அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -2

அல்குர்ஆனில் உள்ள சூராக்களின் சிறப்புகள்

ஸூரதுல் பத்ஹ் பற்றிய சிறப்புகள்

عَنْ أَنَسٍ، أَنَّهَا نَزَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرْجِعَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، وَأَصْحَابُهُ مُخَالِطُونَ (2) الْحُزْنَ وَالْكَآبَةَ، وَقَدْ حِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَنَاسِكِهِمْ (3) ، وَنَحَرُوا الْهَدْيَ بِالْحُدَيْبِيَةِ، {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} [الفتح: 1] إِلَى قَوْلِهِ: {صِرَاطًا مُسْتَقِيمًا} [النساء: 68] قَالَ: ” لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ آيَتَانِ، هُمَا أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا جَمِيعًا “. قَالَ: فَلَمَّا تَلَاهُمَا قَالَ رَجُلٌ: هَنِيئًا مَرِيئًا يَا نَبِيَّ اللهِ، قَدْ بَيَّنَ اللهُ لَكَ مَا يَفْعَلُ بِكَ، فَمَا يَفْعَلُ بِنَا، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ الْآيَةَ الَّتِي بَعْدَهَا: {لِيُدْخِلَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ} [الفتح: 5] حَتَّى خَتَمَ الْآيَةَ (4)

அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்; நபியவர்கள் ஹுதைபியாவிலிருந்து திறும்பும் போது ஸூரதுல் பத்ஹ் அத்தியாயம் முதல் இரு வசனங்களும் இறங்கியது, அந்த நேரம் நபித் தோழர்கள்,உம்ரா கடமை தடுக்கப்பட்டதற்காக மிருகத்தை அறுத்துப் பலியிட்ட நிலையில், கவலையோடும், கைசேதத்தோடும் இருந்தனர். நபியவர்கள் கூறினார்கள்: என் மீது இரு வசனங்கள் இறங்கியிருக்கின்றன, அவை முலு உலகத்தை விடவும் எனக்கு விருப்பமானதாகும். நபியவர்கள் அவற்றை ஓதிக்காட்டிய போது, ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு என்ன செய்வான் என்பதையும், எங்களுக்கு என்ன செய்வான் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டான். என்று கூற, அல்லாஹ் அதற்கு பின்னுள்ள  (ஐந்தாவது) வசனத்தை இறக்கிவைத்தான்.  (அஹ்மத்: 12374)

ஸூரா முல்க் பற்றிய சிறப்புகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: ” إِنَّ سُورَةً مِنَ الْقُرْآنِ، ثَلَاثُونَ آيَةً، شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِرَ لَهُ، وَهِيَ: {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} [الملك: 1] “

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்குர்ஆனில் ஒரு ஸுரா இருக்கின்றது, அது ஒரு மனிதனின் பாவம் மன்னிக்கப்படும் வரை பரிந்துரை செய்யும், அதுதான் ‘தபாரகல்லதீ பியதிஹில் முல்க்’ எனும் ஸூரா. (அஹ்மத்:7975, அபூதாவுத்:1400, திர்மிதீ: 2891,…)

இந்த ஹதீஸை சில அறிஞர்கள் ஸஹீஹ் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அதன் அறிவிப்பாளரான ‘அப்பாஸ் அல்ஜுஷமீ’ என்பவர் விமர்சிக்கப்பட்டவரே.அவர் அபூஹுரைராவிடம் கேட்டதாகவோ, அவரிடமிருந்து கதாதா கேட்டதற்கோ சான்றுகள் இல்லை என்பதே காரணம். அதே நேரம் அல்குர்ஆன் சிபாரிஸ் செய்யும் என்ற பொது ஹாதீஸின் அடிப்படையில் பலர் ஹஸனாக்கியுள்ளனர். (அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்)

عَنْ جَابِرٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ بِتَنْزِيلُ السَّجْدَةِ، وَبِتَبَارَكَ “

ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், தன்Zஸீலுஸ் சஜ்தாவையும், (32) தபாரகல்லதீ ஸூராவையும் (67) ஓதும் வரை தூங்கமாட்டார்கள்.  (அஹ்மத்:14659 , திர்மிதீ:2892)

இந்த ஹதீஸும் விமர்சனத்திற்கு உற்பட்டதே, ‘லைஸ் இப்னு அபீ ஸுலைம்’ என்பவர் பலவீனமானவராக இருக்கின்றார். மேலும் ஜாபிர் (றழி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ‘அபுZஸ்ஸுபைர்’ அவரிடமிருந்து அதனை கேட்கவில்லை. ஆனாலும் ‘அல்முகீரதுப்னு முஸ்லிம்’ என்பவர் ‘லைஸ்’ அவர்களுக்கு பகரம் அறிவித்திருக்கின்றார். மேலும் ‘அபுZஸ்ஸுபைர்’ அவர்களின் இடத்தில் ‘ஸப்வான்‘ எனும் அறிப்பாளார் ‘ஜாபிர் (றழி) அவர்களிடம் கேட்டுள்ளார் என்ற வகையில் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஹதீஸை ஸஹீஹாக்கியுள்ளனர்.

ஸூரா அல்காபிரூன் பற்றிய செய்திகள்

عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَوَيْتُ إِلَى فِرَاشِي، قَالَ: اقْرَأْ: قُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ

நௌபல் (றழி) அவர்கள் நபிகளாரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் படுக்கைக்கு வந்தால் ஓதுவத்ற்கு ஒரு செய்தியை சொல்லித்தாருங்கள். என்று கேட்க, நபியவர்கள்; நீ குல் யாஅய்யுஹல் காபிரூன் ஸூராவை (109) ஓது, ஏனெனில் அது ஷிர்க்கை விட்டும் நீக்குவதாகும். என்று கூறினார்கள்.  (அஹ்மத்: 23807,திர்மிதீ:3403)

இந்த ஹதீஸும் அறிவிப்பாளர்கள் வலுவானவர்களாக இருந்தாலும், அறிவிப்பாளர் தொடரில் தலம்பல் இடம்பெற்றுள்ளது. அபூ இஸ்ஹாக் அவர்களின் மாணவர்கள் பலவிதமாக மாற்றி அறிவித்துள்ளனர்.

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا زُلْزِلَتْ تَعْدِلُ نِصْفَ القُرْآنِ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ القُرْآنِ، وَقُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ تَعْدِلُ رُبُعَ القُرْآنِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதா Zஸுல்Zஸிலத் ஸூரா (99) குர்ஆனின் அரைவாசியாகும், குல்ஹுவல்லாஹு அஹத் மூன்றில் ஒரு பகுதியாகும், குல்யா அய்யுஹல் காபிரூன் நான்கில் ஒரு பகுதியாகும். (திர்மிதீ:2894)

இந்த ஹதீஸும் பலவீனமானதாகும், திர்மிதியின் அறிவிப்பில் ‘யமானிப்னுல் முகீரா’ என்பவர் இடம்பெருகின்றார், அவர் ‘முன்கருல் ஹதீஸ்’ ஹதீஸ் கலையில் விடப்பட்டவர்’ என்று விமர்சிக்கப்பட்டவர்.

أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ رُبُعُ الْقُرْآنِ، وَإِذَا زُلْزِلَتِ الْأَرْضُ رُبُعُ الْقُرْآنِ، وَإِذَا جَاءَ نَصْرُ اللهِ رُبُعُ الْقُرْآنِ “

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்காபிரூன், Zஸுல்Zஸிலத், அன்னஸ்ர் ஸூராக்கள் குர் ஆனின் நான்கில் ஒரு பகுதியாகும்.  (அஹ்மத்:12488)

இந்த ஹதீஸும் பலவீனமானதாகும், இதில் வரும் ‘ஸலமதுப்னு விர்தான்’ என்பவர் ‘நிராகரிக்கப்பட வேண்டியவர்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.

ஸுரா இக்லாஸின் சிறப்புகள்

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ القُرْآنِ»

அபூ ஸயீத் அல் குத்ரீ(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்’ என்று கூறினார்கள்.  (புஹாரி:5013)

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ ثُلُثَ القُرْآنِ فِي لَيْلَةٍ؟» فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ وَقَالُوا: أَيُّنَا يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «اللَّهُ الوَاحِدُ الصَّمَدُ ثُلُثُ القُرْآنِ»

அபூ ஸயீத் அல்குத்ரீ(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?’ என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், ‘எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்’ (என்று தொடங்கும் 112 வது ) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 5015, முஸ்லிம்)

عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ قَالَ: «قُلْ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي، وَحِينَ تُصْبِحُ، ثَلَاثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அப்துல்லாஹ்  (றழி) அவர்களுக்கு; நீ குல்ஹுவல்லாஹு அஹத் ஸூராவையும், பாதுகாப்பு தேடும் இரு ஸூராக்களையும் (அல்பலக்,அன்னாஸ்) காலையிலும், மாலையிலும் மூன்று தடவைகள் ஓதுவீராக, அது எல்லா வஸ்துகளை விட்டும் உன்னை காக்கும். என்று கூறினார்கள்.  (அபூதாவுத்: 5082, திர்மிதீ:3575)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ رَجُلاً يَقْرَأُ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَجَبَتْ. قُلْتُ: مَا وَجَبَتْ؟ قَالَ: الجَنَّةُ.

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபிகளாரோடு வந்துகொண்டிருந்தேன், அப்போது ஒரு மனிதர் குல்ஹுவல்லாஹு அஹத் ஸூராவை ஒதுவதை நபிகளார் கேட்டார்கள், அப்போது நபிகளார்;’கடமையாகிவிட்டது’ என்றார்கள். நான் ‘என்ன கடமையாகிவிட்டது?’ என்றேன், அதற்கு நபியவர்கள்; ‘சுவர்க்கம்’ என்றார்கள். (திர்மிதீ: 2897, நஸாஇ)

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ….. لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي: ” يَا عُقْبَةُ بْنَ عَامِرٍ، أَلَا أُعَلِّمُكَ سُوَرًا مَا أُنْزِلَتْ فِي التَّوْرَاةِ وَلَا فِي الزَّبُورِ وَلَا فِي الْإِنْجِيلِ وَلَا فِي الْفُرْقَانِ مِثْلُهُنَّ، لَا يَأْتِيَنَّ عَلَيْكَ لَيْلَةٌ إِلَّا قَرَأْتَهُنَّ فِيهَا: قُلْ هُوَ اللهُ أَحَدٌ وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ “

உக்பதுப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபிகளாரை சந்தித்தேன், அப்போது நபியவர்கள், உக்பாவே! தவ்ராத்திலோ. Zஸபூரிலோ, இன்ஞீலிலோ, அல்குர்ஆனிலோ இறக்கப்படாதது போன்ற சில ஸுராக்களைக் கற்றுத் தரட்டுமா! எந்த இரவையும் தவரவிடாமல் நீ ஓதுவாயாக, அவை ‘குல்ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் பலக், குல் அஊது பிரப்பின்நாஸ்’ ஸூராக்கலாகும்.  (அஹ்மத்: 17452)

مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَرَأَ: قُلْ هُوَ اللهُ أَحَدٌ حَتَّى يَخْتِمَهَا عَشْرَ مَرَّاتٍ، بَنَى اللهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ “

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது குல்ஹுவல்லாஹு அஹத் ஸூராவை முடியும் வரை பத்து விடுத்தங்கள் ஓதினால், அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாலிகையை கட்டுவான்.  (அஹ்மத்: 15610)

பலவீனமானது  இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரும் ‘ஸஹ்ல் பின் முஆத், Zஸப்பான் பின் பாஇத்’ போன்றோர் பலவீனமானவர்கள், முன்கருல் அஹாதீஸ்‘ நீராகரிக்கப்படவேண்டியவற்றை அறிவிப்போர்’ என்று விமர்சிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ‘ரிஷ்தீன், இப்னு லஹீஅஹ்’ போன்ரோர் பலவீனமானவர்களாவர்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أُحِبُّ هَذِهِ السُّورَةَ: قُلْ هُوَ اللهُ أَحَدٌ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حُبُّكَ إِيَّاهَا أَدْخَلَكَ الْجَنَّةَ “

அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து,நான் குல் ஹுவல்லாஹு அஹத் ஸூராவை நேசிக்கின்றேன். என்று கூறினார். அதற்கு நபியவர்கள்: நீ அதனை நேசிப்பது உன்னை சுவனத்தில் நுலைவிக்கும். என்று கூறினார்கள்.  (அஹ்மத்: 12432) இந்த அறிவிப்பாளர் தொடரில் முபார்க் இப்னு புலாலா’ என்பவர் வருகின்றார், அவர் முதல்லிசாக இருப்பதுடன், ;அன்; என்றே அறிவிப்பும் செய்திருக்கின்றார்.அதேநேரம் அஹ்மதின் (12433) இலக்க ஹதீஸில் அவர் நேர்டியாக கேட்டதாக’ பதிவு செய்துள்ளார், எனவே அது ஸஹீஹாகும். மேலும் திர்மிதியின் (2901) (புஹாரி சுருக்கச் செய்தி) அறிவிப்பில்;

ஒருவர் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் அதனை திறுப்பித் திறுப்பி ஓதினார், தோழர்கள் தடுத்தும் அவர் அப்படியே செய்தார், பிறகு நபிகளாரிடம் செய்தி வரவே, நபிகளார் காரணம் கேட்க, அதனை அவர் நேசிப்பதாக கூறினார், அப்போது நபிகளார்; நீ அதனை நேசிப்பது உன்னை சுவனத்தில் நுலைவிக்கும். என்று கூறினார்கள். என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரும் விமர்சிக்கப்பட்டதே.அதன் அறிவிப்பாளரான ‘அப்துல் அஸீஸ் பின்முஹம்மத், இஸ்மாஈல் பின் அபீ உவைஸ்’ என்போர் பலவீனமானவர்களாவர்.

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَ، أَوْ أُنْزِلَتْ عَلَيَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ، الْمُعَوِّذَتَيْنِ».

உக்பதுப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் எனக்கு கூறினார்கள்; எனக்கு சில வசனங்கள் இறங்கியுள்ளன, அவை போன்று எதுவும் இல்லை, அவை அல்முஅவ்விததான். (குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின் நாஸ்.)  (முஸ்லிம்: 1928)

عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ مِنْ عَيْنِ الْجَانِّ، وَعَيْنِ الْإِنْسِ، فَلَمَّا نَزَلَتِ الْمُعَوِّذَتَانِ أَخَذَ بِهِمَا، وَتَرَكَ مَا سِوَى ذَلِكَ “

அபூ சஈத் அல்குத்ரீ (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மனித, ஜின்களின் கன்னூரிலிருந்து (பல வழிகளில்) பாதுகாப்பு தேடுபவர்களாக இருந்தார்கள், முஅவ்விசதான்கள் (அல்பலக், அந்நாஸ் ஆகிய சூராக்கள்) இறங்கியவுடன்  அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டு ஏனையவைகளை விட்டுவிட்டார்கள்.  (நசாஇ: 5494, இப்னுமாஜா)

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفُثُ، فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا»

ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் தன் மீது முஅவ்விசாத்துகளை (அல் இக்லாஸ், அல்பலக், அந்நாஸ்) ஓதி, ஊதுவார்கள். அவர்களுக்கு நோய் கடுமையான போது நான் அவர்கள் மீது ஓதி, பரக்கத்தை எதிர்பார்த்தவளாக அவர்களது கையைக் கொண்டே தடவிவிட்டேன். (புஹாரி: 5016, முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ: ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ، ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَقُلْ أَعُوذُ بِرَبِّ الفَلَقِ وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ، يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ “

ஆயிஷா(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அவ்விரண்டிலும் ஊதிவிட்டு, அவற்றில்  ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் பலக்’, ‘ குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி, பிறகு தம் இரண்டு கைகளால் தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.  (புஹாரி: 5017, 6319)

இன்ஷா அல்லாஹ் தொடரும் ! பகுதி 3

Related Posts

2 thoughts on “அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பலவீனங்களும் -2

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதர் முர்ஷித் அவர்களுக்கு இந்தக் கலர் சரியாக விளங்குகிறது இல்லை எனவே கலரை மாற்றிப் போட்டால் படிப்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    1. ஜசாகல்லாஹு கைரா< அல்லாஹ் உங்கள் வாழ்வில் பரகத் செய்யட்டும்

Leave a Reply to admin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *