அகீதா-7 ராசிபலனை நம்புவது

ராசிபலனை நம்புவது:

வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click

வானில் தென்படும் நட்சத்திரங்களை வடிவங்களை, தோற்றங்களை வைத்து ஒரு சில முடிவுகளை எடுப்பது.

 நட்சத்திரங்களை வைத்து எதிர் காலங்களில் நடக்கும் ஒன்றையோ, மறைவன ஒன்றையோ அறிய முயற்சிப்பது, அதனடிப்படையில் வரும் முடிவை ஏற்பது இறை அதிகாரங்களை படைப்பினத்துக்கு வழங்கும் ஷிர்க்கை ஏற்படுத்தும் காரியங்களுல் ஒன்றாகும்.

 அதிலும் விஷேடமாக நட்சத்திரங்களை வைத்து மலை பொழிவதைத் தீர்மானிப்பது, பொழிந்த மலைக்கு அவற்றை காரணமாக காட்டுவது அனைத்தும் ஷிர்க்கை ஏற்படுத்தும் விடையங்களாகும்.

  • சைத்பின் காலித் அல்ஜுஹனீ (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியாவில், மலை பொழிந்த ஒரு இரவைத் தொடர்ந்த ஸுபஹ் தொழுகையை தொழுவித்துவிட்டு திறும்பி மக்கலை நோக்கி, ‘உங்கள் நாயன் என்ன சொன்னான் என்பது உங்களுக்கு தெரியுமா?’ என்று கேட்க, அவர்கள் ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள்.’ என்றனர். அப்போது நபியவர்கள் ‘எனது அடியார்களில் சிலர் முஃமினாகவும், சிலர் காபிராகவும் காலை நேரத்தை அடைந்துவிட்டனர், யார் அல்லாஹ்வின் சிறப்பினாலும் அவனது கிறுபையாலும் எங்களுக்கு மலை பொழிந்தது.’ என்றரோ அவர் என்னை ஏற்ற முஃமினும் நட்சத்திரத்தை மறுத்த காபிருமாவார், மேலும் யார் ‘இன்னின்ன நட்சத்திரத்தால் மலை பொழிந்தது’ என்றாரோ அவர் என்னை மறுத்து நட்சத்திரத்தை நம்பிய முஃமினாவார்.’ என்று அல்லாஹ் கூறியதாக கூறினார்கள்.  (புஹாரி, முஸ்லிம்)

مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எனது உம்மத்தில் மடமைக்கால விடையத்திலிருந்து நான்கு விடையங்கள் இருக்கின்றன, அவற்றை அவர்கள் விடவும்மாட்டார்கள்: வமிசங்களில் பெறுமைக்கொள்வதும், பரம்பரையில் குறை சொல்வதும், நட்சத்திரங்களை வைத்து மலை தேடுவதும், ஒப்பாரியிடுவதுமாகும்.’……..(முஸ்லிம்)

***குறிப்பு: மலை பொழிவதென்பது அல்லாஹ்வின் நாட்டப்படியே அல்லாமல் அதில் எந்தப் படைப்பினமும் சம்பந்தப்படமுடியாது, ஒரு நல்லடியாரின் வருகை, கெட்டவனின் அழிவு, குறிப்பிட்ட ஒரு நிகழ்வு என்று அல்லாஹ்வின் நாட்டத்தை விட்டு வேறு காரணங்களுக்கு செல்லக்கூடாது. ஏனெனில் மலை என்பதை அல்லாஹ் தானே றப்பு என்பதனை நிரூபிப்பதற்கு வைத்துள்ளான், அதில் யாரையும் எதனையும் கூட்டு சேர்க்கக்கூடாது.

 நட்சத்திரங்களை வைத்து ஒரு மனிதன் திசைகளை, வழிகளை அறியமுடியும், நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட நோக்கங்களுல் அதுவும் ஒன்றாகும்.

  • அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள். அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.  (6:97)
  • அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.  (67:5)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *