ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-2

நோயாளிக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டியது.

  1. மரணத் தருவாயில் இருக்கும் மனிதருக்கு கலிமாவை சொல்லிக்கொடுத்தல்.
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் மரணத்தருவாயில் உள்ளவருக்கு لا إله إلا الله (வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) கலிமாவை சொல்லிக் கொடுங்கள்.’  (முஸ்லிம்)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று அறிந்த நிலையில் மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுளைவார்.’  (முஸ்லிம்)
  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லஹ்வுக்கு எதையும் இணை வைக்காத நிலையில் மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுளைவார்.; (முஸ்லிம்)
    • குறிப்பு: 1- கலிமாவை அவருக்குப் பக்கத்தில் நின்று சொல்லிக் கொண்டிருக்காமல் மரணத்தறுவாயில் இருப்பவருக்கு சொல்லுமாறு ஏவுவதே நபிகளாரின் கட்டலை,
      • நபியவர்கள் தன் பெரியதந்தை அபூதாலிப் மரணத்தருவாயில் இருக்கும் போது அப்படித்தான் செய்தார்கள். (புஹாரி)
      • மேலும் ஒரு யூதச் சிருவன் மரணத்தறுவாயில் இருக்கும் போதும் அவர் மூ/மினாவதற்கான முயற்சியில்தான் ஈடுபட்டார்கள்.  (புஹாரி)                                                                         2-  மரணத்தறுவாயில் இருக்கும் ஒருவருக்குப் பக்கத்தில் யாசீன் சூராவை ஒதுவதற்கும் ஸஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை, மாராக,’உங்களில் மரணத்தருவாயில் உள்ளவருக்கு சூரா யாசீனை ஓதுங்கள்.’ என்று வரும் ஹதீஸ் பலவீனமானது.                                                                    3-  மரணத்தறுவாயில் இருப்பவரை கிப்லா திசையை நோக்கி வைப்பது   இன்று வழமையாக இருக்கின்றது, ஆனால் அதைக் கட்டாயப்படுத்தி எந்த ஸஹிஹான ஹதீஸ்களும் வரவில்லை என்பதும் முக்கிய அம்சமாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *