Share

அல்லாஹ்வுக்கு மாத்திறம் கொடுக்கப்பட வேண்டிய மற்றொரு அதிகாரம் நல்லது நடப்பதானாலும், கெட்டது தீங்கு நடப்பதானாலும் அவனது நாட்டமில்லாம் நடக்காது என்று நம்பி அந்த அதிகாரத்தை அவனுக்கு மாத்திறம் கொடுப்பதாகும். அதில் வேறு யாரையும் பங்கு சேர்க்கக் கூடாது.

  •  “நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே – அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”78. “அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.79. “அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”80. “நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.81. “மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”82. “நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன்; அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். (26: 77- 83)
  •  (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” (7:188)
  • உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாத எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.107 அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான், அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (10: 106,107)
  • “(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.18. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன். (6: 17,18)
  • நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களை தன் வாகனத்தில் பின்னே ஏற்றி செல்லும் போது, ஏ! சிறுவனே உனக்கு சில வார்த்தைகளை கற்றுத்தறுகின்றேன், நீ அல்லாஹ்வின் சட்டங்களை பாதுகாத்துக் கொள். அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அவனை (உதவியை) நீ உன் முன்னே கண்டுகொள்வாய். நீ ஏதும் கேட்டால் அவனிடமே கேள். உதவி தேடுவதானாலும் அவனிடமே தேடு. மேலும் சமூகத்தவர் அனைவரும் உனக்கு ஒறு நலவை செய்ய ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் விதித்ததைத் தவிர எந்த நலவையும் அவர்களால் செய்யமுடியாது. மேலும் சமூகத்தவர் அனைவரும் உனக்கு ஒறு தீங்கு செய்ய ஒன்றுசேர்ந்தாலும் அல்லாஹ் விதித்ததைத் தவிர எந்த தீங்கையும் அவர்களால் செய்யமுடியாது. எழுது கோள்கள் உயர்ந்த்விட்டன. ஏடுகள் காய்ந்துவிட்டன.’ என்று கூறினார்கள். (திர்மிதீ)

இந்த அடிப்படை விடையத்தில் அதிகமான குர்ஆன் வசனங்கள் வந்திருக்கின்றன. இப்படி தெளிவாக வந்திருந்தாலும் கூட மனித சமூகம் குறிப்பாக முஸ்லீம்கள் இந்த அதிகாரங்களை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்குவதைப் பார்க்கலாம். அதற்கான சில எடுத்துக் காட்டுகள் பின்வறுமாறு;

1-  பாதுகாக்கும் அதிகாரம் தீங்கை தடுக்கும் அதிகாரம் தாயத்து, தகடுகளுக்கும் குப்பிகளுக்கும் வழங்கப்படுவது.

2-  சூனியத்தினால் தீங்கு ஏற்படும் என்று பொதுவாக நம்புவது.

3-  மரணித்தவர்கள் உலகிள் நலவு கெடுதிகளை செய்கின்றனர் என்று நம்புவது.

4-  சட்டம் இயற்றும் அதிகாரம் படைப்புகளுக்கு வழங்கப்படுவது.

5-  நல்லவர், கெட்டவர் என்று தீர்மானிப்பதும் இறை அதிகாரமாகும்.

தாயத்து தகடுகள் பாதுகாகும் என்று நம்புதல்.  

வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும்  click

இன்றைய முஸ்லிம் சமூகம் பாதுகாப்புக்கான சில ஏற்பாடுகளை செய்கின்றது. கழுத்தில் போடும் தாயத்துகளும் துஆக் கூடுகளும், மணிக்கோர்வைகளும், வீட்டு மூலைகளில் தொங்கவிடப்படும் குப்பிகளும், தகடுகளும் பாதுகாக்கும் என்று நம்பி செய்கின்றனர்.

இவைகள் அல்லாஹ் பாதுகாப்பது போன்று பாதுகாக்கும் என்று நம்பும் போது அது பெரிய இணையாகவும், வெறுமனே சடங்கு சம்பிரதாயம் என்ற அடிப்படையில் செய்யும்போது சிறிய இணையாகவும் அமைந்துவிடுகின்றன. எப்படி இருந்தாலும் மறுமைப் பாக்கியத்தை இழக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய முஸ்லிம்கள் செய்வதைப் பார்க்கும் போது பெறிய இணையாக அமைந்துவிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கின்றது. ஏனெனில் அவற்றை தொங்கவிட்டிருப்பவர்களிடம் அதை எச்சரிக்கை செய்யும் ஹதீஸ்களை எடுத்துக்கூறி கலட்டிவிடுங்கள் என்றாலும், கலட்டினால் ஆபத்துவரும் என்கின்றனர். அது தன்னோடு இருப்பதே பாதுகாக்கும் என்றும் கறுதி இறை அதிகாரத்தை அப்படியே அவற்றிற்கு கொடுத்து வைத்திருப்பதை பார்க்கமுடியும். மாற்றுமதத்தவர்களும் இப்படியே நம்புகின்றனர் என்றால் என்ன வித்தியாசம் இருக்கமுடியும். அவர்கள் அல்லாஹ்வை மறுத்திவிட்டு இதை செய்கின்றனர். எம் சமூகம் அல்லாஹ்வை நம்பிக்கொண்டே இதனை செய்கின்றனர்.

மேலும் இதை அனுமதிப்பவர்கள் ”அல்குர்ஆனைக் கொண்டு போட முடியும்” என்ற ஒரு வாதத்தை வைக்கின்றனர். இது தவறு என்பதை பலவழிகளில் விழங்கமுடியும்.

1-  இன்றைக்கு முஸ்லிம்கள் அணிந்திருக்கும் தாயத்துகளை தகடுகளை குப்பிகளை நாம் எடுத்து நோக்கினால், அல்குர்ஆன் வசனங்கள் இல்லாமல் வெறும் இலக்கங்கள் இருப்பதை பார்க்கமுடியும். அப்படி சில குர்ஆன் வசனங்கள் இருந்தாலும் அவை சீரழிக்கப்பட்டிருப்பதை பார்க்கமுடியும்.

2-  இதனை நபி (ஸல்) அவர்கள் பொதுவாக தடுத்தார்களே அல்லாமல் விதிவிலக்கு அளிக்கவில்லை. நபிகளார் பொதுவாக தடுத்ததை நாமாக ஆதாரமின்றி குறிப்பாக்கமுடியாது.

3-  அல்குர்ஆன் இறக்கப்பட்டது நபிகளாருக்கே. அவர்களிடம் எத்தனையோ நோயாளிகள் வந்தனர். அவர்களுக்கு நபிகளார் காட்டிக்கொடுத்தது அன்றைக்கு இருந்த மருத்துவத்தையே, மருத்துவம் இல்லை எனும் போது பொறுமையை கடைபிடிக்குமாறு ஏவினார்களே அல்லாமல் அல்குர்ஆனை எழுதி கட்டுவதையோ தொங்கவிடுவதையோ எழுதி கறைத்துக் குடிப்பதையோ காட்டிக்கொடுக்கவில்லை என்பதை நாம் அறியவேண்டும். எனவே நபிகளார் அதனை பயன்படுத்தாத ஒரு முறையில் நாம் பயன்படுத்துவது நபிகளாரை மிஞ்சுகின்ற ஒரு செயலாகவே இருப்பதோடு, அது சீரழிக்கும் ஒரு செயலாகவும் அமைந்துவிடும். அல்லாஹ்வே எம்மைக் காப்பாற்றவேண்டும்.

  • அபூ ஸயீத் அல்குத்ரீ(றழி) கூறினார்கள்: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து ‘தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது’ என்று கூறிடவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), ‘(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான். உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. அவருக்குத் தேன் ஊட்டுங்கள்’ என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.  (புஹாரி:5684, முஸ்லிம்)
  • அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்கள்: இப்னு அப்பாஸ்(றழி) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)’ என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகும்) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகும்) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.   அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்க்ள்; நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.   (புஹாரி:5652, முஸ்லிம்)

மேலும் இப்படி கூறும் போது நபித்தோழர்கள் அல்குர்ஆனைக் கொண்டு போடுவதற்கு அனுமதி அளித்திருப்பதாகக் கூறி சரிகானுகின்றனர். உண்மையில் சில நபித்தோழர்கள் அனுமதித்திருந்தாலும் பல நபித் தோழர்கள் தடுத்திருக்கின்றனர். எனவே இப்படி ஒரு விடையத்தில் நபித்தோழர்கள் இரு கறுத்து கொண்டால் எதனை எடுப்பது என்று பார்த்தால், முதல் அம்சம் நபி (ஸல்) அவர்கள் பொதுவாக தடுத்துவிட்டார்கள் என்பதே. இரண்டாவதாக நபித்தோழர்கள் கறுத்து வேறுபட்டால் நபிகளாரின் கூற்றுக்கு யாருடைய கூற்று நேர்படுகின்றதோ அவர்களது கருத்தையே எடுக்கவேண்டும். எனவே எப்படிப் பார்த்தாலும் கூடாது என்பதே தெளிவு.

தயத்து தகடுகள் கூடாது என்பதற்கு ஏறாலமான சான்றுகளைப் பார்க்கமுடியும். அவைகள் பின்வறுமாறு.

  • இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்: ‘மந்திரீகமும், தாயத்துகளும் (ஆண் பெண்ணுக்கிடையில் நெறுக்கமாக்கும் நோக்கில் செய்யும்) திவலத்தும் ஷிர்க்காகும்.’  (அபூதாவுத், ஹாகிம், இப்னுமாஜாஹ், ஸஹீஹ்)
  • உக்பதுப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரிடம் (10 பேர் கொண்ட) ஒரு கூட்டம் வந்தது, அவர்களில் ஒன்பது பேரிடம் உறுதி மொழி (பைஅத்) வாங்கிய நபிகளார் ஒருவரை விட்டுவிட்டார்கள். காரணம் கேட்கப்பட்டபோது ‘அவர் மீது தாயத்து இருக்கின்றது’ என்று கூறிவிட்டு, தனது கையை நுளைத்து அதனை கலட்டி விட்டு உறுதி மொழி எடுத்துவிட்டு, ‘யார் ஒரு தாயத்தை தொங்கவிடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் (நோக்கத்தை) பூர்த்தியாக்காமல் இருக்கட்டும். யார் சிற்பியை தொங்கவிடுகின்றாரோ அவரை அல்லாஹ் கைவிடட்டும்.’ என்று கூறினார்கள்.  (அஹ்மத். ஸஹீஹ்)

இந்த கருத்தில் இன்னும் நிறைய செய்திகள் ஒன்றை ஒன்று பலப்படுத்தும் அளவுக்கு விமர்சனங்கள் உள்ள நிலையில் வந்திருக்கின்றன. அல்லாஹ்வே இந்த ஷிர்க்கான செயலிலிருந்து எம்மை காப்பாற்றவேண்டும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *