பிக்ஹு -21; தொழுகையில் ஓதவேண்டியவை

தொழுகையில் ஓதவேண்டியவை

நிலையில் ஓதவேண்டியது; ஆரம்ப தக்பீருக்கு பின்னால் (இஸ்திப்தாஹ்) வஜ்ஜஹ்து ஓதுதல்.

 أَبُو هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ القِرَاءَةِ إِسْكَاتَةً – قَالَ أَحْسِبُهُ قَالَ: هُنَيَّةً – فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالقِرَاءَةِ مَا تَقُولُ؟ قَالَ: ” أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ ”  صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையில் சற்று மௌனமாக இருப்பார்கள், அல்லாஹ்வின் தூதரே! அந்த மௌன நேரத்தில் நீங்கள் செல்வதென்ன? என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கேட்க, நான்

: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ “

என்று சொல்கிறேன், என்றார்கள் நபியவர்கள்.  (புஹாரி: 744, முஸ்லிம்)

 عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ، قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ……  صحيح مسلم 

அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபியவர்கள் தொழுகைக்கு நின்றால்,

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْتَ رَبِّي، وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

என்று சொல்வார்கள்.  (முஸ்லிம்)

மற்றொரு அறிவிப்பில்  مِنَ الْمُسْلِمِينَ வரை ஓதியதாக வந்துள்ளது. (முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ، قَالَ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرَكَ

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) தொழுகையை ஆரம்பித்தால்

«سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرَكَ»

என்று சொல்வார்கள்.  (அபூதாவுத்: 776)

அபூதாவுதின் 775 வது இலக்க ஹதீஸில் அபூ ஸஈத் (ரழி)  அவர்கள் பின்வருமாறு ஓதியதாக கூறினார்கள்;

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرَكَ»، ثُمَّ يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ» «لَا إِلَهَ إِلَّا اللَّهُ»«لَا إِلَهَ إِلَّا اللَّهُ» «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا»«اللَّهُ أَكْبَرُ كَبِيرًا»«اللَّهُ أَكْبَرُ كَبِيرًا» ، «أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ، وَنَفْخِهِ، وَنَفْثِهِ

عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟» فَأَرَمَّ الْقَوْمُ، فَقَالَ: «أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِهَا؟ فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا» فَقَالَ رَجُلٌ: جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهَا، فَقَالَ: «لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَرْفَعُهَا» صحيح مسلم  

பிஸ்மியை மௌனமாக சொல்லுதல்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ حَدَّثَهُ قَالَ: ” صَلَّيْتُ خَلَفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، فَكَانُوا يَسْتَفْتِحُونَ بِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا يَذْكُرُونَ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] فِي أَوَّلِ قِرَاءَةٍ وَلَا فِي آخِرِهَا ”  صحيح مسلم 

அனஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்,உமர்(ரழி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.  (புஹாரி:743, முஸ்லிம்)

முஸ்லிமின் அறிவிப்பில்;அவர்கள் ஆரம்பத்திலோ, கடைசியிலோ பிஸ்மியை சொல்லமாட்டார்கள்.

عَنْ أَنَسٍ قَالَ: ” صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَلْفَ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ فَكَانُوا لَا يَجْهَرُونَ: بِـ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] ”  مسند أحمد

அஹ்மதின் அறிவிப்பில்; அவர்கள் பிஸ்மியை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். என்று வந்துள்ளது. (12845)

عَنْ نُعَيْمِ الْمُجْمِرِ قَالَ:   صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ فَقَالَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ثُمَّ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ حَتَّى إِذَا بَلَغَ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} قَالَ: آمِينَ وَقَالَ النَّاسُ: آمِينَ فَلَمَّا رَكَعَ قَالَ: اللَّهُ أَكْبَرُ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ثُمَّ قَالَ: اللَّهُ أَكْبَرُ ثُمَّ سَجَدَ فَلَمَّا رَفَعَ قَالَ: اللَّهُ أَكْبَرُ فَلَمَّا سَجَدَ قَالَ: اللَّهُ أَكْبَرُ فَلَمَّا رَفَعَ قَالَ: اللَّهُ أَكْبَرُ ثُمَّ اسْتَقْبَلَ قَائِمًا مَعَ التَّكْبِيرِ فَلَمَّا قَامَ مِنَ الثِّنْتَيْنِ قَالَ:اللَّهُ أَكْبَرُ فَلَمَّا سَلَّمَ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى الله عليه وسلم         صحيح ابن حبان

நுஅய்ம் அல்முஜ்மிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன், அவர்கள் பிஸ்மி சொல்லி, பாத்திஹாவை ஓதினார்கள்,…… ஸலாம் கொடுத்தபின் ‘நான் நபிகளாருக்கு ஒப்பாகவே தொழுகிறேன்’ என்று கூறினார்கள்.  இப்னு ஹிப்பான்:1797)

குறிப்பு: அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் ஹதீஸ் வந்திருப்பது நபியவர்களின் செயற்பாட்டை தெளிவுபடுத்தவே, நபியவர்கள் மௌனமாக ஓதினார்கள் என்பதையே முன்னாள் வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறன.

பாத்திஹ சூரா ஓதுதல், அதனை லுஹர், அஸரில் மௌனமாகவும், மக்ரிப், இஷாவின் முதல் இரு ரக்அத்திலும் சுப்ஹிலும் வெளிப்படுத்தியும் ஓதுதல். முதலிரு  ரக்அத்திலும் பாத்திஹாவுடன் வேறு இரு சூராக்களையும்  ஓதுவது நபிவழியே.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை இல்லை.”  (புஹாரி: 756, முஸ்லிம்)

 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ» ثَلَاثًا غَيْرُ تَمَامٍ.   صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது உம்முல் குர் ஆன் (பாத்திஹாவை) ஓதாமல் தொழுதால் அது குறையுடையது பரிபூரணமற்றது (மூன்று தடவைகள் திருப்பி திருப்பி கூறினார்கள்). (முஸ்லிம்)

أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ وَيُسْمِعُنَا الآيَةَ، وَيُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مَا لاَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ، وَهَكَذَا فِي العَصْرِ وَهَكَذَا فِي الصُّبْحِ» صحيح البخاري 

நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும் அசரிலும் முதல் இரு ரக்அத்துகளிலும் பாத்திஹாவையும், இரு சூராக்களையும் ஓதுவார்கள். முதலில் நீட்டியும், இரண்டாவதில் பாத்திஹாவை  சுருக்கியும் ஓதுவார்கள். சில நேரங்களில் வசனங்களை கேட்க செய்வார்கள். இப்படியே சுப்ஹிலும் செய்வார்கள். (புஹாரி:776, முஸ்லிம்)

பாத்திஹாவின் இறுதியில்  ஆமின் சொல்லுதல்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا قَالَ الإِمَامُ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} [الفاتحة: 7] فَقُولُوا: آمِينَ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ”  صحيح البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் ‘கைரில் மக்ழூபி அலைஹிம் வலள்ளால்லின்’ என்று கூறினால், நீங்கள் ஆமீன் சொல்லுங்கள், ஏனெனில் யாருடைய சொல் மலக்குகளின் சொல்லுக்கு நேர்படுகின்றதோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.  (புஹாரி:782, முஸ்லிம்)

 عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا أَمَّنَ الإِمَامُ، فَأَمِّنُوا، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ صحيح البخاري 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள்,ஏனெனில் யாருடைய ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு நேர்படுகின்றதோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். (புஹாரி:780, முஸ்லிம்)

ஆமீன் சொல்லும் போது சத்தத்தை உயர்த்துவதும் நபிவழியே.

عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَرَأَ {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، قَالَ: «آمِينَ»، وَرَفَعَ بِهَا صَوْتَهُ  سنن أبي داود

வாஇல் பின் ஹுஜ்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ‘வலள்ளால்லின்’ என்றால் ஆமீன் என்று சொல்வார்கள், அதன் சத்தத்தை உயர்த்துவார்கள். (அபூதாவுத்: 932)

 عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا حَسَدَتْكُمُ الْيَهُودُ عَلَى شَيْءٍ، مَا حَسَدَتْكُمْ عَلَى السَّلَامِ وَالتَّأْمِينِ»  سنن ابن ماجه

ஆயிஷா (ரழி) அவர்கள் நபிகளார் கூறியதாக கூறினார்கள்: யூதர்கள்,நீங்கள் ஸலாம், ஆமீன் சொல்லும்போது உங்கள் மீது பொறாமை கொள்வதுபோன்று வேறு எதற்கும் பொறாமைப் படவில்லை.  (இப்னு மாஜா:856) இதே கருத்தில் வேறு நபித் தோழர்கள் வழியாகவும் வந்திருக்கிறது, ஆனால் அவை பலவீனமானவை.

ருகூஃவில்  ஓதவேண்டியவை

 عَنْ حُذَيْفَةَ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، ….. ثُمَّ رَكَعَ، فَجَعَلَ يَقُولُ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ»  صحيح مسلم 

ஹுதைபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ருகூஃவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அழீம்’ என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்)

நபிகளார் ருகூவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அழீம் வபிஹம்திஹி’ என்று கூறியதாக அபூதாவுத், மற்றும் பல ஹதீஸ் கிதாபுகளில் வந்திருக்கும் எல்லா அறிவிப்புகளும் பலவீனமானவையே.

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ إِذَا رَكَعَ، قَالَ: «اللهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعَظْمِي، وَعَصَبِي»وَمَا اسْتَقَلَّتْ بِهِ قَدَمِي، لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ،……  صحيح مسلم

அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ருகூஃ செய்தால் ‘அல்லாஹும்ம் லக ரக ஃ து, வபிக ஆமன்து, வலக அச்லம்து, கஷஅ லக சாம்ஈ, வபசரீ, வமுக்கீ, வஅல்மீ, வஅசபீ, வமஸ் தகல்லத், பிஹஈ கதமீ’  என்று ஓதுவார்கள். (முஸ்லிம், அஹ்மதின் அறிவிப்பில் ‘வமஸ் தகல்லத், பிஹஈ கதமீ” என்று வந்துள்ளது.)

ருகூஃ , சுஜூத் இரண்டிலும் ஓத முடியுமானவை.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: ” كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ” صحيح البخاري 

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ருகூவிலும், ஸுஜூதிலும்’ஸுப்ஹானகல்லாஹும்ம, ரப்பனா வபிஹம்திக், அல்லாஹும்மக்பிர்லீ’ என்று ஓதினார்கள்.  (புஹாரி: 794, முஸ்லிம்)

 أَنَّ عَائِشَةَ نَبَّأَتْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «فِي رُكُوعِهِ وَسُجُودِهِ سُبُّوحٌ قُدُّوسٌ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ» صحيح مسلم 

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ருகூவிலும், ஸுஜூதிலும் ‘ஸுப்பூஹுன், குத்தூஸுன், ரப்புல் மலாஇகதி வர்ரூஹ்’ என்று ஓதினார்கள்.  (முஸ்லிம்)

 عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ، قَالَ: قُمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَة  يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ» سنن أبي داود  

அவ்ப் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ருகூவிலும், ஸுஜூதிலும் ‘ஸுப்ஹான தில் ஜபரூதி வழ்மலகூதி, வல்கிப்ரியாஇ, வால் அழமா’ என்று  ஓதினார்கள்.  (அஹ்மத்: 23980அபூதாவுத்: 873)

இஃதிதால் நிலையில் ஓதவேண்டியது.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ….. وَإِذَا رَفَعَ، فَارْفَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الحَمْدُ، ….رَبَّنَا لَكَ الحَمْدُ صحيح البخاري 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்றால், நீங்கள் ‘ரப்பனா லகல் ஹம்த்,  ரப்பனா வ  லகல் ஹம்த்’  என்று கூறுங்கள்.  (புஹாரி: 689,732,789, முஸ்லிம்)

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: ” كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، قَالَ: اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الحَمْدُ،  اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்றால், ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்த், அல்லாஹும்ம ரப்பனா வ  லகல் ஹம்த்’ என்று கூறுவார்கள். (புஹாரி: 795,796)

عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ: ” كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ “، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «مَنِ المُتَكَلِّمُ» قَالَ: أَنَا، قَالَ: «رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ» صحيح البخاري 

ரிபாஆ (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ருகூஇலிருந்து தலயைத் தூக்கி, ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறியதும், பின்னால் இருந்து ஒரு மனிதர்; ரப்பனா வலகல் ஹம்து, ஹம்தன், கசீரன், தையிபன் முபாரகன் பீஹ்’ என்று கூறினார், நபிகளார் தொழுகையை முடித்ததும், அப்படி சொன்னவர் யார், முப்பது செச்சம் மலக்குகள் முதலில் அதனை எழுத போட்டிபோடுவதை நான் கண்டேன் என்று கூறினார்கள்.  (புஹாரி: 799)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: ” رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ، وَكُلُّنَا لَكَ عَبْدٌ: اللهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ ”  صحيح مسلم

அபூ சஈத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:நபியவர்கள் ருகூஇலிருந்து தலையை தூக்கினால் ‘ரப்பனா லகல் ஹம்த்,மில் அஸ்ஸமாவாதி வல் அர்ல்,வமில்அ மாஷிஃத மின் ஷைஇன் பஃது, அஹ்லஸ் ஸனாஇ வல் மஜ்த், அஹக்கு மாகாலல் அப்து, வகுல்லுனா லக அப்துன், அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத, வலா முஃதிய லிமா மனஃத, வலா யான்பஉதல் ஜத்து மின்கள் ஜத்து’   என்று ஓதுவார்கள். (முஸ்லிம்)

இந்த அறிவிப்பு பல நபித் தோழர்கள் வாயிலாக பல விதத்தில் பதியப்பட்டுள்ளது.

 اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، مِلْءُ السَّمَاوَاتِ، وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ            صحيح مسلم 

اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ، وَمَا بَيْنَهُمَا، وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ   صحيح مسلم

ஸுஜூதில் ஓத வேண்டியவை.

 عَنْ حُذَيْفَةَ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ،……. ثُمَّ سَجَدَ، فَقَالَ: «سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى» صحيح مسلم 

ஹுதைபா (ரழி) அவர்க கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸுஜூதில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்)

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ…… إِذَا سَجَدَ، قَالَ: «اللهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ، وَصَوَّرَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِينَ» صحيح مسلم 

அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஸுஜூத் செய்தால் ‘அல்லாஹும்ம லக ஸஜத்து, வபிக ஆமன்து, வலக அஸ்லம்து, ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹூ, வஸவ்வரஹூ, வஷக்க ஸம்அஹூ,வபஸரஹூ, தபாரகல்லாஹுல் காலிகீன்’ என்று ஓதுவார்கள். (முஸ்லிம்)

 عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «فِي سُجُودِهِ اللهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ، وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ» صحيح مسلم 

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ஸுஜூதில் ‘அல்லாஹும்மக்பிர்லீ தன்பீ குல்லஹூ, திக்கஹூ, வஜில்லஹூ,வஅவ்வலஹு, வஆகிரஹு, வஅலாநியதஹு, வசிர்ரஹு’ என்று கூறுவார்கள். (முஸ்லிம்)

عَنْ عَائِشَةَ،……. قَالَتْ  يَقُولُ: رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُجُودِهِ: «اللهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»  صحيح مسلم

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபியவர்கள் ஸுஜூதில்’ அல்லாஹும்ம இன்னீ அஊது பிரிளாக மின் ஸகதிக், வபிமுஆபாதிக மின் உகூபதிக், வஅஊது பிக மின்க லா உஹ்சீ ஸனாஅன் அலைக, அன்த கமா அஸ்னைத, அலா நப்சிக’ என்று கூறுவார்கள்.  (முஸ்லிம்)

இரண்டு ஸுஜூத்களுக்கும்  இடையில் ஓதவேண்டியது.

عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي»  سنن ابن ماجه

ஹுதைபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் நடு இருப்பில் ‘ரப்பிக்பிர்லீ , ரப்பிக்பிர்லீ’ என்று கூறுவார்கள்.  (இப்னு மாஜா: 897)

عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَعَافِنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي» سنن أبي داود 

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் இரு ஸுஜூத்களுக்குமிடையில் ‘அல்லாஹும்மக்பிர்லீ, வர்ஹம்னீ, வஆபினீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ,’ என்று கூறுவார்கள்.  (அபூதாவுத்:850, திர்மிதீ:284)

தஷஹ்ஹுதில் (அத்தஹிய்யாத்தில்) ஓதப்படுபவை; அவை பல விதமாக வந்திருக்கின்றன, அவற்றுள் சில;

عَبْدُ اللَّهِ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْنَا: السَّلاَمُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ، فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، فَإِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَقُلْ: التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، فَإِنَّكُمْ إِذَا قُلْتُمُوهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ”  صحيح البخاري

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறினார்கள்:  நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னால் தொழும்போது ‘அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல், மீகாஈல், அஸ்ஸலாமு அலா புலான்’ என்று கூறுபவர்களாக இருந்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, ‘நிச்சயமாக அல்லாஹ்தான் ‘ஸலாம்’ ஆக இருக்கிறான். உங்களில் ஒருவர் தொழும்போது ‘அத்தஹிய்யாது லில்லாஹி, வச்சலவாது, வத்தையிபாத், அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு, வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா, வஅலா இபாதில்லாஹிஸ் சாலிஹீன். என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியதாக அமையும். ‘அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு , வஅஷ்ஹது  அன்ன முஹம்மதன் அப்துஹூ, வரசூலுஹு. என்று கூறுங்கள் என்று கூறினார்கள்.  (புஹாரி:831,835, முஸ்லிம்)

عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ فَكَانَ يَقُولُ: «التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ، الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ»  صحيح مسلم 

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் குர்ஆனிலிருந்து சூராவைக் கற்றுத்தருவது போன்று தஷஹ்ஹுதைக் கற்றுத் தந்தார்கள். அவர்கள்: அத்தஹிய்யாதுள் முபாரகாதுஸ் சலவாதுத் தைய்யிபாது லில்லாஹ், அஸ்ஸலாமு அலைக அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லஹிஸ் சாலிஹீன், அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.’ என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்)

 أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَإِذَا كَانَ عِنْدَ الْقَعْدَةِ فَلْيَكُنْ مِنْ أَوَّلِ قَوْلِ أَحَدِكُمْ: التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ «  صحيح مسلم 

அபூ மூஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் அமர்வில் இருந்தால் அவர் முதல் வார்த்தையாக; அத்தஹிய்யாதுத் தைய்யிபாதுஸ் சலவாது லில்லாஹ், அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு, வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு, அஸ்ஸலாமு அலைனா, வஅலா இபாதில்லாஹிஸ் சாலிஹீன்,அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு , வஅஷ்ஹது  அன்ன முஹம்மதன் அப்துஹூ, வரசூலுஹு’ என்று கூறட்டும் என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

அதன் பிறகு நபிகளாரின் மீது சலவாத் சொல்லுதல், அதுவும் பல வார்த்தை வித்தியாசங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 أَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ”  صحيح البخاري

அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரழி) அவர்கள் கூறினார்கள்:  மக்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே!” உங்களின் மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்’ சொல்வது?’ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹமமதின் வஅஸ்வாஜிஹி வதுர்ரியதிஹி கமா சல்லைத அலா இப்ராஹீம, வபாறிக் அலா முஹம்மதின் வஅச்வாஜிஹி வசுர்ரிய்யதிஹி ,கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம  இன்னக ஹமீதுன் மஜீத்’ என்று சொல்லுங்கள் என கூறினார்கள்.  (புஹாரி:3369, முஸ்லிம்)

كَعْبُ بْنُ عُجْرَةَقَالَ: سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ البَيْتِ، فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُمْ؟ قَالَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ” صحيح البخاري 

கஃப் பின் உஜ்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாரிடம், அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது சலாம் சொல்லத் தெரியும், உங்களின் மீது எப்படி ‘ஸலவாத்’ சொல்வது?’ என்று கேட்டோம்,. அதற்கு நபியவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹமமதின் வலா ஆலி முஹம்மதின், கமா சல்லைத அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்,  அல்லாஹும்ம பாறிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்  ,கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம  இன்னக ஹமீதுன் மஜீத்’ என்று சொல்லுங்கள் என கூறினார்கள்.  (புஹாரி:3370, முஸ்லிம்)

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَمَّا السَّلاَمُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ، فَكَيْفَ الصَّلاَةُ عَلَيْكَ؟ قَالَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ”  صحيح البخاري

கஃப் பின் உஜ்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:   நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே!” உங்களின் மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்’ சொல்வது?’ என்று கேட்கப்பட்டது, நபியவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹமமதின் வலா ஆலி முஹம்மதின், கமா சல்லைத அலா  ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக்  அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின்  ,கமா பாரக்த அலா  ஆலி இப்ராஹீம  இன்னக ஹமீதுன் மஜீத்’ என்று சொல்லுங்கள் என கூறினார்கள்.  (புஹாரி:4797)

عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ هَذَا التَّسْلِيمُ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: ” قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ ”  صحيح البخاري

அபூ சஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதரே இது சலாம் சொல்லும் முறை, எப்படி உங்கள் மீது சலவாத் சொல்வது? என்று நாங்கள் கேட்டபோது,  நபியவர்கள்; அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் அப்திக, வரசூலிக கமா சல்லைத அலா ஆலி இப்ராஹீம், வபாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம்.’ என்று சொல்லுங்கள் என்றார்கள்.  (புஹாரி:4798)

عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: أَتَانَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ لَهُ بَشِيرُ بْنُ سَعْدٍ: أَمَرَنَا اللهُ تَعَالَى أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُولُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلَامُ كَمَا قَدْ عَلِمْتُمْ» صحيح مسلم 

பஷீர் பின் சஃத் (ரழி) அவர்கள் நபிகளாரிடம், சலவாத் சொல்வது எப்படி என்று கேட்டபோது, அவர்களிடம் ஏதும் கேட்கவில்லையோ என்று யோசிக்கும் அளவு மௌனமாக இருந்தார்கள், பிறகு ‘அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத்தின் கமா சல்லைத அலா ஆலி இப்ராஹீம , வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம பில் ஆலமீன இன்னக ஹமீதுன் மஜீத். என்று சொல்லுமாறு, கூறிவிட்டு, சலாம்  உங்களுக்கு தொரிந்த விதத்தில் என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

பிறகு நான்கு விடயங்களை விட்டு பாதுகாப்பு தேடுதல்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا تَشَهَّدَ أَحَدُكُمْ فَلْيَسْتَعِذْ بِاللهِ مِنْ أَرْبَعٍ يَقُولُ: اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ ”  صحيح مسلم

அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; உங்களில் ஒருவர் தஷ்ஹ்ஹுதில் இருந்தால் நான்கு விடயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாத்காவல் தேடட்டும்;அவர் சொல்லட்டும்; ‘அல்லாஹ்வே! நிச்சயமாக நான் நரக வேதனை,  மண்ணறை வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்”. (முஸ்லிம், புஹாரி:1377, முஸ்லிமின் வாசகம்)

عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ: ” أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا، وَفِتْنَةِ المَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ ”  صحيح البخاري

ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள், “இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று  தொழுகையில் துஆச் செய்பவர்களாக இருந்தார்கள்.  (புஹாரி: 832, முஸ்லிம்)

 இன்னும் சில துஆக்களை நபிகளார் ஓதியும், ஓதுமாறு கற்றுத் தந்துமிருக்கின்றார்கள்.

 عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي، قَالَ: ” قُلْ: اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ ”  صحيح البخاري

அபூ பக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்கு கற்றுத் தாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது ‘அல்லாஹும்ம இன்னீ ளலம்து நப்ஸீ ளுள்மன் கஸீரா, வலா யக்பிருஸ் சுனூப இல்லா அன்த, பக்பிர்லீ, மக்பிரதன் மின் இந்திக, வர்ஹம்னீ இன்னக அன்தல் கபூரூர் ரஹீம்.’இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் இருக்கின்றாய். என்று சொல்வீராக’ என்று கற்றுத் தந்தார்கள். (புஹாரி: 834, முஸ்லிம்)

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ،…………..يَكُونُ مِنْ آخِرِ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ: «اللهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ».  صحيح مسلم

அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் தொழுதால் சலாத்திட்கும், தஷஹ்ஹுதிட்கும் இடையில் கடைசியாக சொல்கிற வாரத்தையாக; ‘அல்லாஹும்மக்பிர்லீ, மா கத்தம்து, வமா அக்கர்து, வமா அச்ரர்து, வமா அஃலன்து, வமா அச்ரப்து, வமா அன்த அஃலமு பிஹி மின்னீ, அன்தல் முகத்திமு, வ அன்தல் முஅக்கிரு லாஇலாஹ இல்லா அன்த். ‘என்பதே இருக்கும்.  (முஸ்லிம்)

அதன் பிறகு விரும்பியவற்றை கேட்கலாம்.

عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا إِذَا كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ،……. ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ، فَيَدْعُو ”  صحيح البخاري

அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுபவர் அத்தஹிய்யாதை இப்படி சொல்லட்டும், ‘பிறகு தனக்கு விருப்பமானதை துஆவிலிருந்து அவர் கேட்கட்டும்.’ என்று கூறினார்கள்.  (புகார்: 835, முஸ்லிம்)

புகாரியின் 6230 வது இழக்க ஹதீஸில் ‘பேச்சிலிருந்து தனக்கு விரும்பியதை தேர்வுசெய்யட்டும்.’ என்று வந்துள்ளது. 

தொழக்கூடிய நாம் முடிந்த அளவு இந்த துஆக்களைக் கற்று, மனனமிட்டு தொழுகையில் ஓதி பூரண கூலியைப் பெற்றுக் கொள்ள முயல்வோம், அதற்கு அல்லாஹ் துணை புரியட்டும்.

வஆகிரு தாஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

                                                                                                                                                                                                                    

சட்டக் கலை பகுதியில் பதியப்படும் இந்தப் பதிவு; 2008 ம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டு, பாடமும் நடத்தப்பட்டது. இப்போது அது ஒரு சில மாற்றங்களுடனே இங்கு பதியப்படுகின்றது. அன்று தொகுக்கப்பட்ட ஆக்கங்கக் எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அதன் போடோ பிரதியை இணைத்துள்ளேன்.
தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் திருத்தி, இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
அல்லாஹ்வே எம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!

img045 img046 img047 img048 img049

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *