: 258, முஸ்லிம்)

பெண்கள் தலையில் கொண்டை கட்டியிருந்தால் கடமையான குளிப்புக்காக அதனை அவிழ்க்க வேண்டியதில்லை.

عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي فَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ؟ قَالَ: «لَا. إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ». (صحيح مسلم)

உம்மு ஸலமா (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம், எனது தலையில் கொண்டை கட்டுபவளாக நான் இருக்கின்றேன், கடமையான குளிப்புக்காக அதனை நான் அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்க, தேவையில்லை, மாறாக உன் தலை மீது மூன்று அள்ளுகளை ஊற்றிவிட்டு, உடலுக்கு ஊற்று, நீ சுத்தமடைவாய். என்று கூறினார்கள்.  (முஸ்லிம்: 770)

عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ: بَلَغَ عَائِشَةَ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو يَأْمُرُ النِّسَاءَ إِذَا اغْتَسَلْنَ أَنْ يَنْقُضْنَ رُءُوسَهُنَّ. فَقَالَتْ: يَا عَجَبًا لِابْنِ عَمْرٍو هَذَا يَأْمُرُ النِّسَاءَ إِذَا اغْتَسَلْنَ أَنْ يَنْقُضْنَ رُءُوسَهُنَّ. أَفَلَا يَأْمُرُهُنَّ أَنْ يَحْلِقْنَ رُءُوسَهُنَّ، «لَقَدْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ. وَلَا أَزِيدُ عَلَى أَنْ أُفْرِغَ عَلَى رَأْسِي ثَلَاثَ إِفْرَاغَاتٍ» (صحيح مسلم)

இப்னு உமர் (றழி) அவர்கள், கடமையான குளிப்பின் போது தம் பெண்களுக்கு தலை முடியை அவிழ்க்க சொன்னதை கேள்விபட்ட ஆயிஷா (றழி) அவர்கள் அதனை கண்டித்தார்கள். (முஸ்லிம்: 773)

மக்கள் பார்வைக்குட்பட்ட இடங்களில் குளிக்கும் போது கட்டாயம் திரை போன்ற ஒன்றைக் கொண்டு தன்னை மறைக்க வேண்டும், ஆனால் தனிமையில், அறைகள் போன்றவற்றில் நிர்வாணமாக குளிப்பதில் தவறில்லை, ஆனால் அல்லாஹ்வே வெட்கப்படத் தகுதியானவன் என்ற அடிப்படையில் மறைத்துக் கொள்வதே சிறந்தது.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” كَانَتْ بَنُو إِسْرَائِيلَ يَغْتَسِلُونَ عُرَاةً، يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، وَكَانَ مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ وَحْدَهُ، فَقَالُوا: وَاللَّهِ مَا يَمْنَعُ مُوسَى أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلَّا أَنَّهُ آدَرُ، فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ، فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ، فَفَرَّ الحَجَرُ بِثَوْبِهِ، فَخَرَجَ مُوسَى فِي إِثْرِهِ، يَقُولُ: ثَوْبِي يَا حَجَرُ، حَتَّى نَظَرَتْ بَنُو إِسْرَائِيلَ إِلَى مُوسَى، فَقَالُوا: وَاللَّهِ مَا بِمُوسَى مِنْ بَأْسٍ، وَأَخَذَ ثَوْبَهُ، فَطَفِقَ بِالحَجَرِ ضَرْبًا ” (صحيح البخاري)

وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” بَيْنَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا، فَخَرَّ عَلَيْهِ جَرَادٌ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ أَيُّوبُ يَحْتَثِي فِي ثَوْبِهِ، فَنَادَاهُ رَبُّهُ: يَا أَيُّوبُ، أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى؟ قَالَ: بَلَى وَعِزَّتِكَ، وَلَكِنْ لاَ غِنَى بِي عَنْ بَرَكَتِكَ ” (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸா நபியும், அய்யூப் நபியும் நிர்வாணமாக குளித்தார்கள். (புஹாரி: 278, 279, முஸ்லிம்)

أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ: ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ تَسْتُرُهُ فَقَالَ: «مَنْ هَذِهِ؟» فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ  (صحيح البخاري)

 أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، حَدَّثَتْهُ أَنَّهُ لَمَّا كَانَ عَامُ الْفَتْحِ. أَتَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِأَعْلَى مَكَّةَ «قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى غُسْلِهِ، فَسَتَرَتْ عَلَيْهِ فَاطِمَةُ ثُمَّ أَخَذَ ثَوْبَهُ فَالْتَحَفَ بِهِ، …. (صحيح مسلم)

உம்மு ஹானிஃ (றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ‘மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை பாத்திமா(றழி) மறைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, நபி(ஸல்) (என்னைச் சுட்டிக்காட்டி) ‘இது யார்?’ என்று கேட்டார்கள். நான் உம்மு ஹானிஃ என்றேன்” (புஹாரி: 280, முஸ்லிம்) முஸ்லிமின் அறிவிப்பில் (791) ஒரு ஆடையால் மறைத்தார்கள், குளித்து முடிந்தவுடன் தனது ஆடையை எடுத்து சுத்திக் கொண்டார்கள். என்று வந்துள்ளது.

عَنْ مَيْمُونَةَ قَالَتْ: «سَتَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَغْتَسِلُ مِنَ الجَنَابَةِ،…………… (صحيح البخاري)

மைமூனா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளார் கடமையான குளிப்பு குளித்தார்கள், நான் அவர்களை மறைத்துக் கொண்டிருந்தேன்….(புஹாரி: 281)

 مُعَاوِيَةُ بْنُ حَيْدَةَ القُشَيْرِيُّ ……………قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا؟ قَالَ: «اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنَ النَّاسِ» (سنن أبي داود والترمذي)

முஆவியா (றழி) அவர்கள், தனிமையில் இருப்பவர் நிர்வாணமாக இருக்கலாமா? என்று நபிகளாரிடம் கேட்ட போது, அல்லாஹ்வே  வெட்கப்படத் தகுதியானவன். என்று நபியவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்: 4017, திர்மிதி: 2769)

தனிமையில் இருக்கும் போது நிர்வாணமாக குளிப்பதை தடை செய்து எந்த ஒரு ஹதீஸும் வரவில்லை என்பதோடு, மறைத்துக் கொள்வது சிறந்தது என்றே சொல்லலாம்.

குளிக்கும் போது தண்ணீரை வீன்விரையம் செய்யாதிருத்தல்.

أَنَسًا، يَقُولُ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ، أَوْ كَانَ يَغْتَسِلُ، بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ» (صحيح البخاري)

‘நபி(ஸல்) அவர்கள் நான்கு ‘முத்து’விலிருந்து ஐந்து ‘முத்து’ வரை உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு ‘முத்து’ அளவு தண்ணீரில் வுழூச் செய்வார்கள்” (புஹாரி: 201, முஸ்லிம்)

குளித்து முடிந்த பின் துடைக்கலாம் அதில் தவறில்லை.

مَيْمُونَةُ قَالَتْ: «صَبَبْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا، فَأَفْرَغَ بِيَمِينِهِ عَلَى يَسَارِهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ قَالَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا بِالتُّرَابِ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، وَأَفَاضَ عَلَى رَأْسِهِ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ أُتِيَ بِمِنْدِيلٍ فَلَمْ يَنْفُضْ بِهَا» (صحيح البخاري)

நபி (ஸல்) அவர்கள் குளித்து முடிந்தவுடன் மைமூனா (றழி) அவர்கள் துடைப்பதற்கு துணி வழங்கியபோது அதனை நபியவர்கள் பாவிக்கவில்லை. (புஹாரி: 259, முஸ்லிம்)

குளித்த பின் துடைப்பனை பாவிக்கும் வழமை நபிகளாரிடமிருந்ததாலே அதனை மைமூனா (றழி) அவர்கள் கொடுத்தார்கள், மேலும் நபிகளார் பாவிக்கவில்லை என்பதைத் தவிர, தடுக்கவில்லை.

சிறிய பாத்திரங்களிலும் கையை விட்டு அள்ளிக் குளிக்கலாம்.

عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ» (صحيح البخاري)

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நானும் நபி(ஸல்) அவர்களும் மூன்று அல்லு தண்ணீரைக் கொள்ளும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தில் மாறி மாறிச் செல்லும்”  (புஹாரி: 261.., முஸ்லிம்: 756)

கடமையான குளிப்புக்கு பின்னர் எஞ்சியிருக்கும் தண்ணீரை குளிக்கப் பயன்படுத்தலாம்.

ابْنَ عَبَّاسٍ : «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ بِفَضْلِ مَيْمُونَةَ» (صحيح مسلم )

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: மைமூனா (றழி) அவர்கள் குளித்து எஞ்சிய தண்ணீரில் நபியவர்கள் குளிப்பார்கள்.  (முஸ்லிம்: 760)

 முன்னாள் கூறப்பட்ட  நபிவழிக்கு உட்பட்ட செய்திகளை வைத்து, நமது குளிப்பையும் வணக்கமாக்கிக் கொள்ள முயல்வோம்!

                                                                                                                                                                                                                               

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

9

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *