உங்கள் கேள்விகள்

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் தேவைக் கேட்ப அளிக்கப்படும்

103 thoughts on “உங்கள் கேள்விகள்

    1. “தற்காலிக மாற்றம்” என்பதைக் கொண்டு எதனை நாடுகின்றீர்கள்?
      அழகை அதிகப்படுத்துவதற்காக பொய் முடிகளை சேர்ப்பதை இஸ்லாம் பெறும் பாவமாக கறுதுகின்றது.

      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “கொண்டைமுடி சேர்ப்பவளையும், சேர்த்துவிடுமாறு கோறுபவளையும் அல்லாஹ் சபிக்கின்றான்.” (புஹாரி: 5589, முஸ்லிம்)
      மேலும் ஆண்களுக்கு ஒப்பாகும் அளவுக்கு முடியை வெட்டிக் கொள்வதும், அழகுபடுத்திக் கொள்வதும் தடுக்கப்பட்டதாகும்.

      இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள்; ஆண்களில் பெண்களுக்கு ஓப்பாகுபவர்களையும், பெண்களில் ஆண்களுக்கு ஒப்பாகுபவர்களையும் சபித்தார்கள்.” (புஹார்ர்ரி: 5546)
      இதற்கு அப்பால் எண்ணை போன்றவற்றையோ, நவீன கிரீம் போன்றவற்றையோ பாவிப்பதன் மூலம், அல்லது முடியை பலவிதமாக கொண்டைகளிட்டோ அழகை வெளிப்படுத்துவதில் குற்றமில்லை. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

      1. Assalamualaikum warahmathullahi wabarakathuhu.murshid abbasi awarhale.en sahodarar muthal manaiviyai sila mukkiyamana karanam kondu thalak panni divorce aahina pirahu innoru thirumanam seidu kondar.irandam thirumanaththil pillai waaippu illai.pirahum nangu warudam galaha waalndargal.pirahu sila sila prachchinay galal waalkaiyil piracuchinai eat pattu pirindargal.pirindu oru warusham pona pirahu manaivi velinadu senru vittar.en sahidararku solli irukanga muunru masathuku velinadu sutri parka pora endu.aanal adu unmai alla.pirahu velinadu pona pinbum kuda sariyaga pesurado eduwum illai.velinadu peitu naalu warusham aahittu.rendu thadawai pola naattukku wandum kuuda kanawarukku terivikka villai.oru thadawai sahodarar manaivi uurukku wandadu kelvi pattu awar warawa endu ketkavum tewai illai endum solli irukkanga.pirahu iwar vivaharaththu seiya ninaithadum marupadiyum welinaadu peitanga.iwarukku vivaharaththu edukka mudiyada padi awanga velinatula ullanga.enadu sahodarar nerilum kuda thulai pesiyilum kuda thalaak kuuri ullar.ippo iwanga pirindu naalu warushamum pinditu.enathu sahodarar ippo weru thirumanam mudiththutar.adu sattapadi selluma endum teriya virumburar.adipola welinatil irukum awangalidam eppadi divorce wanguradu enbadaiyum ariya virumburar.allah podumanawan

        1. வஅலைகுமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்,
          1- உங்கள் சகோதரர் செய்த திருமணத்தில் இஸ்லாத்தின் பார்வையில் தவறில்லை, ஏனெனில் ஒரு மனைவி இருக்கும் போதே அவரது அனுமதி இல்லாமல் ஆணுக்கு திருமணம் முடிக்கலாம் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.
          2- உங்களது சகோதரர் எழுத்து மூலமோ, வாய் வழியாகவோ நேரடியாக மனைவியிடம் ‘உன்னை தலாக் சொல்லிவிட்டேன் ‘ என்றுசொல்லியிருந்தால் அது செல்லுபடியாகும், இஸ்லாம் காட்டியபடி மீண்டும் அவர்கள் சேரவில்லையென்றால், அல்லது தலாக் சொன்ன காலத்திலிருந்து சுமார் மூன்று மாதங்கள் அல்லது மூன்று மாதவிடாய் காலங்கள் கழிந்து விட்டால் பிரிவு ஏற்பட்டுவிடும் (அல்லாஹ் மிக அறிந்தவன்)
          3- தலாக் நிகழ்ந்த பின்னர் மனைவி வெளிநாடு சென்றிருந்தால் கணவனின் அனுமதியில்லை என்ற குற்றம் அவருக்கு வராது, தலக்கிற்கு முன்னர் போயிருந்தால் அது பெரும்பாவமே. (அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

  1. assalamu alaikum.surikki/serthu tholuwadhtku edhavadu thoora ellaihalai nabi(sal)awarhal kurippittu irukkirarhala?eththanai naatkal serthu surikki pirayanathil tholalam?

    1. சுறுக்கித் தொழுவதென்பது பொதுவாகவே பயணத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றாகும்.
      நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது,நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; 4:101.
      ஆனாலும் நபி (ஸல்) அவர்கள், ஏதாவது ஒரு தூர எல்லையை நிபந்தனையிட்டார்களா என்று ஹதீஸ்களில் தேடிப்பார்த்தால், நிபந்தனையிடுவதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸ்களையும் பார்க்க முடியவில்லை. ஆனால் தூரம் சம்பந்தமாக பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மிகக்குறைந்த எல்லையாக மூன்று பர்சக் தூரம் (25 கி.மீ) காணப்படுவதுடன், தில் ஹுலைபாவுக்கு சென்றாலும் சுறுக்கித் தொழுவார்களாம் நபியவர்கள்..
      صحيح مسلم – (ج 2 / ص 145)
      عَنْ شُعْبَةَ عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِىِّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ الشَّاكُّ – صَلَّى رَكْعَتَيْنِ.
      நபி (ஸல்) அவர்கள் மூன்று மைல் அல்லது மூன்று பர்சக் தூரம் சென்றால் இரண்டு ரக் அத்துகளாக தொழுவார்கள். என அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
      عن أنس رضي الله عنه قال صليت الظهر مع النبي النبي صلى الله عليه و سلم بالمدينة أربعا والعصر بذي الحليفة ركعتين
      நபி (ஸல்) அவர்கள் தில் ஹுலைபா என்ற இடத்திற்குச் சென்றால் அசரை இரண்டு ரக் அத்துகளாக தொழுவார்களாம். (புஹாரி: 1039)

      மேலும் எத்தனை நாட்கள் சுறுக்கித் தொழ முடியும் என்று ஹதீஸ்களில் தேடிப் பார்த்தால் நபியவர்கள் மாக்காவில் தறித்திருந்த நாட்களான 19 நாட்கள் சுறுக்கித் தொழுது இருக்கின்றார்கள். அத்தோடு நபிகளாரின் பயணம் முடிவடைகின்றது. எனவே ஒருவர் பயணியாக இருக்கும் நேரத்தில் தாராலமாக சுறுக்கித் தொழ முடியும்.
      صحيح البخاري – (ج 1 / ص 367)
      عن ابن عباس رضي الله عنهما قال
      : أقام النبي صلى الله عليه و سلم تسعة عشر يقصر فنحن إذا سافرنا تسعة عشر قصرنا وإن زدنا أتم
      நபி (ஸல்) அவர்கள் மக்காவில் 19 நாட்கள் சுறுக்கித் தொழு நிலையில் தரித்திருந்தார்கள்,நாங்கள் 19 நாட்களுக்கு சென்றால் சுறுக்குவோம், அதைவிட அதிகமாக சென்றால் பூரணப்படுத்துவோம். என்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1030)

      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

    1. தொழுகையில் தமிழில் துஆ கேட்க முடியுமா? என்றால் முடியும் என்பதே சரியான பதிலாக இருக்கமுடியும். காரணங்கள் பின்வருமாறு;
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் தன் ரப்புக்கு மிக நெறுக்கமாக இருப்பது ஸுஜூதில் தான் எனவே துஆ கேட்பதை அதிகப்படுத்தட்டும். முஸ்லிம்: 1111
      மேலும் கூறினார்கள்:
      அத்திஹ்ய்யாத் அமர்வில் தஷஹ்ஹுதை (அத்தஹிய்யாத்தை) ஓதிய பின் தனக்கு விருப்பமானதை தேர்வு செய்து அதனை துஆ கேட்க்கட்டும். (புஹாரி: 800)
      இந்த ஹதீஸ்களில் தொழுகையில் துஆ கேட்குமாறும், தனக்கு விருப்பமானதை தேர்வு செய்து கேட்குமாறும் நபிகளார் கூறுகின்றார்கள் என்றால், அந்த துஆ அரபியில் அமைவதா வேறு மொழிகளில் அமைய முடியுமா என்ற சந்தேகமே இந்த கேள்விக்கான மிகமுக்கிய காரணமாகும்.
      *தொழுகை என்பது அரபு தெரிந்தோர் தெரியாதோர் அனைவருக்கும் உள்ள கடமையாகும், எனவே அரபு தெரியாத ஒருவர் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக இருக்கும் ஸுஜூதுடைய சந்தர்ப்பத்தில் எப்படி அல்லாஹ்வை நெருங்குவது?!
      முதல் விடயம்!தொழுகையோடு சார்ந்த ஓதல்கள் திக்ருகள் துஆக்கள் அரபியில்,வந்ததை வந்ததுபோன்றுதான் ஓதப்பட வேண்டும், அந்த வார்த்தைகளை அரபியிலும் மாற்றமுடியாது. உதாரணமாக: அல்ஹம்து லில்லாஹ் என்பதை, அஸ்ஸனாஉ லில்லாஹ் என்று ஓதவோ, அல்லாஹு அக்பர் என்ற இடத்தில் அல்லாஹு அஃளம் என்றோ, கூறமுடியாது எனும் போது எப்படி துஆ என்று வரும் போது விருப்பமானவற்றையெல்லாம் தனக்கு விரும்பிய அரபி வார்த்தையில் கேட்க முடியும்?. இதற்கு எது பதிலோ அதுவே மொழி மாற்றத்திற்கும் பதிலாக அமையப் போகின்றது.
      இரண்டாவது: அந்த இரண்டு இடங்களல்லாத வேறு இடங்களில் எமக்கு விரும்பியதை அரபியிலும் கேட்க முடியாது. எந்த அளவுக்கெனில், ஸலாத்துக்கு பதிலுரைப்பது (திர்மிதீ: 367) துஆவாக இருந்தாலும், தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் கூற, அதற்கு பதிலாக யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவது (முஸ்லிம்: 1227) அவை துஆவாக இருந்தாலும் கூடாது எனும் போது அத்தஹிய்யாத்தில் மட்டும் எப்படி அரபியில் கேட்க முடியும்? என்று முடிவு எடுக்கமுடியும்?.
      *எனவே முன்னால் உள்ள இரண்டு கேள்விகளுக்கும் பதில், நபிகளார் துஆ கேட்க சொன்னார்கள் என்பதைத் தவிர வேறில்லை. எனவே துஆ கேட்பதுதான் வணக்கமே தவிர அரபியில் கேட்கவேண்டும் என்று விளங்காமல், துஆ கேட்க வேண்டும் என்று விளங்குவதே மிகப் பொறுத்தமானது.
      *மேலும் சிலர் உள்ளத்தால் நினைப்பதன் மூலம் துஆ கேட்க வேண்டும் என்கின்றனர். நபிகளார் துஆ கேட்குமாறு கூறியிருக்கும் போது, நினைப்பதை மாத்திரம் அனுமதிக்க யாருக்கும் அதிகாரமில்லை.நபிகளார் வாயினால் கேட்பதையே துஆ என்கின்றார்கள், நினைத்தல் என்பது ஒருபோதும் துஆவாக அமையாது.
      மேலும் சிலர் சுன்னத்தான தொழுகையில் முடியும், பர்ளான தொழுகையில் முடியாது என்கின்றனர், நபிகளார் பொதுவாக கூறிய ஒன்றை, ஆதாரமின்றி குறிப்பாக்கி சொல்வதற்கு யாராலும் முடியாது. எனவே ஒருவருக்கு பர்ளான தொழுகையில் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவருக்கு தாராலமாக கேட்க முடியும்.
      எனவே நாம் தெளிவாக விளங்க வேண்டியது! நபிகளார்’ தனக்கு விருப்பமானதை தேர்வுசெய்து கேளுங்கள்’ என்றே கூறினார்கள். எனவே துஆ கேட்பதே வணக்கம், அரபியில் கேட்கவேண்டுமென்பதல்ல, மேலும் அல்லாஹ்வுக்கு நெறுக்கமாக இருக்கும் நேரத்தில் தனக்கு விருப்பமானதை தன் தாய் மொழியிலல்லாமல் அரபியில் தயாரித்து வந்து கேட்கமுடியாது.
      மேலும் இஸ்லாம் அரபிகளுக்கு மாத்திரம் வந்த மார்க்கமல்ல, மாறாக அஜமிகளுக்கும் சேர்த்தே அருளப்பட்டது. எனவே அரபுதெரியாத ஒருவரை, படைத்தவன் அல்லாஹ் நெறுங்கி வரும் நேரத்தில் நெறுங்க விடாமல் தடுப்பதென்பது மிகப் பெறும் துர்ப்பாக்கியமாகும். எனவே சத்தியத்தை சரியாக விளங்கி செயற்பட முயற்சிப்போமாக.
      தொழுகையில் தஷ்ஹுத் (அத்தஹிய்யாத்) சொல்லும் முறையைக் கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்கள்; ‘பிறகு தனக்கு விருப்பமான பேச்சிலிருந்து தேர்வுசெய்து, (துஆ கேட்கட்டும்) என்று கூறினார்கள். (புஹாரி: 6230)
      இந்த ஹதீஸ் ‘துஆ என்று வரும் போது எப்படியும் கேட்கலாம்’ என்பதனை அழகாகவே தெளிவு படுத்துகின்றது.

      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். வஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹ் ரப்பில் ஆலமீன்.

  2. tharkaliha maatram endru naan solvadu ennavendral eg:silar thangaludaiya iyarkai mudiyin vadivatthai matruvadarku hair straightening,curling seivarhal,idanai temporary,permanent endru 2 vidamaha seivarhal.oru silarin karutthu ennavendral permanent changes seiya mudiyadu,temporary endral oru kurippitta neratthil mudiyai wash pannuvadan moolam mudiyin iyarkai vadivatthil nirandara matram nihalaadu enbadal temporary changes seiyalam enbadhaha amaihinradu.inda karutthu sariyanada?illaiyayin idarkana sariyana vilakkam enna.

    atthudan manappengal hairstyle seivadarkaha hair cuts vettalama?[aangalukku oppaahada vidatthil]

    1. நான் ஏற்கனவே சொன்ன அடிப்படையை மீறாமல் கனவனுக்காக அழகுபடுத்திக் கொல்வதில் குற்றமில்லை. அதேநேரம் ஏதாவது அழகுப் பொருட்களை பாவிப்பதானால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றிருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டும்.

  3. assalamu alaikum.umrahvin podu thideerandu maadhaviday etpattal (kaaba thawab seyya mun)enna seywadu?kurippaha madhaviday mudindadum ihram aniwadatku islathil anumadhi unda?appadiyayin aysha masjidhku sendru ihram aniyalama?pooran viparam tharavum.

    1. வஅலைகுமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
      உம்ராவுக்கோ ஹஜ்ஜுக்கோ இஹ்ராம் அணிந்த பின் மாதவிடாய் ஏற்படுமானால் தவாப் தவிர்ந்த ஏனைய விடையங்களை செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருப்பதோடு,உம்ராவை திறும்பவும் செய்வதற்காக தன்ஈம் என்ற இடத்திற்கு (மஸ்ஜித் ஆயிஷாவுக்கு) சென்று இஹ்ராம் அணிய வேண்டும்.
      • ஆயிஷா(றழி) அவர்கள் அறிவித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, தன்யீம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து உம்ராச் செய்ய ஏவினார்கள். ஒட்டகத் தொட்டியில் என்னை ஏற்றினார்கள். (புஹாரி:1516, முஸ்லிம்)
      • ஆயிஷா(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஹஜ்ஜத்துல் வதாவில் நபி(ஸல்) அவர்களோடு சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் (ஆடையை) அணிந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். இன்னும் அவர் இவ்விரண்டையும் நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்தபோது மாதவிடாய்க் காரியானேன். இதனால் கஅபாவைத் தவாஃபும் செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக் கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவைவிட்டு விடு!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். ‘இது உன்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் கஅபாவை வலம் வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (சஃயுசெய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பியபோது மீண்டும் ஒரு முறை வலம் வந்தார்கள். (புஹாரி:1556, முஸ்லிம்)
      எனவே தன்ஈம் (ஆயிஷாப் பள்ளி) என்ற இடத்தில் இஹ்ராம் கட்டி அப்படிப்பட்ட பெண்களுக்கு உம்ரா செய்து கொள்ளலாம். அதே நேரம் சாதாரணமானவர்கள் அதிகம் உம்ரா செய்வதற்காக அங்கு சென்று இஹ்ராம் கட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
      மேலும் உம்ராவுக்காக செல்லமுன்னரே மாதவிடாய் ஏற்பட்டிருந்தால் அவர்களும் குறிப்பிட்ட மீகாத்திலேயே இஹ்ராம் அணியவேண்டும். அவர்களுக்கு மஸ்ஜித் ஆயிஷாவை பயண்படுத்த முடியாது.
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

  4. அஸ்ஸலாமு அலைகும்.பெண்களுக்கப் பெண்கள் ஜமாத் செய்யலாமா௟ஆதாரம் தேவை.

    1. வஅலைகுமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
      பெண்கள் இமாமத் செய்வதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் ஏதும் வந்திருக்கின்றனவா என்று பார்த்தால் ஸஹீஹான ஹதீஸ்கள் ஏதும் வரவில்லை.
      மேலும் அபூதாவுதில் (592) உம்முவரகா (றழி) அவர்களுக்கு இமாமத் செய்ய நபியவர்கள் அனுமதியளித்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஹதீஸ் பலவீனமானதாகும்.

      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

      1. pengal imaamath seyya wendam ena nabiyawarhal thaduththirukkirarhala?kurippaha ungalil iruvar irundhal jamath thola kattalaiyittullarhal.pengal imaamath seyya wendam ena nabiyawarhal thaduththirundhal engaluku pengal imaamath seyyamalirukkalam.bt awarhal thadukkavum illaiyendral pengal imaamth seyya mudi umaha thane irukka wendum?appadiyaayin pengal hostel halil eppadi jamaath nadaththuvadu?enakku adu kurithu satru kulappamaha ulladu.vilakkam tharavum.

  5. லைலத்துல் கத்ர் இரவின் அடயாலங்களில் மழை பெய்வதும் ஒன்ரு என்று கூறுகின்றார்களே அதற்கு குர்ஆன்,ஹதீஸில் ஆதாரம் உண்டா?

    1. சகோதரரே! அதற்கான ஆதாரம் புஹாரியில் வந்திருக்கின்றது.
      • அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்:நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!” என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன். (புஹாரி: 2016)
      http://www.murshidabbasi.com/?p=1166

  6. விரல் அசைத்தல் தொடார்பாக வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) அரிவிக்கும் ஹதீசில்,”தொடச்சியாக அசைத்துகொண்டு இருந்தார்” என அர்தம் கொள்வதாயின் ” மா ஸால” என்ற சொல் இடம் பெற்றிருக்க வேண்டும் என சிலர் சொல்கிறார்கள்.
    இவற்கான விளக்கம் என்ன?
    “மாஸால” என்னும் வசனம் பயம்படுத்தப்படாமல் தொடச்சியாக செய்யபட்ட காரியங்களை விளக்கும் (ருகூ இல் கை வைத்தல், தக்பீரில் கை கட்டிக்கொண்டு இருத்தல்) ஹதீஸ்களை அரபியில் தர முடியுமா?

    1. ஆட்டியதற்கு ‘மா ஸால’ தொடர்ச்சியாக என்று வந்துள்ளதா என்று கேற்பவர்கள், தொடர்ச்சியாக நீட்டினார்கள் என்று காட்ட முடியுமா?? அந்த ஹதீஸ்களில் ‘மா ஸால’ என்றும் வரவில்லை.

  7. சமூஹத்தில் குழப்பம் உருவாக்குவது கொலையை விட கொடியதாக அல்குரன் கூறுவதாக கேள்விப்பட்டேன்.. இது எவ்வகையான குழப்பத்தை குறிக்கும்? மார்க்கத்தை சரியாக பின்பற்ற முனையும் போது ஏற்படும் குழப்பத்தையா குறிக்கும்? தயவு செய்து விளக்கவும்

    1. அது ஷிர்க் எனும் இணைவைப்பையும், குரையுமே குரிக்கும்.
      அல்லாஹ் யுத்தம் செய்வதை சொல்லிவிட்டே குழப்பத்தை சொல்கின்றான். எனவே யுத்தம் என்பதே பெரும் குழப்பம் எனும் போது அதை விட பெரிய குழப்பம் குப்ரைவிட எது இருக்க முடியும்?? அந்த வசனத்தை நன்றாக நோக்கினால் நன்றாக விளங்கலாம்.

      2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”

  8. Assalamu alaikum.Dua angeekarika padum neram enna?
    Enaku oruwarai pidichiruku .awar en wife aga wara dua seiydal angeekarika paduma?
    Namadu dua waal kalaa kadr maatralama?

    1. துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள் பல இருக்கின்றன.
      1- ٍஸுஜூத்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு மிக நிருக்கமாக இருக்கும் நேரம் ஸ்ஜூதாகும், அதில் அதிகமாக அவனிடம் கேளுங்கள், அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மிகப் பொருத்தமாகும். (முஸ்லிம்:479,482)
      2- அத்தகிய்யாத்தில்: (புஹாரி:835 முஸ்லிம்:402)
      3- தஹஜ்ஜுத், ஸஹர் நேரம்: அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.18. அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (51:17,18)
      அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.32:16.
      4- வெள்ளிக் கிழமைத் தினத்தில் குறிப்பிட்ட நேரம்; ‘இமாம் மிம்பரில் அமர்வதிலிருந்தும், அஸருக்குப் பின்னாலும்’
      நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள். (புஹாரி: 935, முஸ்லிம்:853) (திர்மிதீ:489)
      ###சகோதரரே! நீங்கள் எதற்காக துஆ கேட்டாலும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், ஆனால் பாவங்களுக்கும், குடும்ப உரவை துண்டிப்பதற்கும் கேட்கக் கூடாது.
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பாவத்திற்கும், குடும்பத்தை துண்டிப்பதற்கும் துஆச் செய்யாமலிருக்கும் வரையில் அவனது துஆவை அல்லாஹ் ஏற்கின்றான், ஆனால் அவன் அவசரப்படக்கூடாது. அவசரம் என்பது; கேட்டேன் கிடைக்கவில்லை என்பதே. (முஸ்லிம்:2735)
      ###சகோதரரே! நீங்கள் திறுட்டுத் தனமாக தொடர்பு வைத்திருந்தால் அதற்காக துஆ செய்வது பாவமாகும். மாறாக முறையாக திருமணம் பேசியிருந்தால் அதற்காக துஆ செய்யலாம், அதே நேரம் அதற்காக இஸ்திகாரா செய்வதே சிறந்தது.
      ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
      (அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ’ ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி’ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி’ என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.
      (பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) (புஹாரி:6382,முஸ்லிம்)
      ###துஆ என்பது எம்மை அல்லாஹ்வின் தீர்ப்பின் பக்கம் கொண்டுபோய் சேர்க்கக்கூடியதே.

  9. Hair cream .gel use panlama? Wulu seium podu gel paavipadal mudi il neer padum ah? Theliwana vilakkam tharawum

    1. உடலுக்கு ஆபத்து ஏற்படுமாக இருந்தால் பொதுவாகவே Hair creams பாவிக்கமுடியாது.
      இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.(2:195)
      அதே நேரம் தமது வணக்கங்களை முறையாக செய்வதற்கு தடையாக இருந்தால் அதற்காக தற்காலிகமாகவும் தடைப்படும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

  10. Assalamu alaikum
    1.siruneer kalitha pirahu clean panuwadu epadi? Niraya time clean panina pirahu sila thuli siru neer irukiradu.elumbum podu anda thuli siru neer dress & udalil patu vidukiradu.epadi clean panradunu sonna udhaviya irukum sheikh
    2.namadu thewaigal niraivera nombu irukalam ah? Apadi nombu irukum podu oru thewaiku oru nombu nu kattayam ah? 2 thewaikaga ore nombu pidikalam ah?

    1. முதல் விடையம் சந்தேகம் என்பது ஷைத்தான் எம்மிடம் ஏற்படுத்தும் ஒரு விடையமாகும். நாம் சிறுநீர் கழித்த பின் அது ஆடையில் படுவது போன்று தென்பட்டால் அந்த இடத்தைப் பார்த்தே பட்டிருக்கின்றதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஷைத்தான் சந்தேகத்தை ஏற்படுத்தி எமக்கு வணக்கம் செய்வதை கஷ்டப்படுத்திவிடுவான்.
      அப்படி ஆடையிலோ மேனியிலோ பட்டிருந்தால் கழுவிக்கொள்வது கடமையாகும். மேலும் அது ஒரு நோயாக இருப்பின் சிறுநீர் பட்டுவிடாத வண்ணம் ஏதாவது ஒன்றை பாவித்து தன் உருப்பை கட்டிக்கொள்ள வேண்டும்.

    2. நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நபியவர்கள் நோன்பு பிடிப்பதைக் காட்டித்தரவில்லை. மாறாக இரண்டு ரக் அத்துகள் இஸ்திகாரா தொழுதுவிட்டு ஒரு துஆவைக் கேட்குமாறு காட்டித் தந்தார்கள்.
      ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
      (அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம், ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதுஅலமு வலா அஉலமுஇ வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ ‘ஃபீ தீனி, வமஆஷீ, வ ஆம்பத்தி அம்ரீ’ ஃ ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹிஃ ஃபக்துர்ஹு லீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆஜிலிஹி’ஃ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர கான, ஸும்ம ரள்ளினீ பிஹி’ என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.
      (பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) (புஹாரி:6382,முஸ்லிம்)

  11. ஹமாஸ் என்ற அமைப்பில் தற்கொலைப் பிரிவு என்ற ஒன்று இருக்கின்றது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

    1. உண்மையில் தற்கொலை என்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும்,அது யுத்த கலமாக இருந்தாலும் சரியே! அதில் ஈடு படுவோருக்கு நிரந்தர நரகத்தையும் இஸ்லாம் வைத்திருக்கின்றது. இது நாம் அறிய வேண்டிய முதல் அமசமாகும்.
      அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டே ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து, ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது, ‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்” என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, ‘முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்” என்று பொது அறிவிப்பு செய்தார்கள். (புஹாரி:3062, முஸ்லிம்)
      ஜுன்துப்(ரலி)அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1364)

      இரண்டாவதாக; யுத்தத்திற்காக எப்படி தயாராக வேண்டும் என்றும் இஸ்லாம் அழகாக எமக்கு சொல்லித் தந்திருக்கின்றது.
      وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ
      அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் – அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (8:60)

      எனவே இப்படி ஒருவர் போராடும் போது மரணத்தை ஆசை வைத்து போராடுவதும் வர்வேற்க்கத் தக்கதே!! நபித் தோழர்களும் ஷஹாதத்தை அடைய வேண்டும் என்ற ஆசையோடே போராடியிருக்கின்றார்கள்.
      ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: உஹுதுப் போரின்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார். (புஹாரி:4046)

      ஆனால் தன்னை மாய்த்து, தற்கொலை செய்து போராட நபி வழியில் சான்றுகளைக் காண முடியவில்லை. ஆனாலும் அப்படி செய்பவர்கள் சில அறிஞர்களின் ஆய்வின் முடிவின் படியே செய்கின்றனர், அல்லாஹ்வோ ஆய்வில் தவராக முடிவெடுத்தவருக்கே கூழி கொடுப்பவனாகவே இருக்கின்றான். அல்லாஹ்வே அவர்களின் நோக்கங்களுக்கு கூழி கொடுக்கப் போதுமானவன். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

  12. assalamu alaikkum,
    bidath aana vaibavangalil kalandu kollaamal avvaraana idangalil irundu anuppivaikkappadum unavai utkollalaama?vilakkam tharavum.

    1. பொதுவாகவே ஈமானின் வெளிப்பாடு என நபியவர்கள் மூன்று அமசங்களை சுட்டிக்காட்டினார்கள். கையினால் தடுப்பதும், நாவினால் எச்சரிப்பதும், உள்ளத்தால் வெறுப்பதும். நாம் ஒதுங்கி விட்டு, எம்மிடம் அனுப்பி வைக்கப்படுவதை பாவிப்போமாக இருந்தால் தவிர்ந்து நடப்பதாக அதனைக் கறுத முடியுமா?
      எனவே அவற்றை முற்றாக தவிர்ப்பதே அதை உள்ளத்தால் வெறுத்து ஒதுங்குவதாகும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

  13. சிறுவர் தினம்,ஆசிரியர் தினம் கொண்டாடலாமா?

    1. தொழிலாளர் தினம் click
      பொதுவாகவே இன்றைய சடவாத உலகில், ஒரு சில மனித முயற்சிகளின் பின் விளைவாக உறுவான, ஒரு சில தினங்களை, கொண்டாடி மகிழ்வதற்காக இந்த உலகம் முன் வைத்திருக்கின்றது. பொதுப்படையில் இவற்றிற்கு இஸ்லாத்தில் என்ன தீர்ப்பு என்று நோக்கினால் பின்வருமாறு கூறமுடியும்!!
      * கொண்டாடி மகிழ்வதற்கு இஸ்லாம் முன்வைத்திருப்பது இரண்டு நாட்களே.
      அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனா வரும் போது மதீனா வாசிகளுக்கு சந்தோசம் கொண்டாடும் இரு நாட்கள் இருந்தன, நபிகளார் காரணம் கேட்டபோது, நாம் ஜாஹிலீய்யா காலத்தில் அந்த நாட்களில் மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறவே, நபி (ஸல்) அவர்கள்: ‘நிச்சியமாக அல்லாஹ் அந்த இரு நாட்களை விடவும் சிறந்த இருநாட்களான அழ்ஹா வுடைய (ஹஜ்ஜுப் பெருநாள்) நாளையும், பித்ருடைய (நோன்புப் பெருநாள் ) நாளையும் உங்களுக்கு தந்திருக்கின்றான்.’ என்று கூறினார்கள். (அபூதாவுத்: 1134)
      எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் சிந்தித்தால் அல்லாஹ் முஸ்லிம்களின் கொண்டாட்டத்திற்காக ஏற்படுத்தியிருப்பது இரு நாட்களே, இதனை விட வேறு நாட்களை ஒரு முஸ்லிம் கொண்டாட முடியாது என்பதோடு, அப்படி நாட்களை உறுவாக்கினால் அது இறை அதிகாரத்தில் கை வைப்பதாக அமைவதோடு, வேறு யாரும் உறுவாக்கியதை நடைமுறைப்படுத்தினால் அது பித்அத்தாகவும், மாற்றுமதக் கலாச்சாரத்தை பின்பற்றியதாகவும் அமைந்துவிடும்.என்பது தெளிவாக விழங்கும்.
      * இன்று நடைமுறையிலுள்ள எந்த தினத்தை அதன் உறுவாக்க நோக்கங்களின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் அதனைப் பற்றி இஸ்லாம் கூடும் என்ற அடிப்படையிலோ, கூடாது என்ற அடிப்படையிலோ, உரிமை சார்ந்ததாக இருப்பின் அந்த உரிமை சம்பந்தமாக 1434 வருடங்களுக்கு முன்னாலே பேசிவிட்டது. உதரணமாக சிறுவர் தினம், முதியோர் தினம், தொழிலாளர் தினம், பெண்கள் தினம் இதுபோன்றவைகளின் நோக்கமான உரிமைகளை இஸ்லாம் எப்போதோ கூறிவிட்டது. மேலும் தனிமனித ஞாபகார்த்த தினங்கள், மற்றும் காதலர் தினம் இன்று கேடுகெட்டவர் தினமாக நடைமுறையில் உள்ளது, திருட்டுத் தனமாக பொறுப்பாளர்களின் அனுமதியின்றி முறை கேடாக உறுவாகும் அனைத்து வகையான காதலையும் இஸ்லாம் அன்றே தடுத்து விட்டது எனும் போது எப்படி ஒரு முஸ்லிம் குறிப்பிட்ட நாட்களை கொண்டாடலாம். கொண்டாடுவதானால் இஸ்லாம் அவற்றைப் பற்றி பேசிய நாட்களையே கொண்டாட வேண்டும்.
      * எனவே இந்த இரு அடிப்படைகளை மாத்திரம் நன்றாக யோசித்தால் தீர்ப்பும் தெளிவாக விளங்கும். அதே நேரம் அந்த நாட்கள் வருவதற்கு முன்னாலே இஸ்லாம் அவற்றைப் பற்றி கூறியிருப்பவற்றை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் கொண்டாடவேண்டியது இஸ்லாம் கூறிய தினத்தைத் தான் என்று மக்கலுக்கு தெளிவு படுத்த முடியுமானால் அதுவே நாம் இஸ்லாத்திற்கு செய்யும் சேவையாகும்.
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

  14. assalamu alaikum.aboo hudaifa{rali}sahla {rali}pondrawarhalin walarpu mahan kurithu warum paalkudi uravu sattam kurithu warum hadees saheehanada?sariyaayin oru aalipan evvaaru paalkudikka mudi um?paal kudikkana kaalam 2 varudam thaneeeee?silar adai layeef engindranar?adatkana karanam enna?thayavu seydu vilakkavum satru kulappamaha ulladu.

    1. மன்னிக்கவும்.! இன்ஷா அல்லாஹ் இதற்கான பதிலை ஆய்வுக்கு பின்னர் வளங்குகின்றேன், ஆனாலு ஆய்வாளர்களின் கூறுகளுக்காக…….
      click

  15. ஹதீதுகள் எத்தனை அதில் ஸஹீஹானவை என்று அணைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஹதீதுகள் எத்தனை?

    1. ஹதீஸ்கள் எத்தனை என்பத எண்ணிக்கையைக் கொண்டு அறிவது என்பது மிகக்கடிண்மான ஒரு விடையம். ஆனால் அதற்கான வரைவிளக்கணத்தைக் கொண்டு இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
      ‘நம்பகமான அறிவிப்பளர்கள் மூலம் தொடர் அருந்துவிடாமல், அறிவிக்கபடுவதோடு, குறைகளோ, நம்பகமானவர்களுக்கு முறனாகவோ இருக்கக் கூடாது.’
      இந்த அடிப்படையை வைத்து ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் பொது கேள்விக்கான பதிலை ஓரளவு அறிய முடியும்.
      மேலும் புஹாரி , முஸ்லிம் ஆகிய கிரந்தங்களை பொருத்தவரை இஸ்லாமிய உம்மத் அதனை முலுமையாக ஸ்ஹீஹானவை என்று ஏற்றுள்ளது. சிலர் முறன்பட்டாலும்.
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

    1. உங்கள் கேள்வியைக் கொஞ்சம் தெளிவாக கேட்டால் பதில் அளிக்க இழ்குவாக இருக்கும். ஜஸாகல்லாஹு கைரா

    1. நெரிப்பில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் வுழூ முரிந்துவிடுமா என்றால், இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் அப்படி ஒரு சட்டம் இருந்து அது மாற்றப்பட்டது. எனவே அதற்காக வுழூ எடுக்கவேண்டியதில்லை. ஆனால் ஒட்டக இறைச்சியாக இருந்தால் வுழூ முரிந்துவிடும், அதற்காக வுழூ செய்வது கடமையாகும்.
      சில அறிவிப்புகளில் (முஸ்லிம்: 814, 815…) அவற்றை சாப்பிட்டால் வுழூ முரியும் என்று வந்துள்ளது, அந்த சட்டம் பின்வரும் ஹதீஸின் மூலமும், நபிகளாரின் செயல் மூலமும், தீர்ப்பின் மூலமும் மாற்றப்பட்டதாகும்.

      ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரிடமிருந்து வந்த இரு கட்டலைகளுல், நெருப்பில் சமைக்கப்பட்டதன் மூலம் வுழூ முரியாது என்பதே கடைசி கட்டலையாகும். (நஸாஇ: 185)

      அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஓர் ஆட்டின் தொடைப் பகுதி இறைச்சியைப் சாப்பிட்ட பின் வுழூ செய்யாமலேயே தொழுதார்கள்” (புஹாரி: 207, 208….முஸ்லிம்)
      ஸுவைது இப்னு நுஃமான்(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ‘கைபர் போர் நடந்த ஆண்டு நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றேன். கைபரை அடுத்துள்ள ஸஹ்பா என்ற இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் பயண உணவைக் கொண்டு வரும் படிக் கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைக் குழைக்கும் படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி(ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றபோது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (அதற்காக) வுழூ செய்யாமலேயே தொழுதார்கள்”. (புஹாரி: 209)
      ஜாபி பின் ஸமுரா (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம்; நான் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் வுழூ எடுக்கவேண்டுமா? என்று கேட்டார், அதற்கு நபியவர்கள்: நீ விரும்பினால் வுழூ செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். என்றார்கள். மீண்டும் அவர்; ஒட்டக இறைச்சிக்காக வுழூ செய்ய வேண்டுமா? என்று கேட்க, நபியவர்கள்: ஆம், நீ வுழூ செய்ய வேண்டும். என்றார்கள். (முஸ்லிம்: 828)

  16. இஸ்லாத்தில் காதலிக்க அனுமதி உண்டா ?
    இஸ்லாத்தில் காதல் என்ற ஒன்றை பேசமுடியுமா ?

    1. ‘இஸ்லாத்தில் காதலிக்க முடியுமா?’ என்ற கேள்வி ஏற்படுவதற்கே காரணம்; காதல் என்ற சொல் தவறாக புரியப்பட்டிருப்பதே. சுருக்கமாக சொல்வதானால் நவீன உலகில் புரியப்பட்டது போன்ற ‘ஒரு பெண்ணை ஒரு ஆண் திருட்டுத்தனமாக நேசிப்பது’ என்ற கறுத்தில் நோக்கினால் அது கூடாது, இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே. ஏனெனில் பெண் எனப்படுபவள் இஸ்லாத்தின் பார்வையில் எந்த வகையிலும் இஸ்லாத்தின் வரம்பை மீரி அண்ணிய ஆணோடு தொடர்பு வைக்க முடியாது.
      click hear
      இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள். (புஹாரி: 3006, முஸ்லிம்)
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்.’ (புஹாரி: 5232, முஸ்லிம்)

      மாறாக ஒரு மனிதன் தன் தாயை, சகோதரியை, தன் குடும்ப உரவுகளை, நன்பர்களை, மிருகங்களை, மலர்களை காதலிப்பது (நேசிப்பது) என்பது எவ்வகையிலும் தடுக்கப்பட்டதல்ல. மேலும் சில சந்தர்ப்பங்களில் அது வணக்கமாகவும் அமைந்துவிடும்.

      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:’எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ (புஹாரி: 16, முஸ்லிம்)
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்” (புஹாரி: 660, முஸ்லிம்)
      மேலும் நபியவர்கள் காதல் என்று கறுத்து கொள்ளும் அனைத்து சொல்லையும் பாவித்து முஃமீன்களின் உரவுக்கு வரைவிளக்கணம் கூறினாகல்.
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது. (புஹாரி:6611, முஸ்லிம்)
      அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். (புஹாரி: 5971,முஸ்லிம்)
      எனவே ஒவ்வொன்றையும் புரியவேண்டிய விதத்தில் புரிந்து செயற்படுவதே எம்மீதுள்ள கடமையாகும். அப்படி நடந்தால் நாம் வழிதவரவும் மாட்டோம்.

  17. சுபஹ் தொழுகைக்கான அதானில் ”அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம்” என்ற வாசகம் கூறப்பட்டதர்கான ஆதாரம் இருக்கின்றதா ?

  18. as.al
    uruwangalai varaidal matrum avatrai vadivamaitthal haraam endru koorappaduhiradu,adarkaana vilakkahaiqr,hadees adaratthudan vilakkavum.

    1. உறுவப்படங்களை வரைவதும் வடிப்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் அதுவே மனிதசமூகத்தை ஷிர்க் எனும் இணைவைப்பிற்கு இட்டுச் சென்றதில் பெரும் பங்கு செலுத்தியதாகும். இன்றைய உலகிலும் இதனை கண்கூடாகப் பார்க்கமுடியும். அதற்கான ஆதாரங்களை பின்வருமாறு நோக்கலாம்;

      அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி)அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 5950, முஸ்லிம்)

      ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்’ என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம். (புஹாரி: 5954)

      ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு விரிப்பை விலைக்கு வாங்கினேன். அதை நபி(ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் ‘இது என்ன விரிப்பு?’ என்று கேட்டார்கள். ‘நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!” எனக் கூறினார்கள். (புஹாரி: 2105)

      இந்த ஹதீஸ் சில வார்த்தை வித்தியாசங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

      அபூ ஜுஹைபா(றழி) அவர்கள் கூறினார்கல்: ‘நபி(ஸல்) அவர்கள் ; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” (புஹாரி: 2086)

      ஸஈத் பின் அபில் ஹுஸைன் (றஹ்) அவர்கள் கூறினார்கள்; ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் வந்து, நான் உறுவப்படம் வரைபவன், அது விடையத்தில் எனக்கு தீர்ப்பு தருவீராக! என்று கூற, இப்னு அப்பாஸ் அவர்கள்; நெருங்கி வாரும், நெருங்கி வாரும், என்று கூறவே, தன் கையை அவர் தலைமீது வைக்கும் அளவுக்கு நெருங்கினார் அந்த மனிதர். பிறகு கூறினார்கள்: நபிகளார் கூறியதை உமக்கு நான் கூறுகின்றேன், நபிகளார் கூறினார்கள்: “உருவப்படம் எடுக்கும் ஒவ்வொருவரும் நரகில் நுளைவர், அவர் வடித்த ஒவ்வொரு படத்திற்கும் பகரமாக ஒரு உயிர் உறுவாக்கப்பட்டு நரகில் அவர் தண்டிக்கப்படுவார். இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள்கூறினார்கள்; அப்படி நீ வரைவது கட்டாயம் என்றால், மரங்களையும், உயிரற்றதையும் வரைவீராக! (முஸ்லிம்:5662)

      எனவே இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்திருப்பதால் உறுவப்படத்தை எந்த அடிப்படையில், எந்தக் கருவியைக் கொண்டு உருவாக்கினாலும் அவை அனைத்தையும் இந்த ஹதீஸ்கள் எச்சரிக்கின்றன. நபிகளார் விதிவிளக்கு அளிக்காத வரை எமக்கு விதிவிளக்கு அளிக்க முடியாது. அந்த வகையில் இன்றைய நவீன கருவிகள் மூலம் அது மேற்கொள்ளப்பட்டாலும் அவைகளும் தடுக்கப்பட்டவையே. நாம் இன்றைய கருவிகள் மூலாம் எடுத்து வைப்பவற்றை கழுவி எடுக்கும் போது அவை நேரடியாகவே அந்த குற்றத்தில் சேர்த்துவிடும்.
      அடுத்து; உருவப்படங்கள் உள்ள ஒன்றை பயன்படுத்த முடியுமா என்றால் அதுவும் அதன் சட்டத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.வீடுகளிலோ, வாகனங்களிலோ வேறு இடங்களிலோ தொங்கவிடுவது, காட்சிப்படுத்துவது போன்றவை தடுக்கப்பட்டதாகும். ஆனால் பிள்ளைகளின் விளையாட்டு பொருட்களாக இருப்பின் அதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது, அது விளையாடப்படும் பொருளாக இருக்கும் வரையில். காட்சிப்படுத்தினால் அதுவும் மலக்குமார்களின் வரவை தடுத்துவிடும்.

      ஆயிஷா(றழி)அவர்கள் அறிவித்தார்கள்: நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோரிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (புஹாரி: 6130)
      ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளார் தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து திரும்பி வந்த நேரம், என் வீட்டுக்கு திரை ஒன்றிருந்தது, அது காற்றின் காரணமாக விழகவே, நபிகளார் உள்ளே இருந்த விளையாட்டு பொம்மைகளைக் கண்டார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள்; இது என்ன ஆயிஷாவே! எனக் கேட்க, அவை எனது பொம்மை (பெண் பிள்ளை)கள் என்றேன், மேலும் அவைகளின் நடுவே இரண்டு இரகுகள் உள்ள ஒரு குதிரையைக் கண்டார்கள், அப்போது நபிகளார்; நடுவில் இருப்பது என்ன? என்று கேட்க, அது குதிரை, என்று கூறவே, அதற்கு இரண்டு இரக்கைகளா என்று நபிகளார் கேட்டதற்கு, ஆயிஷா (றழி) அவர்கள்; சுலைமான் நபிக்கு இரக்கை உள்ள குதிரை இருந்ததை நீங்கள் கேள்விப்படவில்லையா? என்று கேட்கவே, நபிகளார் சக்கைப் பல் தெரியும் அளவு சிறித்தார்கல். (அபூதாவுத்: 4932, அஹ்மத்)

      அடுத்து, இன்றைய உலகில் வாழ்வதற்காக சில சந்தர்ப்பங்களில் படங்கள் எடுப்பது கட்டயமாக்கப்பட்டுள்லது. உதாரணமாக அடையாள அட்டை,கடவுச் சீட்டுகள் எடுப்பது போன்றவை. இந்த நிலையில் பொதுவாக இஸ்லாம் இக்கட்டான நிலைகளின் போது அனுமதித்த பொது ஆதரங்களை முன்வைத்து அது அனுமதிக்கப்படும் என்பதையும் நான் அறிந்து வைக்க வேண்டும்.

      …நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி (சாப்பிட) உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான்….. (6:119)
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

      1. mele kurippitta vidayaththil sinna oru sandheham ennavendraal uruvangal endru varum pothu athai vilayattupporutkalaha vadivamaikkawo vilayadavo mudiyum endru mele kurippitta hadeesil therihirathu…aanal pengal podum jewlleriyaha,,,RING, PANDANT,NECKLACE ithupondra porutkalaha vadivamikkamudiyuma..

        1. ஆபரணங்கள் என்று சொல்வதே அழகுக்காகவும், காட்சிப்படுத்தவுமே அணியப்படுகின்றது எனும் போது அது தடை செய்யப்பட்ட ஹதீஸுக்குள் வந்து விடுகின்றது. எனவே அது தடைசெய்யப்பட்டதே!

  19. Assalamualaikkum w.w
    I would like to ask that how to respond Jazkallahu khairen? I heard people say barakkallahu feekum and wa iyyakum what is the authentication for this?
    what about to say wa anthum fajazakallhu khairen?
    please give me some evidence.
    Jazakallahu khairen
    Assalamualikkum w.w

    1. வஅலைக்குமுஸ் ஸலாம்
      சகோதரரே! ஒருவருக்கு துஆச் செய்வதென்பது பொதுவாக அனுமதிக்கப்பட்ட விடையம் என்ற அடிப்படையில் எந்த நேரத்திலும் ஒருவருக்கு துஆச் செய்யலாம் என்பது நாம் அறிந்துவைக்க வேண்டிய முதல் அம்சமாகும். வ இய்யாக என்பது “உன் மீதும் உண்டாகட்டும்’ என்பதே அருத்தம். அதே நேரம் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடங்களில் அவ்வாறு நடப்பதே மிக ஆரோக்கியமானதாகும்.
      அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் தும்மல் விட்ட ஒருவர் அல்ஹம்து லில்லாஹ் என்றால், அவருக்காக யர்ஹமுகல்லாஹ். என்று சொல்வதை காட்டித்தந்தார்கள். ஆனால் ஒருவர் ஒரு உபகாரம், உதவி செய்தால் ஜசாகல்லாஹு கைரா என்று சொல்வதையே காட்டித் தந்தார்கள். அதற்கு ஒரு பதிலைக் காட்டித் தரவில்லை என்ற அடிப்படையில் அப்படி சொல்வது மார்க்க அடிப்படையாகாது. என்பது நாம் அறிந்து வைக்கவேண்டிய மற்றொரு அம்சமாகும்.
      நபித் தோளர்களுக்கு முன்னாள் அப்படி சொல்லும் போது அதற்காக பதில் ஏதும் கூறவில்லை.
      ‘ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் கழுத்தணியைத் தேடி வருமாறு கூறினார்கள். தேடிப்போனவர் அதைக் கண்டெடுத்தார். தேடிப் போன அந்த இடத்தில் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே (உளூவின்றித்) தொழுதுவிட்டார். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ் தயம்முடைய வசனத்தை அருளினான். அப்போது உஜைத் இப்னு ஹுளைர் என்பவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘جزاك الله خيراஅல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் வெறுக்கக் கூடிய எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதை உங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் நலமானதாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான்’ என்று கூறினார்” என உர்வா அவர்கள் அறிவித்தார் கள். (புகாரி: 336)
      எனவே கடமை சுன்னா என்ற நிலைமைக்கு அது செல்லுமாக இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும்.

  20. தொழுகை நடத்தும் இமாமுக்கு இருக்க வேண்டிய தகைமைகள் என்ன?

    1. இமாமத் செய்வதற்கு தகுதியானவர் யார்!!
      عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللهِ، فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً، فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ سِلْمًا، وَلَا يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ، وَلَا يَقْعُدْ فِي بَيْتِهِ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ»
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் அல்லாஹ்வின் வேதத்தை நன்றாக ஒதுபவரே இமாமத்செய்வார், அனைவரும் ஓதும் விடயத்தில் சமமாக இருந்தால், நபி வழியை அறிந்தவர்கள், அதிலும் சமமாக இருப்பின், நாடு துறந்தவர் (ஹிஜ்ரத் செய்தவர்), அதிலும் சமமாக இருப்பின், இஸ்லாத்தில் முதன்மையானவர். தனது அதிகாரத்தை வைத்து யாரும் யாருக்கும் இமாமத் செய்ய வேண்டாம், ஒருவரின் சாய்மானத்தில் அவரின் அனுமதியின்றி யாரும் அமர வேண்டாம். (முஸ்லிம்: 673) சில அறிவிப்பில் இஸ்லாம் எனும் இடத்தில் ‘வயது கூடியவர்’ என்று வந்துள்ளது.
      இந்த ஹதீஸ் இமாமத்திட்கு தகுதியானோரை அழகாக தெளிவுபடுத்துகின்றது.
      குர் ஆனை ஓதத்தெரிந்தவர் பிறகு நபி வழியைக் கற்றவர் பிறகு இஸ்லாத்திற்காக நாடு துறந்தவர், பிறகு இஸ்லாத்தை ஏற்று வயது கூடியவர் .
      இப்னு உமர்(றழி) அவர்கள் அறிவித்தார் கள்: முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய் வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதிய வராக இருந்தார். (புஹாரி: 692)
      அம்ர் இப்னு சலிமா(றழி) அவர்கள் கூறினார்கள்: மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்று கூறினார்கள்’ எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (புஹாரி:4302)
      மாலிக் இப்னு ஹுவைரிஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையமாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
      நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமா இருக்கட்டும்” என்று கூறினார்கள். (புஹாரி: 628)
      மேலும் தங்கள் பொறுப்பில் உள்ள இடமாக இருப்பின் குர்ஆன் ஹதீசுக்கு மாறு செய்வோர் , புறக்கணிப்போர் ஆகியோரை இமாமத்திட்கு முட்படுத்தக் கூடாது . அவர் செய்யும் தவறை வெறுப்பதன் அடையாளம் அவரை தடுப்பதே, அதே நேரம் இணைவைப்பில் ஈடுபடுபவராக இருப்பின் அவர் அதற்கு தகுதியற்றவாராவார்.
      உபாததுப்னு சாமித் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர’ என்று எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும். (புஹாரி: 7056)

  21. assalamu alaikum v.v.paalkudi sattathil 10 thadavai paal kudiththal thaai pillai uravu varum endru kuraanil ulladaha aaysha (rali)arivikkum hadees muslimil ulladu.idu sahihanada?aanal appadi oru vasanam kuraanil illai.vilakkam thevai.?

    1. ஐந்து தடவைகள் பாலூட்டுவது

      “ஐந்து தடவைகள் பாலூட்டுவது, பத்து தடவைகள் பாலூட்டினால் மஹ்ரமியத் உண்டாக்கும் என்ற சட்டத்தை மாற்றியது” என்ற ஹதீசுக்கான விளக்கம்!
      صحيح مسلم
      عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: ” كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ، بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ ”
      ஆயிஷா றழி அவர்கள் கூறினார்கள்: “குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் குடித்தால் மஹ்ரமியத் உண்டாகும்” என்று அல்குர்ஆனில் இருந்து, பின்பு “குறிப்பிட்ட ஐந்து தடவைகள் மஹ்ரமியத்தை உண்டாக்கும்” என்பதைக் கொண்டு மாற்றப்பட்டது, அவைகள் அல்குர்ஆனில் ஓதப்படும் நிலையிலேயே நபிகளார் மரணித்தார்கள்.” (முஸ்லிம்:3670,3671)
      இந்த செய்தி நம்பகமான மிகப் பலமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டு பதியப்பட்ட ஒரு செய்தியாகும்.
      ஆனாலும் வரலாற்றில் மிகச் சிலரால் இந்த ஹதீஸ் மறுக்கப்பட்டது. காரணம்; இந்த செய்தி அல்குர்ஆனில் குறைவு இருக்கின்றது என்ற சந்தேகத்தை உருவாக்கிவிடும் என்பதாகும், ஏனெனில் நபிகளார் மரணிக்கும் போது அல்குர்ஆனில் இருந்த வசனம் தற்போது இல்லை, அதனை அல்குர்ஆனில் இருந்து நீக்கியது யார் என்பதே!
      முதல் விடயம் இது இன்று நேற்று எழுதப்பட்ட ஒரு செய்தியல்ல , மாறாக, சிறந்த நூற்றாண்டு என்று நபிகளாரால் சிறப்பித்துக் கூறப்பட்ட காலத்தில் நம்பகமானவர்கள் வழியால் பதியப்பட்டதே. அன்றிலிருந்து ஆயிரம் வருடங்களை கடந்து வந்திருக்கும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த ஹதீஸ் எப்படி கைய்யாளப்பட்டுள்ளது என்று பார்ப்போமாக இருந்தால் ஒரு நல்ல முடிவுக்கு வரமுடியும்.
      அடுத்து இந்த இடைப்பட்ட காலத்தில் குர்ஆன் ஹதீஸை பாதுகாப்பதற்காக பல ஆயிரக்கணக்கான அறிஞ்சர்கள் பாடுபட்டு, தன் முழு வாழ்க்கையையும் செலவளித்துள்ளார்கள். ஒரு வகையில் இஸ்லாத்தை பாதுகாக்க அவர்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று கூறலாம், எனவே இன்றைக்கு நாம் எடுக்கும் முடிவு அந்த எல்லா அறிஞ்சர்களையும் “அவர்கள் இஸ்லாத்தை பால் படுத்திவிட்டார்கள்” என்ற நிலைக்கு இட்டுச் செல்லாமல், அல்லது “அவர்கள் இஸ்லாத்தை அறியாதவர்கள்” போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லாமல், ஒரு முடிவுக்கு வருவதே ஆரோக்கியமானது.
      எனவே நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட, பல ஆயிரக்கணக்கான அறிஞ்சர்களின் பார்வையைக் கடந்து வந்த இந்த ஹதீசை எப்படி நாம் புரிவது!!
      இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிடலாமா என்றால், ஒரு தகவலை ஏற்பதற்கும், மறுப்பதற்கும் ஒரு வழியை அல்லாஹ் காட்டியுள்ளான், அல்லாஹ் கூறுகின்றான்:
      يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ
      முஃமின்களே! பாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)
      எனவே இந்த அடிப்படையில் அந்த ஹதீசை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களே, அவர்கள் நம்பகமானவர்களாக இருக்க அந்த செய்தியை மறுப்பது என்பது அறிவிப்பாளர்களுள் சந்தேகத்தை ஏற்படுத்தலாம். எனவே அதனை ஏற்றுக் கொள்வதே ஹதீஸ்களை ஏற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் விதியின் அடிப்படையில் மிகப் பொருத்தமானது.
      அப்படியானால் இந்த ஹதீஸ் குர்ஆனில் குறைவு இருப்பது போன்று ஒரு சந்தேகத்தை தோற்றுவிக்கின்றதே என்றால், அதற்குத்தான் அன்றைய காலம் தொட்டு சஹீஹான செய்திகளுக்கு இடையில் முரண்பாடுகள் தென்படும் பொது அதனை கையாள்வதற்கு பலவழிகளை முன்வைத்துள்ளனர் குர்ஆன் சுன்னாவை பாதுகாப்பதட்காக பாடுபட்ட அறிஞ்சர்கள். அந்த வகையில் நாசிக் (சட்டத்தை மாற்றக்கூடியது), மன்ஸுக் (மாற்றப்பட்ட சட்டம்) என்ற அடிப்படை விடையம் மிகவும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையானது குர்ஆன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்ட (அஹ்லுஸ் சுன்னா, வல்ஜமாஆவாகிய) அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
      எமக்கு எந்த சஹீஹான ஹதீஸ்கள் முரண்படுவது போன்றோ, குர்ஆனின் தனித்துவத்திற்கு பங்கம் விளைவிப்பது போன்றோ தென்பட்டால், இந்த அடிப்படையை மேற்கொள்வதே ஆரோக்கியமானது!
      எனவே இந்த சஹீஹான செய்தியை முறையாக விளங்க என்ன வழி!!!
      1- நாசிக், மன்ஸுக் என்பது பல வகை உள்ளது, அவற்றுள் “சொல் மாற்றப்பட்டு, சட்டம் மாத்திரம் எஞ்சியிருத்தல் என்பது” ஒரு வகையாகும். இந்த ஹதீசும் அந்த வகையை சார்ந்ததாகும். எனவே “பத்து தடவைகள் பால் குடிப்பது, மஹ்ரமியத்தை உண்டாக்கும்” என்ற வசனமானது, சொல்லும் மாற்றப்பட்டு, சட்டமும் “ஐந்து தடவைகள் உண்டாக்கும்” என்று மாற்றப்பட்டதாகும். இப்படி முடிவெடுப்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை என்பது அடிப்படையற்ற வாதமாகும், ஏனெனில் சஹீஹான ஹதீஸ்களும் வஹியாகும். எனவே இப்படி அனுகினால் குர்ஆனிலும் குறை வரப்போவதில்லை, அந்த ஹதீஸிலும் எந்த குறையும் ஏற்படப் போவதில்லை.
      2- “அவைகள் குர்ஆனில் ஓதப்படும் நிலையில் நபிகளார் மரணித்தார்கள்” என்ற ஆயிஷா நாயகியின் கூற்று, நபிகளாரின் மரணத்திற்குப் பின் அந்த வசனம் அகற்றப்பட்டது என்பதற்கு ஆதாரமாகாது, மாறாக அதன் அருத்தம் “அந்த வசனம் நபிகளாரின் பிற்பட்ட காலத்தில் மாற்றப்பட்டதனால், அதனை அறியாத பலர் ஓதிக் கொண்டிருந்தனர்” என்பதே. இல்லையென்றால் “நாம் அதனை ஓதிக்கொண்டிருந்தோம், அதை மறைத்துவிட்டார்கள்” என்று ஆயிஷா றழி அவர்கள் கூறியிருப்பார்கள். எனவே மாற்றப்பட்ட செய்தி தெரிய வந்ததும் விட்டுவிட்டனர். ஏனெனில் குர்ஆனை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்ட சைத் பின் ஸாபித் (றழி) அவர்கள் உறுதிப்படுத்திய பின்னரே குர்ஆனில் சேர்த்தார்கள்.
      அவர்களே கூறினார்கள்: ………..(பிறகு) அபூ பக்ர்(றழி) (என்னிடம்) ‘(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக ‘வஹீ’ (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்’ என்று கூறினார்கள்.
      அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(றழி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்’ என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனதையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) ‘அத்தவ்பா’ எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(றழி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (திருக்குர்ஆன் 09:128, 129) ………..
      3- அடுத்து இன்று இந்த ஹதீசை பலவீனப்படுத்தி அல்குர்ஆனை சிலர் பாதுகாக்க நினைக்கின்றனர், ஆனால் இந்த செய்தியையும் அந்த அறிஞ்சர்கள் பதிந்து வைத்தது, அல்குர்ஆனின் நம்பகத்தன்மையை இன்னும் பலப்படுத்துகின்றது, இல்லையென்றால் இன்றைய மக்களை விடவும் அல்குர்ஆனை பாதுகாக்கத் துடித்தவர்கள் அன்றைய மக்கள், இதனை மறைத்து முஸ்லிமில் பதியாமல் விட்டிருக்கலாம். அவர்கள் அப்படி செய்யவில்லை, காரணமே அல்குர்ஆனின் நம்பகத் தன்மையை பலப்படுத்தத்தான். இது எது போன்று என்றால் நபியவர்கள் “தன்னை கண்டித்து வந்த செய்திகளையும்” மக்களுக்கு மறைக்காமல் சொன்னது போன்றதே.
      عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: لَوْ كَتَمَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا مِمَّا أُوحِيَ إِلَيْهِ مِنْ كِتَابِ اللَّهِ، لِكَتَمَ: {وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ}
      ஆயிஷா றழி அவர்கள் கூறினார்கள்: நபிகளார் வஹியிலிருந்து ஏதாவது ஒன்றை மறைப்பதாக இருந்தால் “அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; (33:37) என்ற வசனத்தை மறைத்திருப்பார்கள். (தபரீ: சஹீஹ்)
      எனவே நபிகளார் தன்னை அல்லாஹ் விமர்சித்த செய்தியையும் மறைக்காமல் மக்களுக்கு எடுத்து சொன்னது எப்படி நபிகளாரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமோ, அதேபோன்றுதான் அல்குர்ஆனிலிருந்து மாற்றப்பட்ட வசனங்களையும் நபித்தோழர்கள் கூற, அறிஞ்சர்கள் பாதுகாத்து வைத்திருப்பது அல்குர்ஆனின் நம்பகத்தன்மையை பலப்படுத்துகின்றது.
      4- அடுத்து இப்படி சொல் அளவில் மாற்றப்பட்ட பல குர்ஆன் வசனங்கள் சஹீஹான ஹதீஸ்களில் இருக்கின்றன. எனவே இந்த ஹதீசை மறுத்து குர்ஆனை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை, இந்த ஹதீசை வைத்திக் கொண்டே குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதை நிறுவலாம்.
      அதனை அல்லாஹ் எங்களுக்கு கற்றுத்தருகின்றான். அல்லாஹ் சொல்கிறான்:

      مَا نَنسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنسِهَا نَأْتِ بِخَيْرٍ مِّنْهَا أَوْ مِثْلِهَا ۗ أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
      ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? (2:106)

      மேலும் இதற்கு சான்றாக இன்னும் சில ஹதீஸ் ஆதாரங்களைப் பார்க்கலாம்.
      صحيح مسلم (3/ 1317)
      عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ، يَقُولُ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهُوَ جَالِسٌ عَلَى مِنْبَرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ قَدْ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَقِّ، وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، فَكَانَ مِمَّا أُنْزِلَ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ، قَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَعَقَلْنَاهَا، فَرَجَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَجَمْنَا بَعْدَهُ، فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ أَنْ يَقُولَ قَائِلٌ: مَا نَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللهِ فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللهُ، وَإِنَّ الرَّجْمَ فِي كِتَابِ اللهِ حَقٌّ عَلَى مَنْ زَنَى إِذَا أَحْصَنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ، إِذَا قَامَتِ الْبَيِّنَةُ، أَوْ كَانَ الْحَبَلُ، أَوِ الِاعْتِرَافُ “،
      இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: உமர் (றழி) அவர்கள் மிம்பரின் மீது அமர்ந்தவர்களாக: அல்லாஹ் முஹம்மத் நபியை சத்தியத்தைக் கொடுத்து அனுப்பினான், அவர்களுக்கு வேதத்தையும் இறக்கினான், அப்படி இறக்கப்பட்டதில் “ரஜ்முடைய வசனமும் ” ஒன்றாகும், அதனை நாங்கள் ஓதி, மனனமிட்டு, விளங்கியும் வைத்தோம். நபிகளார் (விபச்சாரிக்கு) கல்லெறிந்தார்கள், நாமும் எறிந்தோம். காலம் போகும் போது “அல்குர்ஆனில் கல்லெறிவதைப் பற்றி நாம் காணவில்லை” என்று கூறி, அல்லாஹ் இறக்கிய சட்டத்தை மறுத்து வழிகெட்டு விடுவார்களோ என்று நான் பயப்படுகின்றேன்…… (முஸ்லிம்)
      இதுவும் இந்த வகை நாசிக் மன்சூகிற்கு ஆதாரமாகும். சொல் மாற்றப்பட்டது என்பதற்கு ஆதாரமே நபித் தோழர்கள் அதனை குர்ஆனில் பதியாததுதான். குர்ஆனை பாதுகாப்பதற்காக ஆலோசனை வழங்கியவரே உமர் (றழி) எனும் போது, அவர்கள் மறைத்தார்களா!! அல்லது அல்குர்ஆனிலிருந்து மாற்றப்பட்டதை விட்டுவிட்டார்களா!!! முறையாக சிந்தித்தால் சீர்பெரலாம்!!!
      மேலும் பின்வரும் ஹதீஸும் வசனம் மார்ரப்படதற்கு சிறந்த உதாரணமாகும்.
      அனஸ்(றழி) அவர்கள் அறிவித்தார்கள்:
      நபி(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), ‘உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் நான் எடுத்துரைக்கிறேன்; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள்; அவரை எதுவும் செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார். பிறகு, அவரின் எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர.
      அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம்(ரஹ்), ‘கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக் கொண்டார்)’ என்று (அறிவிக்கப்பட்டதாக) கருதுகிறேன்” என்று கூறுகிறார்.
      ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு, ‘நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தான் பெற்ற நற்பலனைக் குறித்து திருப்தி) கொள்ளும்படிச் செய்தான்’ என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ‘ ‘நாங்கள் எங்கள் இறைவனைச் சென்றடைந்து விட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்துவிட்டான். அவனைக் குறித்து நாங்கள் திருப்தியடைந்தோம். தன்(வெகு மதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான்’ என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்” என்னும் இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம் குலத்தாரைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், பனூ உஸைய்யா ஆகிய கிளையினருக்குக் கேடு நேர, நாற்பது நாள்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள். (புஹாரி: 2801,,,,)
      எனவே நபிகளார் காலத்து நடைமுறையில் இருந்ததையே நபித்தோழர்கள் பதிவு செய்கிறார்கள், இப்படி மன்சூகில் ஒரு சாதம் இருக்கிறது என்று ஆதாரம் காட்டி தெளிவுபடுத்திய பிறகும், “ஆதாரம் இருக்கிறதா” என்று கேட்பது சிறுபிள்ளைத் தனமாகும். அல்லாஹ் போதுமானவன்!
      5- அடுத்து குர்ஆன் என்பது அல்லாஹ்வின் கட்டளையால் பாதுகாக்கப்பட்டது, எனவே இந்த செய்தியை வைத்து அல்குர்ஆனில் குறை காணுவோர், அந்த வசனத்தை சரியாக புரியாதவர்களே. அல்லாஹ் கூறுகின்றான்:
      إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
      நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)
      அல்லாஹ் அல்குர்ஆனை பாதுகாத்ததன் வெளிப்பாடே ஆயிஷா (றழி) அவர்களின் ஹதீஸ்.
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
      இதற்கு அப்பாலும் “புகாரி, முஸ்லிம்” மனிதர்கள் தானே என்று கூறி, அவர்கள் அறிவிப்பாளர் தொடரை வைத்து, சரியாக செய்த பணியில் குறை காணுவார்களாக இருந்தால் அதற்குத் தீர்வு கொடுக்கவே மறுமை இருக்கின்றது. அல்லாஹ் போதுமானவன்!!!

  22. இடி, மின்னலின் போது சொல்வதற்கு ஏதும் திக்ருகள் இருக்கின்றதா?

    1. இடி, மின்னலின் போது சொல்வதற்கு நபி வழியில் ஏதும் இருக்கின்றதா என்று தேடிப்பார்க்கும் சில ஹதீஸ்களையும், நபித் தோழர்களின் கூற்றுக்கலையும் பார்க்க முடிகின்றது, அவை ஷீஹானதா, பலவீனமானதா என்பதை நோக்குவோம்!
      سنن الترمذي ت بشار (5/ 380)
      عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ، قَالَ: اللَّهُمَّ لاَ تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ.
      இப்னு உமர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இடி, மின்னல் சத்தத்தைக் கேட்டால், ‘அல்லாஹும்ம லா தக்துல்னா பிகலபிக, வலா துஹ்ளிக்னா பியாதாபிக, வ ஆபினா கப்லா தாளிக” என்று கூறுவார்கள். (அஹ்மத்: 5763, திர்மிதீ: 3450,நசாஇ)
      இறைவா! உனது கோபத்தால் எம்மை கொன்றுவிடாதே, மேலும் உனது தண்டனையைக் கொண்டு எம்மை அழித்துவிடாதே, அதற்கு முன்னர் எம்மை ஆரோகியப்படுத்திவிடு.
      அந்த ஹதீஸ் “அபூ மதர்” என்பவர் வழியாகவே பதியப்பட்டுள்ளது, அவர் ‘மஜ்ஹூல்’ அறியப்படாதவராக இருப்பதோடு, அவரிடமிருந்து அறிவிப்பவரான “அல்ஹஜ்ஜாஜ் பின் அர்தா” என்பவரும் விமர்சிக்கப்பட்ட பலவீனமானவ்ரே! எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
      அறிஞ்சர் அஹ்மத் ஷாகிர் அவர்கள் முஸ்னத் அஹ்மதில் சஹீஹ் என்று கூறியிருந்தாலும்,அறிஞ்சர் அல்பானி அவர்களும் அதபுல் முப்ரத் எனும் நூலில் லஈபாக்கியுள்ளார்கள். லஈப் என்பதே சரியான கருத்தாகும்.
      تفسير الطبري = جامع البيان ت شاكر (16/ 389)
      حدثنا أحمد بن إسحاق قال: حدثنا أبو أحمد قال: حدثنا إسرائيل، عن أبيه، عن رجل، عن أبي هريرة رفع الحديث: أنه كان إذا سمع الرعد قال:”سبحان من يسبح الرعد بحمده”.
      அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் இடி சத்தத்தைக் கேட்டால், சுப்ஹான மன் யுசப்பிஹூர் றஃது’ என்று கூறுவார்கள்.
      இதனை இமாம் தபரி அவர்கள் தனது தப்சீரில் பதிந்துள்ளார்கள், அதில் யார் என்று பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் வந்துள்ளார். எனவே இது பலவீனமானதாகும்.
      المراسيل لأبي داود (ص: 356)
      531 – حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، أَنَّ قَوْمًا سَمِعُوا الرَّعْدَ، فَكَبَّرُوا [ص:357] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَمِعْتُمُ الرَّعْدَ فَسَبِّحُوا وَلَا تُكَبِّرُوا»
      உபைதுல்லா (ரஹ்) கூறினார்கள்: ஒரு கூட்டம் இடி சத்தத்தைக் கேட்டுவிட்டு அல்லாஹ்வை தக்பீர் செய்தார்கள், அப்போது நபியவர்கள்; நீங்கள் இடி சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்வை (சுப்ஹானல்லாஹ் சொல்லி) துதியுங்கள், தக்பீர் செய்யவேண்டாம் .
      இதனை அபூதாவுத் இமாம் அவர்கள் தனது மராசீல் எனும் நூலில் பதிந்துள்ளார்கள். உபைதுல்லாஹ் என்பவர் தாபிஇ, இந்த வகை ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனெனில் நபிகளாரை காணாதவர் நபிகளார் கூறியதாக சொன்னால் (முர்ஸல்) ஏற்க முடியாது என்பது பொது விதி.
      الدعاء للطبراني (ص: 304)
      982 – حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ، ثنا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، ثنا يَحْيَى بْنُ كَثِيرٍ أَبُو النَّضْرِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَمِعْتُمُ الرَّعْدَ فَاذْكُرُوا اللَّهَ عَزَّ وَجَلَّ فَإِنَّهُ لَا يُصِيبُ ذَاكِرًا»
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இடி சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள், அவனை திக்ரு செய்வோரை அது தீண்டாது.
      இதனை இமாம் தப்ரானீ அவர்கள் அல்முஃஜமுல் கபீரிலும், அத்துஆஃ விலும் பதிந்துள்ளார்கள்.
      அதன் அறிவிப்பாளர்களான “அப்துல் கரீம் அபூ உமைய்யா “என்பவரும், அபுன் நள்ர் யஹ்யப்னு கசீர் என்பவரும் பலவீனமானவர்களே. அவ்விருவரும் சில அறிஞ்சர்களால் “மத்ரூக்” விடப்பட்டவர்கள் என்று விமர்சிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஹதீசும் பலவீனமானதே.
      இப்படி நபிகளாரைத் தொட்டு வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானதே!
      நபித் தோழர்களைத் தொட்டு வந்த செய்திகள். (ஆசார்)
      الزهد لأبي داود (ص: 323)
      371 – حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، وَقُتَيْبَةُ الْمَعْنِيُّ، قَالَا: نا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ: أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ وَقَالَ: «سُبْحَانَ مَنْ سُبِّحَ» وَقَالَ الْقَعْنَبِيُّ فِيمَا قَرَأَ عَلَى مَالِكٍ: «سُبْحَانَ مَنْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ، إِنَّ هَذَا لَوَعِيدٌ لِأَهْلِ الْأَرْضِ شَدِيدٌ»
      அப்துல்லாஹிப்னு சுபைர் (ரழி) அவர்கள் இடி சத்தத்தைக் கேட்டால், பேசுவதை விட்டுவிட்டு, சுப்ஹான மன் சுப்பிஹா என்று கூறுவார்கள். கஃநபீ அவர்கள் மாலிக் இமாம் அவர்களுக்கு எடுத்துகாட்டியத்தில், சுப்ஹான மன் யுசப்பிஹூர் ரஃது பிஹம்திஹீ , இது பூமியில் உள்லோருக்குள்ள கடும் எச்சரிக்கையாகும். என்று கூறுவார்கள்.
      இதனை அபூதாவுத் அவர்கள் சுஹ்த் எனும் புத்தகத்தில் பதிந்துள்ளார்கள்.
      இதனை மாலிக் இமாம் அவர்கள் :
      موطأ مالك ت الأعظمي (5/ 1444)
      سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلاَئِكَةُ مِنْ خِيفَتِهِ
      சுப்ஹானல்லதீ யுசப்பிஹூர் ரஃது பிஹம்திஹீ, வல்மலாஇகது மின் கீபதிஹீ. என்று பதிந்துள்ளார்கள். இது மக்துஃ வகையை சார்ந்த தாபி ஈயின் கூற்றாகும்.
      அதே செய்தி மவ்கூபாகவும் (இப்னுஸ் சுபைர் அவர்களின் கூற்றாக)அல் அதபுல் முப்ரத்தில் பதியப்பட்டுள்ளது , அது சஹீஹாகும்.
      الدعاء للطبراني (ص: 304)
      984 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا أَبُو نُعَيْمٍ، ثنا يَعْلَى بْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ، عَنْ أَبِي صَخْرَةَ جَامِعِ بْنِ شَدَّادٍ، قَالَ: كَانَ الْأَسْوَدُ بْنُ يَزِيدَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ، قَالَ: ” سُبْحَانَ مَنْ سَبَّحْتَ لَهُ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
      அலச்வதுப்னு யசீத் அவர்கள் இடி சத்தத்தைக் கேட்டால் ‘சுப்ஹான மன் சப்பஹத் லஹூ, யுசப்பிஹூர் ரஃது பிஹம்திஹஈ வால் மலாஇகது மின் கீபதிஹீ.’ என்று கூறுவார்கள்.
      இது தப்ரானியின் துஆவில் பதியப்பட்டுள்ளது. இது முன்கதிஃ வகையை சார்ந்த பலவீனமானது. அபூ சக்ராவுக்கும் அலச்வத் அவர்களுக்கும் சந்திப்பில்லை.
      الأدب المفرد مخرجا (ص: 252)
      722 – حَدَّثَنَا بِشْرٌ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الْعَزِيزِ قَالَ: حَدَّثَنِي الْحَكَمُ قَالَ: حَدَّثَنِي عِكْرِمَةُ، أَنَّ ابْنَ عَبَّاسٍ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ قَالَ: سُبْحَانَ الَّذِي سَبَّحْتَ لَهُ، قَالَ: إِنَّ الرَّعْدَ مَلَكٌ يَنْعِقُ بِالْغَيْثِ، كَمَا يَنْعِقُ الرَّاعِي بِغَنَمِهِ
      இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இடி சத்தம் கேட்கும் போது, சுப்ஹானல்லதீ சப்பஹத் ல்ஹூ என்று கூறுவார்கள்.
      இது அதபுல் முப்ரதிலும், தப்ரியிலும் பதியப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமானதே. இதில் வரும் அல்ஹகம் என்பவரும், மூசா என்பவரும் பலவீனமானவர்களே.
      இதே செய்தி அலி (ரழி) அவர்களைத் தொட்டும் தபரியில் பதியப்பட்டுள்ளது,
      تفسير الطبري = جامع البيان ت شاكر (16/ 389)
      حدثنا الحسن بن محمد قال: حدثنا مسعدة بن اليسع الباهلي، عن جعفر بن محمد، عن أبيه، عن علي رضي الله عنه، كان إذا سمع صوت الرعد قال:”سبحان من سَبَّحتَ له”.
      அது மிகப் பலவீனமானதாகும்.அதில் வரும் முஸ்இதா என்பவர் பொய்யர் என்று விமர்சிக்கப்பட்டவர்.
      இதே செய்தி தாவூச் வழியாக தபரியிலும், ஷாபிஈ இமாமின் உம்மிலும் பதியப்பட்டுள்ளது.
      قَالَ الشَّافِعِيُّ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ قَالَ قُلْت لِابْنِ طَاوُوسٍ: مَا كَانَ أَبُوك يَقُولُ إذَا سَمِعَ الرَّعْدَ؟ قَالَ كَانَ يَقُولُ: سُبْحَانَ مَنْ سَبَّحَتْ لَهُ
      தாவூச் அவர்கள் தாபிஈயாவார்கள்.உம்மு என்ற புத்தகத்தில் பலமான அறிவிப்பளர்களால் பதியப்பட்டுள்ளது.
      الدعاء للطبراني (ص: 305)
      985 – حَدَّثَنَا بِشْرُ بْنُ مُوسَى، ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ مُحَمَّدِ بْنِ رَاشِدٍ الدِّمَشْقِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: كُنَّا مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي سَفَرٍ فَأَصَابَنَا رَعْدٌ وَبَرْقٌ وَبَرْدٌ فَقَالَ لَنَا كَعْبٌ [ص:305]: ” مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الرَّعْدَ: سُبْحَانَ مَنْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ ثَلَاثًا عُوفِيَ مِمَّا يَكُونُ فِي ذَلِكَ الرَّعْدِ ” قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: فَقُلْنَا فَعُوفِينَا، ثُمَّ لَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي بَعْضِ الطَّرِيقِ فَإِذَا بَرْدَةٌ قَدْ أَصَابَتْ أَنْفَهُ فَأَثَّرَتْ بِهِ، فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا هَذَا؟ فَقَالَ: بَرْدَةٌ أَصَابَتْ أَنْفِي فَأَثَّرَتْ بِي، فَقُلْتُ: إِنَّ كَعْبًا حِينَ سَمِعَ الرَّعْدَ قَالَ لَنَا: مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الرَّعْدَ: سُبْحَانَ مَنْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ عُوفِيَ مِمَّا يَكُونُ فِي ذَلِكَ الرَّعْدِ، فَقُلْنَا فَعُوفِينَا، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: فَهَلَّا أَعْلَمْتُمُونَا حَتَّى نَقُولَهُ
      கஃப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: யார் இடி சத்தத்தைக் கேட்கும் போது ‘சுப்ஹான மன் யுசப்பிஹூர் ரஃது பிஹம்திஹீ வல்மலாஇகது மின் கீபதிஹீ என்று மூன்று விடுத்தம் கூறுகின்றாரோ அவருக்கு அதன் தீங்கிலிருந்து பாதுகாப்பளிக்கப்படும்.
      இது தப்ரானி அவர்களின் துஆவில் பதியப்பட்டுள்ளது, அது சஹீஹானதாக உள்ளது.

      எனவே சில நபித் தோழர்களைத் தொட்டு சஹீஹான அறிவிப்பாளர் வரிசையில் பதியப்பட்டுள்ளது, ஆனாலும் வார்த்தை வித்தியாசங்கள் பரவலாக இருந்திருக்கின்றது, மேலும் சிறப்புகளும் வித்தியசப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் குறிப்பிட்ட ஒன்றை சுன்னாவாக காட்டமுடியாது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
      இறைவா ! நபிகளாரைப் பின்பற்றி வாழ்ந்து அதே நிலையில் மரணிக்கும் பாக்கியத்தையும் எங்களுக்கு தருவாயாக.

  23. சஹாபாக்களின் வரலாறை தொகுத்து மூல ஆதரங்களுடன் கூடிய கட்டுரை வடிவில் ஏதேனும் உள்ள்தா??அதை அறிய ஆவலாக இருக்கிறது!!கொஞ்சம் உதவுங்கள்!!அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்!!

    1. இதுவரைக்கும் தமிழில் அப்படி முழுமையான ஒரு கட்டுரைத் தொகுப்பைப் பார்த்ததில்லை, அது ஒரு பெரிய தொகுப்பு, முடியுமானால் முயற்சிப்போம், இன்ஷா அல்லாஹ்.
      ஆனால் வீடியோவாக பார்ப்பதானால் சில பகுதிகளாக பார்க்கலாம்!!
      http://www.youtube.com/watch?v=E57voon165Y
      http://www.murshidabbasi.com/?p=1175
      http://www.murshidabbasi.com/?p=1172
      ……..

  24. பெண்கள் மார்க்கத்தை படிப்பதட்காகவோ, மார்க்கம் அனுமதித்த விடையங்களுக்காககவோ வீட்டை விட்டு வெளியேறலாமா? குறிப்பாக ஜும்ஆ, தொழுகை போன்றவற்றிட்காக பள்ளிக்கு வரலாமா?

    1. பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டதா?
      பொதுவாக பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது சம்பந்தமாக முஸ்லிம்களின் நடவடிக்கையை எடுத்து நோக்கினால்; ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி அந்நிய மதத்தவர்களைப் போன்று செல்வதைப் பார்க்கலாம். இன்னும் ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதே பாவம், ஹராம் என்று நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாத்தை எடுத்து நோக்கினால், அது பெண் சமூகத்திட்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத, பொருத்தமான, ஒழுக்கமான ஒரு தீர்வை சொல்லித்தருகின்றது.
      பெண்கள் வெளியேறுவது சம்பந்தமாக இஸ்லாம் சொல்லும் போது நபிகளாரின் மனைவியரைப் பார்த்து சுருக்கமான சொன்ன செய்தி;வீணாக மடமைக் கால பெண்கள் சுற்றித் திரிந்தது போன்று வெளியில் திரிய வேண்டாம் என்பதே! அல்லாஹ் கூறுகின்றான்
      وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ
      (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; ….. (33:33)
      எனவே இஸ்லாம் கற்றுத் தந்திருக்கும் ஒழுக்கங்களைப் பேணி வெளியேற முடியும் என்பது இந்த வசனத்தின் மூலம் புலப்படும் செய்தியாகும். அதற்கான அனுமதியை நபிகளாரின் வழிமுறையில் அதிகமாக காணமுடியும்.
      عَنْ عَائِشَةَ، قال النبي (صل) لسودة (رضي): «قَدْ أَذِنَ اللَّهُ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَوَائِجِكُنَّ»
      நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரைப் பார்த்து; ……'(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான்” என்று கூறினார்கள். (புஹாரி:5237)
      எனவே இஸ்லாம் வெளியேற அனுமதித்த சந்தர்ப்பங்களையும், ஒழுக்கங்களையும் வரம்புகளையும் நோக்குவோம்.!
      பெண்கள் வெளியேறுவதற்கான பொது விதிகள்:-
      ஆண் துணை; திருமணம் முடிப்பதற்கு தடுக்கப்பட்ட (மஹ்ரம்) ஒரு ஆண் அல்லது கணவன் போன்றோரின் துணை.
      عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُسَافِرِ المَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ، وَلاَ يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي تُرِيدُ الحَجَّ، فَقَالَ: «اخْرُجْ مَعَهَا»
      இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே அன்றி ஆண்கள் அவளிடம் செல்லக் கூடாது.’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர். (புஹாரி: 1862,,,, முஸ்லிம்)
      عن أبي سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ: عنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” لاَ تُسَافِرِ المَرْأَةُ مَسِيرَةَ يَوْمَيْنِ إِلَّا وَمَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருஙகிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! (புகாரி:1995, முஸ்லிம்)
      சில ஹதீஸ்களில் மூன்று நாட்கள் நிபந்தனை இடப்பட்டுள்ளது. பொதுவாக பயணம் என்றும் வந்திருப்பதால் அதனையே நிபந்தனையாக ஏற்கவேண்டியுள்ளது.
      வாசனைத் திரவியங்களை பாவிக்காமல் வெளியேறல்
      عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كُلُّ عَيْنٍ زَانِيَةٌ، وَالمَرْأَةُ إِذَا اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِالمَجْلِسِ فَهِيَ كَذَا وَكَذَا يَعْنِي زَانِيَةً.
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்யக்கூடியதே! ஒரு பெண் மனம் பூசியவலாக, ஒரு கூட்டத்தை கடந்து செல்வாளாக இருந்தால் அவள் அப்படிப்பட்டவள். (விபச்சாரி) (அஹ்மத், திர்மிதி:2786)
      عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ»
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்மணி வாசனை பூசிவிட்டால், அவள் எங்களோடு இஷாத் தொழுகையில் கலந்து கொள்ளவேண்டாம். (முஸ்லிம்:1026)
      عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللهِ، قَالَتْ: قَالَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا»
      இப்னு மஸ்ஊத் அவர்களின் மனைவியான ஸைனப் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ; உங்களில் ஒரு பெண்மணி பள்ளிக்கு வருவதாக இருந்தால் வாசனையை பாவிக்க வேண்டாம். என்று எங்களுக்கு கூறினார்கள். (முஸ்லிம்: 1025)
      அந்நிய ஆண்கள் கலப்படும் நிலை இருந்தால், அரைகுறை ஆடையோடு வெளியேறாதிருத்தல்.
      عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நரக வாசிகளான இரண்டு கூட்டத்தவர்கள் இருக்கின்றனர், அவர்களை நான் பார்த்ததில்லை; ஒரு கூட்டத்தார், அவர்களிடம் மாட்டின் வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும், அவற்றின் மூலம் மனிதர்களை அடிப்பார்கள். மேலும் சில பெண்கள், ஆடை அணிந்தும் நிர்வாணிகளாக இருப்பார், (ஆடவர்களை) சாயவைப்பவர்களாகவும், (அவர்கள் பால்) சாய்பவர்களாகவும் இருப்பார், அவர்களது தலைகள் (அலங்காரத்தினால்) ஒட்டகத்தின் சாய்ந்த திமில்ச்சதையைப் போன்று இருக்கும், அந்தப் பெண்கள் சுவனம் நுழையவும் மாட்டார்கள், அதன் வாடையையும் நுகர மாட்டார்கள், அதன் வாடையோ! இவ்வளவு தூரத்திட்கு வீசும். (முஸ்லிம்:5704)
      عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَيْقَظَ لَيْلَةً، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الفِتْنَةِ، مَاذَا أُنْزِلَ مِنَ الخَزَائِنِ، مَنْ يُوقِظُ صَوَاحِبَ الحُجُرَاتِ؟ رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ»
      உம்மு ஸலமா(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு விழித்ததும், ‘ஸுப்ஹானல்லாஹ்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டுள்ளன? எத்தனை பொக்கிஷங்கள் திறக்கப்பட்டுள்ளன. அறைகளில் உள்ள பெண்களை எழுப்பி விடுவோர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருந்த எத்தனையோ பேர் மறுமையில் நிர்வாணிகளாக இருப்பார்கள்’ என்று குறிப்பிட்டார்கள். (புஹாரி: 1126)
      عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «المَرْأَةُ عَوْرَةٌ، فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்கள் என்போர் மறக்கப்படவேண்டிய (அவரத்) ஆவர், எனவே அவர்கள் (தன்னை அலங்கரித்து) வெளியேறினால். ஷைத்தான் அவளை (ஆண்கள் பார்க்கும் படி) வெளிப்படுத்தி காட்டுவான். (அஹ்மத், திர்மிதி:1173)
      அலங்கரித்த நிலையில் என்று கூறுவதற்கான காரணம், நபியவர்கள் “அவ்ரத்” என்றார்கள், மறைக்கும் போது அதன் சட்டம் மாறும் என்பதும், நபியவர்கள் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் வெளியேற அனுமதுயளித்துள்ளார்கள் என்பதுமாகும்.

      பெண்கள் வீட்டை விட்டு வெளியேற இஸ்லாம் அனுமதி அளித்த சந்தர்ப்பங்கள்.
      அறிவைத் தேடுவதற்கு வெளியேறுதல்
      عَنْ أَبِي سَعِيدٍ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ، فَقَالَ: «اجْتَمِعْنَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي مَكَانِ كَذَا وَكَذَا»، فَاجْتَمَعْنَ
      அபூ ஸயீத் அல்குத்ரீ(றழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள்…… (புஹாரி:101,7310,,முஸ்லிம்)
      தொழுகைக்காக செல்லுதல்; பெண்களைப் பொருத்தவரை வீட்டில் தொழுவது சிறந்ததாக இருந்தாலும், விரும்பினால் பள்ளிக்கு செல்ல அனுமதி இருக்கின்றது.
      عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ إِلَى المَسْجِدِ فَلاَ يَمْنَعْهَا»
      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். (புஹாரி:5238,, முஸ்லிம்)
      عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَتِ امْرَأَةٌ لِعُمَرَ تَشْهَدُ صَلاَةَ الصُّبْحِ وَالعِشَاءِ فِي الجَمَاعَةِ فِي المَسْجِدِ، فَقِيلَ لَهَا: لِمَ تَخْرُجِينَ وَقَدْ تَعْلَمِينَ أَنَّ عُمَرَ يَكْرَهُ ذَلِكَ وَيَغَارُ؟ قَالَتْ: وَمَا يَمْنَعُهُ أَنْ يَنْهَانِي؟ قَالَ: يَمْنَعُهُ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ»
      இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: உமர்(றழி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் ‘உங்கள் கணவர்) உமர்(றழி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்’ என்று கேட்கப் பட்டது. அதற்கு ‘அவர் என்னைத் தடுக்காதது ஏன்?. “பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்’ என்பதே,”என்று பதிலுரைத்தார். (புஹாரி: 900)
      أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، قَالَتْ: «كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ»
      ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் ஆடைகளால் (தங்களின் உடல் முழுவதையும்) சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் யார் யார் என்பதை வெளிச்சமின்மையால் யாரும் அறியமாட்டார்கள்” (புஹாரி: 372, 578,, முஸ்லிம்)
      சமூகப் பணிகளுக்காக, குறிப்பாக யுத்த களங்களுக்காக, பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தல் போன்றவற்றிட்காக.
      عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: «كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْقِي وَنُدَاوِي الجَرْحَى، وَنَرُدُّ القَتْلَى إِلَى المَدِينَةِ»
      ருபய்யிஃ பின்து முஅவ்வித்(றழி) அவர்கள் கூறினார்கள்: பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களை (போர்க் களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம். (புஹாரி:2882, முஸ்லிம்)
      عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: ” لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ، انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ، وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ، أَرَى خَدَمَ سُوقِهِمَا تَنْقُزَانِ القِرَبَ، وَقَالَ غَيْرُهُ: تَنْقُلاَنِ القِرَبَ عَلَى مُتُونِهِمَا، ثُمَّ تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ القَوْمِ، ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلَآَنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهَا فِي أَفْوَاهِ القَوْمِ ”
      அனஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: உஹுதுப் போரின்போது மக்கள் நபி(ஸல்) அவர்களைவிட்டுவிட்டுத் தோல்வியுற்று (பின்வாங்கிச்) சென்றபோது நான் ஆயிஷா பின்த்து அபீ பக்ர்(றழி) அவர்களையும் உம்மு சுலைம்(றழி) அவர்களையும் கண்டேன். அப்போது அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து கொண்டு வேக வேகமாக நடந்து (சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் காலியானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக் கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதுமாக இருந்தார்கள். நான் அவர்களின் கால்களில் அணிந்திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். (புஹாரி: 2880)
      பணத்தின் போது கணவனுக்கு துணையாக செல்லுதல்.
      عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ أَزْوَاجِهِ، فَأَيُّهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُ، قَالَتْ عَائِشَةُ: فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزْوَةٍ غَزَاهَا فَخَرَجَ فِيهَا سَهْمِي، ……
      ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்….. (புஹாரி: 4141.. முஸ்லிம்)
      عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، وَكَانَ يَقْسِمُ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ يَوْمَهَا وَلَيْلَتَهَا، غَيْرَ أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَبْتَغِي بِذَلِكَ رِضَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
      ஆயிஷா(றழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் (குலுக்கலில்) வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள். ஆனால், சவ்தா பின்து ஸம்ஆ (றழி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குரிய நாளை, நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (றழி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டிருந்தார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். (புஹாரி: 2593)
      ஹஜ், உம்ரா போன்ற வணக்கங்களுக்காக செல்லுதல்.
      عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُسَافِرِ المَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ، وَلاَ يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي تُرِيدُ الحَجَّ، فَقَالَ: «اخْرُجْ مَعَهَا»
      இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணை பெண்னுடன் இருக்கும்போதே அன்றி ஆண்கள் அவளைச் சந்திக்கக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர். (புஹாரி:1862, முஸ்லிம்)
      பெருநாள் தொழுகைக்காக திடலை நோக்கி கட்டாயம் செல்லுதல். எந்தளவுக்கெனில் முழு உடலை மறைக்கும் சொந்த ஆடை இல்லாவிட்டால் இரவலுக்கு வாங்கி அணிந்து செல்லல்.
      عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الحُيَّضَ يَوْمَ العِيدَيْنِ، وَذَوَاتِ الخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ المُسْلِمِينَ، وَدَعْوَتَهُمْ وَيَعْتَزِلُ الحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ، قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا»
      உம்மு அதிய்ய (றழி) அவர்கள் கூறினார்கள்: இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்’ என்றும் கட்டளையிடப்பட்டோம். நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?’ எனக் கேட்டதற்கு, ‘அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்” (புஹாரி:351, முஸ்லிம்)
      உழைப்புக்காக வெளியேறுதல்
      பெண்களைப் பொருத்தவரை அவர்களை நிர்வகிப்பது ஆண்களின் கடமை என்ற அடிப்படையில், உழைத்துக் கொடுக்க யாரும் இல்லை என்று வரும் பொது ஒரு பெண் உழைப்புக்காக செல்வதை நபிகளார் அங்கீகரித்து, அனுமதி வழங்கினார்கள். எந்த அளவுக்கெனில் இத்தாவில் இருக்கும் பெண்ணுக்கே அனுமதுயளித்தார்கள்.
      جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ: طُلِّقَتْ خَالَتِي، فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا، فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ، فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «بَلَى فَجُدِّي نَخْلَكِ، فَإِنَّكِ عَسَى أَنْ تَصَدَّقِي، أَوْ تَفْعَلِي مَعْرُوفًا»
      ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: எனது தாயின் சகோதரி தலாக் சொல்லப்பட்டபோது, அவர் ஈத்தம் பலம் பறிப்பதற்கு முற்பட்டபோது, ஒரு மனிதர் அவர் வெளியேறுவதை தடுத்தார், அப்போது அவர்கள் நபிகளாரிடம் செல்லவே, நபியவர்கள்; அப்படியல்ல, நீர் (தோட்டத்திற்கு சென்று) உனது ஈத்தம் பலத்தை பறிப்பீராக ! ஏனெனில் நீங்கள் (அதன் மூலம்) சதகா செய்யலாம், அல்லது நல்லவற்றில் ஈடுபடலாம். என்று கூறினார்கள். (முஸ்லிம்: 3794)
      இப்படி இஸ்லாமிய வரம்புக்குள் இருந்துகொண்டு ஒரு பெண்ணுக்கு வீட்டை விட்டு வெளியேறலாம். இஸ்லாமிய வரம்பை மீரிச் செயல்படுவது பல வழிகளில் அல்லாஹ்விடம் குற்றவாளியாக்கலாம்.
      இஸ்லாம் அனுமதித்த ஒரு விடயத்திற்காக பயணிக்கும் ஒரு பெண், ஆண் துனையின்றியோ, அந்நிய ஆண்களோடு கலக்கும், தனித்திருக்கும் நிலையோ ஏற்படுமானால், அல்லது தன்னை அலங்கரித்த நிலையிலோ, அல்லது அரைகுறை ஆடைகளுடனோ பயணிக்கும் நிலை ஏற்படுமானால் இவை அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.
      இறை சட்டங்களை பேணி நடக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக!

      வீடியோ பதிவிற்காக click செய்யவும்!

  25. அஸ்லாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு மொளவி..
    அல்லாஹ்விற்காக இந்த கேள்விக்கான பதிலை தாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக..
    திருமணம் செய்வதற்கு முன்னால் மணமகனும் மணமகளும் போனில் மூலம் அல்லது வேறு எதாவது தொடர்பாடல் சாதனங்களின் மூலம் கதைத்து கொள்ளளாமா? முடியாதா? கதைப்பது ஹராம் என்று சொல்லும் படசத்தில் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    (நான் வேறு ஆலிம்களிடம் கேட்ட போது எல்லோரும் ஹராம் என்றே சொன்னார்கள், ஆனால் யாரும் தகுந்த ஆதாரத்தை முன்வைக்கவில்லை ஆகவே உங்களிடம் ஓர் தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்)

    1. திருமணம் பேச்சு வார்த்தை முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் பேச முடியுமா!!!!
      இன்று தொலை தொடர்பு சாதனங்கள் வளர்ந்திருப்பதனால் ஏற்பட்டிருக்கும் நவீன பிரச்சினை தான் கேள்வியாக கேட்கப்பட்டிருப்பது!!
      முதலில் திருமணப் பேச்சுவார்த்தை என்பது திருமண ஒப்பந்தமல்ல என்றும், இரு குடும்பத்தாரும் விரும்பினால் அந்த ஒபந்தத்தை முறிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டால் , திருமணம் பேசப்பட்ட இருவருக்கிடையில் எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்பதை இலகுவில் அறிந்திகொள்ளலாம்!

      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிய திருமணத்துக் கெதிராக பெண்பேசலாகாது. தமக்கு முன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை. (புஹாரி:5142)
      எனவே திருமண ஆகும் வரை அவ்விருவரும் அஜ்னபிகள் என்பதை அறிய வேண்டும்!
      அடுத்து அஜ்னபியத்தான ஒரு பெண்ணோடு பேசுவதற்கு இஸ்லாம் வைத்திருக்கும் அளவு கோள், நளினமாக, வளைந்து குலைந்து பேசுவது கூடாது என்பதே. இப்படிப்பட்ட தொடர்பு மூலம் எப்படிப்பட்ட நிலையில் பேசுகின்றோம்!

      நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.(31:32)

      எனவே இப்படிப்பட்ட நிலையில் பேசும் போது எப்படிப்பட்ட நிலையம் ஏற்படலாம், எனவே அல்லாஹ் தடுத்த ஒரு காரியத்திற்கு இட்டுச் செல்லும் வழிகளை தவிர்ந்து நடப்பதே ஒரு முஸ்லிமுக்கு நல்லது!!!

      அதே நேரம் இஸ்லாமிய வரம்புக்கு உட்பட்டு, ஓர் மஹ்ர்மியத்தான ஆண் துணை இருக்கும் போது, ஆசை வார்த்தைகள் பேசாமல், தேவைக்கு பேச முடியுமானால் அதனை தடுப்பதற்கு எந்த தடையும் வரவில்லை!!!
      இது பொதுவாகவே பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள உறவில் இஸ்லாம் கற்றுத்தந்த சட்டமாகும்!!

      (இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; (2:235)
      முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்
      ”(‘இத்தா’வில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை மறைமுகமாக எடுத்துரைப்பதில் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை” எனும் (திருக்குர்ஆன் 02:235 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு அப்பாஸ்(ரலி), ‘ஒருவர், ‘(இத்தா’விலிருக்கும் ஒரு பெண்ணிடம்) ‘நான் மணமுடித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்றோ ‘ஒரு நல்ல பெண் எனக்கு விரைவில் கிடைப்பாள் என நம்புகிறேன்’ என்றோ (சாடையாகக்) கூறுவதாகும்” என்று கூறினார்கள். (புஹாரி:5124)
      இந்த வசனம் இத்தாவில் இருக்கும் பெண்ணோடு பேசுவதை அனுமதிக்கின்றது என்பதற்கே அளவு கோல், அவர்களோடே பேச முடியுமென்றால் ஏனைய பெண்கள் விதிவிலக்கல்ல!
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்!!!
      எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்லாமிய வரம்பை மீறாமல் நடக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!!!

  26. assalamu alaikkum.da’va thuraiyin merpadippirkaha pengal velinaaduhalil poi thangi padikkalama?mahramindri awwaru selvadu isltthil anumadikkappattada?

  27. அஸ்ஸலாமு அலைக்கும்….
    உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். .

    1. வ அலைக்குமுஸ் ஸலாம்
      அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும், தாமதத்திற்கு வருந்துகின்றேன்!
      திருமணம் பேச்சு வார்த்தை முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் பேச முடியுமா!!!!
      இன்று தொலை தொடர்பு சாதனங்கள் வளர்ந்திருப்பதனால் ஏற்பட்டிருக்கும் நவீன பிரச்சினை தான் கேள்வியாக கேட்கப்பட்டிருப்பது!!
      முதலில் திருமணப் பேச்சுவார்த்தை என்பது திருமண ஒப்பந்தமல்ல என்றும், இரு குடும்பத்தாரும் விரும்பினால் அந்த ஒபந்தத்தை முறிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டால் , திருமணம் பேசப்பட்ட இருவருக்கிடையில் எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்பதை இலகுவில் அறிந்திகொள்ளலாம்!

      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண்பேசிய திருமணத்துக் கெதிராக பெண்பேசலாகாது. தமக்கு முன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை. (புஹாரி:5142)
      எனவே திருமண ஆகும் வரை அவ்விருவரும் அஜ்னபிகள் என்பதை அறிய வேண்டும்!
      அடுத்து அஜ்னபியத்தான ஒரு பெண்ணோடு பேசுவதற்கு இஸ்லாம் வைத்திருக்கும் அளவு கோள், நளினமாக, வளைந்து குலைந்து பேசுவது கூடாது என்பதே. இப்படிப்பட்ட தொடர்பு மூலம் எப்படிப்பட்ட நிலையில் பேசுகின்றோம்!

      நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.(31:32)

      எனவே இப்படிப்பட்ட நிலையில் பேசும் போது எப்படிப்பட்ட நிலையம் ஏற்படலாம், எனவே அல்லாஹ் தடுத்த ஒரு காரியத்திற்கு இட்டுச் செல்லும் வழிகளை தவிர்ந்து நடப்பதே ஒரு முஸ்லிமுக்கு நல்லது!!!

      அதே நேரம் இஸ்லாமிய வரம்புக்கு உட்பட்டு, ஓர் மஹ்ர்மியத்தான ஆண் துணை இருக்கும் போது, ஆசை வார்த்தைகள் பேசாமல், தேவைக்கு பேச முடியுமானால் அதனை தடுப்பதற்கு எந்த தடையும் வரவில்லை!!!
      இது பொதுவாகவே பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள உறவில் இஸ்லாம் கற்றுத்தந்த சட்டமாகும்!!

      (இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்; ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்; (2:235)
      முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்
      ”(‘இத்தா’வில் இருக்கும்) பெண்களிடம் திருமணப் பேச்சை மறைமுகமாக எடுத்துரைப்பதில் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை” எனும் (திருக்குர்ஆன் 02:235 வது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு அப்பாஸ்(ரலி), ‘ஒருவர், ‘(இத்தா’விலிருக்கும் ஒரு பெண்ணிடம்) ‘நான் மணமுடித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்றோ ‘ஒரு நல்ல பெண் எனக்கு விரைவில் கிடைப்பாள் என நம்புகிறேன்’ என்றோ (சாடையாகக்) கூறுவதாகும்” என்று கூறினார்கள். (புஹாரி:5124)
      இந்த வசனம் இத்தாவில் இருக்கும் பெண்ணோடு பேசுவதை அனுமதிக்கின்றது என்பதற்கே அளவு கோல், அவர்களோடே பேச முடியுமென்றால் ஏனைய பெண்கள் விதிவிலக்கல்ல!
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்!!!
      எந்த சந்தர்ப்பத்திலும் இஸ்லாமிய வரம்பை மீறாமல் நடக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!!!

  28. assalamu alaikum w.w.ullooril irukkum podo/veettil irukkum podu tholuhaiyai serthu tholalama?vilakkam tharavum.

    1. பொதுவாகவே இஸ்லாம் மார்க்கம் மனிதனுக்கு தேவையான சட்டங்களை சொல்லித்தந்திருப்பதோடு, மனிதனின் நிலைக்கு ஏற்ப சலுகைகளையும் வழங்கியுள்ளது.
      அந்த அடிப்படையில் சுருக்கித் தொழுவதும், சேர்த்துத் தொழுவதும் இஸ்லாத்தின் சிறப்பம்சமாகும்.
      சேர்த்துத் தொழுவதை பொருத்தவரை பயணிகளுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள ஒரு சலுகையாகும்.
      عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ صَلاَةِ الظُّهْرِ وَالعَصْرِ، إِذَا كَانَ عَلَى ظَهْرِ سَيْرٍ وَيَجْمَعُ بَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ»
      இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும்போது லுஹர் அஸரையும் மக்ரிப் இஷாவையும் ஜம்உச் செய்து தொழுவார்கள்.
      இதற்கு ஏராளமான ஹதீஸ்களை பார்க்கலாம்.

      அதேபோன்று அச்சத்தின் காரணமாகவும், மழைக்காகவும் சேர்த்து தொழுதுள்ளார்கள் என்பதும் ஹதீஸ்களிலிருந்து விளங்கும் செய்தியாகும்.
      صحيح مسلم (1/ 489)
      عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا سَفَرٍ»
      இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள் : நபி ஸல் அவர்கள் , பயம், பயணம் அல்லாத காரனங்களுக்ககவும் லுஹர், அசரையும், மக்ரிப், இஷாவையும் சேர்த்து தொழுதார்கள். (முஸ்லிம்)
      இந்த ஹதீஸ் முஸ்லிமின் சில அறிவிப்புகளில் “மலை அல்லாத காரணங்களுக்காக சேர்த்து தொழுதார்கள்” என்று வந்துள்ளது.
      இந்த ஹதீஸ்கள் மூலம் பயம், மலை போன்ற காரணங்களுக்காக சேர்த்து தோழா முடியும் என்று தெளிவாகின்றது.
      சில அறிஞ்சர்கள் “இது அல்லாத காரணங்கள்” என்பதை வைத்து வேறு சந்தர்ப்பங்களிலும் சேர்க்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் என்ன காரணங்களுக்காக என்று தெளிவாக ஹதீஸ்களில் வராத வரையில் குறிப்பிட்டுக் கூற முடியாது.
      எனவே, பயணம்,பயம், மலை போன்ற காரணங்களுக்காக வீட்டிலும் தொழலாம்.
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

  29. ஜஸகல்லாஹு ஹைரன் மொளவி, மார்க்க வரம்போடு நடந்து கொள்ளலாம் எனும் பட்சத்தில் தற்போது சமுதாயத்தில் நடந்துகொண்டிருக்கின்ற முறைக்கு என்ன சொல்வது? இவர்கள் மார்க்க வரம்போடுதான் பேசுகிறார்களா!! வழமையில் தற்போது சமுதாயத்தில் நட்ந்து கொண்டிருக்கின்ற சீர்கேடை மார்க்க வரம்பு என்று கூறி அனுமதிக்கலாமா?? ஒர் உறுதியான பதிலை எதிர்பார்க்கிறேன் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக..

    1. உண்மையில் மார்க்க வரம்பு என்ன என்பதை சுட்டிக்காட்டியுள்ளேன், அதை மீரி ஒருவன் ஒரு பெண்ணோடு தனிமையில் பேசுவதோ, ஆசையை துண்டும் விதத்தில் பேசுவதோ, இனிமையான குரலில் பேசுவதோ ஹராமான, இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட விடையமாகும்.
      அல்லாஹ் கூறுகின்றான்:
      இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (2:229)
      இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (65:1)

  30. ASSALAMU ALAIKUM
    UDALURAVIN POTHU KURIPPITTA KAALATHTHUKKU PILLAI PETRUKKOLAK KODATHENRA NOKKATHTHITKAAKA AAN KONDAM PAAWIPPADUM, PENGAL MARUTHTHUWARIN UTAVY MOOLAM SILA MARUNTHUHALAIYO ALLATHU OOSIHALAIYO PAAWIPPATHU ISLATHTHIL KOODUMA KOODATHA …ATHAT KAANA MAARKKA SATTAM ENNA

    1. தற்காலிக கருத் தடை செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?
      இன்று பிள்ளைகளை பெறக்கூடாது என்ற நோக்கிலும், நோய் போன்ற காரணங்களுக்காகவும், தட்காலிக கருத்தடை செய்வது வழக்கம்.
      இப்படி செய்வதை நபிகளாரிடம் நபித் தோழர்கள் கேட்டார்கள், அப்போது நபிகளார் முற்றாக கருத்தடை செய்வதை தடுத்தார்கள்.
      ஆண்களைப் பொருத்தவரை ஆண்மை நீக்கம் செய்கின்றனர், அது ஹராமாகும்.
      பெண்களைப் பொருத்தவரை, கருப்பை இருப்பதே உடலுக்கு தீங்கு என்று வருமானால் அந்த கட்டத்தில் நீக்கம் செய்யலாம். பிள்ளை பெறுவதை தடுக்கும் நோக்கில் செய்வது ஹராமாகும்.
      எனவே முற்றாக தடுக்காமல், தட்காலிகமாக கவர் பாவிப்பதோ,லூப்,ஊசி, டெப்லட் போன்ற மருந்து வகைகள் (உடலுக்கு தீங்கு இல்லையென்றால்) பாவிப்பதோ குற்றமில்லை.
      கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார்கள்.
      அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி) ‘எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு) புனிதப் போரில் கலந்து கொண்டிருந்தோம். எனவே, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்யவேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்.’ என்று கூறிவிட்டு பிறகு, ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி(ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 05:87 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். (புஹாரி:4615)
      அபூ ஸயீத்(றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள். (புஹாரி: 2229)
      ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(றழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்து வந்தோம். (புஹாரி:5207)
      ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, நாங்கள் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்துகொண்டிருந்தோம். (புஹாரி:5208)

  31. ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள். (புஹாரி: 2229)
    intha hadeesil warum nalla vilaikku vitka virumbuhirom…ithu mahar kuduththu thirumanam mudippathai solhiratha…illa munnaiya kaalaththil awarkalukku weru ennamchchum sattam irunthatha…athe pondru adimaip pen endraal yaar awarkal ..buhari 2053 il oru sambawam solhirathu…enakku sariyaha vilanga willai..intha adimai pen enbawarkal yaar …awarhalai nabiththolarhal manmudiththirunthaarkala ..illai weru ennamchchum sattam irunthatha…en endraal antha hdeesil oru adimai pennukku pirantha kulanthai patry solluhirathu… nabi sallalhu alihi wasallam awarkalin pthil purinththu…but intha adimai pen endraal yaar enbathuthan puriyavillai…THAYVU SAITHU VILAKKAM THARA MUDIYUMA

    1. இஸ்லாத்தில் அடிமைத்துவம்
      அடிமைத்துவம் எனும் போது, அன்றைய காலத்தில் யுத்த கலங்களில் வெற்றிகொண்டோர் கைதிகளாக பிடிபடக்கூடியவர்களை அடிமைகளாக ஆக்கிக்கொண்டனர். அடிமைகள் என்போர், கிட்டத்தட்ட ஆடு மாடுகளைப் போன்று பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் வாங்கவும், விற்கவும் முடியுமான பொருட்களாகவும், வேலை செய்யும் ஊழியர்களாகவும் பயன்படுத்தப்பட்டனர், பெண்களை பொருத்தவரை, அவர்கள் ஒரு சொத்து என்ற அடிப்படையில் அவர்களது கற்புகளும் சொந்தக்கரனுக்குரியது என்ற அடிப்படையில் அதனையும் பயன்படுத்தினர். அந்த வகையில் அடிமைகள் என்போர் அன்றைய கால பெறுமதியான சொத்தாக கருதப்பட்டது. அந்த அடிப்படையில் “கூடிய விலைக்கு விதக முடியுமான சொத்தே,அந்த பெண்களை அனுபவிக்க மஹர் அவசியமில்லை.
      அடுத்து, அடிமைத்துவம் என்பது, நபியவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்னைய காலத்திலிருந்தே நடைமுறையிலிருந்த ஒன்றாகும். அந்தவகையிலேயே பிலால், யாசிர், சுமையா, அம்மார் (றழி), போன்றோர் அன்று அடிமைகளாகவே இருந்து, அந்த நிலையிலேயே இஸ்லாத்தையும் ஏற்று, அவர்களது எஜமானர்களால் கடுமையாக தொல்லையும் கொடுக்கப்பட்டார்கள்.
      இந்த நடைமுறையின் அடிப்படையில் அது பெரிய சொத்தாக கருதப்பட்டதால் அதனை உடனடியாக நீக்காமல், நிறைய குற்றங்களுக்கு தேண்டகுற்றமாக (கப்பாரா) அடிமையை உரிமையிடுவதை ஆக்கி உலக வரலாற்றிலிருந்து அடிமை கலாச்சாரத்தை ஒழித்தது.
      அந்த அடிப்படையில் அவர்களுக்கு இஸ்லாம் “வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்”என்ற வார்த்தையை பயன்படுத்தியது. அவர்களில் ஆண்களை வேலைகளுக்கு பயன்படுத்துவது போன்று, பெண்களின் கற்பையும் இஸ்லாம் அனுபவிக்க அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் அந்த ஆண்களுக்கு சொந்தமானதே. அவர்களே அடிமைக்கு பிறந்தவர் என்று பாவிக்கப்படுகின்றது.
      நபியவர்களின் மகனான் “இப்ராஹீம்” மாரியா என்ற அடிமைப் பெண்ணுக்கு பிறந்தவர்களே.
      وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ
      23:5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
      23:6 إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
      23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
      وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ
      70:29. அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
      70:30 إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
      70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

      அடிமை சம்பந்தமான ஏராளமான சட்டம் இருக்கின்றன.

  32. appo athuvum oru vipachacraththai saarthatha….adimaippengaludan eedupattavarhalukku vipachaccharaththitkaana thandanai kudukkappaduma ..ithu patry padiththu nammal vilanga koodiya puththakam ethuvum irukkirataha

    1. சகோதரரே! இஸ்லாம் அனுமதித்த ஒன்றுக்கு , அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றுக்கு, விபச்சாரம் என்று கூறுவது குப்ராகும். அப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்ப்பது கட்டாயம்!!!

  33. அஸ்ஸலாமு அழைக்கும்
    mohamed mahir paris இல் இருந்து .
    ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்காக இந்த கேள்வியை கேட்கின்றேன் .கோடை காலங்களில் ரமலான் மாதம் வந்தால் நாங்கள் மிக நீண்ட நேரம் அதாவது 18 மனித்தியலங்களுக்கு மேல் நோன்பு இருக்கின்றோம் .இந்த காலங்களில் ஏனைய நாடுகளைப்போல் நேரத்தை நாங்கள் எப்படி கணக்கு இட்டுக்கொள்வது .அல்லது குறிப்பிட்ட 18/19 மணித்தியாலங்கள் நோன்பு இருந்துதான் ஆக வேண்டுமா .குர்ரான் கதீஸ் இல் இருந்து விளக்கம் தரவும் .

    ஐரோப்பிய நாடான நார்வேயில்

    24 மணி நேரமும் நடுவானில் சூரியன் –

    மக்கா நேரப்படி

    நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள்!

    AN IMPORTANT NEWS
    அசாதாரணமான பூகோள பிரச்சினை காரணமாக பெரும்பாலான நார்வே(ஐரோப்பிய நாடு) முஸ்லிம்கள் இம்முறை நோன்பை புனித மக்கா நகரின் கால அட்டவணைக்கு அமைய பிடித்து வருகின்றனர். நார்வேயில் இம்முறை நோன்பு சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின் கோடைகாலத்தில் வந்துள்ளது. தூர வடக்கில் இருக்கும் நோர்வே போன்ற நாடுகளில் இந்தக் காலத்தில் சூரியன் மறையாது என்பதால் அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பை பிடிப்பதில் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
    கடைசியாக 1980 களின் மத்தியிலேயே கோடைகாலத்தில் ரமழான் மாதம் வந்துள்ளது. இந்நிலையில் நார்வேயின் வடக்கு பிராந்திய நகரான ட்ரொம்சொவிலிருக்கும் முஸ்லிம் சமூகத்தினர் மக்காவின் கால அட்டவணைப்படி நோன்பு நோற்று வருகின்றனர்.
    சுமார் 1000 முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்துவரும் ட்ரொம்சொ விலில் பெரும்பான்மையாக சோமாலிய அகதிகளே உள்ளனர். வடக்கு நோர்வேயின் இஸ்லாமிய மையத்தில் பணியாற்றும் ஹஸன் அஹமட் கூறும்போது, “சூரியன் மறைவதில்லை. 24 மணி நேரமும் அது நடுவானிலேயே இருக்கிறது” என்றார்.
    இதனால் சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை நோன்பு பிடிக்கும் விதியை இங்கு நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. எனவே மாற்று தீர்வு தேவை.
    “எமக்கு ஃபத்வா கிடைத்துள்ளது. எம்மால் நெருங்கிய இஸ்லாமிய நாட்டின் கால அட்டவணைக்கு அமையவோ அல்லது மக்காவின் கால அட்டவணைக்கு அமையவோ நோன்பை கடைப்பிடிக்க முடியும்” என்றும் அஹமட் கூறினார். இதனால் நள்ளிரவிலும் சூரியன் இருக்கும் நிலையில் தாம் மக்காவின் கால அட்டவணைக்கு அமைய நோன்பு பிடித்துவருகிறோம் என்று ட்ரொம்சொ பள்ளிவாசலின் முகாமையாளர் சன்ட்ரா மரியம் மவு குறிப்பிட்டுள்ளார். இதன்படி மக்காவில் அதிகாலை 5 மணிக்கு சூரியன் உதித்தால் ட்ரொம்சொ முஸ்லிம்கள் நோன்பு பிடிக்க ஆரம்பிக்கிறார்கள்.
    “அங்கு சூரியன் உதிப்பது மற்றும் மறைவதில் ஸ்திரமான நேரம் இருப்பது நோன்பு மற்றும் தொழுகைகளை சமநிலையுடன் செய்ய உதவுகிறது” என மரியன் மவு குறிப்பிட்டுள்ளார். “எவ்வாறாயினும் ஆர்ட்டிக் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் நோன்பு பிடிப்பதில் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
    இது தொடர்பில் பல மதத் தலைவர்கள், அமைப்புகளுக்கு இடையில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது” என சுவீடன் இஸ்லாமிய லீக்கின் தலைவர் ஒமர் முஸ்தபா குறிப்பிட்டார். எனினும் இந்த விடயத்தில் ஒவ்வொரு தனிநபரின் கையிலேயே முடிவு இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஒமர் முஸ்தஃபா, இஸ்லாம் பல தீர்வுகளை தந்திருப்பதாகவும் கூறினார்.
    இதே பிரச்சினையை பின்லாந்திலிருக்கும் ஸ்கன்டினேவிய முஸ்லிம்களும் எதிர்கொண்டுள்ளனர். ஆனால் எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் விடுத்திருந்த பத்வாவில், ஸ்கன்டினேவிய மற்றும் வட நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மக்கா நேரப்படி நோன்பு பிடிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.
    “நோன்பு பிடிக்கும் காலம் 18 மணி நேரத்தை விடவும் அதிகம் என்றால் மக்கா அல்லது மதீனா நேரத்தையோ அல்லது அருகில் இருக்கும் முஸ்லிம் நாட்டின் நேரத்தையோ பின்பற்ற எகிப்து அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்” என வடக்கு பின்லாந்து சமூகத்தின் தலைவர் இமாம் அப்துல் மன்னான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒரு சில சவூதி அறிஞர்கள் பகல்வேளை கூடினாலும் குறைந்தாலும் உள்ளூர் நேரப்படியே நோன்பு பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

    1. இது ஒரு புதிய பிரச்சினை என்பதனால் ஆய்வு செய்துவிட்டு, பதிய முயல்கின்றேன்!

  34. அஸ்ஸலாமு அழைக்கும்
    Safwan. Puttalam இல் இருந்து .

    “Muslim: 4549. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.
    இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.”

    பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்)என்பது செஸ் (chess) விளையாட்டே என எனது நண்பர் ஒருவர் கூறினார்,

    chess விளையாட்டை பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன???

    1. முதல் விடையம் செஸ் என்பது வேறு, முஸ்லிமின் ஹதீஸில் வரும் “லஃபுன் நர்த்” என்பது வேறு. செஸ் என்பது “ஷத்ரன்ஜ்” என்று கூறப்படும்.
      ஹதீஸில் வரும் “லஃபுன் நர்த்” என்பது Game at dice என்பதைக் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் சில நாடுகளில் carte என்று அழைக்கப்படுகிறது .
      அதற்கு நேரடி தடை வந்துள்ளதால் அதை விளையாடுவதே ஹராமாகும்.
      ஏனைய எந்த விளையாட்டனாலும் அதில் சூதாட்டம் சம்பந்தப்ப்படுமானால் அது ஹராமாகும்.

      Game at dice

      carte

      இந்த விளையாட்டைப் பற்றியோ, அதன் தமிழ் பெயரையோ தெரிந்திருந்தால் பதியவும்,
      அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

      1. game at dice-இது தமிழில் பரமபதம் / தாயம் எனப்படும்.அதாவதுsnake/ladders ஐ குறிக்கும்.இது கடவுள நம்பிக்கையின் அடிப்படையில் விளையாடப்படும்.பாம்பை மையமாக வைத்து விளையாடப்படும் இது ஹிந்துக்களின் பெருமாள் கடவுளை சுற்றி vaiykunda yekdeshi எனும் நாளில் தூங்காமல் விளையாடப்படும்…

        1. அந்த ஹதீஸ் சம்பந்தமாக நான் தேடிப்பார்த்த வரையிலும்,”லஃபுன் நர்த்” என்ற அரபு வார்த்தைக்கு விளக்கமும் அப்படியே வந்துள்ளது.
          அல்லாஹு அஃலம்!

        1. அந்த ஹதீஸ் சம்பந்தமாக நான் தேடிப்பார்த்த வரையிலும்,”லஃபுன் நர்த்” என்ற அரபு வார்த்தைக்கு விளக்கமும் அப்படியே வந்துள்ளது.
          அல்லாஹு அஃலம்!

  35. مقدمة في الجرح والتعديل
    وأما الذي سار عليه الصحابة والسلف وأهل الحديث من بعدهم هو النظر في المتن وفي الإسناد جميعه.وأن هذا المتن إذا كان مستقيما موافقا لما جاء في القرآن والسنة فإنه يكون متنا صحيحا مقبو
    assalamu alaikum..idan porulai satru vilakkavum..oru hadeesai anuha kattayam mathn wenduma?

  36. அஸ்ஸலாமு அழைக்கும்

    முஸ்லிம் இல் வரக்கூடிய 4505-4510 ஹதீஸ்களை பார்க்கும் போது குழப்பமாக உள்ளது.

    பள்ளியை கொல்வது பற்றி இஸ்லாத்தின் நிலையின் விளக்கம் தரவும்.

  37. cct /digital camera மூலம் ஒவ்வொரு உருவங்கள் காண்பதாகவும் அவை ஜின்கள் அல்லது ஷைத்தான்கள் என்றும் மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறான ஒரு நம்பிக்கை மார்க்க ரீதியில் சரியாகுமா? அல்லாஹ் அவற்றை எம்மால் காண முடியாது என கூறும்போது இவ்வாறான நிகழ்வுகளை நம்பலாமா?
    “….. நீங்கள் அவர்களை காணாத வகையில் அவனும் அவனத கூட்டத்தாரும் உங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்…”(7:27)

  38. நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “ஒருவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது, அவனது துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்?” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்). இந்த ஹதீஸின் படி ஹராத்தை உட்கொண்ட ஒருவன் மனம் திருந்தி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டால் அவனது பாவ மன்னிப்பு (தெளபா) அல்லாஹ்விடம் ஏற்கப்படாதா?

    1. ஒருவனது துஆ ஏற்றுக் கொல்லப்படுவதற்கு ஹலாலான தொடர்பு என்பது அவசியமானது, இது பொதுவான துஆக்களுக்கு உள்ள நிபந்தனையாகும்.
      ஆனால் தௌபா என்பது துஆ என்பதை விட பாவமீல்ச்சி என்பதே பொருத்தமானது. அவன் எந்த பாவத்திற்கு தௌபா செய்கிறானோ அதற்கு அதுவே பாவமீல்ச்சியாகும்.
      உதாரணமாக அல்லாஹ் ஷிர்க்கை தவிர்ந்த எல்லா பாவங்களையும் மன்னிக்கிறான் என்று குர் ஆன் 4:48 கூறுகிறது, இதை வைத்து ஷிர்க் செய்தவனுக்கு தௌபா செய்தாலும் மன்னிப்பில்லை என்று புரிய மாட்டோம், அதேபோன்று ஹராத்தை புசித்தவன் தௌபாவும் அங்கீகரிக்கப்படக்குடியதே , அதற்கு தௌபா செய்யாமல் ஏனைய துஆக்கள் கேட்டால் அவைதான் அங்கீகரிக்கப்படமாட்டது.
      அல்லாஹ் கூறுகிறான்:
      إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
      4:17. எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
      அல்லாஹு அஃலம் !

  39. அஸ்ஸலாமு அலைக்கும் மவ்லவி எனது கேள்வி என்னவென்றால் தொழுகையில் ஆரம்ப துஆ ஓதுவது கட்டயமாகுமா ?

    எத்துடன் நான் இமாம் ஜாமத்தில் அவ்வல் தக்பிரில் இணைய்யமால் மற்ற ராக்கதில் இணைந்தால் நான் என்ன செய்ய வேண்டும் எந்த ஆரம்ப து ஆ விடயத்தில்

    1. தொழுகையில் ஆரம்ப தக்பீருக்குப் பின் ஊதும் துஆவை ஓதுவது நபிவழியாகும், அந்த அடிப்படையில் நபிவழியைப் பின்பற்றி தொழுவதே எம்மீதுள்ள கடமை என்ற அடிப்படையில் அதனை ஓதுவதே நபிவழியாகும்.
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். (புகாரி:631)
      அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
      நபி(ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன்.
      اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ
      என்று நான் கூறுவேன்” என்றார்கள். (புகாரி:744)
      எனவே இந்த சுன்னாவை வேண்டுமென்று புறக்கணிப்பது பாவமாகும், தொழுகையில் நன்மையை குறைக்கவும் செய்யும். அதே நேரம் அதை சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லைஎன்றால் அது தொழுகையை முறிக்காது.

      அடுத்து நாம் பிந்தி இமாமோடு சேரும் நிலை ஏற்பட்டால், இமாம் எந்நிலையில் இருக்கிறாரோ அந்நிலையிலேயே சேரவேண்டும், அந்த நேரத்தில் நிலையில் இருந்து, ஓதவும் சந்தர்ப்பம் இருந்தால் ஓதுவார், இல்லையென்றால் இமாமை பின்பற்றுவார்.

      இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்ததை தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.” (புஹாரி:636)

      அல்லாஹு அஃலம் !

  40. Assalamualaikum varahmath ullahi vabaraqathuh

    நான் வெளியூரில் இருப்பதால் ஊருக்கு போகும் போது சேர்த்து தொழ முடியுமா?

    வெளியூரில் உள்ள போது கஸ்ரு ஜம்மு வை தேவையான சந்தர்ப்பங்களில் பயன் படுத்த முடியுமா??

    1. நான் வெளியூரில் இருப்பதால் ஊருக்கு போகும் போது சேர்த்து தொழ முடியுமா?

      வெளியூரில் உள்ள போது கஸ்ரு ஜம்மு வை தேவையான சந்தர்ப்பங்களில் பயன் படுத்த முடியுமா??

      வ அலைகுமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹ்
      அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும், அவனது மார்க்கத்தில் நல்ல விளக்கங்களை தரட்டும்.

      நீங்கள் பயணியாக இருக்கும் நிலையில், ஊருக்கு வெளியே இருந்தால் சேர்த்து தொழலாம், அதே நேரம் அந்தந்த நேரத்துக்கும் தொழுது கொள்ளலாம், சேர்த்து தொழுவதை பொறுத்தவரை அது உங்களது வசதிக்கு ஏற்ப நிறைவேற்றிக்கொள்ளலாம், நபியவர்கள் இரண்டு விதத்திலும் செய்துள்ளார்கள்.
      அதேநேரம் சுருக்கித் தொழுவதை பொறுத்தவரை பயணத்தில் இருக்கும் நிலையில் சுருக்கித் தொழுவதையே இஸ்லாம் வலியுறுத்தியிருக்கின்றது.
      அடுத்து பயணத்திலிருந்து திரும்பும் போதும் தாராளமாக சுருக்கி, சேர்த்து தொழலாம், ஊருக்குள் நுழைந்துவிட்டால் சுருக்கி தொழமுடியாது, ஆனால் பயணத்தில் இருந்தபோது தவறியதை சேர்த்து தொழலாம். (அல்லாஹு அஃலம்)
      மேலதிகமாக பார்வையிட click செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *