அகீதா – 19 பயப்படுதல், தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்

பயப்படுதல்:

PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!!

பயப்படுதல் என்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தோடு சார்ந்த ஒரு விடையமாகும். உலகில் ஒரு தீங்கு நடப்பதாக இருந்தால் அவனது நாட்டமில்லாமல் நடக்க முடியாது என்ற அடிப்படையில் அவனையே அஞ்சி நடக்கவேண்டும். அல்லாஹ்வுக்கு பயப்படுவது போன்று வேறு யாருக்கும் பயப்படுவது ஷிர்க்கில் எம்மை சேர்த்துவிடும். அல்லாஹ்வைப் பயப்படுவது போன்று பயப்படுவதென்றால், உதாரணத்திற்காக அல்லாஹ் எங்கள் கண் எதிரே வராமல் அவன் நாடினால் தீங்கை ஏற்படுத்துவான். இப்படி வேறு யாருக்கும் பயப்படக்குடாது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்கு பயப்படுவதை மூன்று வகையாக நோக்கலாம்.

1- அல்லாஹ் அல்லாதவர்கள், அவர்கள் நினைத்தால் (நோய், ஏழ்மை, பஞ்சம் போன்ற) எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவார்கள் என்று பயப்படுதல்.இப்படி பயப்படுவது அல்லாஹ்வுக்கு மாத்திர்மே இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட பயத்தையே முஷ்ரிக்குகள் தங்களுடைய சிலைகளுக்கும், கடவுள்களுக்கும் பயந்தார்கள். அந்த கடவுல்களைக் கொண்டே நபிமார்களையும் அச்சமூட்டினர்.

“எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை” (என்றும் கூறினார்கள்: அதற்கு) அவர், “நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்” என்று கூறினார்.55. “(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்” (என்றும் கூறினார்).  (11:54, 55)

அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர்; மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.  (39:36.)

ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள்.நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.   (3:175)

இந்த அடிப்படையில்தான் கப்ருகளை வணங்கக்கூடியவர்களும், வெறுமனே சூனியத்தை நம்பக்கூடியவர்களும், பேய் பிசாசுகளை நம்பக்கூடியவர்களும், அவைகளுக்கு பயபடுகின்றனர். இப்படி பயப்படுவது இனைவைப்பாகும்.

2- இஸ்லாத்தின் சட்டங்களை, கடமைகளை மனிதர்களுக்குப் பயந்து விடுவது, இது ஹராமான மறைமுகமான ஷிர்க் (ஷிர்க் கபீயிலே) சேர்த்துவிடும். உதாரணத்திற்காக; தாடி வைத்தால் வேலையிலிருந்து முதலாலி நீக்கிவிடுவார் என்று பயந்து தாடியை வலிப்பது போன்று. வேலையில் இருந்து நீக்குவதென்பது மனிதனால் செய்யமுடியுமானதே.

நிச்சயமாக நாம் தாம் தவ்ராத்தையும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் – அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காபிர்கள்தாம்.   (5:44)

3- இயற்கையாக ஒரு மனிதனுக்கு இருக்கும் பயம். உயிருள்ள தன்னை விட பலசாலியான ஒரு மனிதனுக்கோ, தன் விரோதிகளுக்கோ, அல்லது வேட்டைப் பிராணிகளுக்கோ பயப்படுவது போன்று. இந்தப் பயம் ஈமானில் எந்தப் பாதிப்பையும் செலுத்தாது. ஆனால் இந்த கட்டத்தில் அல்லாஹ்வின் மீது பொருப்பு சாட்டியவனாக எதிர் நடவடிக்கையில் தன்னை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும்.

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது இரக்கம் காட்டினீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்.   (33:37)

பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நான் உமக்கு நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.21. ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பிவிட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.   (28:20)

தவக்குள்:பொறுப்பு சாட்டுதல்,

இதுவும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செலுத்தப்படவேண்டிய ஒரு வணக்கமாகும். இதுவும் அல்லாஹ்வின் அதிகாரத்தோடு சார்ந்த அம்சமாகவே இருக்கின்றது. என்வே ஒரு மனிதன் எந்த வேலையை செய்தாலும் எப்படிப்பட பிரச்சினைகளுக்கு முகம் கொடுதாலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.  ஆனாலும் இன்று பல வழிகளில் கப்ராளிகளிடத்திலும், பெரியார்களிடத்திலும் பொறுப்புகள் சாட்டப்படுகின்றன. இப்படி பொறுப்பு சாட்டுவது இணைவைப்பில் சேர்த்துவிடும்.

பின்னர், அவர் (மூஸா அலை) மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்” என்று கூறினார்.   (28:22)

“அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)   (14:12)

(பின்னும்) அவர், (யாகூப் நபி) “என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விடமுடியாது; (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!” என்று கூறினார்.   (12:67)

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.   (65:2, 3)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”  (39:38)

எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.   (25:58)

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது பொறுப்பு சாட்டுவதையும் மூன்று வகையாக நோக்கலாம்.

1- அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் செய்ய முடியாத காரியங்களில் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது பொறுப்பு சாட்டுவது. உதாரணத்திற்காக மரணித்தவர்களிடமோ மறைவில் இருப்பவர்களிடமோ பாதுகாப்பை உதவியை பெற்றுகொள்வதில் பொறுப்பு சாட்டுவதுபோல. உதாரணத்துக்கு பயணிக்கும் ஒருவர் பாதுகாப்பு கறுதி கப்ராளிக்கு உண்டியலில் கானிக்கை போடுவதுபோல. இது ஷிர்க் ஆகும்.

2- வெளிப்படையான காரண காரியங்கள் மீது முற்றுமுலுதாக சார்ந்திருத்தல், உதாரணத்திற்காக; ஒரு ஆட்சியாளர் மீதோ, தலைவர் மீதோ, மறுத்துவர் நீத்பதி போன்ற உய்ருள்ள மனிதர்கள் மீதோ அவர்களால் செய்ய முடியுமான காரியங்களில் அவர்கள் மீதே சார்ந்திருப்பது. உதாரணமாக இந்த ஆட்சியாளர் வெற்றி பெற்றல் உலகில் பரகத் ஏற்படும். அவர் கூட்டத்தில் போனால் வெற்றிதான் என்பது போன்று.

இப்படிப்பட்ட நிலையில் காரண காரியங்களை செய்வதோடு அல்லாஹ் நாடினால் நல்லது நடக்கும், கெட்டது நீங்கும் என்று உறுதி கொள்வதன் மூலம் ஈமானை பாதுகாத்துக்கொள்ளலாம். உதாரணம்; மறுத்துவரிடம் மருந்து எடுப்போம், அல்லாஹ் நாடினால் குணம் கிடைக்கும் என்று நினைப்பது போன்று.

காரண காரியங்களை செய்ய முடியுமான நேரங்களில் செய்துவிட்டு அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டுவதே, தவக்குள் வைப்பதே சரியான தவக்குள் ஆகும். இதனையே இஸ்லாம் வளியுறுத்துகின்றது, காரண காரியங்களை செய்யாமல் இருப்பது மடமையாகும்.

இப்னு அப்பாஸ்(றழி) அறிவித்தார்கள்:   யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; மேலும் நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்” என்ற வசனத்தை இறக்கினான்.  (புஹாரி:1523)

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(றழி) அறிவித்தார்கள்:  நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஃ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், ‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்’ என்று கூறினார்கள். பிறகு அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை (மன்னித்துவிட்டுவிட்டார்கள்.) (புஹாரி:4135)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்விமீது உண்மையான முறையில் பொறுப்பு (தவக்குள்) வைப்பீர்களானால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உணவளிக்கப்படுவீர்கள். அவைகள் காலையில் வெறும் வயிற்றுடன் சென்று, மாலையில் வயிறு நிறம்பிய நிலையில் திரும்புகின்றன.  (அஹ்மத், திர்மிதீ)

உண்மையான தவக்குள் என்பது பறவைகளைப் போன்று முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே, அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டுவதே, மாறாக வீட்டுக்குள் பள்ளிக்குள் முடங்கிக்கொண்டு அல்லாஹ் தறுவான் என்று இருக்கமுடியாது.

நபியவர்கள் சௌர் குகைக்குள் மறைந்துகொண்டே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் – அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.   (9:40)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலசாலியான முஃமின் இறை விசுவாசி பலவீனனான முஃமினைவிட அல்லாஹ்வுக்கு மிக விறுப்பமானவனகவும், சிறந்தவனாகவும் இருக்கின்றான், எல்லா விடயங்களிலும் நலவு இருக்கும், உனக்கு பயன் அளிப்பதில் முயற்சிசெய், அல்லாஹ்விடம் உதவிதேடு, சடைவடைந்துவிடாதே, உனக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் ‘அப்படி செய்திருந்தால் இப்படி செய்திருந்தால்’ என்று கூறாதே, மாறாக அல்லாஹ்வின் ஏற்பாடு அவன் நாடியபடி நடந்துவிட்டது என்று கூறு, ஏனெனில் அப்படியிருந்தால் இப்படியிருந்தால் என்று கூறுவது ஷைத்தானின் வேலையை திறந்துவிடும்.  (முஸ்லிம்)

பலசாலியான முஃமின் எப்போதும் அல்லாஹ்வின் மீது பொருப்பு சாட்டிவிட்டு நண்மை தறும் எதிலும் ஈடுபடுவான். ஈமானில் பலம் இல்லையென்றால் சடைவடைந்து, முயற்சியை கைவிட்டுவிடுவான்.

ஒரு செயலுக்கு உள்ள எல்ல காரணகாரியங்களும் இழந்திருக்கும் நிலையிலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்காமல் அவன் மீது தவக்குள் வைப்பது பல வழிகளில் வெற்றியைத் தறும்.

பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.62. அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.63. உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (26:60- 67)

அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”  (3:38)

மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.174. இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் – அல்லாஹ் மகத்தான கொடையுடை யவனாக இருக்கிறான்.  (3:173, 174)

மூன்று குகை வாசிகள் சம்பவம்.(புஹாரி:2215)

3- மனிதனால் நிறைவேற்ற முடியுமான காரியங்களில் உயிருள்ள ஒரு மனிதனை தன் வேலைக்கு பொறுப்பு சாட்டுவது, இது அனுமதிக்கப்பட்டதே, ஆனாலும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு சரியாக நிறைவேர அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கடனை திறுப்பிக் கொடுக்க பொறுப்பு சாட்டியது போன்று;

அபூ ஹுரைரா(றழி) அவர்கள் அறிவித்தார்கள்:  ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது’ என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், ‘அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.  (புஹாரி: 2306, முஸ்லிம்)

அலி (றழி) அவர்கள் அறிவித்தார்கள்:  நபி(ஸல்) அவர்கள் தங்களின் குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல், சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.  (புஹாரி: 1717, முஸ்லிம்)

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவித்தார்கள்:  நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (பித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்…….புஹாரி: 2311)

எனவே எந்த அடிப்படையில் தவக்குள் வைக்க வேண்டும் என்பதை சரியாக விளங்கி ஷிர்கை ஏற்படுத்தும் அனைத்து விடையங்களிலிருந்தும் தவிர்ந்து வாழ்வோம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *