அகீதா-8 மௌலிதுகள்

மௌலிதுகள் படிப்பதன் மூலமும் மறைவு ஞானம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click   click

A- சுப்ஹான மௌலிது

சுப்ஹான மௌலிது படிப்பவர்கள் அஷ்ரகல் பத்ரூ அலைனா என்ற பாடலை படிக்கும் போது எழுந்து கை கட்டி நிற்கின்றனர், காரணம் நபிகளார் அந்த மஜ்லிசுக்கு வருகின்றார்களாம். அப்படியென்றால் மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நபி (ஸல் ) அவர்களுக்கு எங்கெல்லாம் சுப்ஹான மௌலித் படிக்கின்றார்கள், யாரெல்லாம் படிக்கின்றார்கள் என்ற அறிவு இருப்பதாக நினைக்கின்றனர். இதுவே அப்பட்டமான ஷிர்க்காக அமைந்துவிடும்.

***குறிப்பு: இதனை கூறும்போது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறினால் அது நபிகளாருக்கு தெரியும் அல்லவா, அதுபோன்றே இதனையும் அறிகின்றனர் என்ற ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். இது உண்மையில் தவராகும், காரணம் நபி (ஸல்) அவர்கள் ஸலவாத் சொல்வதை சுயமாக அறிவதுமில்லை, பதில் சொல்வதற்கு அந்த மனிதரைத் தேடி வருவதுமில்லை. மாறாக அதனை எத்திவைப்பதற்காக சில மலக்குமார்களை வைத்து, அதன் மூலமே நபிகளாரின் கப்ருக்கு அதனை அல்லாஹ் எத்திவைக்கின்றான், நபிகளாராக சுயமாக மறைவு ஞானத்தால் அறியவில்லை.

  • நபி (ஸால்) அவர்கள் கூறினார்கள்: உங்களது நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும், எனவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள், ஏனெனில் உங்களது ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.’ என்று கூற நபித் தோழர்கள்: அல்லாஹ்வின் தூதரே நீங்கள் உக்கிப்போன பிறகு எப்படி எடுத்துக் காட்டப்படும்?. என்று கேட்க, ‘நபிமார்களின் உடல்களை அல்லாஹ் பூமிக்கு ஹராமாக்கி இருக்கின்றான்.’ என்று நபிகளார் கூறினார்கள்.  (அஹ்மத், அபூதாவுத், நஸாஇ)
  • நபி (ஸல்) கூறினார்கள்: உங்களது வீடுகளை கப்ருகளாக ஆக்காதீர்கள், மேலு எனது கப்ரை விழாக் கொண்டாடும் இடமாக ஆக்காதீர்கள், என்மீது நீங்கள் ஸலவாத் சொல்லுங்கள், ஏனெனில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது ஸலவாத் எனக்கு வந்து சேரும்.  (அபூதாவுத்)

ஒரு அறிவிப்பில் எடுத்த்க்காட்டப்படும் என்றும், அடுத்த அறிவிப்பில் என்னை வந்து சேரும் என்று வந்துள்ளதே அல்லாமல், நான் அறிவேன் என்றோ, எனக்குத் தெரியும் என்றோ கூறவில்லை நபிகளார். அப்படியென்றால் எப்படி நபிகளாருக்கு சென்றடையும்? மலக்கு மார்கள் மூலமே.

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு பூமியில் சுத்திக் கொண்டிருக்கும் சில மலக்குமார்கள் இருக்கின்றனர், அவர்கள் என் உம்மத்திடமிருந்து ஸலாமை எனக்கு எத்திவைக்கின்றனர்.  (அஹ்மத், நஸாஇ)

எனவே நாம் எங்கிருந்து ஸலவாத் சொன்னாலும் அதனை அந்த மலக்குமார்கள் உடனே நபிகளாருக்கு எத்திவைக்கின்றனர், மேலும் நாம் எங்கிருந்தும் அதனை சொல்லலாம், மாறாக ஹஜ் உம்ராவுக்கு செல்பவர்களிடம் ‘எனது ஸலவாத்தை நபிகளாருக்க் சொல்லிவிடுங்கள்’ என்றெல்லாம் கூறத் தேவையில்லை, நபிகளார் அப்படி சொல்லவுமில்லை.மேலும் நபிகளார் அவர்களது கப்ரை விழாக் கொண்டாடும் இடமாக ஆக்கவேண்டாம் என்று கூறியிருபதனால் ஸலவாத் சொல்லவென கப்ரை நாடிச் செல்லவும் தேவையில்லை, அதற்காக பயணம் மேட்கொல்லவும் தேவையில்லை. இதனைப் புறிந்து நாம் செயற்பட முயற்சிக்கவேண்டும்.

மேலும் ஸுப்ஹான மௌலிதின் அஷ்ரகல் பத்ரூ அலைனா என்ற பாடலில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து ‘நீர் ரகஸியத்தையும், அதைவிடவும் மறைவான (உள்ளத்தில் ஊசலாடுவ) தையும் அறியக்குடியவர். என்று வந்துள்ளது.

மேலும் அல்லாஹு காலிகுனா என்ற பாடலில், ‘எனக்கு காரண காரியங்கள் கைகூடவில்லை, எனவே இந்த வாசலை நோக்கிவந்தேன், அதன் படிகளை முத்தமிடுகின்றேன், நேசர்களின் பொறுத்தத்தை தேடுகின்றேன்.’ என்று வந்துள்ளது. ஏன் நபிகளாரின் கப்ரு தேடிச் சென்று, அதன் படியை முத்தமிட்டு, முறைப்படு செய்யவேண்டும். இப்படி ஸுப்ஹான மௌலிது இறை அதிகாரத்தை நபிகளாருக்கு வளங்குகின்றது.

புர்தா என்ற காவியத்தை எடுத்து நோக்கின், அதில் நபிகளாரைப் பார்த்து, ‘நபியே உம்மிடம் லௌஹுல் மஹ்பூலில் எழுதுகோள் எழுதிய அறிவு இருக்கின்றது.’ என்று தெட்டத் தெளிவாக அந்த அதிகார்மம் நபிகளாருக்கு வளங்கப்படுகின்றது.

B- முஹியத்தீன் மௌலிது:-

இந்த பாடல்களை எடுத்து நோக்கினால் முஹியத்தீன் என்ற மனிதருக்கு மறைவானவற்றை அறிகின்ற ஆற்றல் பகிரங்கமாக பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

அம்மத் பவாலிலுஹூ என்ற பாடலுக்கான விளக்கத்தின் ஆரம்பத்தில், ‘முன்னோர்களில் ஒருவர் முஹியத்தீன் பிறப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன், ‘எனது கால் அனைத்து இறை நேசர்களின் பிடரிக்கு மேல் இருக்கின்றது.’ என்று கூறுமாறு முஹியத்தீன் ஏவப்படுவார்.’ என்று இல்ஹாம் வாயிலாக குறினாராம். அது அப்படியே நடந்ததாம்.

மேலும் அதே விளக்கத்தில், ஒரு நாள் முஹியத்தீன் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, இரண்டு சத்தம் விட்டுவிட்டு தனது இரு பாதணிகளுள் ஒன்றை எறிந்துவிட்டாராம், யாருமே ஏன் என்று கேட்க துணிவு பெறவில்லையாம், பிறகு அரேபியரல்லாத ஒரு வணிகக்கூட்டம் முஹியத்தீன் அவர்களுக்கு வைத்த நேர்ச்சைப் பொருட்களான தங்கம் ஆடை போன்றவற்றோடு அங்கு வந்ததாம், அவர்களிடம் அந்த பாதணி இருந்ததாம், விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘நாங்கள் வரும் போது சில மனிதர்கள் எங்களுக்கு எதிராக வந்து, எங்களில் சிலரை கொன்றுவிட்டு, எங்களோடிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர், அப்போது நாம் ‘ஷைக் அவர்களுக்கு ஏதாவது நேர்ந்த்தால் நன்றாக இருக்குமே என்று கூறி இரண்டு வார்த்தைகளைக் கூறினோம், அப்போது இரண்டு சத்தங்களைக் கேட்டோம், அப்போது அவர்களில் முதன்மை வகித்த இரண்டு அறபுகளும் கொல்லப்பட்டிருந்தனர், அவர்கள் இரண்டு பேரிடமும் இது இருந்தது என்று கூறினார்களாம்.

ஸஃதைக யாதல் கரம் என்ற பாடலுக்கான விளக்கத்தில் முஹியத்தீன் அவர்கள் தன் சேவகர் கலிர் எனபவருக்கு ‘நீ மௌஸில் என்ற ஊறுக்கு போ, உனக்கு உள்ள சந்ததியில் முதலாவதாக ஒரு ஆண் குழந்தை பிறக்கும், அவரது பெயர் முஹம்மத் என்பதாகும், அவருக்கு அரபியல்லாத கண் தெரியாத, அலீ என்பவர் ஏழு மாதங்களில் குர்ஆனை கற்றுக் கொடுப்பார், உனது மகன் ஏழு வயதாக இருக்கும் போது சந்தேகமின்றி குர்ஆனை மனனம் செய்து முடிப்பார், என்று கூறிவிட்டு, மேலும் நீ தொன்னூற்றி நான்கு வருடங்களும், ஒரு மாதமும், ஏழு நாட்களும் ஆபத்துக்கள் இன்றி வாள்ந்து, பாபில் என்ற பகுதியில் மரணிப்பாய். என்றும் கூறினார்களாம். அவை அனைத்தும் ஏற்ற தாழ்வுகளின்றி அப்படியே நடந்ததாம். என்று எழுதப்பட்டுள்ளது.

அதைவிட ஆச்சர்யத்தைப் பாருங்கள், அவர்களது தாய் பாதிமா அவர்கள் கூறினார்களாம்: முஹியத்தீன் குழந்தையாக இருக்கும் போது ரமழானின் பகல் பொழுதுகளில் பால் குடிக்கமாட்டாராம், ஒரு வருடம் பிறை பார்க்க முடியாமல் மேக மூட்டம் ஏற்பட்டதாம், அதைப் பற்றி என்னிடம் மக்கள் கேட்டனர், அவர்களுக்கு நான் ‘இன்றைய தினம் அவர் மார்பகத்தில் பால் குடிக்கவே இல்லை.’ என்று கூறினேன். பின்பு அந்த நாள் ரமழான் மாதத்தில் உள்ளது என்பது தெளிவானது. என்று அம்மத் மினல் பர்ரில் ஜவாத் என்ற பாடலின் விளக்கத்தில் எழுதிவைத்துள்ளனர்.

மேலும் முஹியத்தீன் அவர்கள் கூறினார்களாம்: மார்க்கம் என்ற கடிவாலம் எனது நாவுக்கு இல்லையென்றால், நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்கள், உங்களது வீடுகளில் என்ன செய்கின்றீர்கள் என்பதை நான் அறிவித்துவிடுவேன், மேலும் எனக்கு முன்னே நீங்கள் கண்ணாடிக் குவழைகளைப் போன்றவர்கள், உங்களது உள்ளங்களில் என்ன இருக்கின்றது என்பதனை நான் பார்க்கின்றேன். இப்படி யா ஜுனூதஸ் ஸாகிரீனா என்ற பாடலில் எழுத்யுள்ளனர்.

இப்படி ஏறாலமான கதைகளை முஹியத்தீன் மௌலிதில் பார்க்க முடியும் அனைத்தும் மறைவு ஞானத்தை இறை அதிகாரத்தை முஹியத்தீன் அவர்களுக்கு கொடுக்கக்கூடியதாகவே உள்ளன.

யாகுத்பா என்ற பாடல் புத்தகத்தை (முஹியத்தீன் அவர்களை புகழ்ந்து பாடப்பட்டது) பார்த்தால் அது முளுக்கவுமே ஷிர்க்காகவே காணப்படுகின்றது, அதில் பாருங்கள் எப்படி மரணித்த முஹியத்தின் அவர்களுக்கு மறைவான வற்றை அறிகின்ற ஆற்றலை கொடுத்திருக்கின்றார்கள் என்பதை.அவர் கூறியதாக: யார் தனிமையில் இருந்தவராக, உறுதியான எண்ணத்தோடு, மரதியின்றி, எனது பெயரை ஆயிரம் விடுத்தம் அழைக்கின்றாரோ, அவருக்கு நான் அவசரமாக பதில் அளிக்கின்றேன், எனவே அவன் அப்துல் காதர் முஹியத்தீனே என்று பன்னிரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு அழைக்கட்டும், என்று எழுதி வைத்துள்ளார்கள்.

C- ஷைகு தாவுத் மௌலித்:

இதனை எடுத்துப் பார்த்தாலும் ஏராலமான ஷிர்க்குகள் காணப்படுகின்றன.

ஸதகதுல்லாஹ் லெப்பே என்பவர் கூறுகின்றார்: அவருக்கு ஷைகு தாவுத் அவர்கள் வழியா என்ற சந்தேகம் ஏற்பட்டதாம்,பிறகு அவரது கபுரடிக்குச் சென்று அவருக்காக குர்ஆனிலிருந்து எதனையும் ஓதாமல் தூங்கிவிட்டாராம், பின்பு ஷைகு தாவுத் அவர்கள் தனது சேவகனுக்கு, இவரை கடுமையாக பிடியும் என்று கூறுவதை கனவில் கண்டாராம், உடனே அவரது வயிறு புடைத்து வீங்கிவிட்டதாம், அவர் ஷைகிடம் ‘ஏன் நீங்கள் இப்படி தங்களது காதிமுக்கு ஏவினீர்கள்?’ என்று கேட்க, அவர் ‘ நீ என்னைப் பற்றி தப்பெண்ணம் கொண்டுவிட்டாய்.’ என்று கூறினாராம்.

மேலும் அவரது தோழர் ஒருவர் கூறுகின்றார்: அவருக்கு கடுமையான ஒரு நோய் ஏட்பட்டு, அவரது நாவும் தாகத்தினால் வரண்டு போனதாம், உடனே தனது ஷைகின் கபுரடிக்கு நோயை முறைப்பாடு செய்வதற்காக   வந்து, அங்கே தூங்கிவிட்டாராம், அவரது ஷைகு அவரது வாயில் ஒரு ஈத்தங் குளையை வைப்பதைக் கண்டாராம், கண்விளித்துப் பார்த்தபோது அவரது வாயில் குளை தொங்கிக் கொண்டிருந்ததாம். எப்படி அல்லாஹ் இந்த ஷைகின் இரக்கத்தின் மூலம் தாகத்தைப் போக்கினான். என்று எழுதி வைத்துள்ளார்கள்.

D- பத்ரு மௌலித்:

இதனை தேடிப் பார்த்தாலும் அதிலும் ஷிர்க் நிறைந்து காணப்படுகின்றது. இதில் எப்படி இறை அதிகாரம் மறைவு ஞானம் பகிர்ந்தளிக்கப்படுகின்றது என்று பார்ப்போம்.

அதில் எழுதி வைத்திருக்கின்றார்கள்: இதனை பயனிகள் தம் வசம் வைத்திருந்தால், அல்லது படித்தால் பத்ரு ஸஹாபாக்கள் அவர்களது பொறுட்களைப் பாதுகாக்க வருவார்களாம்.

மேலும் ஹஜ்ஜுக்கு செல்ல நாடிய சிலர் பத்ரு ஸஹாபாக்களின் பெயரை எழுதி அதனை வீட்டு வாசலில் வைத்துவிட்டு போனார்களாம், அந்த வீட்டுக்கு திருடர்கள் வந்தார்களாம், அந்த வீட்டு கூறைக்கு ஏறியபோது வீட்டுக்குள் பேச்சு சத்தமும் வாழ் வீசும் சத்தமும் கேட்டதாம், இரண்டாவது மூன்றாவது நாட்களும் இப்படி நடந்ததாம், கல்வர்களின் தலைவன் வீட்டுக் காரரிடம் காரணம் கேட்டபோது, நான் வலா யஊதுஹூ ஹிப்லுஹுமா என்றும் அதனோடு பத்ரு ஸஹாபாக்களின் பெயர்களையும் எழுதி வைத்தேன். என்று கூறினாராம்.

பாருங்கள்! பத்ரில் கலந்து கொண்ட எத்தனையோ ஸஹாபாக்கள் உயிரோடு உஹதில் கலந்து கொண்டார்கள் அவர்களால் மனித சக்திகளுக்கு அப்பால் எதுவும் செய்ய முடியவில்லை எனும் போது அவர்கள் மரணித்த பின்பு எப்படி எந்த வீட்டில் பத்ர் மௌலிது ஓதப்படுகின்றது, எங்கு அந்த புத்தகம் இருக்கின்றது என்று அறிந்து கொண்டார்கள். இதனை மாத்திரம் முஸ்லிம் சமூகம் சிந்தித்திருந்தால் நேர்வழி பெற்றிருப்பார்கள்.

இப்படி மௌலிது காவியங்களை எடுத்து நோக்கினால் அல்லாஹ்வுக்குள்ள எல்லா அதிகாரங்களும் பறித்தெடுக்கப்பட்டு படைப்பினங்களுக்கு வளங்கப்படுவதைப் பார்க்கலாம். இந்த தொகுப்பில் மறைவான அறிவோடு சார்ந்த உதாரணங்களையே சுறுக்கமாக தொகுத்துள்ளேன்.

உண்மையில் முஸ்லிம்கள் இந்த அளவுக்கு கறுத்தை விளங்கி அவற்றை பாடியிருந்தால் எப்போதோ அவற்றை கிழித்து எறிந்திருப்பார்கள், அவை அறபியில் இருப்பதனால் கவனக் குறைவாக ஓதுகின்றார்கள், எமது கடமை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதே.

மேலும் தெளிவு கிடைத்த பிறகும் பிடிவாதமாக செய்தால் அது தெளிவான ஷிர்க்காகவே அமையும் அல்லாஹ்வே எம்மை இந்த ஷிர்க்கு காவியங்களிலிருந்த்து காப்பாற்றவேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *