பிக்ஹு -25; ஜூம்ஆ பற்றிய பாடம்

ஜும்ஆ பற்றிய பாடம்

ஜும்ஆ நாளின் சிறப்புகள்.

நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு கிடைத்த தனிச்சிறப்பு,

عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَضَلَّ اللهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللهُ بِنَا فَهَدَانَا اللهُ لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ، وَالسَّبْتَ، وَالْأَحَدَ، وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ، نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا، وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ، الْمَقْضِيُّ لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ» صحيح مسلم  

நபி (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்தவர்களை ஜும்ஆ தினத்தை விட்டும் பாக்கியமிழக்கச் செய்துவிட்டான், யூதர்களுக்கு சனிக்கிழமையும், நஸாராக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் இருந்தன. அல்லாஹ் எங்களை அனுப்பி வெள்ளிக்கிழமையைத் தந்தான்.எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிவிட்டது. இதுபோன்றே மறுமையிலும் அவர்கள் எங்களைத் துயர்பவர்களே, உலகில் நாம் கடைசியில் வந்தவர்கள், மறுமையில் முதன்மையானவர்கள், ஏனைய படைப்புகளுக்கு முன்னால் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும். (முஸ்லிம்)

நாட்களில் சிறந்த நாள்

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ، وَفِيهِ أُخْرِجَ مِنْهَا، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الْجُمُعَةِ» صحيح مسلم 

நபி (ஸல்) கூறினார்கள்: “சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையே, ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டபதும், சுவனம் நுளைவிக்கப்பட்டதும், அதிலிருந்து வெளியேற்றப்பட்டதும் அதில் தான். மேலும் மறுமை நாளும் அதில்தான் ஏற்படும்.  (முஸ்லிம்)

அதில் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நேரம் உள்ளது

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: «فِيهِ سَاعَةٌ، لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا  صحيح البخاري

நபி (ஸல்) கூறினார்கள்: “ஜும்ஆ தினத்தில் ஒரு நேரம் இருக்கின்றது, அந்த நேரத்தில் ஒருவன் தொழுது ஏதாவதொன்றை அல்லாஹ்விடம் கேட்பானாக இருந்தால், அதை அல்லாஹ் கொடுத்து விடுவான்.மேலும், அந்த நேரம் குறுகியது என தன் கையை சைக்கினை செய்து காட்டினார்கள் நபியவர்கள். (புஹாரி, முஸ்லிம்)

அந்த நேரம் எது என்றால், ஹதீஸ்களில் இரண்டு விதமாக வந்துள்ளது

1-  இமாம் மிம்பரில் அமர்ந்ததிலிருந்து தொழுகை முடிவதற்கிடையில்.

عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ لِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ: أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ، سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ»  صحيح مسلم

நபி (ஸல்) கூறினார்கள்: “அது, இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையிலாகும்.”  (முஸ்லிம்)

2-  அஸர் தொழுகைக்கு பின்னுள்ள நேரம்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «يَوْمُ الْجُمُعَةِ ثِنْتَا عَشْرَةَ – يُرِيدُ – سَاعَةً، لَا يُوجَدُ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا، إِلَّا أَتَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ» سنن أبي داود

நபி (ஸல்) கூறினார்கள்: “அதை அஸருக்குப் பின்னால் கடைசி நேரத்தில் தேடிக்கொள்ளுங்கள்.  (அபூதாவுத்:1048, நசாஇ:1389)

இதே செய்தி அனஸ் (ரழி) அவர்கள் வழியாக திர்மிதீ (489), தப்ரானீ  போன்ற கிதாபுகளில் பதியப்பட்டுள்ளது. அது பலவீனமாகும். திர்மிதியின் அறிவிப்பில் ‘முஹம்மத் பின் அபீ ஹுமைத்‘ என்பவர் இடம் பெற்றுள்ளார், அவர் ‘முன்கருல் ஹதீஸ், நிராகரிக்கப்பட்டவர்‘ எனும் தரத்தில் உள்ளவர், தப்ரானியின் அறிவிப்பில் ‘இப்னு லஹீஅஹ்‘ என்பவர் இடம் பெற்றுள்ளார், அவர் மிகவும் பலவீனமானவரே.

ஜும்ஆ  தொழுகையினூடக 10 நாட்களின் பாவங்கள் மன்னிக்கபடுதல்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْجُمُعَةَ، فَاسْتَمَعَ وَأَنْصَتَ، غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ، وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا» صحيح مسلم  

நபி (ஸல்) கூறினார்கள்: “யாராவது வுழூவை அழகாக செய்து விட்டு, பிறகு ஜும்ஆவுக்கு வந்து, மொளனமாக இருந்து ,காது தாழ்த்தி கேட்டால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப்பட்ட நாட்களினதும், மேலும் மூன்று நாட்களினதும் பாவம் மன்னிக்கப்படும்” (முஸ்லிம்)

அல்லாஹ்வுக்காக குர்பானி கொடுத்த நன்மை கிடைத்தல், இமாம் மிம்பருக்கு ஏருமுன் வந்தவர்களின் பெயர்  மலக்கு மார்களின் ஏட்டில் பதியப் படல்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اغْتَسَلَ يَوْمَ الجُمُعَةِ غُسْلَ الجَنَابَةِ ثُمَّ رَاحَ، فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الخَامِسَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ المَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»  صحيح البخاري

நபி (ஸல்) கூறினார்கள்: “யாராவது ஜும்ஆ தினத்தில் குளித்து விட்டு, முதல் நேரத்தில் (பள்ளிக்கு) வந்தால் ஒட்டகத்தையும், இரண்டாம் நேரத்தில் வருபவர் ஒரு மாட்டையும், மூன்றாம் நேரத்தில் வருபவர் ஒரு ஆட்டையும், நான்காம் நேரத்தி வருபவர் கோழியையும், ஐந்தாம் நேரத்தில் வருபவர் ஒரு முட்டையும் கொடுத்த நன்மையை பெறுகின்றனர், இமாம் வெளிப்பட்டு விட்டால் மலக்கு மார்கள் உரையை கேட்பதற்காக வந்து விடுகின்றனர். (பெயர் பதியும் ஏடுகளை மூடிவிட்டு) (புஹாரி:881, முஸ்லிம்)

ஜும்ஆவின் சிறப்பில், ‘அது ஏலைகளின் ஹஜ்ஜு, கஷ்டவாளிகளின் பெருநாள்’ என்று ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. இது பலவீனமான ஒரு செய்தியாகும்.

நபி (ஸல்) கூறினார்கள்:”ஜும்ஆ ஏலைகளின் ஹஜ்ஜாகும்”

மிகவும் பலவீனமானது

ஜும்ஆ தினத்தில் மரணித்தல், இதட்கு வரும் ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும்.

நபி (ஸல்) கூறினார்கள்:”ஜும்ஆ தினத்தின் பகலிலோ, இரவிலோ எந்த முஸ்லிமாவது மரணித்தால், அவரை அல்லாஹ் கப்ரின் வேதனையில் இருந்து காப்பான்.” (அஹ்மத், திர்மிதி)

மிகவும் பலவீனமானது

ஜும்ஆ தினத்தில் செய்யக்கூடாதவை

இரவைக் குறிப்பிட்டு வணக்கம் செய்வது, அதன் பகலைக் குறிப்பிட்டு நோன்பு நோற்பது

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي، وَلَا تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ، إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ» صحيح مسلم 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜும்ஆவுடைய இரவை ஏனைய இரவுகளிலிருந்து வித்தியாசமான வணக்கத்தின் மூலம் குறிப்பாக்க வேண்டாம், மேலும் ஏனைய தினங்களிலிருந்து ஜும்ஆ தினத்தில் மாத்திரம் நோன்பையும் குறிப்பாக்க வேண்டாம், உங்களில் ஒருவர் தொடர்ந்து பிடிக்கும் நோன்பாக இருந்தாலே தவிர.” (தொடர்ந்து பிடித்தால் பிடிக்க முடியும்) (முஸ்லிம்)

நோன்பு பிடிப்பதாக இருந்தால் அதற்கு முந்திய நளுடனோ பிந்திய நளுடனோ சேர்த்து பிடிக்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ، إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ»  صحيح البخاري

நபி (ஸல்) கூறினார்கள்: “ஜும்ஆ தினத்தில் உங்களில் எவறும் நோன்பு பிடிக்க வேண்டாம், அதற்கு முந்திய நாளில் அல்லது பிந்திய நாளில் பிடித்தாலே தவிர.”  (புஹாரி:1985, முஸ்லிம்)

ஜும்ஆவுக்காக அதான் சொல்லப்பட்டால் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது

{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ } [الجمعة: 9]

ஜும்ஆ  தினத்தில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை ஞாபகப்படுத்த விறைந்து வாருங்கள், மேலும் வியாபாரத்தை விட்டுவிடுங்கள்… …(அல் ஜும்ஆ:  9)

அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் அமர்வது (ஜும்ஆவிலும், எந்த மஜ்லிசிலும்) கூடாது.

عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يُقِيمَنَّ أَحَدُكُمْ أَخَاهُ يَوْمَ الْجُمُعَةِ، ثُمَّ لْيُخَالِفْ إِلَى مَقْعَدِهِ، فَيَقْعُدَ فِيهِ وَلَكِنْ يَقُولُ افْسَحُوا» صحيح مسلم 

நபி (ஸல்) கூறினார்கள்: “உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமையில் தன் சகோதரனை எழுப்பிவிட்டு, பிறகு அந்த இடத்திற்கு சென்று அதில் அமர வேண்டாம், ஆனாலும் ‘விழகி இடம் தறுமாரு’ சொல்லட்டும்.”  (முஸ்லிம்)

ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ، وَيَجْلِسَ فِيهِ»، قُلْتُ لِنَافِعٍ: الجُمُعَةَ؟ قَالَ: الجُمُعَةَ وَغَيْرَهَا  صحيح البخاري

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:ஒரு மனிதர் தன் சகோதரனை அவரது இடத்திலிருந்து எழுப்பி விட்டு, அவரது இடத்தில் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஜும்ஆவிலா என்று நாபிஃ அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘ஜும்ஆ, அது அல்லததிலும்’ என்று கூறினார்கள். (புஹாரி:911, முஸ்லிம்)

இது பொதுவாகவும் வந்துள்ளது.

ஜும்ஆ தினத்தில் செய்ய வேண்டியதும், செய்ய முடியுமானதும்.

அதன் சுபஹ் தொழுகையில் ஸூறதுஸ் ஸஜ்தா, ஸூறா தஹ்ரை பூரணமாக ஒதுதல்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الجُمُعَةِ فِي صَلاَةِ الفَجْرِ الم تَنْزِيلُ السَّجْدَةُ وَهَلْ أَتَى عَلَى الإِنْسَانِ» صحيح البخاري 

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஸுபஹ் தொழுகையில் ஸஜ்தா ஸூறாவையும், தஹ்ர் ஸூறாவையும் ஓதுவார்கள்.  (புஹாரி:1068, முஸ்லிம்)

அன்றைய தினத்தில் நபிகளாரின் மீது அதிகம் ஸலவாத் சொல்லுதல்

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، …… فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ…….» سنن أبي داود 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும், எனவே அதில் என் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள், உங்களது ஸலாத் எனக்கு எடுத்துக்காட்டப்படும்.”   (அபூ தாவுத்:1047,  நசாஇ…)

அன்றைய தினத்துக்காக குளித்தல். இது மிகவு வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமாகும், இதில் பொடுபோக்கு செய்யக்கூடாது.

ஜும்ஆ தினத்தில் குளிக்கச் சொன்னதற்கான ஒரு நோக்கமாக மக்கள் ஒன்று கூடுவதை கூறமுடியும், ஏனெனில் கூட்டமாக இருக்கும் போது வியர்வை வாடையோ அல்லது வேறு வாடைகளோ வீசலாம்.

عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: كَانَ النَّاسُ يَنْتَابُونَ يَوْمَ الجُمُعَةِ مِنْ مَنَازِلِهِمْ وَالعَوَالِيِّ، فَيَأْتُونَ فِي الغُبَارِ يُصِيبُهُمُ الغُبَارُ وَالعَرَقُ، فَيَخْرُجُ مِنْهُمُ العَرَقُ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْسَانٌ مِنْهُمْ وَهُوَ  عِنْدِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّكُمْ تَطَهَّرْتُمْ لِيَوْمِكُمْ هَذَا» صحيح البخاري 

ஆயிஷா (றழி) கூறினார்கள்: ‘மக்கள் ஜும் ஆவுக்காக தங்கள் வீடுகளிலிருந்தும், மதீனாவை சூழவுள்ள கிராமங்களிலிருந்தும் வருபவர்களாக இருந்தனர், அவர்கள் தூசி படிந்த நிலையிலும், வியர்வையுடனும் வருவர், அவர்களிலிருந்து வியர்வை வாடை வீசும், அவர்களில் ஒருவர் நபிகளாரிடம் வந்தபோது, :”நீங்கள் இந்த நாளுக்காக குளித்துவிட்டு வந்தால் (நன்றாக இருக்குமே).” என்று கூறினர்கள்.  (புஹாரி: 902,2071, முஸ்லிம்)

عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ جَاءَ مِنْكُمُ الجُمُعَةَ فَلْيَغْتَسِلْ» صحيح البخاري 

நபி (ஸல்) கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு வந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்.” (புஹாரி:894, முஸ்யிம்)

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ» صحيح البخاري 

நபி (ஸல்) கூறினார்கள்: “வெள்ளிக் கிழமையில் குளிப்பது வயதுக்கு வந்த அனைவருக்கும் கடமையாகும்.” (புகாரி:895, முஸ்யிம்)          

தலைக்கு எண்ணை வைத்து, நறு மணங்களையும் பூசிக் கொள்வது சிறந்தது.

عَنْ سَلْمَانَ الفَارِسِيِّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ  دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ، ثُمَّ يَخْرُجُ فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الجُمُعَةِ الأُخْرَى» صحيح البخاري 

أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَسِوَاكٌ، وَيَمَسُّ مِنَ الطِّيبِ مَا قَدَرَ عَلَيْهِ»  صحيح مسلم

நபி (ஸல்) கூறினார்கள்: “ஒரு மனிதர் முடியுமான அளவு சுத்தப்படுத்தி குளித்துவிட்டு, தன் எண்ணையிலிருந்து பூசிவிட்டு, தன் வீட்டிலுள்ள வாசனையையும் பூசியவராக (வீட்டிலிருந்து) வெளிப்பட்டு (பள்ளிக்கு சென்று) இருவருக்கிடையில் பிரிக்காமல், அவர் மீது கடமையானதை தொழுதுவிட்டு, பிறகு இமாம் உரை நிகழ்த்தினால் காது தாழ்த்திக் கேட்டால் அவரது அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்குமிடையிலுள்ள பாவம் மன்னிக்கப்படும்.  (புஹாரி:883) முஸ்லிமின் அறிவிப்பில் பல் துளக்குவது சேர்ந்து வந்துள்ளது.

ஜும்ஆ தொழுகைக்காக நேர காலத்துடன் செல்லுதல், அப்போதுதான் மலக்கு மார்களின் பட்டியலில் பெயரைப் பதித்துக்கொள்ள முடியும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ يَوْمُ الجُمُعَةِ وَقَفَتِ المَلاَئِكَةُ عَلَى بَابِ المَسْجِدِ يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، …… فَإِذَا خَرَجَ الإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ، وَيَسْتَمِعُونَ الذِّكْرَ»  صحيح البخاري

நபி (ஸல்) கூறினார்கள்: “ஜும்ஆ நாளாக இருந்தால் மலக்குகள் பள்ளியின் வாசள்களில் நின்று கொண்டு வருபவர்களை வரிசைக் கிரமமாக எழுதுகின்றனர்,…இமாம் வெளியேரி, மிம்பரில் அமர்ந்துவிட்டால் ஏடுகளை சுறுட்டிவிட்டு, உரையைக் கேற்க அமர்ந்துவிடுவார்கள்.”   (புஹாரி:929, முஸ்லிம்)

ஜும்ஆவுக்காக பள்ளிக்கு சென்றவர் இமாம் வரும் வரை தொழ முடியும்.

عَنْ سَلْمَانَ الفَارِسِيِّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الجُمُعَةِ، وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، وَيَدَّهِنُ مِنْ  دُهْنِهِ، أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ، ثُمَّ يَخْرُجُ فَلاَ يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ، ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ، ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الإِمَامُ، إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الجُمُعَةِ الأُخْرَى» صحيح البخاري 

நபி (ஸல்) கூறினார்கள்: “ஒரு மனிதர் முடியுமான அளவு சுத்தப்படுத்தி குளித்துவிட்டு, தன் எண்ணையிலிருந்து பூசிவிட்டு, தன் வீட்டிலுள்ள வாசனையையும் பூசியவராக (வீட்டிலிருந்து) வெளிப்பட்டு (பள்ளிக்கு சென்று) இருவருக்கிடையில் பிரிக்காமல், அவர் மீது கடமையானதை தொழுதுவிட்டு, பிறகு இமாம் உரை நிகழ்த்தினால் காது தாழ்த்திக் கேட்டால் அவரது அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்குமிடையிலுள்ள பாவம் மன்னிக்கப்படும்.  (புஹாரி:883) 

ஜும்ஆ தொழுகைக்கான நேரம்.

ஜும்ஆவுக்கான நேரம் லுஹரைப் போன்று சூரியன் உச்சியிலிருந்து சாய வேண்டியதில்லை, சூரியன் உச்சியிலிருக்கும் போதும் அதைத் தொழமுடியும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ» صحيح البخاري 

அனஸ் (றழி) கூறினார்கள்: ‘நபியவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாயும்போது தொழுவார்கள்.’  (புஹாரி:904)

سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُمُعَةَ، فَنَرْجِعُ وَمَا نَجِدُ لِلْحِيطَانِ فَيْئًا نَسْتَظِلُّ بِهِ» صحيح مسلم 

சலமதுப்னு அக்வஃ   (றழி) கூறினார்கள்: ‘நாங்கள் நபிகளாரோடு ஜும்ஆ தொழுதுவிட்டு, திறும்பிச் செல்லும்போது, நாங்கள் நிழல் பெற மதில்களுக்கு நிழல் இருக்கமாட்டாது.’ (புஹாரி:4168, முஸ்லிம்)

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَرْجِعُ فَنُرِيحُ نَوَاضِحَنَا» صحيح مسلم  

ஜாபிர் (றழி) கூறினார்கள்: ‘நாங்கள் நபிகளாரோடு ஜும்ஆ தொழுதுவிட்டு, திறும்பிச் சென்று, சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரத்தில் ஒட்டகங்களை ஓய்வெடுக்க விடுவோம்.’ (முஸ்லிம்)

ஜும்ஆ உரையோடு சம்பந்தப்பட்ட சட்டங்கள்:-

கொத்பாவை செவிமடுப்பது கடமை, இமாம் பேசும் போது யாரோடாவது பேசினால், அல்லது பொடிக் கற்களைப் பிடித்து விளையாடினால் அதன் பலன் குறைந்துவிடும்.

أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الجُمُعَةِ: أَنْصِتْ، وَالإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ ”  صحيح البخاري

நபி (ஸல்) கூறினார்கள்: “இமாம் பேசும்போது நீ உன் தோழனைப் பார்த்து, ‘வாய் மூடு’ என்றாலும், நீ (கொத்பாவை) வீனாக்கிவிட்டாய்.” (புஹாரி:934, முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «……… وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا»   صحيح مسلم 

நபி (ஸல்) கூறினார்கள்: “யார் பொடிக் கல்லைப் பிடிக்கின்றாரொ (விளையாடுவது) அவர் (ஜும்ஆவை) வீனாக்கிவிட்டார்.” (முஸ்லிம்)

இமாமோடு தேவைக்கு பேசுவது கூடும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي يَوْمِ جُمُعَةٍ قَامَ أَعْرَابِيٌّ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: هَلَكَ المَالُ وَجَاعَ العِيَالُ، فَادْعُ اللَّهَ لَنَا، فَرَفَعَ يَدَيْهِ …………………..  صحيح البخاري 

ஜும் ஆ தினத்தில் நபிகளார் கொத்பா செய்துகொண்டிருக்கும்போது, பள்ளிக்குள் நுளைந்த ஒரு மனிதர் நின்றவராக, ‘அல்லாஹ்வின் தூதரே! சொத்துக்கள் அழிந்துவிட்டன, பாதைகளில் பயணிக்க முடியவில்லை, எனவே மலைக்காக பிரார்த்தியுங்கள், நபிகளார் பிரார்தித்தார்கள்….(புஹாரி:933,1014…., முஸ்லிம்)

இமாம் உரை நிகழ்த்தும்  போது பள்ளிக்குள் வறுபவர் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு அமரவேண்டும்.

جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ: «إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالإِمَامُ يَخْطُبُ أَوْ قَدْ خَرَجَ، فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ» صحيح البخاري 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: «أَصَلَّيْتَ يَا فُلاَنُ؟» قَالَ: لاَ، قَالَ: «قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ» صحيح البخاري  

நபி (ஸல்) கூறினார்கள்: “உங்களில் ஒருவர், இமாம் உரை நிகழ்த்தும்போது வந்தால், இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு அமரட்டும்.” (முஸ்லிம்)

புஹாரி:930, முஸ்லிம் மற்றொரு அறிவிப்பில்; அமர்ந்தவரை எழுந்து தொழச் சொன்னதாக வந்துள்ளது.

நேர காலத்தோடு வருபவர்கள் முதல் சப்பின் சிறாப்பை விளங்கி முன்னே அமர்வதும், தாமதித்து வருபவர்கள் மக்களைக் கடந்து சென்று பாவ மண்ணிப்பை இலக்கவும் கூடாது. என்பதும் அதிகம் கவனிக்கவேண்டியதே!  (ஹதீஸ் முன்னே வந்தது)

அது யாருக்கு கடமை?

வயது வந்த ஒவ்வொரு ஆண்கள் மீதும் கடமையாகும். இஸ்லாம் காட்டிய காரணங்கள் இன்றி அதனை விடுவது பாவமாகும்.

ஜும்ஆவை விடுவதனால் உள்ளத்தின் மீது முத்திறை இடப்படுகின்றது, அதனால் பாவியாக வேண்டிவரும்.

عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، وَأَبَا هُرَيْرَةَ ، أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ: «لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ، أَوْ لَيَخْتِمَنَّ اللهُ عَلَى قُلُوبِهِمْ، ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ» صحيح مسلم 

நபி (ஸல்) கூறினார்கள்:” ஜும்ஆக்களை விடுபவர்கள் அதிலிருந்து தவிர்ந்து கொள்ளட்டும், இல்லையென்றால், அவர்கள் உள்ளங்கள் மீது முத்திரையை அல்லாஹ் இடுவான், பிறகு (அல்லாஹ்வை)மறந்தவர்களில் அவர்கள் ஆகிவிடுவர்.” (முஸ்லிம்)

பெண்கள் மீதும், நோயாளிகள், சிறுவர்கள், பயணிகள் மீதும் கடமையில்லை.

عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً: عَبْدٌ مَمْلُوكٌ، أَوِ امْرَأَةٌ، أَوْ صَبِيٌّ، أَوْ مَرِيضٌ ”    سنن أبي داود 

நபி (ஸல்) கூறினார்கள்: “ஒவ்வொரு முஸ்லிம் மீதும் ஜும்ஆவை ஜமாஅத்துடன் தொழுவது கடமையாகும், நான்கு பேரைத்தவிர: அடிமை, பெண்மனி, சிறுவன், நோயாளி.” (அபூதாவுத், பைஹகீ,இதே அறிவிப்பு ஹாகிமில் அபூ மூஸா (ரழி) அவர்கள் வழியாக பதியப்பட்டுள்ளது.)

பயணிகளைப் பொறுத்தவரை அவர்கள் பொதுவாக அவகாசம் கொடுக்கப்பட்டவர்கள்.

பெண்கள் விறும்பினால் ஜும்ஆவில் கலந்து கொள்வதற்காக  (தன்னை அழங்கரிக்காமல், வசனைத் திறவியங்களைப் பூசாமல்) பள்ளிக்கு வரமுடியும் யாரும் தடுக்கமுடியாது, அதற்கான ஏற்பாட்டை செய்வது ஆண்களின் பொறுப்பாகும்.

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَتِ امْرَأَةٌ لِعُمَرَ تَشْهَدُ صَلاَةَ الصُّبْحِ وَالعِشَاءِ فِي الجَمَاعَةِ فِي المَسْجِدِ، فَقِيلَ لَهَا: لِمَ تَخْرُجِينَ وَقَدْ تَعْلَمِينَ أَنَّ عُمَرَ يَكْرَهُ ذَلِكَ وَيَغَارُ؟ قَالَتْ: وَمَا يَمْنَعُهُ أَنْ يَنْهَانِي؟ قَالَ: يَمْنَعُهُ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ»  صحيح البخاري 

இப்னு உமர் (றழி) கூறினார்கள்: ‘உமர் (றழி) அவர்களின் மனைவி சுபஹ், இஷா ஜமாஅத்தில் கலந்து கொள்வார்கள், அப்போது அவர்களிடம் ‘உமரவர்கள் அதை வெறுக்கின்றார்கள், ரோசப்படுகின்றார்கள் என்று தெரிந்தும் ஏன் வருகின்றீர்கள்?’ என்று கேட்க்கப்பட்டபோது, ‘என்னைத் தடுப்பதை விட்டும் உமரவர்களைத் தடுத்தது எது?’ என்று கேட்க, “அல்லாஹ்வின் பெண் அடிமைகளை பள்ளிகளை விட்டும் தடுக்காதீர்கள்.” என்ற ஹதீஸ் என்றார்கள் இப்னு உமரவர்கள்.’ (புஹாரி:900, முஸ்லிம்)

زَيْنَبَ الثَّقَفِيَّةَ، كَانَتْ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ فَلَا تَطَيَّبْ تِلْكَ اللَّيْلَةَ»  صحيح مسلم 

உங்களில் ஒரு பெண் இஷா தொழுகையில் கலந்து கொள்வதாக இருந்தால், அவள் அந்த இரவில் நறுமணம் பூசாமலிருக்கட்டும். (முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ» صحيح مسلم 

நபி (ஸல்) கூறினார்கள்: “எந்தப் பெண்ணாவது வாசனை பூசிவிட்டால், அவர் எங்களுடன் இஷாவில் கலந்துகொள்ளவேண்டாம்.”  (முஸ்லிம்)

கடும் மலை காரணமாகவும் ஜும்ஆ கடமை விழுந்துவிடும்

ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ: إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ، قُلْ: «صَلُّوا فِي بُيُوتِكُمْ»، فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ: فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الجُمْعَةَ عَزْمَةٌ وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحَضِ   صحيح البخاري 

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கடுமையான மலை நாளில் தன் முஅஸ்ஸினிடம் ‘நீ அஷ்ஹது அன்ன மு… சொன்னால், ஹய்ய அலஸ் ஸ.. சொல்லவேண்டாம், மாறாக ‘ஸல்லூ பீ  புயூதிகும்’, என்று சொல்.என்று கூறுவார்களாம், மக்கள் நிறாகரிப்பது போன்று விழங்கவே, ‘என்னை விட சிறந்த மனிதர் (நபியவர்கள்) செய்தார்கள்.’ என்று கூறினார்கள்.மேலும் ‘ஜும்ஆ என்பது கடமையான ஒன்று,(அப்படி சொல்லாவிட்டால் கஸ்டப்பட்டு வருவார்கள்) சேற்றிலும் வழுக்களிலும் நடந்து வரும் அளவுக்கு உங்களை கஸ்டப்படுத்த நான் விறும்ப வில்லை,’ என்று கூறினார்கள். (புஹாரி:616,901, முஸ்லிம்)

ஜும்ஆவும் பெருநாளும் ஒரே தினத்தில் வந்தால், பெருநாள் தொழுகையைத் தொழுதவருக்கு ஜும்ஆவில் சழுகை கொடுக்கப்பட்டுள்ளது, விறும்பினால் தொழமுடியும். ஆனால் பள்ளியில் ஜும்ஆ நடை பெரும்

عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ: صَلَّى بِنَا ابْنُ الزُّبَيْرِ فِي يَوْمِ عِيدٍ، فِي يَوْمِ جُمُعَةٍ أَوَّلَ النَّهَارِ، ثُمَّ رُحْنَا إِلَى الْجُمُعَةِ، فَلَمْ يَخْرُجْ إِلَيْنَا فَصَلَّيْنَا وُحْدَانًا، وَكَانَ ابْنُ عَبَّاسٍ بِالطَّائِفِ، فَلَمَّا قَدِمَ ذَكَرْنَا ذَلِكَ لَهُ، فَقَالَ: «أَصَابَ السُّنَّةَ» سنن أبي داود 

அதாஃ பின் அபீ ரபாஹ் அவர்கள் கூறினார்கள்:வெள்ளியன்று வந்த ஒரு பெருநாள் தினத்தன்று இப்னுஸ் ஸுபைர் (ரழி) அவர்கள், அந்த நாளின் ஆரம்பத்திலே பெருநாள் தொழுகையை தொழுவித்தார்கள், நாங்கள் ஜும்ஆ தொழுவதற்கு சென்றோம், அவர்கள் வரவில்லை, நாங்கள் தனிமையில் தொழுதோம், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தாஇபில் இருந்தார்கள், அவர் வந்த போது நங்கள் அதனை கூறவே, இப்னு அப்பாஸ் அவர்கள்; ‘இப்னுஸ் ஸுபைர் சுன்னாவுக்கு நேர்பட்டுவிட்டார்,’ என்று கூறினார்கள். (அபூதாவுத்: 1071)

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «قَدِ اجْتَمَعَ فِي يَوْمِكُمْ هَذَا عِيدَانِ، فَمَنْ شَاءَ أَجْزَأَهُ مِنَ الْجُمُعَةِ، وَإِنَّا مُجَمِّعُونَ»   سنن أبي داود

நபி (ஸல்)கூறினார்கள்:”இன்றைய தினம் ஜும்ஆவும் பெருநாளும் ஒன்றாக வந்துள்ளது, எனவே விரும்பியவருக்கு பெருநாள் தொழுகை போதும், ஆனாலும் நாங்கள் ஜும்ஆ நடத்துவோம்.   (அபூதாவுத்:1073)

குத்பா உரையின் சட்டங்கள்.

குத்பா நிறைவேற குறிப்பிட்ட தொகையினர் இருக்கவேண்டு என்றில்லை, ஆகக் குறைந்தது மூன்று பேர் இருந்தாலே போதுமானது. ஏனெனில் நபியவர்கள் 40 பேர் இருக்க வேண்டுமென்றோ, அல்லது வேறு எண்ணிகைகளை நிபந்தனை இடவில்லை.

جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: ” بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَتْ عِيرٌ تَحْمِلُ طَعَامًا، فَالْتَفَتُوا إِلَيْهَا حَتَّى مَا بَقِيَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا} [الجمعة: 11] ”   صحيح البخاري

ஜாபிர் (றழி) கூறினார்கள்: ‘நாங்கள் நபிகளாரோடு (குத்பாவில்) இருக்கும் போது ஜும்ஆ தினத்தில் ஒரு வியாபாரக் கூட்டம் வந்தது, அப்போது 12 பேரைத்தவிர அனைத்து தோழர்களும் (குத்பாவிலிருந்து கூட்டத்தை நோக்கி) சென்றுவிட்டனர், அப்போது அல்லாஹ்: ‘(நபியே!) ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ அவர்கள் பார்த்தபோது, அதனளவில் சென்றுவிடுகின்றனர், (குத்பா நடத்தும் நிலையில்) உம்மை நின்ற நிலையில் விட்டும்விடுகின்றனர்.(62:11) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.’ (புஹாரி:936,,4899, முஸ்லிம்)

இந்த ஹதீஸ் பன்னிரண்டு நபர்கள் இருக்கும் போது நபியவர்கள் கொத்பா நடத்தினார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கினது. அப்படி செல்லுபடியாகாது என்றிருந்தால் நபிகளார் அதனை மீண்டும் நடத்தியிருக்க வேண்டும்.

அல்லாஹ்வை புகழ்ந்து, ஷஹாதாவுடைய வார்த்தையையும் கூறி, அம்மா பஃத் கூறி உரை நிகழ்த்தல்.

நபியவர்கள் அறிவுரைகளின்போது இப்படி செய்வார்கள் என்பதற்கான ஏராலமான சான்றுகளை புஹாரி, முஸ்லிம் போன்ற எல்லா கிதாப்களிலும் காண முடியும்.

நின்ற நிலையில் குத்பா ஓதுதல். இரண்டு குத்பாவுக்கிடையில் அமர்தல்.

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ، ثُمَّ يَقُومُ كَمَا تَفْعَلُونَ الآنَ» صحيح البخاري 

இப்னு உமர் (றழி) கூறினார்கள்: ‘நபியவர்கள் நின்றவர்களாக குத்பா செய்வார்கள், பிறகு இப்போது செய்வது போன்று அமர்ந்து விட்டு எழும்புவார்கள்.’ (புஹாரி:920, முஸ்லிம்)

جَابِرُ بْنُ سَمُرَةَ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَجْلِسُ، ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَائِمًا، فَمَنْ نَبَّأَكَ أَنَّهُ كَانَ يَخْطُبُ جَالِسًا فَقَدْ كَذَبَ، فَقَدْ وَاللهِ صَلَّيْتُ مَعَهُ أَكْثَرَ مِنْ أَلْفَيْ صَلَاةٍ»  صحيح مسلم  

ஜாபிர் (றழி) கூறினார்கள்: ”நபியவர்கள் நின்றவர்களாக குத்பா செய்வார்கள், பிறகு அமர்ந்து விட்டு எழும்பி குத்பா செய்வார்கள். எனவே யாராவது ‘நபியவர்கள் அமர்ந்து குத்பா செய்தார்கள்’ என்று அறிவித்தால், அவன் பொய் சொல்கின்றான், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களோடு இரண்டாயிரம் தொழுகைகளைவிட அதிகமாக தொழுதுள்ளேன்.  (முஸ்லிம்)  

இமாம் மிம்பரில் இரு கொத்பாவுக்கிடையில் அமரும்போது முஅத்தினால் ஸலவாத் சொல்லப்படுகின்றது, இதுவும் புதுமையாகும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இரண்டு குத்பாக்கள் ஓதுதல்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ خُطْبَتَيْنِ يَقْعُدُ بَيْنَهُمَا»   صحيح البخاري

இப்னு உமர் (றழி) கூறினார்கள்: ‘நபியவர்கள் இரண்டு குத்பா ஓதுவார்கள், இரண்டுக்குமிடையில் அமர்வார்கள்.’  (புஹாரி, முஸ்லிம், வார்த்தை புஹாரியில்)

இன்று அதிகமான பள்ளிகளில் மூன்று கொத்பாக்கள் ஓதப்படுகின்றன, அதாவது ஹம்து ஸலவாத் கூறி ஆரம்பிப்பது ஒரு கொத்பாவாகும், ஆரம்பத்தில் ஹம்து, ஸலாத்துடன் தமிழில் நிகழ்த்திவிட்டு, மீண்டும் ஹம்து, ஸலாத்துடன் அறபியில் ஓதுகின்றனர், இது இரண்டு கொத்பாவாகும், சிறு அமர்வுக்குப் பின் மீண்டும் ஹம்து, ஸலாத்துடன் அறபியில் கொத்பா செய்யப்படுகின்றது, இது மூன்றாவதாகும், நபிகளார் இரண்டு கொத்பாக்களே நடாத்தினார்கள். எனவே, இரண்டையும் அறபியிலோ, அல்லது வேறு ஒரு மொழியிலோ, அல்லது ஒன்றை தமிழிலும் மற்றதை அறபியிலுமோ ஓதுவதன் மூலம் இரண்டு கொத்பாக்களை ஓதி நபி வழிக்கு நேர்பட முயற்சிக்கவேண்டும், அதையும் பித்அத் மூலம் வீனாக்கி விடக்கூடாது.என்பதும் கவனிக்கத்தக்கது.

குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களை விளங்கப் படுத்தல். கதைகள் கப்சாக்கள் தவிர்க்கப்படல்.

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَتَانِ يَجْلِسُ بَيْنَهُمَا يَقْرَأُ الْقُرْآنَ، وَيُذَكِّرُ النَّاسَ» صحيح مسلم 

ஜாபிர் (றழி) கூறினார்கள்: ‘நபிகளாருக்கு இரண்டு குத்பாக்கள் இருந்தன, அவற்றுக்கிடையில் அமர்வார்கள், குர்ஆனை ஓதி, மக்களுக்கு அறிவுரை செய்வார்கள்.’  (முஸ்லிம்)

عَنْ بِنْتٍ لِحَارِثَةَ بْنِ النُّعْمَانِ، قَالَتْ: «مَا حَفِظْتُ ق، إِلَّا مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَخْطُبُ بِهَا كُلَّ جُمُعَةٍ»، قَالَتْ: وَكَانَ تَنُّورُنَا وَتَنُّورُ رَسُولِ اللهِصَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاحِدًا صحيح مسلم

عَنْ أُخْتٍ لِعَمْرَةَ، قَالَتْ: «أَخَذْتُ ق وَالْقُرْآنِ الْمَجِيدِ مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ، وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِي كُلِّ جُمُعَةٍ».  صحيح مسلم 

உம்மு ஹிஷாம் என்ற பெண்மனி கூறினார்கள்: ‘நான் நபிகளாரின் வாயிலிருந்து கேட்டே ஸூறா காபை மனனமிட்டேன், அவர்கள் ஒவ்வொரு குத்பாவிலும் அதை மிம்பரில் ஓதி குத்பா செய்வார்கள்.எங்களது அடுப்பும் நபிகளாரின் அடுப்பும் ஒன்றாக இருந்தது.’ (முஸ்லிம்)

 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ، حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ: «صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ»، وَيَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ»، وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ، وَالْوُسْطَى، وَيَقُولُ: «أَمَّا بَعْدُ، فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ» ثُمَّ يَقُولُ: «أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ، مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ وَعَلَيَّ».  صحيح مسلم 

ஜாபிர் (றழி) கூறினார்கள்; ‘நபியவர்கள் குத்பா செய்தால், கண்கள் சிவந்து, சத்தம் உயர்ந்து, கோவம் கடுமையாகிவிடும், எந்த அளவுக்கென்றால் எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து ‘எதிரிகள் காலையில் உங்கள் கீது தாக்குதல் தொடுக்கபோகின்றனர், மாலையில் உங்கள் கீது தாக்குதல் தொடுக்கபோகின்றனர்’ என்று கூறி எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள்., மேலும் தன் ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் சேர்த்துக் காட்டி, நான் அனுப்பப் பட்டதும் மறுமையும் இவ்வளவு நெறுக்கமானது என்று கூறிவிட்டு, “அம்மா பஃத்” என்று கூறி, வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடை முறைகளில் சிறந்தது முஹம்மதின் வழி முறை, கருமங்களில் மிகக் கெட்டது அதில் புதிதாக உண்டாக்கப்பட்டவை, எல்லா பித்அத்தும் வழிகேடு’ என்று கூறுவார்கள்.பிறகு ‘நானே ஒவ்வொரு மனிதனுக்கும் பொறுப்பாளன்  ஆவேன் , யாராவது சொத்துக்களை விட்டுச் சென்றால் அது அவரது ஆனந்தரக்காரர்களுக்காகும். யாராவது கடனை விட்டுச் சென்றால் அது எனது பொறுப்பாகும்.’ என்று கூறினார்கள்.(முஸ்லிம்)

قَالَ أَبُو بَكْرٍ: وَكَانَ رَبِيعَةُ مِنْ خِيَارِ النَّاسِ، عَمَّا حَضَرَ رَبِيعَةُ مِنْ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَرَأَ يَوْمَ الجُمُعَةِ عَلَى المِنْبَرِ بِسُورَةِ النَّحْلِ……..   صحيح البخاري 

உமர் (றழி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் மிம்பரில் ஸூறா நஹ்லை ஓதினார்கள்….(புஹாரி:1077)

இந்த செய்தியை இங்கு பதிவு செய்வதற்கு காரணம்;நபித் தோழர்கள் எப்படி நபிகளாருடைய ஜும்ஆவின் வழிமுறையை புரிந்துகொண்டார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கே!!!

ஜும்ஆ குத்பாவை சுறுக்கமாகவும், தொழுகையை பூரணமாகவும் வைத்துக்கொள்ளல்.

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كُنْتُ أُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَوَاتِ فَكَانَتْ صَلَاتُهُ قَصْدًا، وَخُطْبَتُهُ قَصْدًا» صحيح مسلم  

ஜாபிர் (றழி) கூறினார்கள்: ‘நபியவர்களது தொழுகையும் குத்பாவும் நடு நிலமையாக இருந்தது.’  (முஸ்லிம்)

عَمَّارٌ قَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ، وَقِصَرَ خُطْبَتِهِ، مَئِنَّةٌ مِنْ فِقْهِهِ، فَأَطِيلُوا الصَّلَاةَ، وَاقْصُرُوا الْخُطْبَةَ، وَإِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا»  صحيح مسلم

நபி (ஸல்) கூறினார்கள்: “ஒரு மனிதனின் தொழுகை நீழ்ப்பமாக இருப்பதும், குத்பா சுறுக்கமாக இருப்பதும் அவனின் மார்க்க விழக்கத்துக்கு அடயாளமாகும், எனவே தொழுகையை நீட்டுங்கள், குத்பாவை சுறுக்குங்கள், மேலும் பயானில் சில கவர்ச்சியானதாகும்.”  (முஸ்லிம்)

குத்பா செய்பவர் தடி போன்ற ஏதாவது ஒரு பொருளை கையில் வைக்க வேண்டுமா? என்றால் அதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸ்களும் வரவில்லை.

நபிகளார் தடி அல்லது வில் போன்றவற்றில் சாய்ந்தவர்களாக குத்பா செய்வார்கள் என்று வரும் ஹதீஸ் பலவீனமானது

ஜும்ஆ கொத்பாவுக்காக இமாம் மிம்பருக்கு ஏறமுன் முஅத்தினாக இருப்பவர் அசாகோளை கையிலேந்தி, நபிகளார்மீது ஸலவாத் கூறி, சில ஹதீஸ்களையும் கூறி (மஹ்ஷர் ஓதி) அசாவைக்கொடுக்கும் வழமை உள்ளது, அதுவும் மார்க்கத்தில் புகுத்தப்பட்டதாகும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது தவிர்க்கப்படவேண்டும்.

ஜும்ஆ தினத்தில் இமாம் மிம்பருக்கு ஏறிய பிறகு பாங்கு சொல்வதே  நபி வழியாகும்.

عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ: «كَانَ النِّدَاءُ يَوْمَ الجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى المِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَلَمَّا كَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ»  صحيح البخاري 

ஸாஇப் பின் யஸீத் (றழி) கூறினார்கள்: ‘நபியவர்கள் காலத்திலும் அபூ பக்ர், உமர் (றழி) காலத்திலும் முதலாவது அழைப்பு (பாங்கு) இமாம் மிம்பரில் அமர்ந்தபிறகே (சொல்லப்பட்டுக் கொண்டு) இருந்தது, உஸ்மான் (றழி) காலத்தில் மக்கள் அதிகமானபோது Zசொளரா என்ற இடத்தில் மூன்றாவது அழைப்பை அவர்கள் அதிகமாக்கினார்கள்.’  (புஹாரி:912,915…)

உஸ்மான் (றழி) அவர்கள் Zசொளரா எனும் சந்தையில்தான் ஒரு அழைப்பை மக்களுக்கு சென்றடைவதற்காக ஏற்படுத்தியுள்ளார்கள், இன்றைக்கு நடப்பது போன்றல்ல. மேலும் இகாமத்துடன் சேர்த்தே எண்ணப்பட்டுள்ளது, அதுதான் மூன்றாவது என்று வந்துள்ளது.

ஜும்ஆவுக்கு நபிகளார் காலத்தில் போல ஒரு பாங்கு சொல்வதையே ஷாபி இமாமவர்களும் விரும்பினார்கள்.(قال الشافعي وأيهما كان فالأمر الذي على عهد رسول الله صلى الله عليه وسلم أحب إلي உம்மு என்ற கிதாப் ‘ஜும்ஆவுக்கு பாங்கு சொல்லும் நேரம்’ என்ற பாடம்)

ஜும்ஆ பயானின் கடைசியில், குறிப்பிட்ட ஸஹாபாக்களின் பெயர் சொல்வதும் நபி வழியில் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களில் வராத ஒருவிடயமாகும்.

குத்பாவின் கடைசியில் மூமின்களுக்காக ஒரு துஆ ஓதுவது நிபந்தனையாக கறுதப்படுகின்றது, அதட்கும் அதாரப் பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் வரவில்லை.

குத்பாவை அறபியில்தான் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை, ஏனெனில் குத்பாவின் நோக்கம் அறிவுரை செய்வதாகும், எனவே குத்பாவை செவி மடுக்கும் மக்களுக்கு பயன் அளிக்கும் விதத்திலே குத்பா அமையவேண்டும். மிம்பரில் வேறு மொழி பேசினால் குத்பா பாலாகி விடும் என்பதட்கு எந்த ஆதாரமு இல்லை.

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: «كَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَتَانِ يَجْلِسُ بَيْنَهُمَا يَقْرَأُ الْقُرْآنَ، وَيُذَكِّرُ النَّاسَ» صحيح مسلم  

ஜாபி (றழி) கூறினார்கள் :’நபியவர்களுக்கு இரண்டு குத்பாக்கள் இருந்தன, அவற்றுக்கிடையில் அமர்வார்கள், குர்ஆனை ஓதி மக்களுக்கு அறிவுரை செய்வார்கள்.’ (முஸ்லிம்)

மிம்பரில் கையேந்தி பிரார்த்தணை செய்வதும் நிபந்தனையாக வர முடியாது, ஏனெனில் நபியவர்கள் மலைக்காக அன்றி வேறு எந்த சந்தர்ப்பத்திலும் மிம்பரில் கையேந்தி பிரார்த்தித்தது இல்லை.

عَنْ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ، قَالَ: رَأَى بِشْرَ بْنَ مَرْوَانَ عَلَى الْمِنْبَرِ رَافِعًا يَدَيْهِ، فَقَالَ: «قَبَّحَ اللهُ هَاتَيْنِ الْيَدَيْنِ، لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَزِيدُ عَلَى أَنْ يَقُولَ بِيَدِهِ هَكَذَا، وَأَشَارَ بِإِصْبَعِهِ الْمُسَبِّحَةِ».   صحيح مسلم

உமாரா (றழி) அவர்கள்: பிஷ்ர் பின் மர்வான் என்பவர் இருகைகளையும் ஏந்தியவராக மிம்பரில் இருப்பதைக் கண்ட போது, ‘அல்லாஹ் இந்த இரு கைகளையும் இழிவுபடுத்துவானாக, நிச்சியமாக நான் நபியவர்களை கண்டிருக்கின்றேன்’ அவர்கள் தன் இரு ஆள் காட்டி விரலால் சாடை செய்வதைவிட அதிகப் படுத்தவில்லை, என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

ஒரு கொத்பாவில் நபிகளார் மீது ஸலவாத் சொல்வது நிபந்தனையாக நோக்கப்படுகின்றது, அதிலும் நபிகளாரிடமிருந்து எந்த முன்மாதிரியும் வரவில்லை, எனவே அதை நிபந்தனையிட முடியாது.

ஜும்ஆவுடைய தொழுகையின் ஒழுங்குகள்.

ஜும்ஆவுக்கான முந்திய சுன்னத், இதைப் பொருத்த வரை ஏனைய தொழுகைகளைப் போன்று முன் சுன்னத் இரண்டு என்றோ நான்கு என்றோ நபிகளார் குறிப்பிட்டு கூறவில்லை, பள்ளிக்கு நேர காலத்தோடு வந்தவர் இமாம் மிம்பருக்கு ஏறும் வரை தொழுவதும், குத்பா நடக்கும் போது வந்தவர் தஹிய்யதுல் மஸ்ஜிதுடைய இரு ரக்அத்களையும் தொழுவதுமாகும். மாறாக அமர்ந்திருப்பவர் பாங்கு சொன்ன பிறகு எழுந்து (ஏனைய தொழுகை போன்று) இரண்டு ரக்அத்கள் தொழுவதற்கு தனி ஆதாரங்கள் இல்லை. ஏனெனில் பாங்கு சொல்லும் போது நபிகளார் மிம்பரில் அமர்ந்து இருப்பார்கள், ஸஹாபாக்களாவது எழும்பி தொழுததாக வரவில்லை.

ஜும்ஆத் தொழுகையின் இரு ரக்அத்திலும் ஸூறா அஹ்லா, ஸூறா காஷியாவை, அல்லது ஸூறா ஜும்ஆ, ஸூறா முனபிகீனை ஓதுதல்.

فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقْرَأُ بِهِمَا يَوْمَ الْجُمُعَةِ».   صحيح مسلم 

அபூ ஹுறைறா (றழி) கூறினார்கள்: நபியவர்கள் ஜும்ஆ தினத்தில் ஸூற ஜும்ஆவையும், முனாபிகூனையும் ஓதுவதை நான் செவிமடுத்துள்ளேன்.’ (முஸ்லிம்)

عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ، وَفِي الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»، قَالَ: «وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ، فِي يَوْمٍ وَاحِدٍ، يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِي الصَّلَاتَيْنِ».   صحيح مسلم

நூஃமான் பின் பஷீர் (றழி) கூரினார்கள்: ‘நபியவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜும்ஆவிலும் ஸப்பிஹிஸ்ம, ஹல்அதாக ஸூறாக்களை ஓதுவார்கள், மேலும் பெருநாளும் ஜும்ஆவும் ஒரே நாளில் வந்தால் இரண்டு தொழுகையிலும் அவ்விரண்டையுமே ஓதுவார்கள்.;  (முஸ்லிம்)

ஜும்ஆவை அடைந்து கொள்வதன் கடைசி கட்டம், இமாமோடு ஒரு ரக்அத்தை தொழுதவதாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ مَعَ الْإِمَامِ، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ» صحيح مسلم 

நபி (ஸல்) கூறினார்கள்: “யார் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தாரோ, அவர் அந்த தொழுகையை அடைந்துவிட்டார்.” (புஹாரி:580, முஸ்லிம், முஸ்லிமில் இமாமுடன் அடைந்தவர் என்று வந்துள்ளது)

பிந்திய சுன்னத், இரண்டு ரக்அத்களோ நான்கு ரக்அத்களோ தொழ முடியும், பள்ளியிலோ அல்லது வீட்டிலோ தொழமுடியும்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ رَكْعَتَيْنِ، وَبَعْدَهَا رَكْعَتَيْنِ، وَبَعْدَ المَغْرِبِ رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَبَعْدَ العِشَاءِ رَكْعَتَيْنِ، وَكَانَ لاَ يُصَلِّي بَعْدَ الجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ»   صحيح البخاري وفي مسلم:  فَيُصَلِّي رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ».

இப்னு உமர் (றழி) கூறினார்கள்: ‘நபியவர்கள் ஜும்ஆவுக்குப் பின்னால் திறும்பிச் செல்லும் வரை தொழமாட்டார்கள், திறும்பிச் சென்று வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.’  (புஹாரி:937, முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا»  صحيح مسلم 

நபி (ஸல்) கூறினார்கள்: “நீங்கள் ஜும்ஆவுக்குப் பின்னால் தொழுதால் நான்கைத் தொழுங்கள்.” (முஸ்லிம்)

 فَقَالَ السَّائِبِ: نَعَمْ، صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ، فَلَمَّا سَلَّمَ الْإِمَامُ قُمْتُ فِي مَقَامِي، فَصَلَّيْتُ، فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَيَّ، فَقَالَ: «لَا تَعُدْ لِمَا فَعَلْتَ، إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ، فَلَا تَصِلْهَا بِصَلَاةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ، فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِذَلِكَ، أَنْ لَا تُوصَلَ صَلَاةٌ بِصَلَاةٍ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ».   صحيح مسلم

ஸாஇப் (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நான் முஆவியா (றழி) அவர்களோடு ஜும்ஆவைத் தொழுதேன், ஸலாம் கொடுத்த போது, நான் எழுந்து அதே இடத்தில் தொழுதேன், நான் வீட்டுக்குள் நுளைந்தபோது, என்னிடம் தூதுவரை அனுப்பி, இது போன்று செய்யவேண்டாம், நீங்கள் ஜும்ஆ தொழுதால் பேசும் வரை, அல்லது வெளியேறும் (வீடு செல்லும்) வரை, எந்தத் தொழுகையும் தொழ வேண்டாம்.’ என்று கூறிவிட்டு, நபியவர்கள் இப்படி எங்களுக்கு ஏவினார்கள்.’ என்றார்கள். (முஸ்லிம்)

தேவை ஏற்படின் ஒரே நிர்வாகத்தின் கீல் பல ஜும்ஆ பள்ளிகளை உருவாக்கலாம். நபிகளாரின் ஜும்ஆவுக்குப்பின் வேறாக ஆரம்பிக்கப்பட்ட முதல் ஜும்ஆ பஹ்ரைனிலாகும்

عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّهُ قَالَ: «إِنَّ أَوَّلَ جُمُعَةٍ جُمِّعَتْ بَعْدَ جُمُعَةٍ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي مَسْجِدِ عَبْدِ القَيْسِ بِجُوَاثَى مِنَ البَحْرَيْنِ»  صحيح البخاري 

இப்னு அப்பஸ் (றழி) கூறினார்கள்: ‘நபிகளாரின் பள்ளியில் நடந்த ஜும்ஆவுக்குப் பின்னால் வேறாக நடந்த முதல் ஜும்ஆ, பஹ்ரைன் பிரதேசத்திலுள்ள அப்துல் கைஸ் என்ற பள்ளியிலாகும்.’ (புஹாரி:892)

ஜும்ஆவின் சட்டங்களை இஸ்லாம் காடிய பிரகாரம் படித்து, நடைமுறைப்படுத்தி எம்மீதுள்ள கடமையை பரிபூரணமாக நிறைவேற்ற முயல வேண்டும். அல்லாஹ் அதற்கு எமக்கு துணை நிபானாக!!!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *