ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-12

ஜனாசாக்களை அடக்கம்செய்வது.

ஓரு ஜனாசாவுக்கு ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமைகளுல் அடக்கம் செய்வது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் காபிர்களைகூட நபிகளார் குழிக்குள் அடக்கியிருக்கின்றார்கள்.  (புஹாரி , முஸ்லிம்)

ஜனாசாக்களை அடக்கம்செய்யும்பொது மய்யவாடிகளில் அடக்குவதே நபிவழியாக இருந்துள்ளது, அந்த அடிப்படையில் பொது இடங்களில் அடக்கம்செய்யாமல் மய்யவாடிகளில் செய்யவேண்டும். ஆனால் யுத்தகளங்களில் மரணித்தவர்களை அங்கேயே அடக்குவதும் நபிவழியாக இருந்துள்ளது. எனவே வீட்டுக்குள் அடக்குவதோ பள்ளிக்குள் அடக்குவதோ தவிர்க்கப்பட வேண்டும். இதனால் பல ஷிர்க்கான விடயங்கள் தோற்றுவிக்கப்படுவதற்கும் அது காரணமாக இருக்கும்.

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்கள் தொழுகைகளில் ஒரு பகுதியை வீடுகளில் வைத்துக்கொள்ளுங்கள், மாறாக அவற்றை கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள். (புஹாரி,  முஸ்லிம்)

இதிலிருந்து வீட்டுக்குள் ஜனாசாக்களை அடக்கமுடியாது என்பது தெளிவா கின்றது.

  • நபி (ஸல்) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும்போது,: ‘அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக, அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தளங்களை வணக்கஸ் தளங்களாக (மஸ்ஜித்களாக) ஆக்கினார்கள்.’ என்று சொல்வார்களாம்.  (புஹாரி,  முஸ்லிம்)

குறிப்பு: இன்றும் பள்ளிகளுக்கு பக்கத்தில், அல்லது பள்ளிக்குள் குறிப்பிட்டவர்களை அடக்கும் ஒரு நிலை காணப்படுகின்றது அது நபிவழிக்கு முரனானதும், கண்டிக்கப்பட்டதுமாகும்.

நிர்ப்பந்தமின்றி மூன்று நேரங்களில் ஜனாசாக்களை அடக்குவது கூடாது.

  • உக்பதுப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: மூன்று நேரங்கள் இருக்கின்றன அவற்றில் நாங்கள் தொழுவதையும், எங்கள்  ஜனாசாகளை அடக்கம் செய்வதையும் தடுத்தார்கள்.  சூரியன் உதிக்கும் நேரம் அது உயரும்வரை, சூரியன் நடுஉச்சியில் நிற்கும் நேரம் அது சாயும் வரை, சூரியன் மறைவதற்கு நெருங்கும் போது, அது மறையும்வரை.’  (முஸ்லிம்)

இரவையில் அடக்குவதும் நபிகளாரால் கண்டிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், நபிகளார் காலத்திலே இரவில் அடக்கம் செய்யப்பட்டு நபிகளார் கண்டிக்காத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன, எனவே கண்டிப்பை முற்படுத்தி முக்கிய தேவைக்கின்றி இரவில் அடக்காமல் ஒருப்பதே சிறந்தது.

  • நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் பிரசங்கம் செய்தார்கள். (அப்போது) தனது தோழர்களில் ஒரு மனிதர் இறப்பெய்தி, பற்றாத கபன் அவருக்கு இடப்பட்டு இரவில் அடக்கமும் செய்விக்கப்பட்டு விட்டார் என்ற (விஷயத்தை) கூறிவிட்டு (இரவில் ஒரு மனிதர் இறப்பெய்திவிட்டால்) அவருக்கு தொழுகை நடத்தப்படும் வரை (இரவிலேயே) அடக்கப்படுவதைக் கண்டித்தார்கள். அவ்வாறு செய்ய (எந்த) மனிதராவது நிர்ப்பந்திக்கப்பட்டாலே தவிர.  ‘உங்களில் ஒருவர் தன் சகோதரருக்கு கபனிட்டால் அவரது கபனை (பற்றாக் குறையாக இடாது, நிறைவாக) அழகாக இடவும்‘ எனவும் கூறினார்கள். (முஸ்லிம்: 469)  அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரளி) அவர்கள்.
  • இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இரவில் அடக்கம் செய்யப்பட்டவரின் கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், ‘இது அடக்கம் செய்யப்பட்டது எப்போது?’ எனக் கேட்டார்கள். தோழர்கள் ‘நேற்றிரவு தான்’ என்றதும். ‘எனக்கும் சொல்லியனுப் பியிருக்கக் கூடாதா?’ எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், ‘அதை நாங்கள் இருள் சூழ்ந்த இரவில் அடக்கினோம். எனவேதான், உங்களை விழிக்கச் செய்ய விரும்பவில்லை’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழத்தயாராக எழுந்து நின்றார்கள். நான் உட்பட அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்ததும் அவர்கள் ஜனாஸாத் தொழுதார்கள். .   (புஹாரி : 1321)

அடக்கம் செய்வதற்காக தோண்டப்படும் குழி மிருகங்கள் தோண்ட முடியாத அளவு ஆழமானதாகவும், விசாலமானதாகவும் இருக்கவேண்டும்..

  • ஹஷாம் பின் ஆமிர் (றழி) கூறினாகள்: உஹது யுத்த முடிவின்போது முஸ்லி ம்களில் பலர் பாதிக்கப்பட்டார்கள், மக்களுக்கு காயங்களும் ஏற்பட்டன, அல்லாஹ்வின் தூதரிடம் நாம் ‘ அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொருவருக்கும் குழி தோண்டுவது கடினமாக உள்ளது, நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?.’ என்று கேட்டோம், அதற்கு நபியவர்கள்: ‘குழியை தோண்டுங்கள், அதை ஆழமாக்கி, விசாலிப்படுத்துங்கள், இரண்டு, மூன்று பேராக அடக்கம் செய்யுங்கள், குர்ஆனை அதிகம் சுமந்தவர்களை முற்படுத்துங்கள்.’ என்று கூறினார்கள்.  (அபூதாவுத், திர்மிதி, நசாஇ, அஹ்மத்)

குழி தோண்டும்போது குழியின் வலப்பக்கமாக சிரிய குழியைத் தோண்டுவதும் நபிவழியே, தோண்ட முடியுமாக இருந்தால் அப்படித்தான் செய்யவும்வேண்டும்.

  • ஸ/த் பின் அபீ வக்காஸ் என்ற நபித் தோழர் மரணிக்கும்போது, ‘எனக்காக நீங்கள்  நபிகளாருக்கு செய்யப்பட்டது போன்று, குழிக்குள் சிறிய குழியை தோண்டி, (அடக்கிய பின் என்கப்ரின் மீது) கல்லை நட்டுங்கள்.’ என்று கூறினார்கள்.  (முஸ்லிம், அஹ்மத்)

அடக்கம் செய்யும்போது இரண்டு, மூன்று பேரை சேர்த்தியும் அடக்கலாம்.

  • ஹஷாம் பின் ஆமிர் (றழி) கூறினாகள்: உஹது யுத்த முடிவின்போது முஸ்லி ம்களில் பலர் பாதிக்கப்பட்டார்கள், மக்களுக்கு காயங்களும் ஏற்பட்டன, அல்லாஹ்வின் தூதரிடம் நாம் ‘ அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொருவருக்கும் குழி தோண்டுவது கடினமாக உள்ளது, நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?.’ என்று கேட்டோம், அதற்கு நபியவர்கள்: ‘குழியை தோண்டுங்கள், அதை ஆழமாக்கி, விசாலப்படுத்துங்கள், இரண்டு, மூன்று பேராக அடக்கம் செய்யுங்கள், குர்ஆனை அதிகம் சுமந்தவர்களை முற்படுத்துங்கள்.’ என்று கூறினார்கள்.  (அபூதாவுத், திர்மிதி, நசாஇ, அஹ்மத்)

ஜனாசாவை குளிக்குள் இரக்கிவைப்பதற்காக யாரும் இறங்களாம், ஆனால் நபிகளார் அதற்கு நிபந்தனையாக அன்றைய இரவு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாதவரை தேர்வுசெய்தார்கள் என்பதை பார்க்கமுடிகின்றது, எனவே இதையும் நாம் ஒழுக்கமாக எடுக்கவேண்டும்.

  • அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாரின் மகள் உம்மு குல்சூம் (றழி) அவர்களின் ஜனாசாவில் கலந்துகொண்டோம், நபியவர்கள் கப்ரின் மீது அமர்ந்திருந்தார்கள், , அவர்களது கண்களிள் கண்ணீர் வடிவதை நான் பார்த்தேன், அப்பொது நபியவர்கள்: ‘நேற்றிரவு குடும்ப வாழ்வில் ஈடுபடாத யாரும் உங்களில் இருக்கின்றார?’ என்று கேட்க, அபூ தல்ஹா (றழி) அவர்கள் நான் இருக்கின்றேன், என்று கூற, நபியவர்கள் அவர்களை கப்ருக்குள் இறங்குமாறு ஏவ, அவர்கள் கப்ருக்குள் இறங்கினார்கள்.  (புஹாரி, அஹ்மத்)

கப்ருக்குள் ஜனாசாவை இறக்கும்போது கப்ரின் கால் பகுதியால் இறக்குவதும் கவனிக்கவேண்டியதே.

  • ஹாரிஸ் என்ற நபித் தோழர் மரணிக்கும்போது, அப்துல்லாஹ் பின் யஸீதை தொழுவிக்குமாறு வஸீய்யத் செய்தார், அவர் தொழுகை நடாத்திவிட்டு, அவரை கப்ரின் கால்மாட்டினால் கப்ருக்குள் வைத்துவிட்டு, இது நபிவழியில் உள்ளது எனக் கூறினார்.  (அபூதாவுத்)

ஜனாசாவை கப்ருக்குள் வைப்பவர் நபிவழியில் வந்த துஆவை சொன்னவராக வைக்கவேண்டும், மாறாக நபிவழியில் இல்லாதவைகளை கூறியவன்னமோ, பாங்கு இகாமத் சொன்னவாரோ பித்அத்களை செய்து வைக்கக்கூடது.

  • நபியவர்கள் ஜனாசாவை கப்ருக்குள் வைத்தால்,                بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ

என்று கூறுவார்கள். என இப்னு உமர் (றழி) அவர்கள் கூறினார்கள்.  (அபூதாவுத்)

  • இன்னும் சில அறிவிப்புக்களில்  باسم الله وعلى ملة رسول الله என்று வந்துள்ளது.  (திர்மிதி, இப்னுமாஜா)

ஜனாசாவை கப்ருக்குள் வைத்த பின்பு மூன்றுபிடி மண்போடுவதும் நபி வழியாகும்.

  • அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ஒரு ஜனாசாவுக்காக தொழுதுவிட்டு, அந்த மையித்திடம் வந்து, தலைப் பக்கத்தால் மூன்றுபிடி மன்னை அள்ளிப்போட்டார்கள். (இப்னுமாஜா)

அடக்கம்செய்த பின் மன்னை ஒருசான் அளவுக்கு மட்டப்படுத்துவதும், கப்ருக்கு மேல் ஒரு கல்லை அடையாலமாக வைப்பதும் நபிவழியாகும், மறாக மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி வெள்ளைக் கொடிகளை நட்டுவதோ, மரங்களை நட்டுவதோ பிழையான, பித்அத்தான விடயங்களாகும்..

  • ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்களுக்காக குழிக்குள் சிறு குழி தோண்டப்பட்டது, அவர்களது கப்ர் பூமியைவிட ஒரு சான் அளவு உயர்த்தப்பட்டது.  (இப்னு ஹிப்பான், பைஹகீ)
  • முத்தலிப் என்ற ஒரு நபித்தோழர் கூறினார்கள்: உஸ்மான் பின் மழ்ஊன் (றழி) அவர்கள் மரணித்தபோது, அவர்களது ஜனாசாவை அடக்கிய நபியவர்கள், ஒரு நபித்தோழருக்கு ஒரு கல்லை எடுத்துவருமாரு ஏவினார்கள். அவரால் கல்லை தூக்கமுடியாதபோது நபியவர்கள் சென்று அக்கல்லை தூக்கி வந்து, கப்ரின் தலைமாட்டில் வைத்துவிட்டு, ‘இதன்மூலம் என் சகோதரரின் கப்ரை நான் தெறிந்துகொண்டு, எனது குடும்பத்தில் மரணிப்பவர்களை அதன் பக்கத்தில் அடக்கம் செய்வேன்.’ என்று கூறினார்கள்.  (அபூதாவுத். பைஹகீ)

கப்ருக்கு மேல் மன்னை போடும்போது منها خلقنا كم، وفيها نعيدكم، ومنها تخريجكم تارة أخرى இந்த வசனத்தை ஓதுவதோ, மரத்துக்கு தண்ணீர் ஊற்றும் போது ஓதுவதோ நபிவழிக்கு அப்பால்பட்ட ஒரு பித்அத்தாகும். ஆப்படி ஒரு ஹதீஸ் அஹ்மதில் வந்திருந்தாலும் அது மிகவும் பலவீனமான செய்தியாகும்.

மரம் நட்டுவதைப் பொருத்தவரை நபியவர்கள் வஹியின் மூலம், தண்டிக்க ப்படுவதை அறிந்தே அதை செய்தார்கள். எனவே அடக்கம் செய்யப்பட்டவர் என்ன நிலையில் உள்ளார் என்பது தெரியாத நாங்கள் அப்படி செய்வது நாங்களும் நபித்துவத்தை வாதிடுவதற்கு சமனாகும். ஏனெனில் அதுவல்லாமல் நபிகளார் பகீஇல் எத்தனையோ ஜனாசாக்களை அடக்கினார்கள், ஆனால் நபிகளார் அப்படி செய்யாதபோது நாங்கள் செய்தால் அது நபிகளாரை மிஞ்சுகின்ற செயலாகும். அல்லாஹ் அப்படிப்பட்ட செயலிலிருந்து எம்மைக் காக்கவேண்டும்.

  • நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அல்லது மக்காவில் ஒரு தோட்டத்துக்கு அருகாமையால் நடந்து சென்றார்கள், அப்போது கப்ரில் தண்டிக்கப்படும் இருவரின் சத்தத்தைக் கேட்டார்கள், அப்போது நபியவர்கள், அந்த இரண்டுபேரும் தண்டிக்கப்படுகின்றனர், பெரும் பாவங்களுக்காக அல்ல, மாறாக அவ்விருவரில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்கமல் இருந்தார், மற்றவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு ஈத்தம் பாலையை கொண்டு வரச் சொல்லி, அதை இரண்டாக கிழித்து, ஒவ்வொரு கப்ருக்கு மேலாலுல் வைத்தார்கள், காரணம் கேட்கப்பட்டபோது, (அந்த இரு துண்டுகளும்) காயாமலிருக்கும்வரை அவ்விருவருக்கும் (தண்டனை) இழகுபடுத்தப்படலாம்.’ என்று கூறினார்கள்.  என இப்னு அப்பாஸ் (றழி) கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

அடக்கம் செய்த பின் தல்கீன் (கப்ராலிக்கு சில கேள்விகளும், பதில்களும்) சொல்லிக்கொடுக்கப்படுகின்றன், அதற்கு நபிவழியில் ஸஹீஹான சான்றுகள் எதுவும் இல்லை எனவே அதுவும் பித்அத்தாகும். அனால் நபிகளார் கப்ருக்குப் பக்கத்தில் நின்று, ‘உங்கள் சகோதரருக்காக மன்னிப்பு தேடுங்கள்,மேலும் கேள்விகளுக்கு பதில் சொல்ல உறுதிப்பாட்டையும் கேளுங்கள், ஏனெனில் அவர் தற்போது விசாரிக்கப்படுகின்றார்.’ என்று கூறுவார்களாம்.  (அபூதாவுத், பைஹகீ) இதிலிருந்து இன்று நடப்பது போன்று நபிகளார் துஆ கேட்க ஸஹாபாக்கள் ஆமீன் சொல்லவுமில்லை என்பதும் தெழிவாகின்றது. எனவே இன்று கப்ரடியில் நடக்கும் கூட்டு துஆவும் பிதத்தாகும்.

மேலும் நபிகளார் அடக்கம் செய்த பின்பு கப்ரடியில் ஒரு உரையும் நிகழ்த்தியுள்ளார்கள் எனவே அந்த சுன்னாவையும் நடைமுறைப் படுத்தவேண்டும்.

  • அலி (றழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் பகீஇல் ஒரு ஜனாசாவில் கலந்து கொண்டோம், அப்போது எங்களிடம் நபியவர்கள் வந்து, அமர்ந்தார்கள், நாங்களும் அவருக்கு சூழாக அமர்ந்தோம்,நபிகளாரது கையில் ஒரு குச்சி இருந்தது, அதனால் பூமியில் குத்தியவர்களாக: ‘உங்களில் இருக்கும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் சுவர் கத்தில் அல்லது நரகத்தில் அவர்களது இடம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, அல்லது சீதேவியா, மூதேவியா என்று எழுதப்பட்டுள்ளது.’ என்று கூறினார்கள், அப்போது ஒரு தோழர், ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அந்த முடிவை நம்பி வணக்கங்களை விட்டுவிடவா?,’ என்று கேற்க, நபியவர்கள்: யார் சீதேவி என எழுதப்பட்டுள்ளாரோ, அவருக்கு அதற்குறிய வணக்கம் இழகுபடுத்தப்படும், மேலும் யார் மூதேவி என எழுதப்பட்டுள்ளாரோ அவருக்கு அதற்குறிய வணக்கம் இழகுபடுத்தப்படும்.’ என்று கூறிவிட்டு,فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى (5) وَصَدَّقَ بِالْحُسْنَى (6) فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى (7 (யார் அல்லாஹ்வுக்காக கொடுத்து, அவனை பயந்து, தானதர்மமும் செய்கின்றாரோ அவருக்கு நாம் சுவன வழியை இழகுபடுத்துவோம். 92:5,6,7)என்ற வசனங்களை ஓதிகாட்டினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
  • கப்ரடியில் உரை நிகழ்த்திய செய்தி அஹ்மதில் விரிவாக வந்துள்ளது.

அடக்கம் செய்த, கப்ருக்குள் வைத்த  ஒரு ஜனாசாவை தேவைக்காக வெளியில் எடுக்கவும் முடியும்.

  • ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லஹ் பின் உபை (முனாfபிக்) யை கப்ருக்குள் வைத்தபின் நபிகளார் அவ்விடம் வந்து, அவனை வெளியில் எடுக்குமாறு ஏவினார்கள், வெளியேற்றப்பட்டபின் அவரின் மீது நபிகளார் தன் உமில்நீரை தடவிவிட்டு, தன் ஆடையை அவருக்கு அணிவித்து, தொழுகையும் நடத்தினார்கள்.  (புஹாரி,  முஸ்லிம்)

ஜனாசாவை அடக்கம்செய்தபின் குடும்ப உறவுகள் வரிசையாக நிற்க, வந்தவர்கள் முஸாபஹாச் செய்கின்ற ஒரு வழிமுறையும் இன்று இருந்து வருகின்றது, அதுவும் நபிகளாரது வழிமுறைகளில் காணமுடியாத ஒன்றாகவே இருக்கின்றது, எனவே இதுபோன்ற விடயங்களும் தவிர்க்கப்படவேண்டும். ஆனலும் கவலையில் இருக்கும் அந்த மையித்தின் உறவினருக்கு ஆருதல் கூருவது நபிவழியாகும்.

  • நபிகளார் தம் மகளின் பிள்ளை மரணித்தபோது,

‘” إن لله ما أخذ، و (لله) ما أعطي، وكل شئ عنده إلى أجل مسمى فالتصبر، ولتحتسب “.

எடுத்ததும், கொடுத்ததும் அல்லாஹ்வுக்குறியதே, ஒவ்வொன்றும் அவனிடம் தவனை குறிப்பிடப்பட்டதாகவே இருக்கின்றது, எனவே பொறுமையாக இருந்து, நன்மையை எதிர்பார்க்கட்டும்.’ என்று சொல்லி அனுப்பினார்கள்  (புஹாரி, முஸ்லிம்)

மரண வீட்டில் சாப்பாட்டுக்காக குறிப்பிட்ட சில நாட்களில் ஒன்று கூடுவதும், கத்தம் என்ற பெயரில் குர்ஆன் தமாம் செய்வதும் நபிவழியில் இல்லாத வைகளாகும். சிலர் நல்லதைத்தானே செய்கின்றோம் என்பார்கள், முதல் விடயம் நபிகளார் காட்டாதது எப்படி நல்லதாகும் என்பதே, இரண்டாவது நபிகளார் காலத்தில் முலுக் குர்ஆனையும் காணாமலே பலர் மரணித்துள்ளனர். குர்ஆன் தமாம் செய்வதாக இருந்தால் அவர்களுக்கே நபிகளார் செய்திருக்கவேண்டும் ஆனால் நபிகளார் செய்யவில்லை, எனவே நபிகளார் செய்யாத பித்அத்தை நாமும் செய்யக்கூடாது.

 

M.S.M MURSHID ABBASI                MASJID ABEEBAKR, HAPUGASTHALAWA

14-09-2011   _   23-11-2011

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *